Author: நிருபர் காவலன்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .
வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .
சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .
ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .
மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .
வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,
இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 ஆம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்.
குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த
மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? என வாராந்த இன்று
ஊடகவியாளர்களுக்கு கேள்வி பதிலுக்கான பதில் வழங்கையில் இவ்வாறு அறிக்கை மூலமாக பதில் வழங்கினார் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
என் வயது முதிர்ந்த வயதிலேயே அதன் விளைவுகளை உணர்ந்து பூனைக்கு மணி கட்டும் பணியை நான் மேற்கொண்டேன். பௌத்த மதகுருமார்கள்
அரசின் விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதால் ஏற்படும் ஆபத்துகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரம் இது.
ஆனால் நிச்சயமாக அறிவுள்ள பௌத்த மதகுருமார்கள் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடையில் சமாதான தூதுவர்களாக செயல்பட முடியும்.
பௌத்த பிக்குகளின் ஆங்கிலம் அல்லது தமிழ் பேசும் தூதுக்குழு ஒன்று முதலில் வடக்கில் உள்ள எமது புத்திஜீவிகளை சந்தித்து தமிழர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அதன்பிறகு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, எங்கள் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளலாம்.
அதே சமயம் அடிமட்ட மட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிங்கள தமிழ் நட்புறவுச் சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையாளர்களை வடக்கிற்கு அனுப்புவது மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய சரியான கண்ணோட்டத்தையோ அல்லது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் சர்வதேச உள்ளீட்டுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை வழங்காது என்றார்.
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் | உலக செயதிகள்
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் |இலங்கை செயதிகள்
இலங்கை செயதிகள் |தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (05) காலை பதிவாகியுள்ளதுடன், கிணற்றில் வீசப்பட்ட மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் மற்றைய வாய் பேச முடியாத சிறுவனும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.
அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
உலக செய்திகள் |முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கைது செய்திட ,போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்
அவ்வேளை அவரது வீட்டை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் சூழந்ததினால் ,அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுளைந்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர் .ஆனால் அவர் அங்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் .
பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த காலத்தில் ,பெற்று கொண்ட பொருட்கள் தொடர்பாக அறிவிக்க கணக்கு ,காண்பிக்க தவறிய குற்ற சாட்டில் ,
நீதிமன்ற அழைப்பை ஏற்று கைது செய்ய போலீசார் விரைந்த பொழுதும் ,
அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஏமான் நாட்டில் பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்பின்
மூத்த தலைவர் படுகொலை செய்ய பட்டுளளார் .
ஏமன் நாட்டில் பதுங்கி இருந்த, இவரது வாகனம் மீது ,
அமெரிக்கா உளவு விமானம் குறிவைத்து நடத்திய,
தாக்குதலில் இவர் படுகொலை செய்யப்பட்டுளளார் .
தமது தளபதி கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய ,
தாக்குதலில் பலியாகியுள்ளார் என்பதை ,
அந்த அமைப்பு ஒப்பு கொண்டுள்ளது .
அமெரிக்கா வெளியாக உளவுத்துறையின் ,
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட ,
இந்த முக்கிய தலைவர் .நேரம் பார்த்து கர்ச்சிதமாக
தாக்கி அழிக்க பட்டுள்ளார் .
அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக இது கருத படுகிறது .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரான் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பாடசாலை மாணவிகள் மயக்கம் உற்று விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .
மாணவிகள் பாடசாலை அருகே கெமிக்கல் நச்சு வாயு தாக்குதல் நடத்த படுகிறது .குறித்த கெமிக்கல் வாயு காற்றில் கலக்கும் படி பரவ விட படுகிறது .
இந்த நச்சு காற்றானது பாடசாலைக்குள் நுழைந்து கலப்பதால் ,
அதனை சுவாசிக்கும் மாணவர்கள் ,சுவாச கோளாறு ஏற்பட்டு ,
சுயநினைவிழந்து மயங்கி விழுகின்றனர் .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
இந்த விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பையும் ,
பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
ஆளும் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது .
இந்த கெமிக்கல் தாக்குதலை நடத்துவது ,இஸ்ரேல் உளவாளிகள் என ஈரான் கருதுகிறது .
அதனால் அந்த நாசகார சதிகளை கைது செய்திடும் நடவடிக்கையில் ,
ஈரான் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
தொடர்ந்து கெமிக்கல் நச்சு தாக்குதல் இடம் பெற்று வருவதால் ,
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்த்துள்ளனர் .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே அந்த யுவதியை கட்டிவைத்து மூன்று நாட்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அவரது பிடியில் இருந்து தப்பிவந்த யுவதி, மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நோர்வூட்டைச் சேர்ந்த தரகர் மூலமாக அந்த யுவதி, 20 நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
சந்தேகநபரான அந்த நபர், அவ்வப்போது அந்த யுவதியிடம் அங்க சேஷ்டைகளை விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டே, அந்த யுவதியை அச்சுறுத்தி, இவ்வாறு கட்டிவைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவரிடம் பொலிஸ் நிலையத்தின் தகவலைப் பெற்று, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
கடல்ல பேனா சிலை வச்சா உடைப்பது நிச்சயம் பேட்டியில் சீமான் விட்ட சவால்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர்களை சந்தித்த சீமான் போட்டு கிழித்த கிழிப்பை பாருங்க .
என்ன ஒரு கேள்வி .இவர்களும் ஊடக நபர்கள் ,தமிழர் என பேசிய படி
அலையுறாங்க என்ன பண்ண ,கால கொடும .
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .
எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்
இலங்கை செய்திகள் |பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் உளவு விமானம் ஒன்று போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
நெதன்யாகுவின் ஆட்சியில் பலஸ்தீன மக்கள் நசுக்க பட்டு,
படு கொலை செய்ய பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து ,
செல்கின்ற நிலையில் ,இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அப்பாவி மக்கள் மீது அடக்கு நடைமுறையை பிரோயோகித்து,
இஸ்ரேல் கோர தாண்டவம் ஆடிய வண்ணம் உள்ள கோர செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .
குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .
குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .
விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .
பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .
எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள்| பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைக்கு பாடசாலை சிறுவர்களை ஏற்றியபடி பயணித்த
பேருந்து ஒன்று, மரங்கள் நிறைந்த சரிவில் கவிழ்ந்தது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த நாற்பது பேரில்
21 பேர் பலத்த காயமடைந்தனர் .
ஓட்டுனரும் அவரது கூட்டாளியும் ஆபத்தான நிலையில் ,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
புதிய அரசியல் நீதி சீர் திருத்த கொள்கைக்கு எதிராக ,
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் நீடித்தால் ,
நெதன்யாகு பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ,குறித்த நீதி கொள்கை,
சட்ட மூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ,நாடு தழுவிய நிலையில் மிக
பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .
தனது ஆசனத்தை தக்க வைத்து கொள்ளவும் ,
லஞ்ச ஊழல் மோசடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள
மேற்கொள்ள பட்ட நீதி சீர் திருத்தம் ,
தற்போது மக்கள் போராட்டத்தின் வாயிலாக ,மிக பெரும் நெருக்கடியை
நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது .
லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
உலக செய்திகள் |லண்டன் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகில் வீடொன்றுக்குள் கஞ்சா தோட்டம் ஒன்று வளர்த்து வந்துள்ளது ,கண்டு பிடிக்க பட்டுள்ளது .
ஆட்கள் நடமாட்டம் அற்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மேற்கொள்ள பட்ட இரகசிய நடவடிக்கையில் , பெறப்பட்ட தகவலை அடுத்து ,கதவு உடைத்து நுளைந்த பொழுது ,குறித்த வீட்டிற்குள் கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பல மில்லியன் பெறுமதியான கஞ்சா செடிகள் ,மின்குமிழ்கள்
பொறுத்த பட்டு செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளது ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இதனை பராமரித்து வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.
காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.














































