Author: நிருபர் காவலன்
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்
வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது
- ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு மன்றங்கள்
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கை
கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்
கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்
ஈரான் West Azarbaijan பகுதியில் ஆடம்பர சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் காட்டு பாட்டை
இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த இரண்டு ஊடக நபர்கள் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
விபத்தில் சிக்கிய பேருந்தின் பிரேக் செயல் பட மறுத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்
கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
பேரூந்து கவிழ்ந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது
ஐரோப்பாவில் இருந்து நீங்கள் பிரிட்டனில் வசித்து வருகிண்றீர்களா ..? அப்படி என்றால் ஐரோப்பிய ஸ்கீம் கீழ் விசா விண்ணப்பம் செய்துள்ளீர்களா ..?
பெர்மனண்ட் ரிசிடண்ட் இருப்பினும் இந்த விசா விசா விண்ணம்பம் செய்து இருக்க வேண்டும்
இம்மாதம் முப்பதாம் திகதி அது காலாவதியாகிறது ,அதனால் உடனே செய்திடுங்கள் . அரச
இணையத்தில் சென்று செய்து கொள்ள முடியும் ,அல்லது உங்கள் சட்டத்தரணியை தொடர்பு கொள்ளுங்கள்
இவை செய்து கொள்ளாவிடில் பிரிட்டனில்நீங்கள் வசிக்க பெரும் சிக்கல் ஏற்படும் ,மீள ஐரோப்பா செல்ல நேரடிடலாம்
சட்ட ஆலசோணையை உங்கள் சட்டத்தரணியுடன் தொடர்பு கொள்ளுங்கள்,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கும் தெரிய படுத்துங்கள் ,முந்துங்கள் ,நாடு கடத்தலில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்
வெடித்து சிதறிய குண்டு 3 பேர் மரணம் -13 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 3 பேர் மரணம் -13 பேர் காயம்
பாகிஸ்தான் லாகூர் பகுதியில் நடத்த பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
கட்டடம் முற்றாக அழிந்துள்ளது ,தற்போது இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்
பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்
பிரிட்டனில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவுதல் அதிகரித்துள்ளது
இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இந்தியா ,இலங்கையில் இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் ,தற்பொழுது இந்த
நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மீள அதிகரித்துள்ளதான அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?
ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?
சிரியா மற்றும் ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது பிரித்தானிய F-35B Stealth jets விமானங்கள் அகோர வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன
குறித்த அமைப்பினால் அந்த நாடுகளுக்கு பெரும் ஆபத்து உள்ளதால் ,இந்த தாக்குதல்களைதாம் மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய படைகள் தெரிவித்துள்ளன
விமான தங்கி கப்பல் மூலம் எடுத்து செல்ல பட்ட விமானங்கள் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன
ஓசியில் தாக்குதல் நடத்திட பிரிட்டன் அரசுக்கு என்ன அவ்வளவு ஆசையா ..?
அப்படி என்றால் அந்த நாட்டின் எரி பொருள் வளங்கள் கொள்ளையடிக்க படுகின்றன என்பதே வெளிப்படை
அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்
அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்
ஈரானில் புதிதாக தெரிவு செய்ய பட்ட அதிபர் அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார் ,இவரது இந்த அறிவிப்பு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து ஈரானில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள செய்திகள் கிடைக்க பெற்றுள்ளதும் ,
ஈரானின் ஏவுகணை சோதனைகளை நிறுத்திட கோரிக்கை விடும் முகமாக ஈரான் அதிபர் பேச
உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மறுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி
ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி
கடந்த கால ஈரானிய ஆட்சியாளரினால் மூட பட்டு இருந்த ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள தற்பொழுது திறக்க பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு டையிலான வர்த்தகம் ,பொருளாதார நடவடிக்கைகள் துரித படுத்த பட்டுள்ளன ,
அதேவேளை வெளி நாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளை தாம் புதுப்பித்து அதன் ஊடக நகர்வோம் என் புதிய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்
தாலிபான்களிடம் வீழ்ந்த எல்லை – வெடித்து பறக்கும் மோதல்
தாலிபான்களிடம் வீழ்ந்த எல்லை – வெடித்து பறக்கும் மோதல்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் தாலிபான்கள் தமது தாக்குதல்களை விரைவு படுத்தியுள்ளனர்
கடந்த தினம் நடந்த தாக்குதலில் Tajikistan எல்லை பகுதியை தலிபான்கள் தமது பூரண கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
பல் நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்கள் தாக்குதல்களை விரிவு படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
அவுஸ்ரேலியா விக்டோரியா பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காருக்குள் இருந்த
நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி நபரது மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவின் M4 வீதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணியை ரசியா இராணுவத்தினர் வழிமறித்தனர்
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
சமரச விதிகளை மீறி அமெரிக்கா இராணுவத்தினர் அவ்வழியாக பயணித்த நிலையில் இந்த வழிமறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
கிழக்கு சிரியாவின் south of Al-Hasakah மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா கூலி படைகள் மீது மோட்டார் தாக்குகள் நடத்த பட்டுள்ளது
திடீரென மேற் கொள்ள பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்திற்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் அமெரிக்கா தரப்பில் இருந்து சேத விபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை
தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்தியவர் பாடகி தபு மிஷ்ரா.
கொரோனா பாதிப்பு… தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
தபு மிஷ்ரா
ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய
பாதிப்புகளால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்திய பாடகி தபுவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தபு மிஷ்ரா
பாடகி தபு மிஷ்ரா
தபு மிஷ்ரா
பாடகி தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மரணமடைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா ,நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்’ நூல் பற்றிய ஓர் ஆய்வு.
நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே!
வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும் கூறுகின்றது. நூலின் தலைப்புப் போன்றே நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட மாவீரர்களின் நினைவுகளை நூறு பக்கங்களில் அடக்கிவிட முடியாது.
இங்கு இவர் பன்னிரு மாவீரர்களின் போராட்ட வாழ்வை, வரலாற்றை கற்பனைகளோ, பசப்பு வார்த்தைகளோ, பொய்களோ இன்றி கலப்படமற்ற உண்மைகளை உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்.
இது ஒரு ஆவணம் என்பதால் காலம், இடங்கள் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகச் சேகரித்துப் பதிவிட்டிருக்கின்றார்.
மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி தமிழ்
பல்வேறு சிரமங்களின் மத்தியில் மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி, நூலுருவில் தந்திருப்பது மிகச் சிறப்பே. வீர காவியங்களை சாயம் பூசாது உண்மைத் தன்மையுடன் எழுதுவது என்பது கடினமானதே.
நிலாதமிழ் பல இடங்களில் பழமொழிகளைக் கையாண்ட விதமும், தூய தமிழ் வார்த்தைகளை பிரயோகித்த விதமும் தமிழின் மீது இவர் கொண்ட பற்றையும், அறிவையும் காட்டி நிற்கிறது. கவித்திறன் வாய்ந்தவர் என்பதை தமிழேந்தியப்பாவின் கவிதை மூலம் உணர முடிகின்றது.
இந்நூலானது மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுவது மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அமைப்பையும், அமைப்பிற்கும் மக்களுக்குமிடையே உள்ள உறவை, மக்களுடன் இரண்டறக் கலந்ததே விடுதலைப் போராட்டம் என்று உணர்த்துகின்றது.
விடுதலை அமைப்பின் கட்டமைப்பை, கட்டுக்கோப்பை, பண்பை, பாசத்தை, அறிவை ஆற்றலை அறிய முடிகின்றது.
போராட்டக் காலத்தில்
போராட்டக் காலத்தில் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட வளர்ச்சியும், வடிவங்களும் போராட்டக் களங்களின் காலப்பகுதிகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டமை சிறப்பாக அமைந்திருக்கிறது.
இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 | Weekly Epaper
இந்நூலில் போராளிகளின் வாழ்விடங்களையும், தாயகத்தின் பல
பகுதிகளையும் வர்ணனையுடன் அழகாகக் குறிப்பிட்டுள்ளமை புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் போன்றவர்களின் ஊர்,தேசம் என்ற ஏக்கத்தை வலியுடன் ஏற்பட வைத்துள்ளது.
நிலா தமிழின் எழுத்தினூடாக ஒவ்வொரு போராளியும் உள்ளத்தால் மென்மை யானவராகவே காணப்படுகின்றனர். பின்பு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் கண்டு கொதித்தெழுந்தே போராளிகளாகின்றனர்.
வசதியான குடும்பங்களில் பிறந்தவர், செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள், கல்வியில் சிறந்தவர்களாகவே விளங்கி, விடுதலையுணர்வினால் உந்தப்பட்டுப் போராளியாகி மாவீரர்களாகி உன்னதமடைந்தவர்களே.
கல்வியை தொடராமல் போராட்டத்தில் இணைந்ததாலும் அமைப்பானது இவர்களை அப்படியே விடாது அவரவரின் திறமை, வயதிற்கேற்ப உயர் கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்தி இவர்களை கல்விமான்களாக உருவாக்கியிருப்பதை இந்நூல் மூலம் அறிந்து நெகிழ முடிகிறது.
ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கி
அவர்களுக்கு ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக பல வசதிகள் வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்படுவதும் தெரிகின்றது.
இந்த மாவீரர்களின் அறிவுத்திறன் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன். எல்லாத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சிகள், உயர்வுகள், தோல்விக்காக
துவண்டு போகாமல் வெற்றியை நோக்கியே வீறு கொண்ட பயணங்கள், குடும்பத்தைப் பிரிந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் விட்டுக் கொடுத்தல்,
பகிர்ந்துண்ணல், பாதுகாத்தல், சகபோராளிகளின் குடும்பங்களையும் தன் குடும்பமாக நேசிக்கும் பண்பு, அன்பையும் வீரத்தையும் பண்பையுமு் வளர்த்து அறிவுடன் கூடிய கட்டுக்கோப்பானவர்களாக மிளிர்ந்து நிற்கின்றனர்.
இந்த வாழ்வை நாம் அனுபவிக்கத் தவறி விட்டோமே என்ற ஏக்கத்தையும் தருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட தியாகக் குடும்பங்கள், தொடர்ந்தும் போராட்டத்திற்கும், அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கும் உறவுகள் என்ற உயர்ந்த நிலை.
போராளியின் குண இயல்பு
இங்கு நிலா தமிழ் ஒவ்வொரு போராளியின் குண இயல்புகளையுமு், ஆற்றலையுமு் ஆளுமையையும் அழகாக அனுபவித்து எழுதியுள்ளார்.
அவர்களிடையே காணப்பட்ட நகைச்சுவை உணர்வுகளையுமு் பட்டப் பெயர்களையும் குறிப்பிடத் தவறவில்லை. பேணி, பொக்கான், அரியத்தார்
போன்ற செல்லப் பெயர்களும், “துவைக்கிற கல்லில் தவளை“ என்ற நகைச்சுவை வரிகள், “குமார் குமார் லைட்டடி“ என்ற வரிகள் போராட்டத்தின்
மத்தியிலும் போராளிகள் திடமானவர்களாக, நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக, பல்திறன் மிக்கவர்களாக விளங்கினார்கள் என்றுணர முடிகிறது.
இங்கு ஆண் போராளிகள் பெண் போராளிகள் மீது காட்டும் பாசமும், மதிப்பும், அக்கறையும் சேரலாதன் சேரன், விமல் போன்ற மாவீரர்களின் செயல்களைக் கூறி நிலாத்தமிழ் உணர்த்தியுள்ளார்.
போராளிகள் தமக்கென சுயநலமாக வாழாது போராளிகளை மணந்து தமக்கென குடும்பங்கள், உறவுகள், பிள்ளைகள் இருந்தும் இறுதிவரை விடுதலைக்காய் பணி செய்து வீரச்சாவடையும் வேதனையை அனுபவித்து
வேதனையுடனும் பெருமையுடனும் எழுதியிருக்கின்றார் நிலா தமிழ்
வேதனையுடனும், பெருமையுடனும் எழுதியிருக்கின்றார். ஆதி என்ற போராளி அரவம் தீண்டி இறப்பதும், மேஜர் சேரலாதன் ஈரல் புற்றுநோயினால் உயிரை விடுவதும்வேதனைக்குரியவை.
இந்நூலின் மூலம் மாவீரர்களினதும் அமைப்பினதும் ஆளுமைகளை ஆக்கங்களை வெற்றிகளை வேதனைகளை உள்வாங்க முடிகின்றது
என்றாலும், தாயகத் தாகத்தை தீர்க்க முயன்றவர்களின் முழு அர்ப்பணிப்புக்களும் விதைக்கப்பட்டிருக்கின்றனவா? முளைவிட்டு, மீண்டும்
வளர்ந்து, மரமாகி, கிளை பரப்பி, மீண்டும் வளர்ந்து மரமாகி கிளை பரப்பி வேரூன்றுமா? என்ற எண்ணமும் என்னுள்ளே எழுகின்றது.
நிலாதமிழ் நிதித்துறையைச் சார்ந்தவர் என்பதால், நிதித்துறையைச் சேர்ந்த மாவீரர்களை மட்டுமே இங்கு அதிகளவில் குறிப்பிட்டிருக்கின்றார்.
நிதித் துறையிலேயே இவ்வளவு ஆளுமை, திறமை மிகுந்தவர்கள் இருக்கும் போது மற்றத் துறைகளில் எவ்வளவு இருக்கும்? அவற்றையும் அறிய வேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.
இந்நூலினை ஒரு ஆவண ஏடாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களில் பன்னிருவரே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும்
மற்றைய துறைகளிலும் இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். காவியமாகி விட்ட மாவீரர்களின் நினைவுகள் களங்கப்படாது, நிலைத்து
நீங்காது நிற்கவும், எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் கள் என்ற அனைவரும்
பேணிப் பாதுகாத்து நிற்பதற்காகவும் இதுபோன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். இந்நூலை அடிப்படை ஆவணமாகக் கருதித் தொடர வேண்டும்.
நிலாத்தமிழ் போராளியாக, மாவீரனின் வாழ்க்கைத் துணையாக, தலைவரையும், அமைப்பையும் நினைவில் நிறுத்தி “நினைவழியா நினைவுகள்
என் நினைவில் மாவீரர்கள்” என்ற உன்னதமாக ஆவண நூலைத் தந்து தன் வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்துள்ளார்.
- ஈழச்சுடர்கள்

- மேஜர் திலகா / வான்மதி

- கப்டன் கலைமதி

- எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

- லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

- மெழுகுவர்த்திகள்

- மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

- தாயுமானவள்

- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

- தமிழேந்தியப்பா

- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

- அண்ணா

ஓடிய காரில் இருந்து வீழ்ந்த சிசு – வேக சாலையில் நடந்த பயங்கரம்
ஓடிய காரில் இருந்து வீழ்ந்த சிசு – வேக சாலையில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா மெல்போர்ன் தென்கிழக்கு சாலையில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து சிசு ஒன்று வீழ்ந்துள்ளது
அதிக வேக சாலையில் இந்த சிசு வீழ்ந்த பொழுதும் தெய்வாதீனமாக தப்பியுள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உலங்குவானூர்தி அவசர பிரிவினர் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
தற்போது சிசு நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
தொடர்ந்து மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்கா உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
அமெரிக்கா உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
ஏமன் இராணுவ படையினரால் அமெரிக்காவின் ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அந்த இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த நாட்டு இராணுவத்தினர் மீது சவுதியை படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
இவ் வேளையே இந்த விமனம சுட்டு வீழ்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
அமெரிக்கா மெஸ்க்சிக்கோ எல்லையில் ஆயுதாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
போதைவஸ்து குழுக்களுக்கு இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்
ஈரான் தலைநகர் அருகில் இலகுரக பயிற்சி விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது
,இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தள படை முகாம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக இந்த முகாம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்
28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்
வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி… அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் பதிவிட்டுள்ளது.
இதில் எந்த மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. அதாவது, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான
தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு
ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட விடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், மிக எளிதான கட்டுமானப் பணி. போல்டுகளை இணைத்து இறுக்கிவிட்டு,
குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்று விடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


















