Posted in Uncategorized

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்

.
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்

இஸ்ரேல் சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாம் பற்றி எரிகிறது ,


எனினும் இதுவரை இதன் முழுமையான சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை

    Posted in சினிமா

    போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை

    போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை

    விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படத்தில் கதாநாயகியாக நடித்த டிம்பிள் ஹயாதி போலிகளிடம் ஏமாற வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை
    டிம்பிள் ஹயாதி
    விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. பிரபுதேவாவின் தேவி-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்த கில்லாடி படம் திரைக்கு வந்துள்ளது. இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் டிம்பிள் ஹயாதி பெயரை பயன்படுத்தி சிலர் திரையுலக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டிம்பிள் ஹயாதி

    இதுகுறித்து டிம்பிள் ஹயாதி கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியான அவர் போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். சமூக

    வலைத்தள பக்கத்தில் டிம்பிள் ஹயாதி வெளியிட்ட பதிவில், “குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பவேண்டாம். அந்த எண்ணில் இருந்து பேசுபவர்கள்

    எனது பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள். புகாரும் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்

      Posted in சினிமா

      கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்

      கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்

      இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

      இணையத்தை கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்
      ஷாலு ஷம்மு


      தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் நடித்த காஞ்சனா,

      மங்கத்தா போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 2021 ஆம் ஆண்டு தமிழில் ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரில்லா படம் வெளியானது. தற்போது கேங்ஸ்டர் 21 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

      2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்

      பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் படஙகள் நடித்து வருகிறார்.

      வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அனைவராலும் தெரியப்பட்டவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

      உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர்

      போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘கங்குபாய் கத்யாவாடி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

      இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

        Posted in Uncategorized

        பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

        பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

        பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் பல டசின் பேர் காணாமல் போயுள்ளனர்

        இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          வீட்டுக்குள் சிநுழைந்து சிசு கடத்தல்

          வீட்டுக்குள் சிநுழைந்து சிசு கடத்தல்

          பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதாக ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.

          குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

          ஹொரண நீலக என்ற சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.

          குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.

          இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்த நிலையில் நாளை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட இருந்தார்.

          ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

          .பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

          பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

          இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

          யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்றுக் காலை 9 மணியளவில்

          இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.

          இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சுகிர்தன், ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோரும் தமிழ்த் தேசியக்

          கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபைத் தலைவர் மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக

          செயற்பாட்டாளர்கள், பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

          பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

          இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

          கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

          அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ்.பல்கலையில் பதற்றம்

          யாழ்.பல்கலையில் பதற்றம்

          யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

          இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.

          பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன.

          அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

          Posted in Uncategorized

          நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

          நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

          பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்.

          பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
          நிலச்சரிவு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.


          பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

          இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

          தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது

          Posted in Uncategorized

          ஏரியில் விழுந்த போர் விமானம்

          ஏரியில் விழுந்த போர் விமானம்

          மியான்மரில் விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று மீட்புக் குழு பணியாளர் தெரிவித்தார்.

          ஏரியில் விழுந்த போர் விமானம்- பைலட் உயிரிழப்பு
          மீட்பு பணி

          மியான்மரின் சகாயிங் நகரின் அருகே போர் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

          விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், விமானப்படையின் விருப்பத் தேர்வான நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

          மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான படைகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெறும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

          Posted in உலக செய்திகள்

          பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்

          பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்
          தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

          பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்
          இளவரசர் ஆண்ட்ரூ

          இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

          ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

          இதனிடையே ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

          இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.120 கோடி) வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

          இதை தொடர்ந்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

          Posted in இலங்கை செய்திகள்

          சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

          .சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

          கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற தந்தையின் பின்னால் வந்த மூன்று

          யது சிறுவன், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          கஹட்டகஸ்திகிலிய, கைப்பிட்டிய, இஹலகம பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

          சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதையடுத்து தந்தையை சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

          எனினும், சிறுவன் தனது பின்னால் வந்ததை தந்தை பார்க்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

          இதன்போது, சிறுவன் நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

          பின்னர் சிறுவனை தேடிய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் சோதனை

          வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் சோதனை

          யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர்

          பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

          வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

          நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான

          பிசிஆர்பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

          அந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை

            அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை

            பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக பதுளை – மகளிர் மகா வித்தியாலய

            அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

            குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போதிய அளவு சாட்சியங்கள் இல்லாத காரணங்களினால் உயர்நீதிமன்றத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.‌

            ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சாமர சம்பத் தசநாயக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பதுளை

            மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

            .

              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கி சூடு – பெண் மரணம்

              துப்பாக்கி சூடு – பெண் மரணம்

              மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

              சந்தேக நபர்கள் உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கொலை செய்ய வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

              துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தபோதிலும், உயிர்த்தப்பியுள்ளார்.

              சம்பவ இடத்திலிருந்து ஆறு T-56 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

              கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

              முதற்கட்ட விசாரணைகளை மத்துகம நீதவான் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை

              12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை

              12 வருடஙக்ளுக்கு முனர்கொழும்பில் இருந்து புலிகளுக்கு நிதி சேகரித்த குற்ற சாட்டில்

              கைதான நபர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுவிக்க பட்டுள்ளார்

              சட்டத்தரணி தவராசாவின் வாத திறன் காரணமாக இவர் விடுவிக்க பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

              வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

              இலங்கை வவுனியாவில் இருந்து அனுராத புரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள்

              எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு தடை பட்டுள்ளது

              தண்டவாளத்தில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவைகள் இடை நிறுத்த படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை

                அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை

                அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

                சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி

                கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள்

                என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

                மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில்

                வெளிவிவகாரம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

                வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ஆகிய அமைச்சர்கள் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கென நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

                மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்களான அலிசப்ரி, நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

                  Posted in உலக செய்திகள்

                  ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு

                  ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு

                  உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் ரசியா

                  உக்கிரேன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஐரோப்பா மீதும் தாக்குதலை நடத்த கூடும்

                  என எதிர் பார்க்க பட்டது ஆனால் தாம் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம்

                  தமக்கு இல்லை என ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்

                  உக்கிரேன் மீதான தாக்குதல் இராணுவ குவிப்பு ஐரோப்பாவுக்கும் விடுக்க பட்ட எச்சரிக்கையாகவே பார்க்க படுகிறது

                    Posted in Uncategorized

                    முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ

                    முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ

                    உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் தற்பொழுது

                    ரசிய இராணுவம் தமது முகாம்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது, டாங்கிகள்


                    ,கவச வாகனங்கள் சகிதம் அவர்கள் செல்லும் அந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                    இதில் அழுத்தி வீடியோ பார்க்க