Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்காவின் Conoco இராணுவ தளம் மீது கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இந்த

அமெரிக்கா இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ தளபாடங்கள் மற்றும்

படைகள் குவிக்க பட்டுள்ளன
ஏவுகணை தடுப்பு மையங்களும் அமைய பெற்றுள்ளன

அவ்விதமான உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த இராணுவ தளம்

மீது வீழ்ந்து வெடித்துள்ள ஏவுகணைகளினால் அமெரிக்கா படைகள் நிலை குலைந்துள்ளன

ஈரான் அதரவு படைகள் இந்த துல்லியமான தாக்குதலை தொடராக நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது

எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

Largest US military base in Syria
Largest US military base in Syria
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்

சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு

ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்

கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை

நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர

தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது

சவூதி விமான நிலையம்
சவூதி விமான நிலையம்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவின் வடக்கு இட்லீ பகுதியை இலக்கு வைத்து துருக்கிய அரச பயங்கரவாத இராணுவம் குவிக்க பட்டு வருகிறது .

இதுவரை இடம் பெற்று வரும் சமாதான கால பகுதியில் மட்டும் 6,225 இராணுவ

வாகனங்களுடன் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுள்ளதாக சரத்வதேச யுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது

லிபியா ,சிரியா ,ஈராக் பகுதிகளில் துருக்கி இராணுவத்தை குவித்து வருகிறது
இதனால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

சிரியாவில் ஒன்பது ஆண்டுகள் கடந்து பல் நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

இந்த போரில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகியும்

,இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

சிரியாவுக்குள் குவிக்க
சிரியாவுக்குள் குவிக்க
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை

கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை

சிரியாவின் தெற்கு இட்லீ பகுதியை குறிவைத்து பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுளள்து

சுமார் ஒருமணித்தியாலம் இடை விடாது நடத்த பட்ட இந்த தாக்குதலில்

துருக்கி மற்றும் துருக்கிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக இராணுவ மையம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் பர்ஸபர மோதல்கள் வெடித்து பறக்கின்றன

கடும் ரொக்கட் ராக்கட்
கடும் ரொக்கட் ராக்கட்
Posted in மருத்துவம்

மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்

மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்

சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்


மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல

நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது.

மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40

வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.

  1. மூலம் (Piles)

2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)

  1. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)

உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.

ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது.

மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.

அறிகுறிகள்…

மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

மூல சதை வெளித்தள்ளுதல்

செரிமான பிரச்னை

புளித்த ஏப்பம்

யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?

நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள்

வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்

மூல நோய் வர என்ன காரணம்?

இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல்

இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.

கர்ப்பிணி களுக்கு மூல நோய்…

கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

வீட்டு வைத்திய முறைகள்…

ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை

ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன்

பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.

வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து

ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.

அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.

மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.

மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்

தவிர்க்க வேண்டியவை

சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

Posted in சினிமா

பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை

.பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
பிக் பாஸ் 4
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும்

ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக

இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

நடிகை கிரண்

இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கும் நிலையில், பிரபல கவர்ச்சி

நடிகை கிரண் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
ஜெனிலியா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால்

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த

அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு

சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளம் மீது கார் தற்கொலை தாக்குதல் இடம்,பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள்

பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன,

எனினும் துருக்கிய இராணுவ தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை

இட்லியை ஆக்கிரமிக்க 16 ஆயிரம் இராணுவத்தை துருக்கி குவித்து பெரும்

தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

வட கிழக்கு சிரியா பகுதி எல்லை வழியாக சவூதி நாட்டை சேர்ந்த இருபது கொமாண்டோ அணி இராணுவத்தின் உள்நுளைந்துள்ளதக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இவர்களது இந்த நுழைவு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பகுதியில் ஈரான் இராணுவ தளங்களும் அமைந்துள்ளன

ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் பெரும் முறுகல் நிலை உள்ளது ,இவ்வாறன நிலையில் சவுதிய படைகள் நுழைதல் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

கருங்கடல் வழியாக பறப்பில் ஈடுபட்ட ரஷியா விமானங்கள் நேட்டோ

படைகளின் Tu-142 நீர்மூழ்கி காப்பு விமானங்கள் பின் தொடர்ந்ததாக ரசியாபாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

இவர்களது பின் தொடர்தல் கருங்கடல் ,மற்றும் பால்டிக் கடல் பகுதி வழியாகவும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது

நேட்டோவும் ,ரஷியாவும் மாறி மாறி இவ்விதம் பரஸ்பர குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள கீகிறீன் சூன் எனப்படும் அமெரிக்கா

,பல் நாட்டு படைகள் உயர் இராணுவ நிலைகளை
இலக்கு

வைத்து நடத்த பட்ட Katyusha ரொக்கட் தாக்குதலில் அந்த மையம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

மூன்று ரொக்கட்டுக்குள் குறித்த பகுதியில் திடீரென வீழ்ந்து வெடித்தன

இதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு தெரியவரவில்லை ,ஈரான் இராணுவ

தளபதி சொலைமானி அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை

செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா இராணுவ நிலைகள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in சினிமா

400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி

400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் சூரி, தனது பிள்ளைகள் தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி
சூரிக்காக அவரது பிள்ளைகள் வெட்டிய பிறந்தநாள் கேக் புகைப்படம்


மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதனிடையே நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சூரியின் பிறந்த

நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சூரி

இந்நிலையில், தனது பிள்ளைகள் பிறந்தநாளன்று தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, “400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய

புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என பதிவிட்டுள்ளார்

Posted in சினிமா

சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி.

சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி.

நடிகர் சூர்யா ‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.

சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி
சூர்யா
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்

உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத்

தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார்.

‘பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள

பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்’
என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்ஸி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸியின்

தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

சூர்யா சார்பில் சங்கத்தினரிடம் காசோலை வழங்கிய சிவகுமார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க

தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர்

பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின்

இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்,

சுரேஷ் காமாட்சி, லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Posted in சினிமா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை
எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது

உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து

கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மருத்துவமனை அறிக்கை

தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார்.

பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சையும் தொடர்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்

சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்

ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பட்ட வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய சீனாவின் எல்லைப் புறப்குதியில் குவித்துள்ளது

இரு நாடுகளுக்கு இடையில் முண்ட நேரடி மோதலில் பலர் படுகாயமடைந்து இருந்தனர்

இதனை அடுத்து ரசியாவிடம் அவசர அவசரமாக வாங்கி குவித்த ஏவுகணைகளை தற்போது எல்லைப்புறங்களில் குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்தியா இராணுவம் உள்ளது

தனது சொந்த தயாரிப்பில் நாசகாரி ஏவுகணைகளை சோதனை செய்து

வல்லரசு என்ற நிலையில் இருக்கும் இந்தியா சீனாவின் ஏவுகணைகளை

வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சீனா பெரும் தாக்குதலை தொடுத்தால் அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

Posted in மருத்துவம்

தாம்பத்திய சிக்கலை தீர்க்க இதை பண்ணுங்க

தாம்பத்திய சிக்கலை தீர்க்க இதை பண்ணுங்க

தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.

இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று

திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம்

செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம்

பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை

பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.

தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!

உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும்

இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர்

நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.

‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல்

அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு

தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன்

வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை

அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட

பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.

கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை

வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.

பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு

உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு

உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.

அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில்

இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை

கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.

Posted in மருத்துவம்

நோய்தொற்றுகளில் இருந்து தப்பித்த இதை கண்டிப்பா சாப்பிடுங்க

நோய்தொற்றுகளில் இருந்து தப்பித்த இதை கண்டிப்பா சாப்பிடுங்க

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் காளான் கிரீம் சூப்
காளான் கிரீம் சூப்
தேவையான பொருட்கள் :

காளான் – 200 கிராம்

பெ.வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்


பிரிஞ்சி இலை – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்


உப்பு, வெண்ணெய் – தேவைக்கு
மைதா – 4 டீஸ்பூன்
பால் – கால் லிட்டர்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு காளானை சேர்த்து கிளறவும்.

அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

Posted in மருத்துவம்

உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற

பொதுவான பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

  • தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக்
  • குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.
  • நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து
  • தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின்,
  • பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.
  • உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
  • காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெயையோ,
  • நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.
  • எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.
Posted in சினிமா

வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி

வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி

நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு

காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார். நிச்சயம் அதிசயம் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதல்

வலிமையானது. எங்களை கைவிடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.

திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது.

உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம்.

பீட்டர் பால், வனிதா

பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள்

வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டுள்ளேன். வாழ்க்கை மிகவும் குறுகியது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா.

Posted in சினிமா

கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்

கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்

கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த நண்பணுக்கு நடிகர் விஜய் தேடிச்சென்று உணவளித்தாராம்.

கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
விஜய்


தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் நடிகர் சஞ்சீவும்

ஒருவர். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி

இருக்கும் மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து ருசீகர தகவல் ஒன்றை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எனக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை

உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனிமையில் இருந்தேன்.

சஞ்சீவ், விஜய்

அப்போது விஜய்யிடமும் இதுபற்றி சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் எனக்காக மதிய உணவு கொண்டு வந்தார் விஜய்.

எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விஜய்யை நேரில் சென்று பார்க்கவில்லை.

எனது வீட்டு செக்யூரிட்டியிடம் அவர் உணவை கொடுத்துவிட்டு சென்றார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.