Posted in இலங்கை செய்திகள்

மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவும்- கோட்டா பணிப்பு

மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவும்- கோட்டா பணிப்பு

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல்,

கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், நாளை (03) முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும். எனவே, பொதுமக்கள்

அச்சமடைந்து எரிபொருள் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ, அமைச்சர்களான காமினி லொக்குகே, உதய கம்மன்பில, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய

வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர், துறைசார் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள்,

நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்

    Posted in Uncategorized

    லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்

    லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்

    லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Knoxbridge cafe ஒன்றுக்குள் வேகமாக பயணித்த கார்

    ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அந்த உணவகத்தின் சுவரை இடித்து உள்ளே நுழைந்துள்ளது

    இதில் சாரதி பலத்த காயமடைந்துள்ளார் ,ஆனால் அங்கு நின்ற மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்

    குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      வெடித்து சிதறிய காவல்துறை வண்டி – பலர் மரணம்

      வெடித்து சிதறிய காவல்துறை வண்டி – பலர் மரணம்

      பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் காவல்துறையினர் பயணித்த

      வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் சிக்கி அந்த வண்டி முற்றாக சேதமடைந்தது

      அதில் பயணித்த மூவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

      தலிபான்கள் அயல் நாட்டில் ஆட்சி பீடம் அமர்ந்த பின்னர் பாகிஸ்தானில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

        உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

        கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

        உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு
        உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பா
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ்

        போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

        இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

        இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா

        என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது

          Posted in Uncategorized

          ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு

          ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு

          உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் ,உலக

          நாடுகள் இணைந்து வங்கி முடக்க நிலையை தீவிர படுத்தின ,இந்த முடக்க நிலைக்குள் சீனா சிக்காது தப்பித்து ரசியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது

          இந்த பொருளாதார முடக்க நகர்வுகள் ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணம் என்பது

          போல அமெரிக்கா உள்ளிட்ட கூட்ட்டமைப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன

          எனினும் இந்த நகர்வுகள் ரசியாவை பாதிக்குமா அதனால் ஐரோப்பிய நாடுகள்

          ரசியாவின் இராணுவ நகர்வில் இருந்து தப்பிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது

            Posted in சினிமா

            வடிவேலு படத்தில் பிக்பாஸ் நடிகை

            வடிவேலு படத்தில் பிக்பாஸ் நடிகை


            நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் வடிவேலு படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடித்திருக்கிறார்.

            வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை
            வடிவேலு
            தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

            இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

            வடிவேலு – ஷிவானி

            சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில்

            பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார்.

            மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்

              Posted in சினிமா

              சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்

              சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்


              தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால், சேலைகட்டி குத்தாட்டம் ஆடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

              சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்
              சாக்‌ஷி அகர்வால்


              தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து

              பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

              இவரது நடிப்பில் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

              சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

              இந்நிலையில், தற்போது சேலை அணிந்து குத்தாட்டம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

                Posted in உலக செய்திகள்

                ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்

                ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் என்று தெரிவித்தார்.

                ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் – விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்


                27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.

                இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்
                நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.

                இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:

                உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

                அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி

                  ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி

                  விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது.

                  ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி
                  உக்ரைன் விவசாயி பீரங்கியை டிராக்டரில் கட்டி இழுத்து செல்லும் காட்சி.

                  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷியா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

                  உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷிய ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

                  இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கிவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.

                  இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

                  அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில்,

                  “இந்த வீடியோவின் மூலம் ரஷியா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது.

                  உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷியாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.

                  இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

                  இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்

                    Posted in Uncategorized

                    ரசியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

                    .புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

                    சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை- புதினை கடுமையாக தாக்கிய ஜோ பைடன்

                    ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

                    ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

                    ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது.

                    புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்கள் பக்கம் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.

                    தற்போது ஏற்பட்டுள்ள சண்டையில் அமெரிக்கா நேரடியாக ரஷியாவுடன் மோதல் போக்கை கடை பிடிக்காது. உக்ரைனுக்குள் சென்று ரஷிய படைகளை எதிர்த்து போராடும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயத்தில் நேட்டோ நாடுகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.

                    புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நிச்சயம் ஜனநாயகம் வெற்றி பெறும்.

                    புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ஏராளமான பீரங்கிகளை நிறுத்தலாம். கீவ் நகருக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.

                    இந்த உலகம் சுதந்திரமாக இயங்குவதை முடக்க புதின் முயற்சி செய்கிறார். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்காது.

                    உக்ரைன் நாட்டுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேட்டோ நாடுகளின் ஒரு இஞ்ச் இடத்தை கூட யாராலும் அபகரிக்க முடியாது.

