Author: நலன் விரும்பி
டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ
டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ
உகிரேனை நோக்கி படையெடுக்கும் ரஷியா இராணுவத்தின் இராணுவ வண்டிகள் தொடர்பாக
தற்போது சமூக வலைத்தளங்களான டிடோக்கில் புதிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது
பிரதான சாலை ஒன்றின் வழியாக படை எடுக்கும் இந்த வண்டிகள் தொடர்பான காட்சிகளில் ஒன்றே இவையாகும்
ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்
ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்
பிரிட்டனில் புரட்டி போட்ட புயல் காரணமாக ஐரோப்பாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் உள்ள O2 Arena.பகுதி கூரையை கிழித்தெறிந்துள்ளது
இந்த புயலினால் லண்டன் உள்ளிட்ட ஐரோப்ப தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
.
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
உகிரேனை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டுவரும் வரும் முகமாக ரஷியா பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தவுள்ளது
தற்போது ரஷியா படைகளுக்கும் உக்கிரேன் ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் சிறிய மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதான செய்திகள் வெளியாகியுள்ளன
எதிர் வரும் வாரம் ரசியா உக்கிரேன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்
என அமெரிக்கா தெரிவித்துள்ளதால் மேலும் நாடுகளுக்கு இடையி பதட்டம் அதிகரிக்கிறது
போதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை
போதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை
குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை காவ்யா தாபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை கைது
காவ்யா தாபர்
மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்திலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த
மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
காவ்யா தாபர்
அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெண் போலீசார் ஒருவரின் சீருடையை பிடித்து இழுத்து தாக்கவும்
முற்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் நடிகை காவ்யா தபாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்
கடலில் மிதந்த மனித சடலம்
கடலில் மிதந்த மனித சடலம்
திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இளைஞர் கடலில் சடலமாக மிதந்த நிலையில் இன்று (17) கரையொதுங்கி உள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று (16) நிலாவெளி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
கடலில் மிதந்த மனித சடலம்
இதனையடுத்து கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞர் சடலம் மீட்க முடியாமல் போயுள்ளது.
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்
இந்த நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கடலில் மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து கடலில் மிதந்த சடலம் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது .
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம்சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அடித்து கொலை – 4 பேர் கைது – 4 பேர் கைது
போலீஸ் அடித்து கொலை – 4 பேர் கைது – 4 பேர் கைது
தங்காலை − விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17ஆம் திகதி இரவு விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மோதலை அடுத்தே, இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் 36 வயதான சத்துரங்க டில்ஷான் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், மனைவியின் சகோதரன் கவலைக்கிடமான நிலையில்
கராபிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
தாலி கட்டிவிட்டு மனைவியை இடையில் விட்டு ஓடிய கணவன்
தாலி கட்டிவிட்டு மனைவியை இடையில் விட்டு ஓடிய கணவன்
தாலி கட்டி திருமணம் முடிந்து வரும் வழியில் மனைவியிடம் கணவன் சொன்ன வார்த்தை புது மனைவி நம்பியமையால் தற்போது அநாதையாக நிற்கிறார் புதுமனைவி. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
சரி, இனி சம்பவத்துக்கு வருவோம்…
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லட்சுமி (வயது 23) டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். மேலும், படிக்கும் காலத்தில்
இருந்தே கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக லட்சுமி அவரது வீட்டு அருகில் உள்ள புருஷோத்தமன் என்பவது மகன் சின்னராசு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
2 முறை கருக்கலைப்பு:
