Author: நிருபர் காவலன்
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி
சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றம் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
சட்டமா அதிபர் திணைக் களத்தால் அரச சட்ட வாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போவதை தடவியல் பொலிஸார் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால், முதலாம் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .
இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .
ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .
அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .
ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .
மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .
ரஸ்யாவை தகர்க்க ஜெர்மன் வழங்கும் கொடிய விமானங்கள்
ரஸ்யாவை தகர்க்க ஜெர்மன் வழங்கும் கொடியவிமானங்கள்
திசை மாறும் உக்ரைன் போறும் ,அழிவின் விளிம்பில் அடியெடுத்து வைக்கும் ரஷ்ய நிலையம் ,ஐரோப்பாவுக்கு புட்டீன் வைக்க போகும் ஆப்பு ,இந்தியா விமானங்களை வீழ்த்தும் சீனா .
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவத்தின் பின்னணி
இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கப்பலோடு மூழ்கிய இஸ்ரேல் உளவாளிகள் அதிர்ச்சியில் இஸ்ரேல்
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாளால் தாக்கப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
அச்சுவேலி – செல்வநாயகபுரம் பகுதியில் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அபாயகரமான ஆயுதங்கள் கைபெற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கஜேந்திரா வாள்கள் என கூறப்படும் இந்த வாழ்வில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பெற்றப்பட்ட வாள்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன
கவனயீர்ப்பு போராட்டம்
கவனயீர்ப்பு போராட்டம்
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மத்தியகிழக்கு நாடுகளும் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன் போலி முகவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில்
அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம்.
நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன.
இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இந்தியா அரச இராணுவத்தினரால் மூன்று போராளி குழுவை
சேர்ந்தவர்கள் ,கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய படைகள் தெரிவித்துள்ளன .
ஜம்மு கஸ்மீர் பகுதியில் சுற்று காவல் தேடுதலை ,
நடத்திய பொழுது ,மறைந்திருந்த போராளி குழுவை சேர்ந்த
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான கிளர்ச்சி படைகள் வசம் இருந்த ஆயுதங்கள் ,
துப்பாக்கிக என்பன மீட்க பட்டுள்ளன .
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இவ்வாறு கைதானவர்கள் கண்கள் கட்ட பட்டு,
காட்சி படங்களை வெளியிட்டு ,இது தமது வீரம் செறிந்த நடவடிக்கை என ,
இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது .
ஜம்மு பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது போராளிகள் நடத்திய,
தாக்குதலில் பல சிப்பாய்கள் பலியாகியும் ,வாகனங்கள் என்பன சிதறடிக்க பட்டன .
அதனை அடுத்து பழிவாங்கும் தாக்குதலை ,இந்தியா படைகள் ஆரம்பித்த வேளையே
இவர்கள் சிக்கி கொண்டனர் .
போராளிகளிடம் தொடர்நது உரிய முறை விசாரணைகளை ,
நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவர்களின் முக்கிய முகாம்களை,
தாக்கும் நடவடிக்கையில் ,இந்தியா இராணுவம் ஈடுபடலாம் என
எதிர் பார்க்க படுகிறது .
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
ஜெர்மனியில் இருந்தவராது ஐ எஸ் பயங்கரவாத குழுவுக்கு
நிதி திரட்டினார்கள் என்கின்ற குற்ற சாட்டில் ஏழு பேர் கைது செய்ய பட்டுளள்னர் .
ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ,
ஏழு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக,
ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜெர்மன் ஏழு இடங்கள் மற்றும் , நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரிலும்
19 சோதனைகளை நடத்த பட்டதில் ,
நீண்ட வலையமைப்பு சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுளளது .
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
கைது செய்யப்பட்ட நபர்கள் ,டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்,
மூலம் சிரியாவில் ISIS க்கு நிதி நன்கொடைகளை கோரிய சர்வதேச வலையமைப்பைச் ,
சேர்ந்தவர்கள் எனவும் பின்னர் ,இவர்கள் அவர்கள் குழு அல்லது,
அதன் இடைத்தரகர்களுக்கு மாறினர் என கண்டறிய பட்டுள்ளது .
இந்த வலையமைப்பினால் 65,000 யூரோக்கள் ($71,552.00) திரட்ட பட்டு ,
, சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள்
விடுதலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது .
சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறை முகாம்களில் இருந்து தப்பிக்க ,
இந்த பணம் உதவியுள்ளது .
ஏழு சந்தேக நபர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்,
என ஜெர்மன் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர் .
விடுதலை புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை ,புலி உறுப்பினர்கள்
என, இதே ஐரோப்பிய காவல்துறைகள் ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
சுவிஸ் நாட்டில் மாடு ஒன்றை உலங்கு வானூர்தி
தூக்கி செல்லும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
மேய்ச்சல் நில பகுதியில் கால் முறிந்து காணப்பட்ட மாட்டை ,
அவசர மீட்பு குழுவினர் ,உலங்கு வானூர்தி மூலம்,
கட்டி தூக்கி செல்ல பட்டு ,பாதுகாப்பன இடத்தில மாடு,
விடப்பட்டு பராமரிக்க பட்டு வருகிறது .
விசேட வைத்தியர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து,
சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது .
மனிதர்களை போலவே விலங்குகள் மீதும் அன்பு செலுத்தி ,
இவ்வாறு செய்திடும் சேவை மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது .
எமது புதிய ஆயுதங்கள் இஸ்ரேலை அழிக்கும் ஈரான்
எமது புதிய ஆயுதங்கள் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் குறி வைக்க படும் ஈரான் அணு உலை ,தொடரும் போர் பதட்டம் ,
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு சந்தேகநபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
மேலும், சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
உக்ரைன் மெலிடோபோல் பகுதியில் ரஸ்யாவின் ஆயுத கிடங்கு மீது,
உக்ரைன் நடத்திய தாக்குதல் ,அந்த ஆயுத கூடங்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
கரும் புகைகள் வானில் தோன்றிய காட்சிகள் அடங்கிய காணொளிகள்
சமூக வலைத்தளங்களில் ,உக்ரேன் வாசிகள் பரவ விட்டுள்ளனர் .
இந்த வெடிப்பு சம்பவத்தால் ,
ரஷ்யா படைகளிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
உக்ரைன் முன்னரங்க போர் முனைகளிற்கு ,
ஆயுதங்கள் ,மற்றும் இராணுவத்தை வழங்கி வரும் ,
பின்புல வளங்கள் வழியாக மலிடப்போல் உள்ளது .
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
அவ்வாறானது முக்கிய வினியோக ,வழிகளை இலக்கு வைத்து ,
உக்ரைன் படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதல் திட்டம் ,விநியோக வழிகளை சீர்குலைப்பதன் ஊடக ,
முன்னரங்க படைகளுக்கான ஆயுத விநியோகத்தை தடுப்பது ,
காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் வழங்க முடியா நிலையில் ,
உயிரிழக்க செய்வது .
இவ்விதமான தந்திரோபாய ஆடுகளத்தை ,
உக்ரைன் தற்போது கச்சிதமாக ஆடி வருவதையே ,
ரஸ்யாவுக்குள் நுழைந்து நடத்த பட்ட வான்வெளி தாக்குதல்,
மற்றும் பின்புல பகுதிகளை தாக்கி வருவதில் இருந்து கணிப்பிட முடிகிறது .
பலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்,மத்திய கிழக்கில் தொடரும் பதட்டம் .போர் மூளும் அபாயம் .
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ,
அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பாணந்துறை சாகர மாவத்தையின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள புகையிரத பாலத்தின் கீழ் ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு உயிரிழந்தவரின் உடல் வீங்கியிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை ஒகமுரா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் தீவு நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, நாணய நிதிய பணியாளர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பின்னர் ஒகாமுரா விஜயம் செய்யவுள்ளார்.
நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையில் இந்த தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திடம் உதவி கோரிய இலங்கை
ரஜினிகாந்திடம் உதவி கோரிய இலங்கை
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் (29) அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.















































