இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி

கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி

இலங்கை களுத்துறை பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி
கொண்டிருந்த வாத்தியார் ஒருவர் தனனிடம் கலவி கற்ற 16 மாணவிகளை
பாலியல் உறவுக்கு உட்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார் .

அவர்களுடன் நடத்த பட்ட பாலியல் காட்சிகளை தனது ,
கணணியில் பதிவாக்கி மறைத்து வைத்திருந்துள்ளார் .

அதனை கண்காணித்த மனைவி பாதிக்க பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய படுத்தியதை அடுத்து போலீசார்
கணவனை இளுத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர் .

மேற்படி சமபாவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்

நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் குருந்தூர் மலைக்கு உதய கம்பன்பில வருகை மற்றும் இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

No posts found.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான

செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும்

வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை

எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

No posts found.
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாா் துப்பாக்கிச் சூடு

பொலிஸாா் துப்பாக்கிச் சூடு

ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, ​​அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.

அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.

சந்தேக நபர் 26 வயதுடையவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No posts found.
இஸ்ரேலை அழிக்க ஈரான் ஹிஸ்புல்லா துடிக்கிறது இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அழிக்க ஈரான் ஹிஸ்புல்லா துடிக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேலை அழிக்க ஈரான் ஹிஸ்புல்லா துடிக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேலை முற்றாக அழித்து தமது நாட்டின் கொடியை ஏற்றிட ஹிஸ்புல்லா துடிக்கிறது என இஸ்ரேல் இராணுவ நிபுணர் கருத்துரைத்துள்ளார் .

காணொளியில் முழு விபரம் பார்க்க

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்,
ரஷ்யா மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது ,குழந்தைகளை காணமால் ,
ஆக்குவதானா பல குற்ற சாட்டுக்களை முன்வைத்துள்ளார் .

பாடசாலைகள் , மருத்துவமனைகள் ,பணியாளர்கள் மீதான அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ,மற்றும் ரஷ்ய படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்ட ,ஊனமுற்ற குழந்தைகளின்

எண்ணிக்கையால் நான் அதிர்ச்சியடைந்தேன்,என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்து மேற்படி குற்றஞ் சாட்டுக்கோப்பை
. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளார் .

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

அப்படி என்றால் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து ,
அமெரிக்கா அதன் கூட்டு நேட்டோ நாடுகள் புரிந்தவை என்ன என்ற ,
கேள்வியை ,பாதிக்க பட்ட நாடுகளும், மக்களும் எழுப்புகின்றனர் .

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ,
ஈராக்கிய பாராளும்னறம் பிரேரணை நிறைவேற்றிய பின்னரும் ,


ஏன் ஆக்கிரமிப்பு அந்நிய இராணுவம் நிலை கொண்டுள்ளது என்ற ,
ஈராக்கிய மக்கள் கேள்விக்கு ,ஐக்கிய நாடுகள் சபை ,
பதில் தரவில்லை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது ,.

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in உலக செய்திகள்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் பணாத்தை அருந்தியவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 180 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இதில் சிலர் வீடு சென்றுள்ளனர் ,பலர் கண்பார்வை இழந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை
மருத்துவமனை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் சிலருக்கோ சிறு நீரகம் பாதிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இவர்கள் அருந்திய மதுபானத்தில் நச்சு தன்மை எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

சமீப சில மாதங்களுக்கு முன்னதாக பாடசாலை மாணவிகள் பலநூறு பேர் ,
பாடசாலை அருகில் வெளியான நச்சு புகை காரணமாக,
மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர் .

அதன் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை செயல்படுவதாக ,
தெரிவித்து முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ,
அந்த நிலவரம் முடிவுக்கு வந்தது .

தற்போது இப்பொழுது சாராயத்தில் நஞ்சு கலப்பு இடம்பெற்றுள்ளது .
இவையும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என ,
ஈரான் ஆதரவு சக்திகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன .

காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
Posted in உலக செய்திகள்

காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு

காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு

கடலடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற
நீர்மூழ்கி கப்பல் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போனது .

இந்த கப்பலுக்கு என்ன நடந்து என்பது தொடர்பில் தெரியாது ,
திணறிய கப்பல் படை ,தற்போது அந்த நீர் மூழ்கி
கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

மூன்று நாட்கள் மட்டும் சுவாசிக்கும் ஓட்ஸிசன் இருந்துள்ளது ,
ஆனால் அவை தற்போது தீர்ந்துள்ள நிலையில் ,
அவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு

கனடா நாட்டு கப்பல் கடலடியில் சத்தம் வரும் திசையை கண்டு சென்ற பொது ,
காணாமல் போன நீர்மூழ்கி கண்டு பிடிக்க பட்டது .
அந்த கப்பலில் உடைவு காணப்படுவதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெரியவரவில்லை என்கிறது

மேற்படி சம்பவம் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை

பிரிட்டனில் அதிகரித்து செல்லும் விலை உத்தரவு அடுத்து வட்டி வீதத்தை ,
குறைக்கும் நடவடிக்கையில் ,பிரிட்டன் அரச வங்கி நடவடிக்கை ,
மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

வட்டி வீதம் அதிகரித்த நிலையில் ,வீட்டு வாடகை அதிகரித்தது .
மேலும் ,பொருட்கள் விலைகளும் உயர்வடைந்தன .
அதனை அடுத்தே வட்டி வீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள
படலாம் என எதிர்வு கூற பட்டுள்ளது .

வட்டி வீதம் குறைக்க பட்டால் ,உயர்வடைந்த பொருட்கள் விலை ,
குறைக்க படும் என்றால் அது இல்லை
என்றே மக்கள் கருத்தாக உள்ளமை குறிப்பிட தக்கது .

எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
Posted in உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்

எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்கு கரையில் ,
பூர்வீக மக்கள் நடத்திய போராட்த்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்,நடத்திய வன்முறை கலந்த தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன் படுத்தி தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் ,
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ,
மீண்டும் கடும் தாக்குதலை நடத்திடும் முக்கிய நகர்வுகள் ,
இதில் இருந்து ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கமாஸ் ஈரான் பேச்சுக்கள் இடம்பெற்று 48 மணித்தியாலத்தில் ,
இஸ்ரேலில் மக்கள் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .

No posts found.
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்

No posts found.
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்

பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்

ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No posts found.
பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்

பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன்,

தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண்ணாக தன்னை

காட்டிக்கொண்ட சந்தேக நபர், பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No posts found.
யாழில் மனித சடலம் - வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்

யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும் பொழுது மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டதால் பெரும் பர பரப்பு நிலவியது .

சடலம் கண்டு பிடிக்க பட்ட பகுதிக்கு நீதிபதி அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ,அகழ்வு பணியை கண்காணித்தார் .

இது யார் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் ,எத்தனை ஆண்டுகளாக சடலம் இங்கே புதைக்க பட்டது என்பது தொடர்பிலான மண் ஆய்வு ,என பல விடயங்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு

அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு

யாழ். வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை

லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை

லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,

காம லீலைகள் மற்றும் பணமோசடி


காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பாலியல் குற்ற சாட்டு

அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,

நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை


அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,


தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .

போலி பரப்புரை

இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,

போலியான பரப்புரைகள் ,


அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .

இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .

இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்

மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,


சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .

லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை

அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,


மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .

அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .

இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,


யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.

யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.

இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,


தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .

சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,


தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.

இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.

லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை

குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு

ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.

சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .

சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு

மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க

படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .

அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .

மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான

போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,

No posts found.
இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்

இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்

இந்தியா உத்தரகாண்ட பகுதியில் பயணித்த கார் ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து மலையடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .

இதன் பொழுது அந்த காரில் பயணித்த ஒன்பது பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .

மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்

சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .

உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..

இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது

ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்

நேட்டோ வான்வெளிக்கு அருகே பிறந்து கொண்டிருந்த ,
3 ரஷ்ய ராணுவ விமானங்களை ,பிரித்தானிய போர் விமானங்கள் இடைமறித்து துரத்தின சென்றன .

ரஸ்யாவுக்குள் நுழைந்து உளவு பார்த்தலில் நேட்டோ விமானகளும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன ,அதற்கு பதிலடியாக ரஸ்யாவும் இவ்வாறு உள்நுழைந்தது வேவு பார்க்கும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,

தொடரும் இரு தரப்பு அத்துமீறல் உள்நுழைதல் நடவடிக்கையால் ,
மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

No posts found.