லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

- லக்விஜய மின் உற்பத்தி நிலைய அலகு சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் மின்வெட்டு இல்லை

- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைது

- சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்

- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்

- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணை








