Posted in Uncategorized

பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள்

பாடசாலைக்கு வந்த யானைகள்

மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன.

இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    Posted in Uncategorized

    தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

    தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

    குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு பதிவாகியுள்ளது.

    இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அத்துடன் இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரனும் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்

      ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்

      ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

      சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு

      பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு

      சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

      பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.

      இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!

        பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!

        ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்…” என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.

        பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

        வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

        இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

        சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது…

        மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன்

        கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று

        அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று

        பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற

        முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.

        சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

        சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது

          Posted in Uncategorized

          புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு

          புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு

          முல்லைத்தீவின் இருவேறு இடங்களில் இருந்து, நேற்று (12) வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

          அளம்பில் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணி ஒன்றில் இருந்து, துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

          மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பில், நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          இதேவேளை முள்ளியவளை – கேப்பாபிலவு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்

            வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்

            நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

            குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

            தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

              Posted in Uncategorized

              பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்

              பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்


              இலங்கையில் ஐநாவின் கீழ் பொதுஜென வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

              இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன ,அவை பெரும் பாண்மை இனத்தவர்களினால் அடக்க பட்டு ,அழிக்க பட்டு அவர்கள் உரிமைகள் பறிக்க பட்டு நிர்கதியாக உள்ளனர்

              இவ்வேளையில் இந்த கொலைக்கு தீர்வு காண மறுக்கும் ஐநா அதனை செய்திட வேண்டும் என்பதே இவரதும் ,தமிழர்களின் ஏகோபித்த கருத்து என்பது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது

                இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது

                இலங்கை திருகோணமலையில் இருந்து கடல்வழியாக நியுசுலாந்திற்கு செல்ல முயன்ற அறுபத்தி மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                கடல் வழியாக வெளி நாயடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி அந்த பணத்தை மகிந்த மகன் கொள்ளையடித்து வருகினார்

                இவர் தான் இந்த முகவர்களின் பிரதான முகவர் என தெரியாது பலர் பல லட்சணங்களை வழங்கி மோசம் போகின்றனர்

                காவல்துறையால் கைது செய்ய பட்டவர்கள் சிறையில் அடைக்க பட்டால் அவர்களை வெளியில் விடுதவதற்கும் ஈவேரா டீல் பேசி பணத்தை கொள்ளையடிக்கிறார்

                இதனை தெரியாது அப்பாவி தமிழர்கள் ஏமாந்து போகின்றமை வருந்த தக்கது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்

                  இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் இருபத்தி மூன்று பேர் மரணமாகியுள்ளனர்

                  மேலும் பலர் பாதிக்க பட்டுள்ளனர்

                  நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் இந்த மரணங்களை தடுக்க முடியாது சிங்கள அரசு தினறி வருகிறது

                    Posted in சினிமா

                    விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

                    விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை


                    நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

                    3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
                    விஜய்
                    ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

                    இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in சினிமா

                    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

                    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

                    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

                    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
                    கணவருடன் ஸ்ரேயா
                    தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

                    ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

                    கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

                    வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

                    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

                    வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

                    கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                      Posted in Uncategorized

                      முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்

                      முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்

                      முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

                      கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், நேற்று (11), கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட வேளை, மாவட்ட கடற்றொழிலாளர்களின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,

                      அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள், உள்ளூர் மீனவர்களின் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்ததுடன், கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்தின.

                      இது குறித்து மாவட்ட கடற்றொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

                        Posted in Uncategorized

                        இந்திய இராணுவ தளபதி இலங்கையில்

                        இந்திய இராணுவ தளபதி இலங்கையில்

                        இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.

                        இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

                        இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில், காலை 11.05 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

                        இவருடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருந்தனர்.

                        இந்தக் குழுவை வரவேற்க, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏராளமானோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.

                        இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        Posted in Uncategorized

                        அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்

                        அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்

                        அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

                        மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை

                        நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

                        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

                        ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

                          Posted in Uncategorized

                          மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு

                          மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு

                          ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் நம்பிக்கை வெளியிட்டார்.

                          ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 90 நாட்களாக தொடர்ந்துவரும் தொழிற்சங்க போராட்டம் குறித்து இன்று (12)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியராளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

                          இன்று எட்டப்படும் சுமுகமான தீர்வை அடுத்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

                            Posted in Uncategorized

                            கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

                            கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

                            கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                            இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                            காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய பூசகர் துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.

                            கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

                              Posted in Uncategorized

                              50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி

                              50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி

                              ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் பகுதில் கெப் ரக வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஓடையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              குறித்த சம்பவம் நேற்று (10) இரவு ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

                              ஹட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்து கெப் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

                              குறித்த விபத்தில் சாரதி மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

                                Posted in Uncategorized

                                ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

                                ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

                                பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


                                வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.

                                இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.

                                சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சீமெந்து, மா விலை அதிகரிப்பு

                                  சீமெந்து, மா விலை அதிகரிப்பு

                                  இலங்கையில் ஆளும் அரசினால் சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் மற்றும் மாவின் விலையும் அதிகரித்துளளது


                                  மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் ,மற்றும் இதர மாவினால் உருவாக்க படும் பொருட்களும் அதிகரிக்க படலாம் என மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்