Author: நிருபர் காவலன்
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என
கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.
மேலும், பலத்த எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார்.
இதற்கிடையே, பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரனாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி
மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இந்த விவகாரங்களால் கங்கனா ரனாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?
சட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவில்லையா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை
நீங்கள் அறிந்திருக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின்
அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்களென நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.
தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
அக்ஷய் குமார்
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான
சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக
வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த
சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்
தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்ஷய் குமார் தெரிவித்தார்.
பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார்
இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ்
வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்ஷய் குமாரிடம் கேட்டார்.
அதற்கு அக்ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம்
குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.
உயிரே இதயம் மாறாதே
உயிரே இதயம் மாறாதே
உன் முகம் என் விழியில்
ஊர்வலம் போகுதே
உள்ளம் மட்டும் ஏனோ
உனக்காய் ஏங்குதே ….
தவம் என்ன கொண்டாயோ – இதயம்
தந்திட மறுக்கிறாய் …?
வரம் என்ன சொல்லிடு
வாங்கி தந்திட மாட்டேனோ ..?
ஓடும் நதி எல்லாம்
கடலில் தானே கலக்குதே
ஆண்கள் மனம் எல்லாம்
அடி பெண்ணில் தானே மிதக்குதே
வீசும் காற்றிலே
வீதி எங்கும் குப்பையே
கொட்டும் மழையிலே
கொடும் கறைகள் கழுவதே
இயற்கை நிலைகளோ
இது தான் காணாய்
இதயம் தந்திட – நீ
இன்று ஏனோ மறுக்கிறாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் -09-11-2020
கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்
கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக நடிகர் விஷால் களமிறங்கி
இருக்கிறார்.கங்கனா – விஷால்நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மும்பையைப் பற்றியும்,
மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கனா ரணாவத்துக்கும்,
சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.
மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா
ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின்
வீட்டை இடித்தது. கங்கனாவும் மும்பை வந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே
மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கனா ரணாவத்.
இந்நிலையில், கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.
வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
வடிவேல் பாலாஜி – விஜய் சேதுபதி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.
வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து அவரை
அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி
மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதி உதவியும் அளித்தார்
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
டாப்சி, சுஷாந்த் சிங்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் மரண வழக்கு
தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக்
போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட
விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.
டாப்சியின் டுவிட்டர் பதிவு
ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி போட்ட டுவிட்
சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார்
என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும்
உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை
சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை
சிரியாவில் அகல கால்பதித்துள்ள ரசியா தனது அதி முக்கிய சண்டை
விமானங்களில் அதி உயர் ரக வெடிகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும்
திறன் வாய்ந்த புதுவகை குண்டு வீச்சு சோதனையை நடாத்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது
அத்துடன் மேலும் நாப்பது புதிய ஒப்பந்தங்களில் சிரியா ,ரசியா கைச்சாத்திட்டுள்ளது ,
இவை ஆளும் அசாத் அரசை காப்பாற்றும் முகமாகவும் ,சிரியாவுக்குள்
அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தி வரும் பல் நாட்டு படைகளை அந்த மண்ணில்
இருந்து விலக வைக்கும் புதிய தந்திரோபாய நகர்வுகளில் ஒன்றாகவும் அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக சண்டியர் அமெரிக்காவுக்கு எதிராக பலம் பெற்று வரும் ஈரான்
புதிதாக தாம் தயாரித்துள்ள புதியவகை உளவு விமானங்களை
சர்வதேச சந்தையில் விற்க போவதாதாக அதிரடியாக அறிவித்துள்ளது
சர்வ தேச சந்தையில் உள்ள தமது ஆயுத கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கு
இந்த விமானங்களை விற்க போகிறோம் என தடாலடியாக
அறிவித்து அமெரிக்கா ,இஸ்ரேலை அலற வைத்துள்ளது ஈரான்
ஈரானின் முக்கிய தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டதன்
பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு
இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு
இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .
இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன
இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
என அடித்து கூறலாம்
காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தனது காதலனுடன் ஏர்போர்ட்டில் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கொரோனா குணமானதும் காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
நிக்கி கல்ராணி, ஆதி
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும்
காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக
காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
ஆதி, நிக்கி கல்ராணி
இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும்
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர்கள்
இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும்
காதலிப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.
தனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை…. திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
சாரா அலிகான்
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி
படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது
திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்
வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டு புத்தகம் படித்தபடி அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா அலிகான்.
சாரா அலிகான்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அக்ஷய்குமாரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி
முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி
பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க சிலர் வற்புறுத்தியதாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்-
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல்
, வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ்,
தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க
வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.
சமீரா ரெட்டி
நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில்
செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.
மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக
இருப்பதில்லை என சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது எனவும் கூறினார். அதன் பின்னர் நான் அவருடன் நடிக்கவே இல்லை” என கூறியுள்ளார்.
