Posted in Uncategorized

இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக குற்ற தடுப்பு பிரிவிற்கு SSP Imesha Muthumala நியமிக்க பட்டுள்ளார்

ஏனைய நிலைகளில் பெண்கள் உள்ள பொழுதும் ,இந்த நிலைக்கு இப்பொழுதே இவர் நியமிக்க பட்டுள்ளது ,காவல்துறை வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

Posted in Uncategorized

இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

இலங்கையில் இன்று ஒரே நாளில் நூற்றி ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இலங்கையில்

பலியானவர்களில் இன்றே அதிக அளவான மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2114 ஆக இடம்பிடித்துள்ளது

    Posted in Uncategorized

    இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

    இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

    இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

    மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை

    நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

    Posted in இலங்கை செய்திகள்

    பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

    பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த

    குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

    இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

    இந்தியாவில் இருந்து இலங்கை முள்ளியவளை பகுதிக்கு படகு மூலமா வந்தடைந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்

    மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

      Posted in Uncategorized

      கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

      கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

      யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

      யாழ்ப்பாண  மருத்துவமனை
        Posted in Uncategorized

        பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

        பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

        சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

        பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

        இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

        அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று(11) முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

        இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

          இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

          இலங்கையில் இன்று மட்டும் சுமார் 2,715 பேர் கொரனோ தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்


          இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

          பல நாடுகளில் இருந்து கொரனோ தடுப்பு மருந்துகள் இயக்குமதி செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

            ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021

            ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன சிறப்பாக வரவேற்றார்.

            இந்த கப்பல்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ஆதரவினை பாராட்டிய அவர், எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய துரிதமான பதில் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு விசேட நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

            கடல் மாசு நீக்கும் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமுத்திர பிரஹரி கப்பலின் செயற்பாடுகள் குறித்தும் இந்நடவடிக்கைகளில் தமது வகிபாகம் குறித்தும் இந்திய கடலோர காவல் படையின் கப்டன்கள் இலங்கை கடற்படை தளபதிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

            1. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்திருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், இந்நடவடிக்கை முழுவதும் இந்திய கப்பல்களின் செயற்பாடுகளுக்கு இதயபூர்வமான ஒத்துழைப்பினை வழங்கிய இலங்கை கடற்படைக்கும் இலங்கை கடற்படை தளபதிக்கும்
            2. நன்றியினை தெரிவித்திருந்தார். கடல் மார்க்கத்தில் இந்தியாவையும் இலங்கையையும்
            3. பிணைத்த புவியியல் ரீதியிலான காரணிகள் மாத்திரமின்றி ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 1 மற்றும் 2 செயற்பாடுகளின் மூலமாக சான்று பகர்ந்ததைப்போன்று கடலில் இடம்பெற்ற அனர்த்தங்கள் மற்றும் HADR ஆகிய அவசர நிலைகளில் பதிலளிப்பதற்காக பாரம்பரிய ரீதியில் காணப்படும் ஒத்துழைப்பும் இதற்கான முக்கிய காரணியாக அமைகின்றது எனவும் அவர்
            4. இங்கு குறிப்பிட்டார். பொதுவான கடற்பரப்பில் அனர்த்த சூழ்நிலைகளில் உரிய தருணத்தில் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காணப்படும் இருதரப்பு பொறிமுறைகளையும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். மேலும் பொதுவான
            5. கடற்பரப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமையை சுட்டிக்காட்டியிருந்த அவர் மீண்டும் நிகழக்கூடிய செயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் ஏற்படும் அனர்த்தங்கள்
            6. ஆகியவற்றிற்கு உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
            7. எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இலங்கை
            8. கடற்படையிடமிருந்து உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மே 25ஆம் திகதி முதல் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் மாசு நீக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும் இந்த
            9. சந்தர்ப்பத்தில் நினைவூட்டமுடியும். எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சிகளில் ஐசிஜி டோனியருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் கடல் மாசு
            10. அச்சுறுத்தலை கணிப்பிடும் பணிகளில் மாசினை கட்டுப்படுத்தும் கப்பல்கள் உதவியை வழங்கியிருந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பூரண வசதிகளை அக்கப்பல்கள் தம் வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு
            11. நாடுகளினதும் கடல் படைகள் இடையில் காணப்படும் கூட்டுத்திறன் மற்றும் ஒன்றிணைவானது இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த சான்றாக அமைகின்றன.
            12. 2020 செப்டம்பர் இலங்கை கரைக்கு அப்பால் எம்டி.நியூ டைமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ
            13. விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இந்தியக் கடற்படையினதும் இந்திய கடலோர காவல் படையினதும் இவ்வாறான கப்பல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள்
            14. மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் முதலில் பதிலளித்து உதவியினை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது. பிராந்தியத்தில் அனைவருக்கும்
            15. பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டிற்கு அமைவாகவும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் இந்த செயற்பாடுகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

            இந்திய உயர் ஸ்தானிகராலயம்
            கொழும்பு

            Posted in இலங்கை செய்திகள்

            ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

            ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

            இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர இல்லத்தில் விருந்து வைத்து மகிழ்ந்த ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            கைதான அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

            போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

              Posted in சினிமா

              5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

              5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

              டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

              ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
              சிவகார்த்திகேயன்


              தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

              இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூபாய் 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

              சிவகார்த்திகேயன்

              சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ’அண்ணாத்த’, ’தளபதி 65’, சூர்யா 40 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

              Posted in சினிமா

              மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

              மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

              பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3

              -வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி

              தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

              இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

              இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே

              இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

              பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

              இலங்கை கம்பளை பகுதியில் பிறந்து 8 நாட்களான குழந்தை ஒன்று கொரனோ நோயினால் சிக்கி பலியாகியுள்ளார்

              இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

                கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

                இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான்

                இந்த சிறுவன் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
                இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                சமீப காலங்களாக நீர் அருவிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!photo

                  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

                  பைஷல் இஸ்மாயில் –

                  அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களால் இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                  கொவிட் -19 ஆட் கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியரா?, கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு,


                  தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்துக்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றி மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்து

                  கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று.

                  சுமார் 5,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய், தடுப்பூசி ஏற்றாத தாதியருக்கு உடனே தடுப்பூசியேற்ற ஒழுங்கு செய்.

                  ஆபத்தைப் பொருட்படுத்தாது சேவையாற்றும் சுகாதாரப் பணிக் குழுவினருக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதிகளில் சேவையாற்றும் பணிக்

                  குழுவினருக்கு உணவு வினியோகத்தை ஒழுங்கு செய், ஆபத்துக்கு முகங்கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய் போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

                  வைத்தியசாலை
                  வைத்தியசாலை
                  வைத்தியசாலை
                  வைத்தியசாலை
                  Posted in Uncategorized

                  இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

                  இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர்

                  நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                    அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                    கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ்

                    தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) சென்றிருந்தனர்.

                    உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

                    இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன், ´´இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்.

                    எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம். இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.´´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

                    இந்த விடயம் தொடர்பில் இரா. சாணக்கியன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் கருத்து

                    வெளியிட்டிருந்ததுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

                    இதேவேளை, இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமோர் சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

                    Posted in Uncategorized

                    வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                    வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                    வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                    குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

                    முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரிடம் விசாரணையில்

                    ஈடுபட்ட போது குறித்த நபரால் பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

                    25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                    அதன்படி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                    கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                    கிராம உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

                    இணையவழி (Online) மூலம் விண்ணப்பிப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

                    பரீட்சைகள் திணைக்களத்தின்உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

                    பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 1,057 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    முகக் கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லையை கடந்தமை தொடர்பிலான குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது