Author: நலன் விரும்பி
இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு
இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்கு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இது ஊரடங்கு சட்டம் போன்றது ,அத்துமீறி சென்றால் அவர்கள் கைது செய்ய பட்டு தனிமை
படுத்த படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
நோயின் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
இலங்கை கொழும்பு துறைமுக பகுதியில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ பரவியது .
மேற்படி தீயினை கடல் படையினர் விரைந்து சென்று அணைத்தனர்
இந்த தீ பரவலுக்கு உரிய கரணம் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு
இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு
இலங்கையில் உலக நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள படும் தடுப்பூசி மருத்துவ மனைகளில்
பணி புரியும் நபர்கள் திருடி ,கள்ள சந்தையில் விற்று வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டு பிடிக்க பட்டால் அவர்களுக்கு சிறை
தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
இலங்கை Polgahawela பகுதியில் உள்ள மாஸ் தொழில் சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 380
பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த நோய் பரவலை அடுத்து குறித்த நிறுவனம் தனிமை படுத்த பட்டுள்ளது
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டிஸ் தேசியக் கொடிக்கு முள்ளிவாய்க்கால் நாளில் நடந்த அவமானம் PHOTO
நியூட்டனின் கையில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை ஆகிய பிரிட்டிஸ் தேசியக் கொடி!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நிகழ்வில் எமது தேசியக் கொடியோடு பிரிட்டிஸ் தேசியக் கொடியையும் ஏற்றுவது சரியா என்று கேட்பவர்கள் இருக்கின்றார்கள்.
பிரிட்டிஸ்காரன்தான் எங்கடை யாழ்ப்பாண இராச்சியத்தை (வன்னிச் சிற்றரசுகளும், மாந்தை, திருகோணமலை, மட்டக்களப்பு, சிலாப அரசுகளும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகத் தான் போர்த்துக்கேயர் வரும் வரை இயங்கின) கோட்டை, கண்டி இராச்சியங்களோடு இணைத்துக் கடைசியில் எங்கடை நாட்டை சிங்களவனிடம் பிரிட்டிஸ்காரன் தாரைவார்த்துக் கொடுத்த கோபம் எங்கடை ஆட்களில் சிலருக்கு.
நியாயமான கோபம் தான்.
அடுத்தது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் கினி மினி நிறுவனம் ஊடாக சிங்கள இராணுவத்துக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் செய்த உதவிகள்.
அது போதாதென்று இயக்கத்தை ரொனி பிளேயரின் அரசாங்கம் தடை செய்தது.
எங்கடை ஆட்களின் கோபங்களில் நியாயம் உண்டு.
அதேநேரத்தில் பிரட்டிஸ் குடியுரிமையையும், விசாவையும் கோபிக்கும் எங்கடை ஆட்கள் கைவிட மாட்டீனம்.
அவையள் குளத்தோடு கோவிப்பீனம்.
ஆனால் அதே குளத்தில் தங்களின் பிட்டத்தைக் கழுவுவீனம்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பிரிட்டிஸ் கொடி யாரின் கொடி?
அந்த நாட்டு மக்களின் கொடி.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் மீது எங்களுக்குக் கோபம் இருக்கலாம்.
ஆனால் பிரிட்டிஸ் மக்களைக் கோவிப்பதாலும், அவமதிப்பதாலும் நாம் எதை சாதிக்கப் போகிறோம்?
இன்று பிரிட்டனில் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இலங்கையில் எமது மக்களுக்கு இருப்பதை விட அதிக உரிமைகளோடு, சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள்.
நாங்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது தான் அண்ணையின் அறிவுறுத்தல்.
ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடியை நாங்கள் ஏற்றாமல் விட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பிரிட்டிஸ் கொடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அதை நாங்கள் ஏற்ற வேண்டும்.
ஆனால் 18.05.2021 செவ்வாய்க்கிழமை பிரிட்டிஸ் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடி தலை கீழாக ஏற்றப்பட்டது.
இந்தத் தலைகீழ் கொடியேற்றத்தை மேற்பார்வை செய்தவர் வாயால் ஆட்லறி அடிக்கும் பிரச்சாரப் பீரங்கி நியூட்டன்
பிரிட்டிஸ் கொடி ஏற்றி முடிந்ததும், அங்கு நின்ற செயற்பாட்டாளர் ஒருவரை அணுகிய பிரிட்டிஸ் காவல்துறைக் காவலர் ஒருவர், ‘The Union Jack is flying upside down’ என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.
நின்ற செயற்பாட்டாளருக்கு Union Jack என்றால் பிரிட்டிஸ் தேசியக் கொடி என்று விளங்கவில்லை.
‘Yeah, yeah’ என்று சொல்லி விட்டு அந்த செயற்பாட்டாளர் நகர்ந்து விட்டார்.
பிரிட்டிஸ் கொடியேற்றத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கு வந்த காவல்துறைக் காவலர் மேற்கொண்டு ஏதும் கூறாமல் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டார்.
ஆனால் தவறு சீர்செய்யப்படவில்லை.
திரும்பவும் வந்த காவல்துறைக் காவலர் விடயத்தை வேறு சில செயற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அவர்கள் சிலர் ஓடி வந்து நியூட்டன் விசயத்தைக் கூறியிருக்கிறார்கள்.
‘எல்லாம் எங்களுக்குத் தெரியும், நீங்கள் அங்காலை போங்கோ’ என்று அவர்களை நியூட்டன் மாஸ்டர் எரிச்சலுடன் விரட்டியதை சேரமானின் ஆவியின் தூதர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை என்றதும், ‘Crazy people’ என்று திட்டி விட்டுக் குறித்த காவல்துறைக் காவலர் நகர்ந்து சென்றிருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பிற்கு பிரிட்டிஸ் மக்களிடமும், பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடமும் நீதி கோரி நடத்தப்பட்ட நிகழ்வு கடைசியில் எமது மக்களை ‘பைத்தியக்காரக் கூட்டம்’ என்று பிரிட்டிஸ் காவல்துறையினர் கூறும் நிலையில் முடிந்திருக்கிறது.
இது எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கச் சிங்களக் கைக்கூலியான கிருஸ்ணடன் சேர்ந்து நியூட்டன் செய்த ஒரு திட்டமிட்ட சதிச் செயலா என்ற கேள்வி எழுகிறது.
நியூட்டன் மச்ச கிருஸ்ணன் இயக்கத்தின் தங்கங்களை சிங்கள அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து விட்டு இலண்டன் வந்தவர்.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நிகழ்வு நடந்த இடம் பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு சொந்தமானது.
அந்த இடத்தில் பாதைகளை மறிப்பது போல் எம்மவர்கள் சிலர் நின்றிருக்கிறார்கள்.
அப்பொழுது அங்கு வந்த பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சின் காவல்துறை அதிகாரிகள், ‘இது ஆயுதம் தாங்கிய காவல்துறையின் வந்து செல்லும் இடம். இங்கு வழி மறித்து இடையூறு ஏற்படுத்தாமல் உங்கள் நிகழ்வை நடத்துங்கள்’ என்று கூறி விட்டுப் போயிருக்கிறார்கள்.
இதே மாதிரி கொழும்பில் உள்ள சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் அல்லது டில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் நாங்கள் யாராவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.
அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லுறவர், நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று.
அண்ணையின் அறிவுறுத்தலுக்குக் களங்கம் விளைவிக்கும் நியூட்டனின் செய்கை நியூட்டன் இந்திய – சிங்கள உளவு நிறுவனங்களில் கையாளா என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகின்றது.
சரி, முதலில் பிரிட்டிஸ் கொடி தலைகீழாகப் பறந்த படங்களை தருகிறேன்.
அவற்றின் கீழ் பிரிட்டிஸ் கொடி சரியாகப் பறக்க வேண்டிய முறையையும், உதாரணத்தையும் இணைக்கிறேன்.
நீங்களே பாருங்கள்.
இனியாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்து எமது மக்களுக்குக் களங்கம் விளைவிக்காமல் விட்டால் சரி..