சின்னராசு, திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோகப் பிரிவில் வேலை செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் சின்னராசு லட்சுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், இதற்கு முன் லட்சுமி 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார். தற்போது, லட்சுமிக்கு சின்னராசுவின் வீட்டார் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை கேள்விப்பட்ட லட்சுமி சின்னராசுவின் பெற்றோரிடம் சென்று சின்னராசு தன்னை காதலித்ததாதகவும், தற்போது வேறு பெண்ணை எப்படி திருமணம்
செய்யலாம் என கேட்டதற்கு தகாக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம்:
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரிக்கும் போது சின்னராசு தன் தவறை உணர்ந்து திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின்,
ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் திகதி இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் தாலி கட்டியுள்ளார் சின்னராசு
திருமணமான தம்பதிகள் இருவரும் தேவாலயத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற சின்னராசு மனைவி லட்சுமியை கீழே
இறக்கிவிட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு தலைமறைவானதால் லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளிடம் புகார்:
அதோடு லட்சுமி கணவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது சின்னராசு குடும்பத்தார் யாரும் இல்லாததால் மிகுந்த மன வேதனைக்குள்ளாகிய லட்சுமி இதுகுறித்து
ஊத்துக்கோட்டை டிஎஸ்பி திருவள்ளூர் எஸ்பி மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் நிர்வாகிகள் ஆதரவு:
காதலித்து ஏமாற்றி, காவல்துறையினரே திருமணம் செய்து வைத்த பின்னும் நடுரோட்டில் விட்டு சென்ற சின்னராசுவை கைது செய்யாமல் இருப்பதால் லட்சுமி
சின்னராசுவின் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் நிர்வாகிகள் மோகனா
உள்ளிட்ட பலரும் ஆதரவு கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மெய்யூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில்- மோடியிடம் கோரிக்கை
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில்- மோடியிடம் கோரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இலங்கை
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
அதேவேளை, தமிழர்கள் இங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் பல விடயங்களை நேரில் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவலாக உள்ளது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை
முதன்மைச் செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அதன் பேச்சாளர் எம்.எ.சுமந்திரனும் பேச்சு நடத்தினர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷ்ங்கர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு
வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசப்பட்டன. அத்தோடு வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போதும் அதற்குப் பின்னரும் இலங்கையின் தமிழ்த் தேசிய பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள்
இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது. இந்த
வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே தொடர்ந்தும் இந்தியா அந்தப்
பங்களிப்பைச் செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சம்பந்தன் முன்வைத்தார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் வேறும் பல விடயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டன” – என்றார்
டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சி
பைஷல் இஸ்மாயில் –
டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்த்தின் விஷேட அறிவுருத்தல்களுக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக, கிழக்கு மாகாண சபை வளாகத்தில் (18) கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில்
இச்சிரமாதானப் பணிகள் இடம்பெற்றது. இதில் முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட
முதலமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இதில் ஈடுபட்டனர்.
இதன்போது முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
டெங்கு நோய்த் தொற்றற்ற ஒரு நாடாக எமது நாடு திகழ்வேண்டும் என்ற ஜனாதிபதின் சிநத்தனைக்கமைவாக, கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. டெங்கு நுளம்பின் உருவாக்கத்தையும், அதன் பெருக்கத்தையும் இல்லாது செய்வதாக இருந்தால் நாம் இருக்கின்ற இடங்களை நாளாந்தம் துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட டெங்கு நுளம்புப் பரவல் வீதம் குறைவாக இருக்கின்றது. இதை 100 வீதம் இல்லாமல் செய்வதே எமது ஆளுநரினதும்,
எங்களினதும் நோக்காக இருக்கின்றது. அதற்காக சுகாதாரத்துறை பாரிய பங்களிப்புக்களையும், விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.
உயிர்கொல்லி நோயாக இருக்கின்ற டெங்கு நோய் பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளை
இல்லாமல் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இதை பெற்றிகொள்ள முடியும் என்றார்.
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் வீழ்ந்து நொறுங்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது
புயல் வீசிய பொழுது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
மேலும் கென்ட் பகுதியில் 33 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன
மின்சார கம்பங்கள் அறுந்து வீழ்ந்த்தனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது
இலங்கை மீனவர்கள் நல்லவர் சிங்கள படையால் கைது
இலங்கை மீனவர்கள் நல்லவர் சிங்கள படையால் கைது
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு காரைநகர், கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
.பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா… வைரலாகும் புகைப்படங்கள்
சினேகா
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு
பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
சினேகா
இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து
வருகின்றனர். இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் இருக்கும் சினேகாவின்
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை
தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் அதிகாரியின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு
கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சுமார் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (18) காலை 10 மணிமுதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்குழாய் வெடித்துள்ளமையால், நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம் கொழும்பு, 1, 7, 9, 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது, குறைந்த அழுத்தத்துடன் கொழும்பு -8க்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், -விடுதலை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஈஸ்டர் தின தாக்குதல்கள்
தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு
விசாரணையில், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்
சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது
சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது
நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க அவர்களினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.
சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.
கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது.
பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.
சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.
சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதன் பின்னர் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.
இரப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் திரு.பண்டாரநாயக்க அவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார். சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார்.
இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.
சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க அவர்கள் விசேட பங்கு வகித்தார்.
1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும்.
இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.
சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.
2012 ஆம் ஆண்டு முதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஆன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.
சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் – மனோ கணேசன் எம்பி
இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் பெப் 21ம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது
- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும். இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இறுதி வடிவம் பெறுகின்ற இந்த ஆவணம், இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக கட்சி தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேர்ப்பிக்கப்படும்.
அத்துடன் இந்த ஆவணம் தேசியரீதியான கலந்துரையாடல்களுக்காக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும். சிவில் சமூக அமைப்புகளுடன் நாம் நடத்த உத்தேசித்துள்ள கலந்துரையாடல்கள், இலங்கை, இந்தியா, பிரிட்டன் மற்றும் சர்வேதச அரசு நிறுவனங்களுடன் நாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம்.
புதிய அரசியலமைப்பு வரைபை தாயரித்து வரும் தனது உத்தேசத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வருவதையும் நாமறிவோம். இந்த பின்னணியில் இன்றைய சூழலில் எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை நமது நாட்டு அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் உதேசித்துள்ளோம்.
அதேவேளையில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் மற்றும் அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து பறிமாற்றங்களையும் நாம் அவதானித்து வருகிறோம். இந்த தொடர்பாடல்கள், பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுடன் மாத்திரம் மட்டுப்படுவது முறையானதல்ல என நாம் நம்புகின்றோம். 1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படியும், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.
இதுபற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றும்.
அதேவேளை மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களை இலங்கை தீவுக்கு அழைத்து வந்து பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, பயன்பெற்றதன் அடிப்படையில் பிரித்தானிய இராணியின் அரசாங்கத்துக்கும், மலையக மக்கள் தொடர்பில் இருக்கின்ற பெரும் கடப்பாட்டையும் எடுத்து கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு செய்துள்ளது.
நாம் முன்வைக்க உள்ள, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் இந்த அரசியல் ஆவணம், மேற்கண்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம். இது தொடர்பில் நாடெங்கும் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினதும், அனைத்து சகோதர மக்களினதும் ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் நாம் கோருகிறோம்.
.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்து 215 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
2019ஆம் ஆண்டு ஏப்பிரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ,சிறுவர்கள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
சவுதி உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
சவுதி உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
ஏமான் நாட்டில் உள்ள கவுதிய படைகள் அருகில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
சவூதி நாட்டின் இராணுவ உளவு விமானம் ஒன்று வீரர்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
தொடர்ந்து சவூதி மற்றும் கவுதிய இராணுவத்தினருக்கு இடையில் பரஸ்பர ஏவுகணை
தாக்குதல்கள் உள்ளிட்டவை இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
சிரியா அரச இராணுவத்தின் உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
,
இதன் பொது அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்
வானூர்தியில் ஏற்பட்ட தொழில் நுட்பம் காரணமாக அவசரமாக தரை
இறக்க பட்ட முற்பட்ட பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது








