நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று (21) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆறுமுக பெருமான் வள்ளி

இன்று காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் காலை 7.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி

காலை 8.30 மணிக்கு இருப்பிடத்தை அடைந்த தேர், காலை 09.15 மணியளவில் ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி

பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10.30 மணிக்கு ஆறுமுக பெருமான் ஆலயத்திற்குள் சென்றார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில்

புதிய பயங்கரவாத சட்டமூலம் விரைவில்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி

சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் அண்மையில் கூடியது.

இதன்போது சட்டமூலத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நெரின் புல்லே, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய

உயர் அதிகாரிகள் குழு

ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பியமுந்தி பீரிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு குழு இதுவரை 14 முறை கூடியுள்ளதுடன், அதன் அடுத்த கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளது.

சட்டமூல வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள், சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும்

சமூகங்களின் கருத்துக்களைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ
Posted in இலங்கை செய்திகள்

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம்,

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த

காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது.

அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றின்

ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற குழு எதிர்பார்க்கின்றது.

இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது

கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ​​நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் நேற்று

இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத்

தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ

தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர், அதிகப்படியான சீனி நுகர்வு இந்த நிலைக்கு வழிவகுத்ததுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. தொற்றா நோய்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

80% இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. உணவு செரிக்கப்பட்டு குளுக்கோஸாக உறிஞ்சப்படுகிறது.

இதனால் நீரிழிவு உட்பட பல நோய்கள். பருமனான குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பரவலாக உள்ளது.

இலங்கை அதிக சீனி உட்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். ஒரு நபர் ஒரு வருடத்தில் 25 முதல் 30 கிலோ வரை சீனியை உட்கொள்கிறார்.​

வயது வந்தவர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சீனியை உட்கொள்கிறார்.” என்றார்.

இதேவேளை, நாட்டில் உள்ள குழந்தைகளிடையேயும் சீனி நுகர்வு அதிகரித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வைத்திய சங்கத்தின் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

“சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகளவான சீனியை உட்கொள்கிறார்கள்.

கொழுப்பு உட்பட பல நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. உணவில் இருந்து மேலதிக சீனி மற்றும் உப்பை நீக்க வேண்டும்” என்றார்.

டயானா கமகேவிற்கு பிடியாணை
Posted in இலங்கை செய்திகள்

டயானா கமகேவிற்கு பிடியாணை

டயானா கமகேவிற்கு பிடியாணை

டயானா கமகேவிற்கு பிடியாணை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்

டயானா கமகே, வழக்கு விசாரணை

டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான்

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள் விசேட செய்திகள்

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி


துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி ,துரத்தும் கன்னி வெடிகள் | ஆப்பு ஆப்பு அலறும் வன்னி |Today’s Vanni Maindan Tik Tok Video

வன்னி மைந்தன் இன்றைய இலங்கை ,செய்திகள் தொகுப்பில் ,கன்னி வெடிகள் துரத்துவதாக தெரிவித்துள்ளார் .

தேர்தல் வந்தால் திருவிழா

தேர்தல் வந்தால் திருவிழா நடக்கும் என்பார்கள் .அதனால் தான உருட்டு
மன்னர்களுள் உருட்டு ஆரம்பமாகியுள்ளது .வாக்கு தேர்தலில் வெல்ல

இப்பொழுதே தயாராகும் வாக்குறுதிகள் ,வன்னிமைந்தனின் அரசியல் பார்வையில் .சூடு பார்க்கும் விவாதம் ,அதிர்ந்த விவாத மேடை

இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் வீடியோ காணொளி

Chasing virgin bombs | Whispering Vanni |

Vanni Mainthan has stated in today’s Sri Lanka, news collection, that virgin bombs are chasing.
They say that when the election comes, there will be a festival. So the money roll


The money roll has begun. Promises are being prepared right now to win the election, from Vannimainthan’s political perspective. A heated debate, a shocking debate stage

Today’s Vanni Maindan Tik Tok Video

https://www.youtube.com/watch?v=QaF1Zkgji7M
ஈரானின் ஜாஃபர் பாயா செயற்கைக்கோள்
Posted in உலக செய்திகள்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம் நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

50 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு

நைஜீரியாவின் வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் குறைந்தது 50 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர்

காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அவசரகால நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

“சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இன்னும் காணவில்லை” என்று தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் (NEMA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படகு கோரோனியோ சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த ஆரம்ப அறிக்கை

சம்பவம் குறித்த ஆரம்ப அறிக்கைகளைப் பெற்றவுடன், நிறுவனம் உடனடி நடவடிக்கையைத் தொடங்கியதாக NEMA இயக்குநர் ஜெனரல் ஜுபைடா உமர் தெரிவித்தார்.

சோகோட்டோவில் உள்ள NEMAவின் செயல்பாட்டு அலுவலகம், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசர சேவைகளுடன் ஒருங்கிணைந்து, காணாமல்

போன பயணிகளைக் கண்டுபிடிக்க தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

“உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து

ஆதரவையும் ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனம் அதன் உறுதிப்பாட்டை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பென்குரியன் விமானநிலையத்தை தாக்கிய ஹவுதி
Posted in உலக செய்திகள்

பென்குரியன் விமானநிலையத்தை தாக்கிய ஹவுதி

பென்குரியன் விமானநிலையத்தை தாக்கிய ஹவுதி

பென்குரியன் விமானநிலையத்தை தாக்கிய ஹவுதி ஏமன் பென் குரியன் விமான நிலையத்தை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கியது

ஏமன் ஆயுதப்படைகள்

ஏமன் ஆயுதப்படைகள் ஞாயிற்றுக்கிழமை டெல் அவிவ் புறநகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து “பாலஸ்தீனம்-2” ஹைப்பர்சோனிக்

பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி சிறப்பு ஏவுகணை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறின.

ஏமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் யஹ்யா சாரி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜாஃபாவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணைப் படை

பாலஸ்தீனம் 2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறினார்.

“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது, மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகள் தங்குமிடங்களுக்கு தப்பிச் செல்லவும் விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தவும் கட்டாயப்படுத்தியது” என்றும் அவர் மேலும் கூறினார்.

ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு

“ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காகவும், காசாவில் வசிப்பவர்களின் இனப்படுகொலை மற்றும் பட்டினியின் குற்றச் செயலுக்கு பதிலளிக்கும் விதமாகவும், எதிரிகள் நமது நாட்டின் மீது நடத்திய

தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று ஜெனரல் சாரி வலியுறுத்தினார்.

“காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவது, பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதரர்களின் இரத்தமும், அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களின்

இரத்தமும் இஸ்ரேலிய எதிரியால் சிந்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த இனப்படுகொலை மற்றும் காசா மக்களின் முற்றுகை மற்றும் பட்டினி குறித்து இஸ்லாமிய உலகம் தொடர்ந்து மௌனம் காத்து வருவதை ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்தார்.

“பாலஸ்தீன மக்களுக்கான மத, தார்மீக மற்றும் மனித கடமைக்கு ஏற்ப, போர் நின்று காசா முற்றுகை நீக்கப்படும் வரை ஏமன் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகள் தொடரும்” என்று ஜெனரல் சாரி வலியுறுத்தினார்.

ஈரானின் ஜாஃபர் பாயா செயற்கைக்கோள்
Posted in உலக செய்திகள்

ஈரானின் ஜாஃபர் பாயா செயற்கைக்கோள்

ஈரானின் ஜாஃபர் பாயா செயற்கைக்கோள்

ஈரானின் ஜாஃபர் பாயா செயற்கைக்கோள் ,ஈரானின் ஜாஃபர், பாயா செயற்கைக்கோள்கள் ரஷ்ய சோயுஸில் ஏவப்படும்

ஈரான் தனது ஜாஃபர் மற்றும் பாயா செயற்கைக்கோள்கள் இந்த இலையுதிர்காலத்தில் ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டில் ஏவப்படும் என்று கூறுகிறது

, அதே நேரத்தில் சபாஹர் விண்வெளி நிலையத்தின் பணிகளும் முன்னேறி வருகின்றன.

ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர்

ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலரிஹ், கடந்த ஆண்டு ஏவுதலுக்காகத் தயாரிக்கப்பட்ட இரண்டு ரிமோட்-சென்சிங் செயற்கைக்கோள்களான ஜாஃபர் மற்றும் பாயா, இந்த இலையுதிர்காலத்தில்

ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டில் சுற்றுப்பாதையில் அனுப்பப்படும் என்று தஸ்னிமிடம் கூறினார். உள்நாட்டு ஏவுதல் விருப்பம் இன்னும் மதிப்பாய்வில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

செயற்கைக்கோள்கள் ஈரானிய ஆண்டு 1402 இல் வெளியிடப்பட்டன, மேலும் 1403 இல் ஒரு வெளிநாட்டு ஏவுதளத்தில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் ரஷ்ய தரப்பிலிருந்து தாமதங்கள் காலக்கெடுவை பின்னுக்குத் தள்ளின.

திட எரிபொருள் ஏவுதளங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சபாஹர் விண்வெளி நிலையத்தின் முதல் கட்டம் – ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்

ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர்

என்றும், இதில் ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர், டெலிமெட்ரி அமைப்புகள் மற்றும் மின்சாரம் மற்றும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் என்றும் சலரிஹ் கூறினார். சோதனை முடிந்ததும், முதல் சோதனை ஏவுதல்

நடைபெறும். நடுத்தர வகுப்பு திரவ எரிபொருள் ஏவுகணைகளை மையமாகக் கொண்ட இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு கட்டுமானத்தைத் தொடங்கும்.

நஹிட்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் இரண்டாவது சோதனை மாதிரியும் இந்த ஆண்டு உள்நாட்டு சிமோர்க் ஏவுகணையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம் ,2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை

எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இன்று (18) ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு ,2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.

முந்தைய காலாண்டில்

முந்தைய காலாண்டில், அதாவது 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில், 18.47 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்த

நிலையில், இந்த காலாண்டில் இவ்வாறு அந்த சபை இலாபம் ஈட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.

2025 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார சபை இலாபகரமான பாதையில் நுழைய முடிந்ததுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், 2024 ஜூன் காலாண்டில் சபையால் ஈட்டப்பட்ட 34.53 பில்லியன் ரூபாய் லாபத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் 2025 காலாண்டில் ஈட்டப்பட்ட இலாபம் 85% குறைவைக் காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2025 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட்ட நிலையில், இது 2025 மார்ச் காலாண்டில் அறிவிக்கப்பட்ட இழப்புக்கு பெரும்பாலும் காரணமாகும்.

இது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் அடுத்த தவணையைப்

பெறுவதற்கு, இலங்கை செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியது.

அதன்படி, 2025 ஜூன் இல் மின்சார கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டது.

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல் ,மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள்

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம்.

6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்

அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.

சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை.

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.

மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.

தடம் புரண்ட மற்றுமொரு ரயில்
Posted in இலங்கை செய்திகள்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில்

தடம் புரண்ட மற்றுமொரு ரயில் ,கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மாரக்கம் மற்றும் கடலோரப் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக

ரயில்வே திணைக்களம்

இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில்மூழ்கி பலி
Posted in இலங்கை செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில்மூழ்கி பலி

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில்மூழ்கி பலி

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில்மூழ்கி பலி செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார்.

செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார்.

குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான்

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 



இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் மகள் இந்த

ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், அதை ஒரு சிறப்பு விடயமாகக் கருதி சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள்

எனினும், சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால், பிணை மனுவை எதிர்ப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, அவரை 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர்

முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக்

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும்,

அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக

தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை

இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை

தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்

நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற

பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 320 பலி
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 320 பலி

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 320 பலி

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 320 பலி பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 320க்கும் மேற்பட்டோர் பலி.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில்

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 320 பேர் பலியாகியுள்ளனர், பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால்

பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 307 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு மலைப்பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் ஒன்பது பேரும், கில்கிட்-பால்டிஸ்தானில் ஐந்து பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், திடீர் வெள்ளப்பெருக்காலும் இறந்தனர், மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர், அங்கு மேகமூட்டம் மற்றும்

கனமழையால் டஜன் கணக்கான வீடுகள் சேதம்

கனமழையால் டஜன் கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் தெரிவித்தார்.

வடமேற்கில் மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை விடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தியது.

இந்த வாரம் வடக்கு பாகிஸ்தானில் வெள்ளத்தால் குறைந்தது 633 பேர் இறந்துள்ளதாகவும், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் மட்டும் 351 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் எல்லையைத் தாண்டி வெள்ளம் டஜன் கணக்கானவர்களைக் கொன்று நூற்றுக்கணக்கானவர்களை தங்கள் வீடுகளை காலி செய்ய வைத்துள்ளது.

ரஷ்யாவில் தீவிபத்தில் 11பேர் பலி
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவில் தீவிபத்தில் 11பேர் பலி

ரஷ்யாவில் தீவிபத்தில் 11பேர் பலி

ரஷ்யாவில் தீவிபத்தில் 11பேர் பலி மேற்கு ரஷ்யாவின் தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி.

ரஷ்யாவின் ரியாசான் பகுதியில்

மேற்கு ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 பேர்

காயமடைந்தனர் என்று ரஷ்ய அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

“இடிபாடுகளை அகற்றும் போது மேலும் இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தத்தில், துரதிர்ஷ்டவசமாக, 11 பேர் இறந்தனர்

மற்றும் 130 பேர் காயமடைந்தனர்” என்று அமைச்சகம் தனது டெலிகிராம் சேனலில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஏர்-மொபைல் குழுவின் ஒரு பகுதியாக நிறுத்தப்பட்ட நாய் பிரிவுகளில் ஒன்றால் இருப்பிடம் கண்டறியப்பட்ட ஒருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு 360 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் 90 யூனிட் உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன,

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை

அதே நேரத்தில் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று அது மேலும் கூறியது.

உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் (0730 GMT) ஷிலோவ்ஸ்கி மாவட்டத்தின் லெஸ்னாய் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, அபாயகரமான உற்பத்தி வசதிகளில் தொழில்துறை பாதுகாப்புத் தேவைகளை மீறியதாக உள்ளூர் புலனாய்வு அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர்.