அமெரிக்கா இராணுவ தளத்தை தாக்கிய ஏவுகணை வீச்சு தூரத்தை அதிகரித்த ஈரான்
அமெரிக்கா இராணுவ தளத்தை தாக்கிய ஏவுகணை வீச்சு தூரத்தை அதிகரித்த ஈரான்
ஈரான் நாட்டு இராணுவ தளபதியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து படுகொலை புரிந்தது ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தியது
ஈராக்கில் அமைந்துள்ள பல் நாட்டு படைகள் மையமாக விளங்கும் கிரீன் சூன் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ மையத்தை
இலக்கு வைத்து துல்லியமான ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது
கடந்த தை மாதம் இந்த தாக்குதல் இடம்பெற்றது
இதன் பொழுது சுமார் 118 அமெரிக்கா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர் ,தமது படைகளிற்கு இழப்பு இல்லை
என கையை விரித்த அமெரிக்கா பின்னர் அதனை ஒப்புக்கொண்டது ,
அந்த இராணுவ முகாமில் மைக்க பட்டிருந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழிகள் கூட உடைந்து நாசமானது ,அவ்விதமான சகதி வாய்ந்த குரூஸ் ஏவுகணையை ஈரான் ஏவியது
இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவ மையத்தை பெரும் அதிர்ச்சியில்
உறைய வைத்ததுடன் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
அவ்விதமான ஏவுகணையின் தூர வீச்சை ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக அதிகரித்துள்ளதுடன் ,அதில் புதிய நவீன மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது ஈரான்
இது மேலும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக தற்போது வடிவமைக்க பட்டுள்ளது
எதிர் காலத்தில் எதிரி படைகள் துவாம்சம் செய்ய தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
சீனா இந்தியா எல்லையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில்
தற்பொழுது இந்திய ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்த S-300 ரக வான் இடைமறித்து ஏவுகணைகளை நிறுத்தியது
அதனை தொடர்ந்து அதே வகையான ஏவுகணையை தற்பொழுது சீனாவும் நிறுத்தியுள்ளது
இரு நாடுகளுக்கும் ஒரே ஏவுகணையை விற்று வரும் ரசியாவின் இரட்டை
முகம் தற்போது அம்பலமாகியுள்ளது ,
நாடுகளுக்கு
இடையில் போர்களை மூட்டி தமது ஆயுத வியாபாரத்தை இதன் மூலம் ரசியா காட்சிதமாக
அரங்கேற்றி வருகிறது
ஈராக் ,ஈரான் ,சீனா ,இந்தியா ,துருக்கி ,போன்ற நாடுகள் மேற்படி ஏவுகணையை வாங்கி குவித்து வருகினறமை இங்கே சுட்டி காட்ட தக்கது
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது இதை தான் என்பது போலும் ,
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

சீனா ,பாகிஸ்தான் சதி – இந்தியா இலையில் இராணுவம் உசார் நிலையில்
சீனா ,பாகிஸ்தான் சதி – இந்தியா இலையில் இராணுவம் உசார் நிலையில்
இந்தியாவின் இறையாமைக்கு எதிராக போர் தொடுக்கும் நிலையில்
சீனாபாகிஸ்தான் கூட்டிணைந்து முயன்று வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது
இந்த கூட்டு இராணுவ நகர்வுகளை அடுத்து தற்பொழுது இந்தியா
எல்லையில் இராணுவம் குவிக்க பட்டு உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது
சீனா இந்தியா எல்லையில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில்
மோதல்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவங்கள் இறுக்கம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ் பட நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரக்கும் போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
ராகிணி திவேதி
ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம்
வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி
நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராகிணி தற்போது போதை பொருள் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது
செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார்.
போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.
ராகிணி திவேதி
இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே நடிகை ராகிணி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி
நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடைபெறுகிறது. வீட்டில்
சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… கோமாளி நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
சம்யுக்தா ஹெக்டே
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை
பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருவார். இதற்கென்று தனி
ரசிகர்கள் உண்டு. ஆனால், இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சம்யுக்தா ஹெக்டே
ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து
அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
சூர்யா
மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின்
திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என போஸ்டர், என தினமும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் அஜித் ரசிகர்களும், வலிமை திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும்
காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
சூர்யா போஸ்டர்
செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து
‘திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக
சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாயில் ஏற்படும் துர்நாற்றம் இந்த நோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். எனவே வாய்துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாய் துர்நாற்றம்
அழகான முகத்துடன் பிரகாசமான பல் வைத்திருப்பதும் சிறப்பு. ஆனால் துர்நாற்றம் என்றால் யாரும் உங்களுடன் பேச விரும்ப
மாட்டார்கள். இது உடல்நலம் தொடர்பான வேறு சில காரணங்களால் ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாயின் வாசனையும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்களும் இந்த
பிரச்சனையுடன் போராடுகிறீர்களானால், கெட்ட மூச்சுக்கு என்ன காரணம், கெட்ட மூச்சுடன் அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்?
வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன.
நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும்
பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
-நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எதையாவது சாப்பிட்ட பிறகு அது மிகவும் துர்நாற்றம்
வீசுகிறது என்று நீங்கள் நினைத்தால், முதலில் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- புகைபிடித்தல் பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், அது உங்கள் பிரச்சினையை இரட்டிப்பாக்கும்.
- உண்மையில் சிகரெட் அல்லது புகைபிடித்தல் உங்கள் வாயில் ஒரு துர்நாற்றத்தை உண்டாக்கி உங்கள் வாயை உலர வைக்கும். இது உங்கள் துர்நாற்றத்தை மோசமாக்கும்.
- உங்கள் வாயிலிருந்து வாசனை வருகிறதென்றால், சைனஸ், வாய் அல்லது தொண்டை தொடர்பான கடுமையான பிரச்சினை
- உங்களுக்கு இருக்கலாம். சைனஸ் நோய்த்தொற்றுகள், உடலில் நீரின் பற்றாக்குறை, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, உங்கள்
- மேல் அல்லது கீழ் சுவாசக் குழாயில் தொற்று மற்றும் டான்சில்ஸ் இதன் விளைவாக வரலாம். இதன் பாக்டீரியா உங்கள் வாயின் வாசனையை ஏற்படுத்தும்.
ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து
விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார்
என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும்
தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.
மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது
முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு
மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு
பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக
வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.







