Author: நலன் விரும்பி
சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை
சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை
இலங்கையில் இருந்து பெரும் கனவுகளை சுமந்தவாறு சவூதி நாட்டுக்கு சென்ற 233 இலங்கையர்கள்
2011 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ள புள்ளி விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ,குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவு
,மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளான நிலையில் தாயகம் திரும்பினார்
இதில் பல பெண்கள் உடல்களில் ஆணி அடிக்க பட்டு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது ,
தொடர்ந்து இலங்கை திரும்பும் நோக்கில் சவூதி பாலங்களின் கீழ் பல்லாயிரம் இலங்கையர்கள்
விசாக்கள் ஏதுமின்றி காத்திருக்கின்ற பேரவலம் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
யாழ்ப்பாணம் கடல் ஏரி பகுதியில் கேரளாவில் இருந்து படகு மூல கடத்தி வரப்பட்ட சுமார் 240
கிலோ எடையுள்ள 72 மில்லியன் பெறுமதியான கஞ்ச பறிமுதல் செய்ய பட்டுள்ளது
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
இதன் பொழுதே மேற்படி கஞ்சா பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,மகிந்த ஆட்சி காலத்தில் இலங்கையில்
போதை பொருள் பாவனை தலைவிரி த்தாடுவதும் இதனை சட்டமாக்க கோரி பாராளுமன்றில் எம்பிக்கள் சிலர் பேசி இருந்தமையும் இங்கே குறிப்பிட தக்கது

கஞ்சா

இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?
இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?
இலங்கையில் பரவி வரவும் கொரனோ நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்
நோக்குடன் சீனா கொரனோ தடுப்பூசிகளை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது
கடந்த முறை பல மில்லியன் கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது
அதுபோல இம்முறை அனுப்பி வைக்க படும் இந்த மருந்துகளும் உண்மையில் கொரனோ தடுப்பூசி
தானா என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழுப்ப படுகிறது
இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் நோயின் தாக்குதல் எதிரொலியால் இந்த அடித்து பூட்டு நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது
மேலும் இவை தொடந்து திறப்பதா இல்லையா என்பது தொடர்பாக விரைவில் அறியத் தரப்படும்
என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை
இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை
இலங்கையில் கொரனோவின் தாக்குதல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் hotels, pubs &
night clubs என்பன நாடெங்கும் திறக்க தடை விதிக்க பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை இவை திறக்க தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி திறக்க பட்டால்,
அதன் லைசன்ஸ் இரத்து செய்யப் படுவதுடன் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது
முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது
இலங்கையில் கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய 264 பேர் பொலிஸாரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவர்களில் அதிகமானவர்கள் முக கவசம் அணிய மறுத்துள்ளதும் ,அதிகமாக ஒன்று கூடியதுமாகும்
மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,மக்கள் அதனை பின்பற்றாது
செல்வதால் நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது
ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்
ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்போது மேலும் ஏழு கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உள் வெளி செல்ல தடை விதிக்க
பட்டுள்ளதுடன் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
நாள் தோறும் நோயாளார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழு லொக் டவுனுக்கு
செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் covid19 வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் பதினொரு
பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை 678, பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,நாடு முழு லொக்கடவுன்
நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் ,பல கிராமங்கள் மறு அறிவித்தல் வரை முடக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்
பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்
இலங்கையில் பரவி வரு கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து பொது நிகழ்வுகள்
நடத்திட இரு வாரங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
இதனால் திருமண விழாக்கள் உள்ளிட்டவைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது
அரசின் விதிகளை மீறி நடத்த முற்பட்டால் அவர்களுக்கு பல்லாயிரம் தண்டம் அறவிட படும் என
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,அந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு
எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு
இலங்கையில் கொரனோ பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் போதுமான
அளவு ஒட்ஸிசன் கையிருப்பில் உள்ளதாக அரசு அடித்து விட்டுள்ளது
மேற்படி ஒடிஸிசன் இல்லாது இந்தியாவில் மக்கள் வீதியில் இறந்த பரிதாபங்கள் காட்சிகளாக உலாவி வருகின்றன
இதனை அடுத்தே அரசு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது
விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்
விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான விளங்கும் சுமந்திரன் கல்முனை நோக்கி
பயணித்த பொழுது கட்டுநாயக்க பகுதியில் வைத்து விபத்தில் சிக்கியது ,இதில் காயங்கள் இன்றி அவர் தப்பித்தார்
எனினும் வேறு ஒரு வாகனம் மூலம் வார் கல்முனை நீதிமன்றம் நோக்கி த்னது பயணத்தை தொடர்ந்தார்
பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான வழக்கு விசாரணிக்கு செல்லும் பொழுதே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்
மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்
இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்போது எட்டு
காவல்துறை பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
இவ்வாறு முடக்க பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபடுத்த
பட்டுள்ளது
முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்
முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை
பகுதியில்(29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை
பகுதியில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீ பரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த தீ விபத்தின் போது முத்தையன் கட்டினனை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா அரிராசசிங்கம்
என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை
அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை
பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை- இராணுவம்
இலங்கையில் முழு அடித்து பூட்டும் நிகழ்வு எவ்வேளையும் இடம் பெறலாம் என்ற நிலை உள்ளதாக
வெளியான செய்திகளில் எவ்வித உமையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
மேலும் மக்கள் அவசர பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை
எனவும் ,நாடு முழுவதுமாக அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்லாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் 4,000 பேர் கைது
இலங்கையில் 4,000 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கோவிட வைரஸ் நோயின் தாக்குதல் நிகழ்கால விதிகளை கடைப் பிடிக்க
மறுத்த 4,000 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளதாகவும்மேலும் 110 போலீஸ் பிரிவுகளில் சிவில் உடையில் போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முக கவசம் அணியாது செல்கின்ற மக்கள் கைது செய்ய படுவதுடன் அவர்களுக்கு தண்டமும்
வழங்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இராணுவத்தினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு
இராணுவத்தினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு
நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் பணியாற்றும் இராணுவத்தினருக்கான
‘அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்’ தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு வழங்கும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (28) காலை தொடங்கியது.
இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கொவிட் பாதிப்பாளர்களை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்.
அதே வேளையில் அதன் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பங்களிப்பு செய்கிறார்கள், அதன்படி நாட்டின் 15 இராணுவ மருத்துவமனைகளில் ஊடாக இறுதி 2 வது கொவிட் 19 தடுப்பூசி
வழங்கப்படுகின்றது. கொவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் செயற்பட்ட
இராணுவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரியில் இராணுவத் தளபதியின் முயற்சிகளினால் தொடங்கப்பட்டது.
இதேபோல், அனைத்து நாடு முழுவதும் உள்ள இடைநிலை பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் முன்னணி சுகாதார
ஊழியர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் இரண்டாவது கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்று (28) கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மைத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகரத்தின் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டு நகரத்துடன் இணைந்ததாக காணப்படும் ஜயரத்ன மாவத்த வட்டகொடபத்தன
கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
நகரத்தின் கழிவுநீர் செல்லும் பிராதான ஓடையின் சிறிய பாலம் ஒன்று குப்பைகளினால் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஓடையில் செல்லாமல் பாதையில் செல்வதால் இன் நிலை
தோன்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடபளாத்த பிரதேச சபைக்கு பலமுறை மக்கள் முறைபாடுகள் செய்த போதும் இது வரைக்கும் உரிய நடவடிக்கை மேற்க் கொள்ளபடவில்லை.
நகரத்தில் காணப்படும் கழிவு நீர் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் அனைத்தும் குப்பைகளும் கிராமத்தை சுற்றி காணக் கூடியதாக இருப்பதுடன் டெங்கு போன்ற நோய்கள் பரவு வாய்ப்புகளும் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சத்தில் இருக்கும் இந்த மக்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுவது அவர்களை மேலும் மன உலைச்சளுக்கு உள்ளாக்கி உள்ளது.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் சமபந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
நுவரெலியாவில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக வீழ்ந்ததில் அதில் பயணித்த இருபது பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,குறித்த
விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்

திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வரும் நிலையில் இன்று திருகோணமலையில் உள்ள
ஆறு கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
அதே போல மேலு பல கிராமங்கள் முடக்க படும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது
,மக்கள் நடமாட்டம் முழுவதுமாக முடக்க படும் அபய நிலை எழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது
மீளவும் முன் அறிவித்தல் இன்றி கிராமங்கள் முடக்க படலாம் எனவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்
இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு
இலங்கை
இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த இலங்கையில் புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன
இரண்டு மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்ற மீறினால் தண்ட
பணம் அறவிடும் நிலை ஏற்படுத்த பட்டுள்ளது
பிரிட்டனில் இவ்வாறு மேற்கொள்ள பட்ட நிலையில் நோயின் தாக்குதல் கட்டு படுத்த பட்டது குறிப்பிட தக்கது







