Posted in Uncategorized

வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

சிரியா டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வண்டி ஒன்றில் ஆயுதம் வெடித்து

சிதறியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இராணுவத்தினர் சென்ற வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

    சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா


    73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா
    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுடன்

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

    இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த கமிலா, தினமும் கொரோனா பரிசோதனை செய்து வந்தார்.

    அந்த வகையில் நேற்றைய பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

      Posted in சினிமா

      கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்

      கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்

      அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக பதிவிட்ட இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

      கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்
      டி.சிவா
      டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக

      நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.

      ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா,

      ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்

      நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

      டி.சிவா

      இந்த பதிவில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தயாரிப்பாளர் டி.சிவா இந்த பதிவை காட்டமாக விமர்சித்து

      பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

      அஜய் ஞானமுத்து
      அஜய் ஞானமுத்து

      தயாரிப்பாளர் டி.சிவாவின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து பதில் பதிவிட்டிருக்கிறார். அதில், “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது

      வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

        Posted in Uncategorized

        நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

        நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

        இந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

        நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதால் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார் – சோனிபட் காவல்துறை விளக்கம்
        பஞ்சாப் நடிகர் தீப் சித்து

        வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த

        போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

        இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார்.

        குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தீப் சித்து வந்த கார் வேகமாக மோதியது.இதில்

        படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

        இந்த விபத்து குறித்து சோனிபட் காவல்துறை எஸ்.பி.ராகுல் சர்மா, தெரிவிக்கையில்,

        சாலை விபத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தீப் சித்து என்ற அடையாளம் காணப்பட்ட நபர் சிகிச்சையின்

        போது இறந்தார், மேலும் ஒரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

        சரண்ஜித் சிங் சன்னி, . தீப் சித்து

        இதனிடையே, தீப் சித்து உயிரிழப்புக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

        பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான தீப்சித்துவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்களும்

        பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. இவ்வாறு தமது ட்விட்டர் பதிபில் சரண்ஜித் சிங் சன்னி பதிவிட்டுள்ளார்.

          Posted in Uncategorized

          உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

          உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

          உக்கிரேன் எல்லையில் ரசியாவின் ஒரு லட்சம் துருப்பினர் தாக்குதலை நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்

          முக்கிய ஆயுத தளபாடங்களுடன் முக்கிய தாக்குதல் படை பிரிவுகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலை வருகிறது

          தமது நாட்டை ரசியவிடம் இருந்து பாதுகாக்க வயோதிபர்கள் முதல் உக்கிரேனில் அவசர இஇராணுவ பயிசிறை பெற்ற வண்ணம் உள்ளனர்

            Posted in Uncategorized உலக செய்திகள்

            பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

            பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

            பிரான்ஸ் Saint-Laurent-de-la-Salanque பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தி விபத்தில் சிக்க ஏழு பேர் பலியாகினர்

            மேலும் சிலர் தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

              20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

              ஈராக்கில் ஐ எஸ் படையை சேர்ந்த இருபது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


              இராணுவத்தின் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் பொழுது இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

                துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

                திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில்

                துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் காணியிலிருந்து நீர் வடிந்தோடுவதற்க்காக குழாய் பொருத்தும் நோக்கில்

                நேற்று (14) மாலை வெட்டப்பட்ட நிலத்திலிருந்தே குறித்த எஸ்.எம்.ஜி ரக துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் மூன்று மகசீன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                குறித்த நபர் அவ்வீட்டிற்க்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் குறித்த வீட்டின்

                உரிமையாளர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized

                  செக்ஸுக்கு மறுத்த பெண்ணின் மார்பகங்களை கிழித்த கொடூரன்

                  செக்ஸுக்கு மறுத்த பெண்ணின் மார்பகங்களை கிழித்த கொடூரன்

                  புனேவின் சிவப்பு விளக்கு பகுதியில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் பாலியல் தொழிலாளியை பிளேடால் கிழித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


                  புனேவின் வாதார்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (40). இவர் கடந்த பிப்ரவரி 11-ம் திகதி புத்வார் பெத் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.


                  அங்கு பாலியல் தொழிலாளி பெண் (35) ஒருவரிடம் விபச்சாரத்திற்கான தொகை குறித்து ராஜப்பா பேரம் பேசியுள்ளார்.


                  தொடர்ந்து, இருவருக்கும் இடையே பேரம் வாக்குவாதமாகவும் மாறியுள்ளது.
                  ஒருகட்டத்தில் ராஜப்பாவின் பேரத்தை ஏற்காத அந்த பெண், அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.


