Posted in Uncategorized

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி

    பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி

    நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்

    கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்ததாக தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

    தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் உணவு உண்ணவும், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடவும் முடிந்தது என்று தெரிவித்த அவர், சில பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றார்.

    அரசாங்கத்தை குறை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு இந்தத் தருணமே பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.

    54 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் எனவும் குறிப்பிட்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ரஷ்யா மோதல்- இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

      ரஷ்யா மோதல்- இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

      இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை

      தேயிலை தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

      ரஷ்யா வருடமொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலையை கொள்வனவு செய்கின்றது. அத்துடன், கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு

      மில்லியன் கிலோகிராமுக்கு மேல் ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

      போர் தொடங்குவதற்கு முன்பே ரஷ்யா கோரிய தேயிலையை அனுப்பியுள்ளதாக கூறிய அந்த அதிகாரி, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும்

      அதிகரித்தால் புதிய கொள்வனவு கோரிக்கைகள் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

        Posted in இலங்கை செய்திகள்

        வாகன விபத்துகளில் 457 பேர் மரணம்

        வாகன விபத்துகளில் 457 பேர் மரணம்

        .ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 .

        இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன

        விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி

        ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை கடற்படைக்கான சுழியோடல் பயிற்சி

          .இலங்கை கடற்படைக்கான சுழியோடல் பயிற்சி

          சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

          1. கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் இக்கப்பலுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அக்கப்பலின் தளபதி மொகமட் இக்ரம் அவர்கள் கிழக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸ் அவர்களை சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது, எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் சுழியோடல் குறித்து மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
          2. ஆறுபேர் பயணிக்கும் வசதிகொண்ட இரு கலங்களையும் மூவர் பயணிக்கும் வசதியுடனான ஒரு சுழியோடல் கலத்தையும் இந்திய கடற்படைக்கப்பலான நிரீக்‌ஷாக் (A-15) கொண்டுள்ளது. அத்துடன் ஆபத்தில் இருக்கும் நீர்மூழ்கி கப்பலை மீட்கும் திறனையும் சுழியோடிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் ஆற்றலையும் கொண்டுள்ளதாக இக்கப்பல் காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினருக்கான இதேபோன்ற சுழியோடல் பயிற்சிக்காக 2019 செப்டெம்பரிலும் இக்கப்பல் திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இந்திய கடற்படைக் கப்பல்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான இவ்வாறான தொடர்ச்சியான ஈடுபாடு இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியாவால் முன்னெடுக்கப்படும் திறன் விருத்தி செயற்பாடுகளுடன் இணைந்ததாக அமைகின்றது
          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா மகிந்தா தலைமையில் மகாவலி ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

          கோட்டா மகிந்தா தலைமையில் மகாவலி ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

          நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

          இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

          “நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை…”

          “அதனால் கிடைத்துள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்…”
          ஜனாதிபதி தெரிவிப்பு.

          “புரட்சிகர கட்சிகளெனச் சொல்லிக்கொள்வோர், மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் இலாபம் பெறுவதையே எந்நாளும் செய்தனர்…”

                                                            பிரதமர் தெரிவிப்பு.

          ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, இன்று (26) முற்பகல், எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, சிக்கல்களற்ற காணிகளின் உரித்துரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சிக்கலற்ற ஒரு இலட்சம் காணிகளின் உரித்துரிமையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

          இதன் முதற்கட்டமாக, 35,000 காணி உறுதிப் பத்திரங்கள், 10 வலயங்களைச் சேர்ந்த விவசாய மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், மகாவலி பிரதேசங்களில் வசிக்கும் விவசாய மக்கள் அனைவருக்குமான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

          காணியின் சட்டபூர்வ உரிமை கிடைப்படதன் மூலம், அந்தக் காணியை குடும்ப உறுப்பினரொருவரின் பெயருக்கு மாற்றம் செய்தல், பாதுகாப்புக் கருதி நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல் போன்ற பல அனுகூலங்களைக் காணி உரிமையாளர் பெறுவார்.

