Tag: கர்ப்பிணி மனைவி
மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .
இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .
ஆண் குழந்தை வெட்டி கொலை
இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .
அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .
அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது
மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .
ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .
பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .
அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்புபகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்