                  இதில் ஆத்திரமடைந்த ராஜப்பா, அந்த பாலியல் தொழிலாளி பெண்ணின் மார்பகத்தை தான் வைத்திருந்த சேவிங் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார்.


                  இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


                  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ராஜப்பாவை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஐபிசி 307, 506 பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                  தொடர்ந்து, அந்த பாலியல் தொழிலாளி பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்

                    தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்

                    தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

                    இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

                    இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
                    15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                      சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                      கொஸ்லாந்த – கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி

                      மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                      கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                      இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 21 வயதான இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்

                        Posted in Uncategorized

                        யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                        யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                        யாழ் . மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

                        கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

                        இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

                        குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

                        இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

                          Posted in Uncategorized

                          இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி

                          இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி

                          இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                          நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

                          மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு

                            நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு

                            இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                            இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

                            இது தொடர்பில் விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                            மேலும், அத தெரண செய்திச் சேவைக்கு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

                            2022 வரவு செலவு திட்ட யோசனையை சமர்ப்பித்து என்னால் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு திட்ட உரையின் 68 ஆவது பக்க 7.9 இல் ஒரு முறை மாத்திரம் அறவிடப்படும் வரி யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில் 2000 மில்லியனை விட அதிக வரி

                            வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் மீது சுமத்தப்படும் 25 சதவீத மிகை வரி குறித்து தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி ஊடாக சுமார் 100 பில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வாறுதான் 68

                            ஆம் பக்கத்தில் உள்ளது. அதன்படி, 69 பேரை இனங்கண்டிருந்தோம். இவர்களிடம் இருந்து 105 பில்லியன் வரி வருமானம் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களை இதில் உள்ளடக்க நாம்

                            எப்போதும் எதிர்ப்பார்க்கவில்லை. அதை நாங்கள் திட்டமிடவே இல்லை. எனினும் கடந்த அரசாங்கத்தின் 2017 இலக்கம் 24 உள்நாட்டு வருமான சட்டத்தில் இந்த 11

                            நிதியங்களும் வரி அறிவிட வேண்டிய நிறுவனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மிகை வரிக்கு குறித்த நிதியங்களும் உள்ளடங்கும் என பொது மக்கள்

                            மத்தியில் கருத்து பரவியுள்ளது. இதனை நாம் அமைச்சரவையில் விளக்கப்படுத்தி குறித்த 11 நிதியங்களையும் இந்த வரியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

                              கொரானா
                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம்

                              இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம்

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர்
                              தொடர்ந்து 1500 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                தீயில் எரிந்து நபர் மரணம்

                                தீயில் எரிந்து நபர் மரணம்

                                லிந்துலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அந்த

                                சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுளளார்

                                இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடரால் விசாரணைகள்

                                இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                Posted in இலங்கை செய்திகள்

                                உக்ரைனில் போர் பதற்றம்; இலங்கையர்களின் நிலை

                                உக்ரைனில் போர் பதற்றம்; இலங்கையர்களின் நிலை

                                உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல

                                நாடுகள் உக்ரைனிலுள்ள தமது நாட்டு பிரஜைகளை நாடு திரும்புமாறு அறிவித்துள்ளன.

                                இந்த நிலையில், உக்ரைனில் தற்போது 42 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அவர்களில் 7 பேர் மாணவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

                                மேலும், இவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருவதாகவும், உக்ரைனிலுள்ள இலங்கையர் தொடர்பில் மிகுந்து அவதானத்துடன் செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

                                உக்ரைனில் இலங்கை தூதரகமொன்று இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள

                                தூதரகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் கூறுகின்றது.

                                இதேவேளை, உக்ரைனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள

                                இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது

                                  சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது

                                  தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

                                  கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று

                                  துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன தெரிவித்தார்.

                                  தற்போது துறை முகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

                                  பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல

                                  நடவடிக்கைகளுமள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.  

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

                                  சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

                                  2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு

                                  உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

                                  மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                  2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை. இவர்களுள், கணிதப்

                                  பாடத்தில் சித்தியடையாத, ஆனால் பின்னர் அதன் பெறுபேற்றை பெற்றுத் தருவதாக கூறி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.

                                  க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப

                                  தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது

                                    20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது

                                    இலங்கையில் மகிந்த ஆட்சியின் பின்னர் பரவி வரும் போதைவஸ்து வியாபாரம் கொடி
                                    கட்டி பறக்கிறது

                                    இராணுவம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதலிஞ் பொழுது இருபது மில்லியன் ரூபா பெருமாதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

                                    இந்த கடத்தலை புரிந்த ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்