தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது
சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை
சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது
சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
தென் சீன கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா விமான தாங்கி
கப்பல் ஒன்றில் தரை இறங்க முற்பட்ட fc 35 ரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில் இருந்த விமானி உலங்கு வானூர்தி மூலம் காப்பாற்ற பட்டுள்ளார்
அதே கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம்
மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம்
சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க
10 நாள் அவகாசம் – கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றம்
நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர் திலீப் தற்போது விசாரணை
அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திலீப் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று 2-வது நாளாக கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திலீப் நேரில் ஆஜரானார்.
இந்த நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடையே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை போலீசார் கைது செய்தனர். நடிகை கடத்தல் தொடர்பாக சுனியுடன் திலீப் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளில் சிலர்
மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் புதிய சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்புக்கு
மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள நடிகை கடத்தல் வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?
சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அடுத்த போட்டியாளர் பற்றிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சோதனைகளை சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன்
பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும்
ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.
ஜூலி
அதன்படி நேற்று முதல் போட்டியாளராக சினேகன் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் பேசப்பட்ட ஜூலி, 2வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல இருப்பதாக புரமோ வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் ஆளும் பிரதமர் British Prime Minister Boris Johnson’s கொரனோ லொக் டவுன் காலத்தில்
நூறு பேரை அழைத்து பார்டி நடத்தினார்
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டன் மெட்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
விசாரணை முடிவில் நீதி துறை மூலம் ஆளும் பிரதமர் சிறை செல்வாரா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்
பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்
பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான
பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து
பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும்
கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் குறிப்பிட்டார்.
தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை
தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.
இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.
2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப்
புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
வழக்கில் தயாமாஸ்டர் மற்றும் அவர் சார்பாக சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
குறித்த வழக்கில் தயாமாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ
மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ
இலங்கை கோமகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 23 ஊழியர்களுக்கு பரவி வரும்
கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனால் அந்த வைத்தியசாலையில் பர பரப்பு ஏற்பட்டுள்ளதுடன் ,பணியாளர்களுக்கும் அச்சத்தில் உறைந்துள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரிப்பு வேகமாக பரவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்
இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்
இலங்கையில் திடிரென எலி காய்ச்சலினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது
கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல்
வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா
சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா
இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்
பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக
விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த
நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..
நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு
ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற
ரீதியில் இழப்பீடு தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்
ஏன் பேச மறந்தாய் ..?
ஏன் பேச மறந்தாய் ..?
உன் கொலீசு காதுக்குள்ளே
ஊளையிட்டு மகிழுதடி
உன் கொண்டை மல்லிகை
ஊர் வாசம் வீசுதடி
தேர் ஓடும் வீதியிலே
தேவதை நீ நடக்கையிலே
தெறித்தோடும் காளை எல்லாம் -உன்
தோகை கூந்தல் தொடருமடி
பாலை வன புல்வெளியில்
பா வினங்கள் மேய்ந்திடுமோ
பாவை உந்தன் பூவிதழில்
படரா வண்டு உறங்கிடுமோ
நீர் தேடும் வேர்கள் எல்லாம்
நிழல் தர மறந்திடுமோ
நிலவே உன் பேரழகை
நிழல் தழுவ அஞ்சிடுமோ
தொலை தூர நடை பிடித்து
தொலையாம வீதி வந்து
கண் முன்னே நிற்பவரே
கதை பேசா நிற்பதென்ன
காளை உந்தன் நெஞ்சுக்குள்ளே
காதலாகி நான் இருக்க
என் அருகில் வந்து நின்று
ஏன் பேச நீ மறந்தாய் ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-01-2022
பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்
பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்
ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்
சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது
அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு
அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் திடீரென அடித்து பூட்ட பட்டுள்ளது
அதிக சினோ பொழிவு இடம்பெற்று வருவதால் இந்த விமான நிலையம் தற்காலிகமாக பூட்ட பட்டுள்ளது
இதனால் பயணிகள் பெரிதும் அவதியில் சிக்கினர்
உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
உக்கிரேனில் ரஷியா படைகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
,இதனை அடுத்து நேட்டோ படைகள் மேலதிக இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன
இரு நாட்டு கூட்டு இராணுவ படைகள் அந்த நாடு, மற்றும் எல்லையில் குவிக்க பட்டுள்ளதால்
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
திரிஷாவுக்கு இது முதல்
திரிஷாவுக்கு இது முதல்
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திரிஷாவுக்கு இது முதல் முறை!
திரிஷா
சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து
வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
திரிஷா
திரிஷா
இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு
தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அந்த விமானம் அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதியில் காணாமல் போனது.
இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன விமானம்
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின.
சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், மோசமான வானிலை காரணமாக அருணாச்சலப் பிரதேச இமயமலைப்
பகுதியில் காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் ஈடுபட்டார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை, அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.
இரண்டாம் உலக போர் விமான பாகங்கள் கண்டு பிடிப்பு
அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குஹ்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இந்த பயணத்தில் குஹ்லேஸ் மற்றும் உள்ளூர்
வழிகாட்டிகள் குழுவும் இடம் பெற்றிருந்தது. இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து நிறைந்த பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய
பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குஹ்லெஸ் தெரிவித்துள்ளார்.
சிதைந்த நிலையில் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில்
பயன்படுத்தப்பட்ட விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையின் போது
பனிப்புயலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலமாக அறியப்பட்ட நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிவருகிறது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி கவுதம்?
ராஷ்மி கவுதம்
நடிகர் சாந்தனு நடித்து வெளியான கண்டேன் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார்.
ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம்
என்றனர். இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம்
செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
ராஷ்மி கவுதம்
ராஷ்மி கவுதம்
சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், அவருடைய
திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு
வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.
பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.
அந்த வேலைகளுக்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார்களாம். தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் திகதி துவங்கி 27ம் திகதி நிறைவடைய உள்ளதாம்.
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.

















