Posted in இலங்கை செய்திகள்

20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது

20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது

இலங்கையில் மகிந்த ஆட்சியின் பின்னர் பரவி வரும் போதைவஸ்து வியாபாரம் கொடி
கட்டி பறக்கிறது

இராணுவம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதலிஞ் பொழுது இருபது மில்லியன் ரூபா பெருமாதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

இந்த கடத்தலை புரிந்த ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்

    திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்

    ஈராக் நாட்டை ஆக்கிரமித்து அடாத்தாக நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளை

    இலக்கு வைத்து தொடராக இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

    அவ்விதம் இன்று Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா படைகளின்

    தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இதன் பொழுது கவச வண்டிகள் சில சேதமடைந்துள்ளன எனினும் முழுமையான தமது

    இழப்புக்களை அமெரிக்கா படைகள்தெரிவிக்கவில்லை

      Posted in Uncategorized

      கப்பல்கள்,விமானங்கள் மூலம் தாக்கும் புதிய ஏவுகணைகளை வெளியிட்ட ஈரான்

      கப்பல்கள்,விமானங்கள் மூலம் தாக்கும் புதிய ஏவுகணைகளை வெளியிட்ட ஈரான்

      ஈரான் பாதுகாப்பபு அமைச்சு புதிதாக மேம்படுத்த பட்ட ஏவுகணையினை வெளியிட்டுள்ளது

      இந்த ஏவுகணையானது ,விமானம்,கப்பல்,உளவு விமானங்கள் ,மற்றும் உலங்கு வானூர்தி மூலம் செலுத்தும் புதிய வடிவமைப்புடன் தயாரிக்க பட்டுள்ளது

      இவை நெடுந்தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்க பட்டுள்ளது

      கடந்த தினம் புதிய இரண்டு போர் விமானங்களை அறிமுக படுத்திய ஈரான் தற்போது

      ஏவுகணையை வெளியிட்டு வைத்துள்ளது எதிரி நாடுகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை

        வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை

        ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் பிற கோள்களை ஆராய்ச்சி செய்தனர்.

        வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்
        வேற்று கிரகவாசி


        விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட்

        படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.

        இந்நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர்.

        இதன் முடிவில், ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

        இதுகுறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறப்பட்டுள்ளதாவது:-

        விண்வெளியில், வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நட்சத்திரங்கள், பிற கோள்களில் இருந்து எந்த அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை.

        இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

          Posted in Uncategorized

          உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

          உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

          நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும்.

          உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

          உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

          லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

          “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

          இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காது.

          பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.

          உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ

          நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ்நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

          நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு

          உள்ள கோள் இருக்கும் மண்டலம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார்.

            Posted in Uncategorized

            பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

            பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

            பலராலும் அதிகம் பார்க்கப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

            பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?
            பிக்பாஸ் அல்டிமேட்

            ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். அதன்படி சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா,

            பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

            பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர்

            வெளியேற்றப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இதே நடைமுறையை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பின்பற்றப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த

            வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் சுஜா

            வருணி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

              Posted in சினிமா

              ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

              ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

              ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

              ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
              ஷில்பா ஷெட்டி


              பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில்

              விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா

              என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின்

              குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி

              சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

              இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

              நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச

              வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                இனிய அகவை வாழ்த்துக்கள் ..!

                இனிய அகவை வாழ்த்துக்கள் ..!

                நெஞ்சுக்கு நேர் நின்ற பேரழகன் – இவன்
                நேசத்தில் எனை குழைத்த பெரும் முதல்வன்
                அன்புக்குள் அறம் வைத்த அவையழகன்
                ஆண்டுகள் பல்லாண்டு தொடர்கின்றவன்

                இல்லத்தில் எனை யழைத்து உணவழித்தவன்
                இதயத்தில் எனக்கோர் இடம் வைத்தவன்
                பழகிய நட்பில் முதலானவன்
                பகை வந்த போதிலும் விலகாதவன்

                உயிரிலும் மேலான உறவானவன்
                உறவுக்குள் உறவாகி உலர்கின்றவன்
                இள வேனில் காலத்தில் தொடரானவன்
                இன்றென்ன வியப்பு நெஞ்சில் இருக்கின்றவன்

                முருக தாசு முனை யானவன்
                முன் அள்ளி உதவிடும் திறனானவன்
                மூப்பிலும் நீ இன்று அழகானவன்
                முன் விழி வீச்சு ஒளியானவன்

                இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகிறேன்
                இன்று போல் வாழ்ந்திட போற்றுகிறேன்
                உன் போல உறவொன்றை காணவில்லை
                உயிராகி வாழ்கிறாய் பேதமில்லை …!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் 13-02-2022