          ரண்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால், 30 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

          அந்நியச் செலாவணி பற்றாக்குறையானது, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் கிடைக்கப்பெறும் செலாவணி இழப்பு, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால் ஏற்பட்டவை அல்லவென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

          தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

          20 வருடங்களாக வாழ்ந்து வந்தும், அந்தக் காணியின் சட்டபூர்வ உரிமையற்றிருக்கும் மகாவலி மக்களுக்கு அந்த உரிமையைப் பெற்றக்கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அரசாங்கம் என்ற வகையில் உணர முடிகின்றது என, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

          இரசாயனப் பசளை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்து, புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாய மக்களை வீதிக்கு இறக்கினர். பயிர்ச் செய்த வயல்களுக்கு தீயிட்டுப் பயிர்களை அழித்துச் செய்த போராட்டங்கள் என்பன, விவசாயி மீதுள்ள அன்பால் செய்யப்பட்டவை அல்லவென்றும் இதன்மூலம் அவர்கள் அரசியல் இலாபம் பெறவே முயற்சித்தனர் என்றும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.

          காணி உரித்துரிமையை வழங்குவதால் மாத்திரம் மகாவலி விவசாய மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வை எட்டப்போவதில்லை என்று தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்கள், தேசத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, அனைத்து விவசாயக் காணிகளிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வது விவசாய மக்களின் கடமையென்றும் தெரிவித்தார்.

          மகாவலி வலயத்தின் மூன்றாவது தலைமுறையினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்கின்றதென்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

          மகாவலி வலய விவசாயிகளின் காணிகள் மாத்திரமல்ல, உயிர்களைப் பறிகொடுக்கும் காலத்தை மாற்றியதும் ராஜபக்ஷர்களே என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் அவர்கள், வாவிகள், அணைக்கட்டுகளை நிர்மாணித்து மகாவலிக்கு உயிரூட்டி, இரண்டு போகங்கள் மாத்திரமன்றி மூன்றாவது போகமென மேலதிக போகமொன்றைச் செய்வதற்கான வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் குறிப்பிட்டார்.

          அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்

          Posted in சினிமா

          படு கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை

          படு கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை

          காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை வேதிகா, பிகினி உடை அணிந்து பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          மாலதீவில் படு கவர்ச்சி.. பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா
          வேதிகா


          ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்

          படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

          இந்நிலையில், நடிகை மாலவிகா மாலதீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக

          வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பிகினி உடை அணிந்துள்ள படுகவர்ச்சியான அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

            Posted in உலக செய்திகள்

            உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

            உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

            ரசியாவுக்கும் ,உக்கிரேனுக்கும் இடையில் பலத்த சமர் இடம்பெற்று வரும் நிலையில் ரசியவனுடன் பேசிட உக்கிரேன் தயாராக உள்ளது

            எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இரு தரப்பும் பேச்சுக்களில் ஈடுபட உள்ளது

            இதில் ரசியாவின் கோரிக்கையை ஏற்க உக்கிரேன் மறுத்தால் நாடு முழுவதும் ரசியாவின் கட்டு பாட்டில் சென்று விடும் என எதிர் பார்க்க படுகிறது ,இராணவ

            பலத்துடன் ஏறி நின்று பேச போகும் ரசியாவிடம் அடிபணிந்து செல்வதை தவிர உக்கிரேனுக்கு வேறு வழியில்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

            குண்டுகளினால் உக்கிரேன் அதிர்ந்த வண்ணம் உள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

              Posted in Uncategorized

              உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

              உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

              உக்கிரேன் மீது ரசியா போர் தொடுத்து வரும் நிலையில் அவசர அவசரமாக விசேட விமானம் ஒன்றின் மூலம் வான் மறிப்பு வுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளது

              உக்கிரேனுக்கு உதவுவது போல இந்த ஏவுகணை வழங்க பட்டாலும் ரசியாவின்

              ஏவுகணை வீச்சின் தாக்குதல் அமெரிக்காவின் இந்த ஏவுகணையால் தடுத்து அழிக்க

              முடியுமா என்பதை சோதனை செய்திடும் களமாக உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி என்ற போர்வையில் சோதனை செய்வதை இவை எடுத்து காட்டுகிறது

              அப்படி என்றால் அமெரிக்கா ரசியா தம் மீதும் தாக்குதல் தொடுக்கலாம் என்பதை இப்போதே கணித்து கொள்கிறது என்பது பொருளாகிறது

                Posted in Uncategorized

                வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில் வடகொரியா தற்பொழுது


                620 km சென்று தாக்கும் கூறும் தூர ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை செய்த்துள்ளது

                தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவை தயாரிக்க பட்டு சோதனை செய்ய படுவதாக வடகொரியா தெரிவித்து வருவதும் ,இந்த சோதனையால்


                பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் நிலவி வருவதாக பகைமை நாடுகள் கூக்குரல் இட்டு வருகின்றன

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்

                  லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்

                  லண்டன் Dartford பார்க் பகுதியில் உலவிய நபர் ஒருவரை அங்கு நுழைந்த நாய் ஒன்று கோரமாக கடித்து குத்தறியது

                  நாயின் கடிக்கு உள்ளான் நபர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

                  நாயின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                    Posted in Uncategorized

                    தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                    தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                    இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட

                    தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை

                    தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்

                    தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்

                    போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

                      ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

                      ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இந்த கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கடுமையானதாக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                      இந்த கூட்ட தொடரில் வளமை போல இலங்கை தப்பிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது

                        கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது

                        இலங்கை கொலன்னாவ பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களை மிரட்டடி

                        கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழுவை சேந்த மூவர் இரகசிய போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                        கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

                          எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

                          இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் நாட்டு மக்கள் மீது வரி சுமைகள் மற்றும்

                          ,விலைவாசிகள் அதிகரிக்க பட்டதினால் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும்

                          பேக்கரிக்கு உற்பத்திகள் பாதிக்க பட்டுள்ளது

                          இதுபோலவே போக்குவரத்து சேவையும் பாதிக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம் – வெடித்தது சர்ச்சை

                            கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற

                            தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

                            சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கல்வி சுகாதாரம் போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி

                            நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு

                            செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர். குறித்த குழப்பங்களை

                            இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து கலந்துரையாடினர்.

                            இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.

                            இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன்

                            பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி

                            நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி

                            இலங்கையில் நாளை முதல் ஐந்து மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று

                            இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது

                            இதனால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                            இலங்கையின் பல பாகங்கள் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது

                              Posted in சினிமா

                              சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்

                              சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்

                              ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.

                              தொடர் சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்
                              விஜய்


                              நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து

                              வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

                              பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து முதல் பாடலான அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த

                              இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி இருவரும் பாடியுள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் வெளியான

                              12 நாட்களிலேயே, யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை அசத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

                                Posted in சினிமா

                                வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி

                                வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி

                                திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல் விவரத்தை பகிர்ந்த ஹூமா குரேஷி.

                                வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி..
                                ஹூமா குரேஷி


                                அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக

                                தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி கலவையான

                                விமர்சனங்களை பெற்றது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இப்படத்தின் வசூலை பற்றி ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

                                இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி வலிமை படத்தின் வசூல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி வலிமை மொத்தமாக 100

                                கோடி வசூலை அள்ளியதாக இவர் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்

                                  எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்

                                  இலங்கையில் எரிபொருள் தட்டு பட்டது ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டீசல்

                                  கிடைக்காவிடின் நாளை முதல் பயணிகள் பேரூந்துகள் போக்குவரத்து தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                                  ஆளும் அரசின் ஆட்சி காலத்தில் இலங்கை வரலாறுயுகாணாத பெரும் சீழிவை

                                  சந்தித்து வருகிறது ,இதனால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்