மேற்படி சம்பவம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை எமக்கு தெரிவித்தால் பகிர தயார்

மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய லைலா
மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய லைலா
கள்ளழகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை லைலா, அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில்,
அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லைலா
கொரோனா விழிப்புணர்வு பற்றி பிரபலங்கள் பலரும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர நடிகை லைலா சற்று வித்தியாசமாக பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்த காமெடி
காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கொரோனா விழிப்புணர்வு மீம்ஸை ரசித்து விட்டு அதை பகிர்ந்தும் உள்ளார்
சினேகனுக்கு விரைவில் திருமணம்
சினேகனுக்கு விரைவில் திருமணம்
தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்
சினேகன்
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள்
நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சினேகன்
இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
சமந்தா நடித்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு
சமந்தா நடித்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது பேமிலி
மேன் 2 என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர்.
சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும்
அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேமிலி மேன் 2
பேமிலி மேன் 2 போஸ்டர்
அமேசான் ப்ரைமில் ஜூன் 4-இல் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிசை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்க
மனைவியுடன் தடுப்பூசி போட்ட நடிகர் சூரி
மனைவியுடன் தடுப்பூசி போட்ட நடிகர் சூரி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின்
சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி, மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
மேலும் இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம்.
வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று பதிவு செய்து இருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு அருகில் ஆண் ஒருவர் எரிக்க பட்டு உருக்குலைந்த
நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் அடித்து கொலை செய்ய பட்ட பின்னர் தீயில்; எரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த படுகொலைகாண் காரணம் தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளதுடன் ,மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
எனினும் விடாது துரத்தும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினத்தில் மட்டும் சுமார் 36
பேர் பலியாகியுள்ளனர் மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது ,இந்த நோயினை
கட்டு படுத்த முடியாது இலங்கை தினறி வருகிறது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு
பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது
செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
இலங்கை நோர்வூட் ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த வரும் தொழிலாளர்கள் பதினாறு
பேருக்கு நிகழ் கால கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து குறித்த நிறுவனம் அடித்து பூட்ட படுகிறது ,பாதிக்க பட்டவர்கள் தலைமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து
இலங்கைக்குள், நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
இந்த தடை சட்டம் இன்று நாளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது ,இலங்கைக்குள்
நுழைபவர்களுக்கு மட்டும் தடை விதிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 3.051 பேர் கொரனோ நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் ,மேலும் நாள் தோறும் இந்த நோயில் சிக்கி பலியாகின்ற மக்கள் தொகையும்
அதிகரித்த வண்ணம் உள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது சிங்கள அரசு திணறி வருகிறது
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்! photo
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில்
உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழீழத்தின் மீதான தொடரும் இனவழிப்பை சிறீலங்கா பௌத்த பேரினவாத இனவழிப்பு அரசாங்கமும் அதற்கு முண்டுகொடுத்து வரும் பன்னாட்டு வல்லாதிக்க சக்திகளும்
மூடிமறைப்பதற்கான பல பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது. இத்தகையதொரு சூழலில் உலகத் தமிழர் இயக்கம் இவ்விடையத்தை பொதுசன வெளியில் எடுத்துச்செல்வதற்கான
செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனொரு கட்ட வேலைத்திட்டமாக இவ்விரு மாநிலங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக இவ்வாறன செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மினத்தின் நீதிக்கும்
உரிமைக்குமான விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க அனைவரது ஆதரவையும் உலகத்தமிழர் இயக்கம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கிறது.
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்த நடிகை பல நடிகர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
கிசுகிசு
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறதாம். இதற்காக பல நடிகைகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்
. தற்போது புதியதாக அறிமுகமாகியிருக்கும் இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகர்களை தன் வசம்படுத்தி இருக்கிறாராம். மேலும் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள்
அனைவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு கைக்குள் போட்டு வைத்திருக்கிறாராம். இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறாராம்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின்
சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி
போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்
,இவ்விதம் கடந்த தினம் மட்டும் 34 பேர் பலியாகியள்ளனர்
இதுவரை இந்த நோயினால் இறந்தவர் எண்ணிக்கை 1,015 எட்டி பிடித்துள்ளது ,,செப்டம்பர்
மாதத்திற்குள் 20.000 பேர் மரணிப்பார்கள் என கூறப்பட்டு பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது