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                  வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                  இலங்கை பெயர்வைலை பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை முற்றி கொலையில் முடிந்துள்ளது

                  வெட்டி கொலை செய்ய பட்ட நபர் அதே வீட்டுக்குள் வைத்து எரியூட்ட பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  கொலை செயலில் ஈடுபட்டவர் கைது செய்ய பட்டுள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    12 இந்திய மீனவர்கள் – கைது

                    12 இந்திய மீனவர்கள் – கைது

                    இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற

                    குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    கைதானவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      வன்னியில் குடிக்கு அடிமையாகும் இளசுகள்

                      வன்னியில் குடிக்கு அடிமையாகும் இளசுகள்

                      கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறுவர்கள் இள வயதினர் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நிலமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.

                      அதாவது 21 வயதிற்கு உட்பட்ட வயதினரை உடையவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனை மற்றும் மது பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர்.

                      கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகள் மற்றும் சட்டவிரோத மணல்

                      அகழ்வுகளுக்கு சிறுவர்களைப் பயன் படுத்துதல் போன்ற காரணங்களால் சிறுவர்கள் மற்றும் இள வயதினர் மட்டத்தினை மதுப்பழக்கத்திற்கு உட்படுத்துவதற்கான சூழலாக

                      காணப்படுவதனாலும் இவ்வாறு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை கானப்படுகின்றது.

                      இதனைவிட வெளிமாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுதல் போன்ற செயற்பாடுகள் காணப்படுகின்றன.

                      அதாவது கிளிநொச்சி பாரதிபுரம் மற்றும் கிளிநொச்சி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்;பட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

                      இதனைவிட சட்டவிரோத கசிப்பு விற்பனைகளுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

                      குறிப்பிட்ட சில குடும்பங்கள் தங்களின் குடும்ப வருமானத்திற்காக சிறுவர்;களை பயன்படுத்தியும் குறித்த குடும்பங்களும் சட்டவிரோத மதுபானம் மற்றும்

                      போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டுவருவதானது சிறுவர்கள் மற்றும் இள வயதினரை போதைப்பொருள் மதுபாவனை புகைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு துண்டுகின்றன.

                      எனவே இவற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் தான் இவற்றை தடுக்க முடியும் என சமுக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கிளிநொசியில் கட்டு யானைகள் அட்டகாசம்

                        கிளிநொசியில் கட்டு யானைகள் அட்டகாசம்

                        கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன.

                        கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான தென்னை மற்றும் ஏனைய பயன்தரு மரங்களை அழித்துள்ளன.

                        கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை காணப்பட்டாலும் கண்ணகை புரம் கிராமத்தில் காட்டு யானைகள் பாதிப்பு இல்லாத நிலை காணப்பட்டது

                        இந்த நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் இவ்வாறு பெருமளவான பயன்தரு மரங்களை அழித்துள்ளன.

                        இவ்வாறு காட்டு யானைகளின் தாக்கத்துக்கு உள்ளாகியமை தொடர்பில் கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

                        குறிப்பாக அக்கராயன் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதிகளுக்கான யானை வேலிகளை அமைக்கின்ற போது இந்தப் பிரதேசங்களில் காட்டு யானைகளை

                        கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          50 அடி பள்ளத்தில் விழுந்த லொறி

                          வத்துகாமம் – எல்கடுவ வீதியில் லொறி ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

                          நேற்று (12) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 32 வயதுடைய ஒருவர்

                          உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வத்துகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

                          இதில், லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்

                            தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்

                            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

                            இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

                            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

                            இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு”

                            கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள்,

                            விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

                            வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர்.

                            அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

                            வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி

                            அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

                            தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட

                            ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக

                            மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                            நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த

                            ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

                            பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத்

                            தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                            கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச்

                            சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

                            உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி

                            அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

                            “உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும்

                            வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

                            பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு

                            பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

                            அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன,

                            பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

                            Posted in Uncategorized

                            பெரும் புயல் வெள்ளம் – 120 பேர் மரணம்

                            பெரும் புயல் வெள்ளம் – 120 பேர் மரணம்

                            Madagascar நாட்டை உலுக்கிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 120 பேர்

                            பலியாகியுள்ளனர் ,மேலும் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்

                            பலநூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்

                            தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            இதுவறை 30 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சுயாதீன தகவல்கள்

                            தெரிவித்துள்ளன ,இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in உளவு செய்திகள்

                              உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

                              உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

                              உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன

                              இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்

                              விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்

                              உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன

                              சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று

                              நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in Uncategorized

                              லண்டனில் 4 கடைகளில் திருடிய பெண்ணுக்கு சிறை

                              லண்டனில் 4 கடைகளில் திருடிய பெண்ணுக்கு சிறை

                              லண்டனில் கடந்த டிசம்பர் மதம் Canterbury பகுதியில் உள்ள Asda, Aldi, Sainsbury’s and M&S


                              கடைகளில் திருடிய முப்பது வயதுடைய பெண் ஒருவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளது

                              இவர் ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக நிரூபிக்க

                              பட்ட நிலையில் இந்த சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                ஈரானிய இராணுவத்தில் புதிய 2 உளவு விமானங்கள் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

                                ஈரானிய இராணுவத்தில் புதிய 2 உளவு விமானங்கள் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

                                ஈரானிய இராணுவத்தில் புதிதாக தயாரிக்க பட்ட இரண்டு உளவு விமானங்கள்

                                இணைக்க பட்டுள்ளது


                                இந்த விமானத்தின் அதி உச்ச தொழில் நுடட்பமானது அமெரிக்கா இராணுவத்தின்

                                உளவு விமானங்களுக்கு மேலானது என தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in மருத்துவம்

                                  பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                                  பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                                  தாய்ப் பாலூட்டும் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

                                  தாய்ப் பாலூட்டும் அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் ப்ரெக்ஸ்டிக் என குறிப்பிடுகிறார்கள்.

                                  இது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்ப் பாலூட்டும் அலைபேசி தொலைக்காட்சி பார்ப்பதால் உண்டாகும் முக்கியமான ஐந்து எதிர்விளைவுகளை பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

                                  அலைபேசி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பாலூட்டுவதால் தாய்க்கும் குழந்தைக்குமான பார்வை தொடர்பு தடைப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் உணர்வும் ஒன்றாமல் போகிறது.

                                  தாயின் அலட்சியம் கவனம் வேறு பக்கம் இருப்பதை பால்பருகும் போது குழந்தையால் உணர முடியும்.

                                  எனவே அந்த நேரத்தில் குழந்தையும் பால் பருகும் போது கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும்.

                                  இந்த பாலூட்டும் தாய்களின் செயல்பாடு குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கும் என்பது ஸ்டில் பேஸ் என்ஸ்பீரிமெண்ட் எனும் உளவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

                                  தாயின் கவனம் அலைபேசி தொலைக்காட்சியில் சிதறடிக்கப்படுவதால் லாட்சிங் டெக்னிக் எனும் குழந்தைகக்கு தேவையான அளவு பாலூட்டுதல் குழந்தைகக்கு வசதியான முறையில் பாலூட்டும் போன்றவை கவனிக்கப்படாமல் சரியான அளவு தாய்ப்பால் சரியான முறையில் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

                                  குழந்தைகள் வளர்ச்சி பங்கு சந்தை போல தொடக்க நிலையில் இருப்பதால் அலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றின் கதிர்வீச்சுகள் அவர்களின் டி.என்.ஏ.உருவாக்கம் அதிகம் பாதிப்பதாக கண்டிறியப்பட்டுள்ளது.

                                  எனவே பாலூட்டும் போது மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் இவை குழந்தைகளின் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

                                  பாலூட்டும் போது அலட்சியம் வேண்டாம்

                                  தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி, தொலைக்காட்சியின் கவனம் செலுத்துவதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கத்தவறுகிறீர்கள்.

                                  இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியின் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் பாலூட்டும் போது உங்கள் கவனத்துக்கு வராமல் அலட்சியமாக வேண்டாம்

                                  பிள்ளை பெற்ற தாய்மார்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் செய்யும் அலட்சியகரமான செயல்பாடுகள் சிறுவர்களை பாதிக்கும்

                                  இதனை பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தின் வாழ்வுக்கு சிறந்தது

                                  இருக்கும் போது நல்ல விடயங்களை சிந்தித்தால் புள்ளிகள் வாழ்வு செழிப்பாகும் .

                                    Posted in சினிமா

                                    திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி

                                    திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி

                                    நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

                                    திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி
                                    பிரேம்ஜி


                                    பிரபல இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில்

                                    நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

                                    இவருக்கும், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உட்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ள வினய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள

                                    முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதை நடிகர் பிரேம்ஜி அமரன் மறுத்துள்ளார்.

                                    பிரேம்ஜி

                                    இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை. இருந்திருந்தால் 10 வருடத்துக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன். என் வாழ்வில்

                                    திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.