Posted in சினிமா

ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தன்னுடைய படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்து இருக்கிறார்.

ஏமாற்றம்தான்… ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
ஹன்சிகா


நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50வது படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது

உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆமா, வருத்தமாக இருக்குது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.

ஆனால் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை!

ஒவ்வொரு படத்திற்கும் விதி-ன்னு ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில்

எல்லாம் சீராகும். இந்த தாமதம் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்’ என்றார்

    Posted in சினிமா

    நீச்சல் உடையில் ஹன்சிகா.

    நீச்சல் உடையில் ஹன்சிகா.

    திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்துள்ளனர்.

    நீச்சல் உடையில் ஹன்சிகா…. லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்
    ஹன்சிகா


    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர்

    தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    ஹன்சிகா
    ஹன்சிகாவின் புதிய புகைப்படம்

    இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து

    இருக்கிறார்கள். இதுவரைக்கும் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளது.

      Posted in சினிமா

      காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.

      காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.

      நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.

      காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
      காஜல் அகர்வால், ஹன்சிகா


      தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில்

      பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.

      ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

      தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா

      வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

        Posted in சினிமா

        சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு

        சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு

        யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.

        சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
        சிம்பு, ஹன்சிகா


        நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும்

        இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.

        மஹா

        ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

        இந்நிலையில் இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

          Posted in Uncategorized

          ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

          ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

          தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ்

          திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

          அண்ணனுடன் ஹன்சிகா

          இந்நிலையில் நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறதாம். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

          அதன்படி, வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளதாம்.

          Home » ஹன்சிகா
          Posted in சினிமா

          தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

          தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

          தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா
          ஹன்சிகா
          நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை

          செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால்

          நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

          இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி

          வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.

          நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த

          சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.

          ஹன்சிகா
          ஹன்சிகா
          Posted in சினிமா

          குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா

          குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா

          விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, புதிய தொழில் தொடங்கி உள்ளாராம்.

          குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
          ஹன்சிகா


          தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

          இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில்

          சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

          ஹன்சிகா

          இந்நிலையில், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

          கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம்.

          அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த கொரானோ

          லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள்

          குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

          Posted in சினிமா

          எனக்கு கல்யாணமா? மாப்புள்ளை யாரு – ஹன்சிகா

          எனக்கு கல்யாணமா? மாப்புள்ளை யாரு – ஹன்சிகா

          பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

          எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா
          ஹன்சிகா


          நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார்.

          இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இ

          இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது.

          அதற்கு ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

          ஹன்சிகா டிவிட்

          அதற்கு ஒருவர் ”ஏன் என்கிட்ட சொல்லல”னு கேட்டதற்கு ‘எனக்கே இப்போ தான் தெரியும்’ என்று ஹன்சிகா பதிலளித்துள்ளார்.