Author: நலன் விரும்பி
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
விவாகரத்து விவகாரம் – நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
வனிதா, சமந்தா, நாக சைதன்யா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள்
நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’,
சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக
நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் – முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
சிவகார்த்திகேயன், நெல்சன்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை
பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50
சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது..
10,935 படையினருக்கு பதவியுயர்
10,935 படையினருக்கு பதவியுயர்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா 567 அதிகாரிகளையும், 10,368 பிற பதவிகளையும் உயர்த்தியுள்ளார்.
ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மூத்த பிரிகேடியர்கள் எண்மர் மேஜர் ஜெனரல்களாகவும், 17 கேர்ணல்கள் பிரிகேடியர் பதவிக்கும், 42 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல் பதவிக்கும், 60 மேஜர்கள், லெப்டினன்ட்
கேர்ணல்களாகவும், 256 கேப்டன்கள் மேஜர்களாகவும், 10 லெப்டினன்ட்கள் கெப்டன் பதவிக்கு, லெப்டினன்ட்
பதவிக்கு 152 இரண்டாவது லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவும் மற்றும் லெப்டினன்ட் (கியூஎம்) பதவிக்கு 22 நன்னடத்தை அதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள், இலங்கை இராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் இதர பதவிகளுக்கு மிக அதிகமான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவை 21ம் திகதி மீண்டும் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,இதன்படி மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரெயில் சேவை ஆரம்பிக்ககூடியதாக இருக்கும் என்றார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
நாளை முதல் அரிசி கிலோ 100 ரூபாவுக்கும் குறைவாக விற்பனை
நாளை முதல் அரிசி கிலோ 100 ரூபாவுக்கும் குறைவாக விற்பனை
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி நாளை (10) கொழும்பு துறை முகத்தை வந்தடையவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இந்த
அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை ,எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்hர்.
இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலுஇ தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போதே அமைச்சர் செஞ்சி மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டார் என்று தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் 110ன் விதியின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தில் 108 முகாம்களில் வசித்து வருகின்றனர். 2 முகாம்கள் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. மற்ற 106
முகாம்களில் 12 முகாம்களுக்கு சென்று நான் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வின் அறிக்கையின் படி முதல்வர் கலைஞரின் திட்டம் தொடரவேண்டும் என்று அகதிகள் தெரிவித்தனர்.
317 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு உணவு. உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் புதிதாக வீடுகள் கட்டி தரக்கூடிய திட்டம், கல்வி திட்டம், படித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில்
வேலை வாங்கி தரும் நிலையை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கபட்டு அவை செயல்படுத்தபட்டு தொடர்ந்து அரசின் உத்தரவுகளை நிறைவேற்றபட்டு வருகிறது.
18 அரசாணைகளை முதல்வர் போட்டுள்ளார். தற்போது கூட 3 அரசாணைகளுக்கு நான் கையொப்பமிட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எப்போதும் இலங்கை தமிழர்களை
காப்பவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயபடுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை உடைப்பு
புத்தர் சிலை உடைப்பு
மாவனெல்ல நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இம்மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது.
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி ஜகத் ஏ கஹந்தகமகே (தலைவர்) தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜயகீ டி அல்விஸ் மற்றும் இந்திக காலிங்கவங்ச ஆகியோர், ஏனைய நீதிபதிகளாவர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 16 பேரில், 14 பேர் மட்டுமே அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனைய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
வழக்கு விசாரணைக்குப் பின்னர், அனைவரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
ஷாருக்கான் – ஆரியன் கான்
ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.
இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்துவருகிறார்.
இதனால் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு பைஜூஸ் 3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஷாருக்கான்
ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால், அவருடன் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதால், அவருடனான விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? அல்லது அந்நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டுவிட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷி கன்னா, வருங்கால கணவர் குறித்து பேசியிருக்கிறார்.
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
ராஷி கன்னா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்,
துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை
கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.
ராஷி கன்னா
எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன்
சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது. கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள். இப்போது தெலுங்கை விட அதிக தமிழ் படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன்” என்றார்.
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த
அண்ணாத்த படத்தின் ‘சாரக்காற்றே’ பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது
ரஜினி-நயன்தாரா பாடல் காட்சி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று
ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று
2வது பாடல் வெளியிடப்பட்டது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
ரஜினி-நயன்தாரா பாடல் காட்சி
ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை
விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
இலங்கையில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
பரவி வரும் நோயினை தடுக்க இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது
வடக்கில் இடியுடன் கூடிய மழை
வடக்கில் இடியுடன் கூடிய மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2021 ஒக்டோபர்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2021 ஒக்டோபர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில்காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பால்மா, சீமெந்து, கேஸ் என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
இதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டு நேற்று(8) வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும் உரிய பொருட்களை கூடுதலான விலையில் விற்பனை செய்யும்
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி வர்த்தக அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் சபையில் சிறீதரன் எம்.பி!video
வடக்கு கிழக்கில் தொடரும் கடத்தல் கைதுகள்: கேள்வி கேட்டால் புலனாய்வாளர்கள் என்று வெருட்டல்; சபையில் சிறீதரன் எம்.பி!
யாழ் தேர்தல் மாவட்டத்தின் வலி வடக்கு பகுதியில் 18 கிராம அலுவலர் பிரிவில் பகுதியளவு குடியேற்றமே செய்யப்பட்டிருக்கிறது, 3 கிராம அலுவலர் பிரிவில் முற்றாக குடியேற்றங்கள்
எதுவுமே ஏற்படுத்தப்படவில்லை. அதே போல் கிளிநொச்சியின் பச்சிளைபள்ளி பிரதேச அலுவலர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்று மக்கள்
குடியேற்றப்படவில்லை. இப்படியான நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1 பாராளுமன்ற ஆசனத்தை குறைத்திருப்பது பிழையான ஒரு செயல். இந்த தவறு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என இந்த உயரிய சபை மூலமாக கோரிக்கை விடுக்கிறேன்.
என தனது கருத்துக்களை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தனது உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்
சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்
சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் -சிறுமி மரணம்
பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (8) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







