Author: நிருபர் காவலன்
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
வயிற்றில் புண், கிருமித் தொற்றை குணமாக்கும் வேப்பம்பூ கொள்ளு சூப்
வேப்பம்பூ கொள்ளு சூப்
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ – 4 டீஸ்பூன்,
கொள்ளு – 50 கிராம்,
மிளகு – 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 2,
அன்னாசிப் பூ – 5 கிராம்,
நல்லெண்ணெய் – 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 50 கிராம்.
வேப்பம்பூ கொள்ளு சூப்
செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப் ரெடி.
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காரணமாக
இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
விஜய்
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவெனில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’
படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்து
இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்திருக்கிறார்.
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை… வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது
சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது
சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு
ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார்.
கீர்த்தி பாண்டியன்
அதை வீடியோ பதிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி
பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ்
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
கொரோனா பிரச்னையால் பொருளாதார ரீதியாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது
சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
விஜய் ஆண்டனி
தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதால் நடிகர் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என்
தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான
பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.
ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
பால்டிக் கடல் பகுதியில் ஊடுருவிய ஜெர்மன் விமானத்தை
ரசியாவின் Sukhoi-27 fighter ஜெட் விமானம் இடைமறித்து விரட்டியது
தமது எல்லை பகுதிக்குள் ஊடுருவிய ஜேர்மனிய விமானங்களையே
தாம் கண் காணித்ததாக ரசியா தெரிவித்துள்ளது
ஜெர்மனோ அத்துமீறி ரசியா தமது வான்வெளியில் குறுக்கிடுவதாக குற்றம்
சுமத்துகிறது ,நேட்டோ படைகள் பால்டிக் கடல் பகுதியில் கூட்டாக பயணித்து
வருகின்றனர் ,ரசியாவின் ஊடுருவலை கண்காணிக்கவே அவர்கள் அந்த பகுதியில் நடமாடி வருகின்றனர்
அவ்வாறான அவர்கள் நடவடிக்கையை ரசியா நேரடியாக சென்று மிரட்டி
செல்லும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க
முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க
இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்
பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இளம் வயதிலேயே முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க…
இளம் வயதிலேயே முகச்சுருக்கமா?
இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்
பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். காய்ச்சி
ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும்.
காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும். கேரட் சாறு, தேன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட்
சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும்.
20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும். பப்பாளி, பாதம் எண்ணெய் பப்பாளிப்பழம்
முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும்.
பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக
முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.
வைட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம்
கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து
முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
ஆரஞ்ச் ஜூஸ் முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு
தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் குடிங்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும்
குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள்
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது
எஸ்.பி. பாலசுப்ரமணியம் எழுதிய 3 வார்த்தைகள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு
மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான
அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.
சரண், எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95 சதவீத சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற் போது
சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா,
பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார்.
லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள்
என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார். இவரின் இந்த எழுத்து குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
பூர்ணிமா பாக்யராஜின் தாயார்
தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா என புகழ்பெற்றவர் பாக்யராஜ். கடந்த 1984 -ம் ஆண்டு
பிரபல நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி ஜெயராம். இவருக்கு வயது 85.
பூர்ணிமாவின் தாயார்
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சுப்புலட்சுமி ஜெயராமின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்
லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்
இஸ்ரேல் அரச பாயங்கரவாத இராணுவம் லெபனான் ,Jabal Al-Sheikh பகுதி
முதல் சிரியாவின் எல்லை வரை இடை விடாது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
இவ்வாறு பறந்து வந்த ஏவுகணைகளை சிரியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின
எனினும் இந்த ஏவுகணையின் இலக்கு தவறிய ஏவுகணைகள் சிரியா
இராணுவ மையங்களை சென்று தாக்கியுள்ளதாக சிரியா அரச இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
லெபனான் எல்லையில் இஸ்ரேலிய அதி உயர் உளவு விமானத்தை ஹிஸ்புல்லா
போராளிகள் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது
தொடர்ந்து வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல் மீது குறித்த
நாடுகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் உளளதாக இராணுவ வல்லுனர்கள் சுட்டி காட்டுகின்றனர்
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

ethiri news srilanka அமெரிக்க அமெரிக்கா அர்ச்சுனா இந்தியா இராணுவம் இலங்கை இலங்கை செய்திகள் இஸ்ரேல் ஈரான் எச்சரிக்கை ஏவுகணை கப்பல் காசா காயம் கைது கொரனோ கொரோனா கொலை சடலம் சினிமா சீனா சீமான் ஜனாதிபதி தாக்குதல் துப்பாக்கி படுகொலை பலி பாடசாலை பிரிட்டன் பெண் பொலிஸ் போராட்டம் போர் மக்கள் மரணம் ரணில் ரஷ்யா லண்டன் விபத்து விமானங்கள் விமானம் ஹமாஸ் ஹிஸ்புல்லா
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
இஸ்ரேல் நாட்டின் பிரதான மையங்களை இலக்கு வைத்து
பாலஸ்தீனம் கசா பகுதியில் இருந்து பலூன் குண்டுகள் பறக்கவிட பட்டன
தொடராக இவ்விதமான புதிய தாக்குதல் உத்தியினால் இஸ்ரேல் நாடே
கலங்கி போனது .இதனை தடுக்க இஸ்ரேலிய இராணுவ மையம் புதியவகை லேசர் ஆயுதம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இதன் ஊடாக மேற்படி பலூன் குண்டுகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என அந்த இராணுவ மையம் அறிவித்துள்ளதுடன் ,
அதன் செய்முறை காட்சிகளையும் வெளியிட்டுள்ளது ,இந்த புதிய ஆயுத
வருகையை அடுத்து காசா போராளிகள் எவ்விதமான புதிய
நகர்வுகளை மேற்கொள்ள போகின்றனர் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை.
பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை.
விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை
பிக்பாஸ் சீசன் 4
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும்
ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக
இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
ஷில்பா மஞ்சுநாத்
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ‘இஸ்பேட்
ராஜாவும் இதயராணியும்’ பட கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்வதற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
நடிகைகள் மோதல் – -கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி
நடிகைகள் மோதல் – -கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி
சீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகைகள் மோதல் – கமெண்ட் அடித்த சித்ரா…. கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி
சித்ரா, ஷிவானி
பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்
. இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சித்ராவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதற்கு பதிலளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால்
2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழே ஒரு ரசிகர்
நடிகை ஷிவானியைத் தானே சொல்கிறீர்கள் என்று கேட்டார். இது சர்ச்சையானது. ஷிவானியும் சித்ரா மீது கோபமானார்.
சித்ராவின் கமெண்ட், சிவானியின் இன்ஸ்டாகிராம் பதிவு
சித்ராவுக்கு பதில் அளிக்கும் வகையில் “என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது
ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்
. கெட்ட வார்த்தையிலும் திட்டினார். இதுபோல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோதலை பெரிதாக்கினர்
நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்
நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்
பிரபல நகைச்சுவை நடிகையான வித்யூலேகாவிற்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்…. நிச்சயதார்த்தம் முடிந்தது
சஞ்சய், வித்யூலேகா
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக
அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து
பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.
வித்யூலேகா, சஞ்சய்
நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார்
. இந்நிலையில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த
மாதம் 26-ந் தேதி நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்
சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?
சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள
பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ந் தேதி இரவு
சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கி நாட்டில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பை வழி நடத்தி சென்ற
அந்த நாட்டின் தலைவர் துருக்கிய காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளார்
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர்
தங்கி இருந்த இரகசிய இடம் திடீரென சுற்றிவளைக்க பட்டது
அப்பொழுதே அவர் இவர்கள் முற்றுகையில் சிக்கி கொண்டார்
மேலும் இவருடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
குறித்த அணியில் இருந்த துருக்கிய இரகசிய உளவுத்துறையினர்
நபரே இந்த தலைவர் கைதிற்கு காரணமாக இருந்துள்ளார் என நம்ப படுகிறது
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்
பற்கள் உடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்
விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.
பல் சொத்தை கடுமையாக இருந்தால் ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்பு அதிகம். விபத்தினால் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். குழந்தைகள்
விளையாடும்போது கவனக்குறைவாக காயம் பட்டாலும் பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும்போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும். இருளில் எங்காவது இடித்துக்
கொள்ளும் போதுகூட பற்கள் உடையக்கூடும். தெற்றுப்பற்கள் உள்ளவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்துவிடும்.
பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாக பல் மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்லுங்கள்.
உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடவும் வழிகள் உள்ளன. பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் கேப்’ போட்டு மூடுவது, பல்
முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கை பல்லைப் பொருத்துவது எனப் பல சிகிச்சைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.
சில நேரம் பல்லில் அடிபட்டு இருக்கும், ஆனால் உடைந்திருக்காது. இதனால் வலி இருக்காது. அதேநேரம் சில நாட்களில் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும்.
இதற்குக் காரணம், பல்லுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது, என்பதுதான். இந்த நிலையில் உடனடியாகப் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
இல்லையென்றால், பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். பல்லையே அகற்ற வேண்டி வரலாம். இதைத் தவிர்க்கவே உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டியது அவசியம்.
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்
சல்மான்கான்
தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்க உள்ளது.
இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர்
சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர்.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன்
முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.
சல்மான்கான்
தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க
ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.
காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?
காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?
விக்னேஷ் சிவன், நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக
வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில்
இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலில் அம்மா… நேற்று அப்பா.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை நிலா
நிலா என்கிற மீரா சோப்ரா
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது
மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது
சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.
மீரா சோப்ரா வின் பதிவு
முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை
இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
சூர்யா
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த
படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட
வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம்.
கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில்,
மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், ‘திரைத்துறையினர், ‘கொரானா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள்
ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.
அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல
சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில்
கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கறோம்.
ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள்,
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத,
திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் திரையரங்க
தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூர்யா
இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை
கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/
மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் ‘இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புறேன். இந்தப் பேரிடர்
காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கறது. இந்தத் தருணத்தில் பொருளாதார
நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.