                    உக்ரைன் நாட்டு மக்கள் உண்மையான வீரத்துடன் போராடி வருகிறார்கள். புதின் அவர்களை வெல்லலாம். ஆனால் இதற்கு ரஷியா நீண்ட நாட்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

                    புதின் உக்ரைன் போரை தவறாக கணித்து விட்டார். அவரது கணிப்பு நிச்சயம் நிறைவேறாது. அவரது முடிவால் ரஷிய பொருளாதாரம் வரலாறு வகையில் பலவீனம் அடையும் என்பது உறுதி.

                    ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்தவே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ அமைப்பு தனது கடமைகளை செய்யும்.

                    இதன் காரணமாக உக்ரைன் மீண்டும் வலிமை பெறும். புதின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வலிமை உண்டாகும். அதே சமயத்தில் ரஷிய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்.

                    உக்ரைன் விடுதலை பெற நேட்டோ முழு அளவில் உதவி செய்யும். தொடர்ந்து உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மனிதாபிமான அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ராணுவ அடிப்படையிலும் அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்யப்படும்.

                    விமானம் பறக்க தடை

                    ரஷியா விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப் படுகிறது. ரஷியா இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

                    ரஷியாவின் நியாயமற்ற செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்வதால் புதின் தனிமைப்படுத்தப்படுகிறார்.

                    அமெரிக்கா மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ரஷியா நிச்சயம் பலவீனம் அடையும்.

                    அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் ரஷியா மீது சக்தி வாய்ந்த பொருளாதார தடைகளை விதித்து வருகின் றன. ரஷியாவின் பண பரிமாற்றத்தை சர்வதேச அளவில் நாங்கள் முடக்கி உள்ளோம். ரஷியாவின் வங்கி நடவடிக்கைகள் விரை வில் முடங்கும்.

                    வாழ்நாள் முழுக்க நாம் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

                    இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார்.

                    அவரது பேச்சுக்கு அமெரிக்கா பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோ‌ஷம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

                    வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
                    Posted in Uncategorized

                    அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது

                    அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது

                    தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை

                    ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

                    கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

                    அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி,தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள்

                    புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.

                    தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை .

                    வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு

                    கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.

                    இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.

                    சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு

                    மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பற்றி எரிந்த பேக்கரி ஆட்டோ

                      பற்றி எரிந்த பேக்கரி ஆட்டோ

                      இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

                      காலி, தல்கம்பொல பிரதேசத்தில் வாகனம் தீப்பிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

                      தீயினால் முச்சக்கரவண்டியின் பின்பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன் அதிலிருந்த பேக்கரி உணவுப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

                        Posted in Uncategorized

                        யாழ் ஆலய திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

                        யாழ் அலையை திருவிழாவில் சங்கிலிகள் திருட்டு

                        யாழ். திருநெல்வேலி காளி கோயில் தேர்த் திருவிழாவின் போது பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

                        நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

                        சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஆலயத்திற்கு வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

                        மேலும் இது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                          Posted in Uncategorized

                          உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

                          .

                          உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

                          ரசியா இராணுவத்தினர் வான்வழியூடாக கிழக்கு உக்கிரேன் ,கார்கிவில் தரை இறங்கியது.


                          இந்த வான்வழி தரையிறக்கம் ,வெற்றிகரமாக அமைந்த நிலையில் ,குறித்த படையினர் , அந்த பகுதிகளை இலக்கு வைத்து, அகோர தாக்குதலை நடத்தினர்.

                          இதில்;மருத்துவமனை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக .உக்கிரேன் தெரிவித்துள்ளது.

                          தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                          உக்கிரேனில் தரை இறங்கிய ரசியா இராணுவத்தினருக்கு ,ஆதரவாக ,வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

                          தற்போது குண்டுகளினால் ,உக்கிரேன் அதிர்ந்த வண்னம் உள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

                            .இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

                            இலங்கை விமானப்படை அதன் 71 ஆவது நிறைவாண்டை இன்று கொண்டாடுகின்றது.

                            இலங்கை விமானப்படை இன்று அதன் 71 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. இலங்கை றோயல் விமானப்படையாக 1951ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி ஆரம்பித்த இந்தப் படையின் முதலாவது விமானப் படைத் தளபதி

                            குறூப் கப்டன் ஜீ.சி.பிளே-ஓன் ஆவார். முதலாவது இலங்கை விமானப் படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் ஜீ.ஆர்.அமரசேகர 1962ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

                            1972ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படையாக பெயர் மாற்றப்பட்டது. இரண்டு வகையான பத்து விமானங்களுடனும் ஆயிரத்து 200 படை

                            வீரர்களுடனும் விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 18 விமானப் படைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திறன்விருத்தி மற்றும் ஜனாதிபதி உறுதிகள் பலவற்றையும் விமானப்படை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            இதேவேளை, இரத்மலானையில் உள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையம் அதன் 84 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. நாட்டின் சிவில் விமான சேவை

                            நடவடிக்கை 1930 ஆண்டுகளில் ஆரம்பமானது. அப்போதைய ஆளுனரான சேர் அன்றூ கெல்டொக்கொட் தலைமையில் 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி இரத்மலானை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் கொழும்புக்கும்

                            மும்பைக்கும் இடையிலான விமான அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 84 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு வைபவம் கடந்த

                            திங்கட்கிழமை இடம்பெற்றது. விமான நிலைய மற்றும் விமான சேவைகளுக்கான இலங்கை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜென்தல் ஜீ.ஏ.சந்திரசிறி இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

                            Posted in இலங்கை செய்திகள்

                            நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு

                            நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு

                            பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

                            ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம்

                            விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது.

                            இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

                            உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத்

                            திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரவு அளவிலான விவசாயிகளுக்கும் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் கதறல்

                              மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு

                              வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் உயர்மட்ட அமர்விற்கான அறிக்கை

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது.

                              எமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது அரசாங்கத்தின் அமைப்புக்களின் மூலம் படிப்படியாக முன்னேறி, எமது சுதந்திரமான நீதித்துறையின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. பயங்கரவாதத்திலிருந்து பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், நாடு முழுவதும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்துள்ளோம். எமது ஜனநாயக மரபுகள் மற்றும் சுயாதீன நிறுவனங்கள் உலகளாவிய வயது வந்தோருக்கான வாக்குரிமையின் மூலம் சீரான இடைவெளியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்கின்றன. மோதலுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் குணமடைதலில் நாம் பெற்ற கணிசமான முன்னேற்றத்தை மேலும் முன்னேற்றுவோம். இதற்காக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதிக்கான உள்நாட்டு நிறுவனங்களை அமைத்துள்ளோம்.

                              இந்த சபையின் மூலம், பரஸ்பரம் நன்மை பயக்கும் 3 உலகளாவிய காலாந்தர மீளாய்வுகளை நாங்கள் நிறைவு செய்து, ஒப்பந்த அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, விஷேட நடைமுறைகளுக்கான ஆணைகளை வைத்திருப்பவர்களை வரவேற்று, உள்நாட்டு மற்றும் சர்வதேச உரையாசிரியர்களுடன் வெளிப்படையான மற்றும் திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. விடம் உள்ள கணிசமான நிபுணத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் பயனடைந்துள்ளோம். நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது உள்நாட்டு செயன்முறைகளுக்கு நாட்டிற்கான ஐ.நா. குழுவின் மூலமாக தொடர்ந்தும் நல்கப்படுகின்ற ஆதரவை நாங்கள் மதிக்கின்றோம்.

                              இந்தக் கூட்டுறவு ஊடாடலினூடாக, எமது உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய, இன மற்றும் மத அடையாளம் மற்றும் அரசியல் சார்பு எதுவுமின்றி, எமது பிரஜைகள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தி, பாதுகாப்பதை நாங்கள் தொடர்ந்தும் உறுதிசெய்கின்றோம்.

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              கோவிட்-19 தொற்றுநோயால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் நிலவுகின்ற போதிலும், அபிவிருத்திக்கான எமது மக்களின் உரிமையை நாங்கள் தொடர்ந்தும் உறுதி செய்து வருகின்றோம். சமீபத்திய நிலையான அபிவிருத்தி இலக்கு அறிக்கைக்கு அமைய, இலங்கை தனது உலகளாவிய தரவரிசையை 7 நிலைகளால் மேம்படுத்தியுள்ளது. தமது விரிவான அடிமட்டத்திலான தொடர்பு மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் எமது சிவில் சமூகப் பங்காளிகள் அளித்த பங்களிப்பை நாங்கள் பாராட்டுகின்றோம்.

                              சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடாக, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் மற்றும் ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் போன்ற நெருக்கடி மிகுந்த சூழ்சிலைகளினால் மேலும் ஏற்படவிருக்கின்ற பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              சபையின் பணிகளை மீளாய்வு செய்யும் காலகட்டத்தில் நாம் இன்று இருக்கின்றோம். அதன் முன்னோடி ஆணைக்குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நம்பகத்தன்மை இடைவெளியை சமாளிப்பதில் சபை வெற்றி பெற்றுள்ளதா என்பதை நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.

                              மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பல்தரப்புக் கட்டமைப்பு கடந்த தசாப்தங்களில் படிப்படியாக உருவாக்கப்பட்டது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை உறுப்பு நாடுகளின் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற புனிதமானதாக நாம் கருதும் முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது. சபையின் பணி முறைமைகள் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும், உண்மையான உரையாடலை செயற்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/251 மற்றும் மனித உரிமைகள் சபையின் 5/1 மற்றும் 5/2 ஆகிய தீர்மானங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டன.

                              சம்மந்தப்பட்ட நாடான இலங்கையின் அனுமதியின்றி சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானத்தின் மீது மார்ச் 2021 இல் சபை வாக்களித்திருந்தது. இந்த விடயத்தைப் பரிசீலிப்பதானது இந்த மன்றத்தை துருவப்படுத்தி அரசியல் மயமாக்கியது. ஐ.நா பொதுச் சபை முதலில் இந்த சபைக்கு வழங்கிய ஆணையில் இருந்து விலகி, பல நாடுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையான ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையை இந்தத் தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 6 குறித்து நிற்கின்றது. இத்தகைய முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன் மூலம் வெறுப்பை வளத்து, சமூகங்களை துருவப்படுத்துகின்றது.

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அரசாங்கங்களுக்கு உதவுவதற்கான விரிவான பயனுள்ள பணி முறைகளை உண்மையில் உறுப்பு நாடுகள் இந்த சபைக்கும், அதன் செயலகத்திற்கும் கட்டாயமாக்கியுள்ளன. எமது மக்கள் பாதுகாப்பான, நீண்ட மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதிசெய்வதற்கு உதவிய, சபையின் உற்பத்திகரமான மற்றும் நன்மை பயக்கும் பணியின் அம்சங்களில் இலங்கை தீவிரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பங்கேற்றுள்ளது. தண்டனைக்குரிய, அரசியல்மயமாக்கப்பட்ட, பிளவுபடுத்தும், உதவாத மற்றும் புறம்பான காரணங்களால் தொடங்கப்பட்ட விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டமானது விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இலங்கை உறுதியாக நம்புகின்றது. இந்த நோக்கங்களைக் கருத்திற்கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப கட்டமாக, இலங்கைப் பாராளுமன்றத்தில் நான் அண்மையில் ஒரு சட்டமூலத்தை முன்வைத்தேன்.

                              புறநிலை மற்றும் பற்றின்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அவசியமான விளைவுகளைக் கொண்ட தன்னார்வ நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபனையை முன்வைக்கின்றோம். இந்தப் பின்னணியில், 46/1 தீர்மானத்தின் ஓ.பி. 6 இன் கீழ் நிறுவப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு உதவாது, இலங்கை சமூகத்தை துருவமயமாக்கி, சவாலான நேரத்தில் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மோசமாகப் பாதிக்கும் என இலங்கை மீண்டும் தனது கருத்தை வலியுறுத்துகின்றது. உயர்ஸ்தானிகர் அலுவலகம் உட்பட பலதரப்பு அமைப்பு முழுவதும் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுகின்ற தற்போதைய காலகட்டத்தில், உறுப்பு நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு பயனற்ற விடயம் ஆகும்.

                              கௌரவ தலைவர் அவர்களே,

                              இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலுக்காக மார்ச் 04ஆந் திகதி இந்த சபை ஒன்றுகூடவுள்ளது. இலங்கை குறித்த எழுத்துபூர்வமான புதிய தகவல்கள் குறித்த சில எண்ணக்கருத்துக்களை அதன்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

                              Posted in Uncategorized உலக செய்திகள்

                              இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

                              இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

                              உடனடியாக போர் நிறுத்தம் மேற் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை சிறப்பு அவசர கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

                              ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்
                              அன்டோனியா குட்டரெஸ்
                              ஜெனீவா:

                              உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.

                              இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

                              போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

                              சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும், உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு தாம் உறுதி யளித்துள்ளதாகவும் ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

                              இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் ஒட்டு மொத்த கருத்ததாக
                              தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              இதையும் படியுங்கள்…உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

                              Posted in Uncategorized

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா


                              பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்
                              போர் விமானம்
                              கீவ்:

                              உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

                              ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.

                              இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன.

                              உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

                              பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                              இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

                                Posted in Uncategorized

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

                                ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை ரஷியா அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்
                                வால்டிமிர் ஜெலன்ஸ்கி – புதின்
                                கீவ்:

                                நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

                                குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

                                இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

                                ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

                                வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.

                                இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

                                உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்

                                உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷியா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.

                                ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                ரஷியாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் ஜெலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

                                ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷியாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷியா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

                                மேலும் கீவ் நகருக்குள் நாசவேலையில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.