Tag: லிட்ரோ எரிவாயு
லிட்ரோ எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
லிட்ரோ எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
புதிய சரக்குகள் வரவிருப்பதால் லிட்ரோ எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
தீவு முழுவதும் எரிவாயு விநியோகப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா அறிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த ஃபிரான்கோயிஸ் (FRANCOIS) கப்பல் அக்டோபர் 18 அன்று இலங்கைக்கு வந்தடைந்ததாகவும், அச்சரக்கை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நான்காவது எரிவாயு சரக்குக் கப்பலான கொரிந்தியன் (CORINTHIAN), மேலும் 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி, அக்டோபர் 22
அன்று இலங்கைக்கு வரவிருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சரக்குகளின் வருகை, தீவு முழுவதும் எரிவாயு விநியோகத்தை நிலைப்படுத்தவும், சந்தைக்கு எரிவாயு விநியோகம் வழக்கம் போல்
பற்றாக்குறையின்றி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் உதவும் என்று அந்நிறுவனம் நுகர்வோருக்கு மேலும் உறுதியளித்துள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து

- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை

- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்

- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன

- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

- அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளது

- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது

- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான்

- இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளது

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலைகள் பின்வருமாறு,
12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 4,409/= ரூபாவாகும்.
5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 1,770/= ரூபாவாகும்.
2.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 38
ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 822/= ரூபாவாகும்.









