பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா தேஷ்பாண்டே 96 ஜானுவாக களம் இறங்கியிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
96 ஜானுவாக களம் இறங்கிய பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதன்பின் பிக் பாஸ் சீசன் 5
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் கலந்து கொண்ட பிரியங்கா அவரின் தனித்துவத்தால் இப்போட்டியில் இரண்டாம் இடத்தை
பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் தொகுபாளினியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா
திரிஷா – பிரியங்கா தேஷ்பாண்டே
இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 96 படத்தில் இடம்பெறும் திரிஷாவின் ஜானு
கதாப்பாத்திரத்தை போன்று உடை அணிந்து பதிவிட்டிருக்கிறார். இப்புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த
திரிஷா அவருக்கு பதிலளிக்கும் வகையில் “ஹா ஹா லவ்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து ராணிக்கு கொரனோ
இங்கிலாந்து ராணிக்கு கொரனோ
பிரிட்டன் ராணி எலிசபெத் கொரோனா நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயின் தாக்குதலை அடுத்து வருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது ,இவரது கணவர் பிலிப் இறந்துள்ள பொழுதும் அவரது
சடலம் மெழுகில் வைத்து பாதுகாக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் கடந்த மூன்று திணைகளாகி அதிக புயல் வீசிய வண்னம் உள்ளது ,இதனால் வரலாறு காணாத பேரழிவை பிரிட்டன் சந்தித்துள்ளது
தற்போது அதிவேக நெடுஞ்சாலையும் முக்கிய நுழைவாயிலாக அமைய பெறும் Dartford Bridge தற்போது அடித்து பூட்ட பட்டுள்ளது
கால நிலை மீள் நிலைக்கு திரும்பியதும் இதன் ஊடான போக்குவரத்துக்கு அனுமதிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இந்த புயல் லொறிகளை கூட கவிழ்த்தமை குறிப்பிட தக்கது
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
கள்ள கணவருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தூ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடபுஸ்ஸலாவை நகரில் நேற்று (19) மாலை ஏழு கடைகள் தீபிடித்து முற்றாக எரிந்துள்ளதாக.உடபுஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பல வருடகாலமாக இந்த கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததாகவும், இவ் இடம் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபைக்கு சொந்தமான இடத்தில், இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குறித்த இடத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என
அறிவித்தல் விடுக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றி முட்கம்பி வேலிகளையும் பிரதேச சபை அமைத்திருந்தது.
எனினும் இதனையும் மீறி, தற்காலிக கடைகளை அமைத்து தமது நாளாந்த வர்த்தகத்தை குறித்த கடைகளின் உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்ததுடன்,
முறையான மின்சார இணைப்பையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த இக்கடைகள் நேற்று (19) மாலை திடீரென தீப்பற்றி எறிந்து முற்றாக எறிந்து நாசமாகியுள்ளதுடன், பாரிய
நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை உடபுஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
.காங்கேயனோடையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காங்கேயனோடை வாவிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை 13யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43வயதுடைய உதுமாலெவ்வை முகம்மட் இல்பான் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவம் இடம் பெற்ற இடத்தினை பார்வையிட்டார்.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியாசலைக்கு சென்று அங்கு உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனைகளை மேற் கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரான காங்கேயனோடையைச் சேர்ந்த கையூம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் எனவும் அன்மையிலேயே இவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ள சிறுவனின் பெற்றோர், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் பொலிஸ்
நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற அலைபேசிக்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நோய் பரவல் -சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
.நோய் பரவல் – சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாகவும், 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அத்தோடு அதில் நான்கு போர் மரணத்தை தழுவியிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த டெங்கு நோயின் பரம்பலில்
முக்கிய விடயமாக காணப்படுவது டெங்கு நுளம்பை அழித்தல் என்னும் விடையத்தில் நாங்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதெனவும், அதிலும் குறிப்பாக
மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டொங்கு நோயாளர்களை இனங்கண்டிருப்பதால், முக்கியமாக நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் செயற்பாட்டை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருப்பதாக
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.
மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி
மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.”
-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் எனப் பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன்போது வன்னிப் பிரதேசத்துக்கு வந்து பல சேவைகளைச் செய்துள்ளேன். 2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.
ஜனாதிபதியாக இருந்தபோது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்றுதான் பார்க்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளைப் பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்குச் சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்துக்குத் தேவையான பெருட்களுக்குத் தட்டுபாடு இருக்கவில்லை. வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கின்றார்கள். விவசாயிகளுக்காகப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். உங்களிடத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சினை இருக்கின்றது. மின்சாரத் தடை ஏற்படுகின்றது. பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்குச் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாகச் செல்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம்.
எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்குக் கொடுத்துள்ளோம். இந்த அரசின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தட்டிக் கேட்கப் பின்னிற்கமாட்டோம்.
உங்களுக்கு உள்ள சகல பிரச்சினைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் கட்சி, அரசு என்ற வகையில் நாங்கள் சந்தோஷமடைய முடியும். மக்களுடன் பேசும்போது அவர்கள் பல கவலைகளைக் கூறுகின்றார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சினையாக இருக்கின்றது. கஷ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புப் பிரச்சினை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை” – என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
இதயமதை தந்து விடு..!
இதயமதை தந்து விடு..!
உன் நினைவை எடை போட்டு
ஒரு போதும் விற்கேண்டி
என் அன்பை நீ பறித்து
எறிந்து போக வேணாண்டி
சுற்று மதில் கட்டி வைத்து
சுற்றம் வீடு காப்பது போல்
ஆடையில் உனை மறைத்து
அழகு மயில் போவதெங்கே
புத்தகத்துள் மயிலிறகை
பூட்டி வைத்து காத்தது போல்
பூவே நெஞ்சுக்குள்ளே
பூட்டி வைத்து பார்கிறேண்டி
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் அலையில் விட்டேண்டி
கரை வந்து சேரலையோ
கண்மணிக்கு கிடைக்கலையா
ஐந்து விரல் பந்தியிலே – உனை
அப்படியே பதிந்தது
அதையெடுத்து அதையெடுத்து
அப்படியே ஒத்தி விடு
இமை மூடா இன்றுவரை
இளங் குயிலே உறங்குகிறேன்
இன்றாவது வந்தெனக்கு
இதயமதை தந்து விடு
தத்தளித்து தத்தளித்து
தண்ணீரில் தவிக்கின்ற
கப்பலாக ஆகிவிட்டேன்
கரையேற்றி விட்டு விடு
வாடகைக்கு வீடெடுத்து
வாசலிலே காத்திருக்கேன்
வாடாமல் எனை மணக்க
வாசலுக்கு வந்து விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-02-2022
உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்
உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்
மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று
வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் Luhansk, பகுதியைக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் ஏற்பட்ட
சேத விபரங்கள் பலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து ரசியா திடீர் முற்றுகை தாக்குதலை நடத்தி உகிரேனை தனது காட்டு
பாட்டுக்குள் கொண்டு வரலாம் அல்லது தனது பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு நிறுவலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆட்சி கவிழ்ப்பு அல்லது நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற
நடவடிக்கையில் ரசியா ஈடு படும் என்றே எதிர் பார்க்க படுகிறது
ஒரே குளம் … ஒரே சுடுகாடு … என கொண்டு வாருங்கள்” – சீமான்
ஒரே குளம் … ஒரே சுடுகாடு … என கொண்டு வாருங்கள்” – சீமான்
உங்களுக்கு இதுக்கு தில் இருக்கா..?” செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த சீமான்
உங்களுக்கு இதுக்கு தில் இருக்கா..?” செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த சீமான்
ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
.ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
ஏவுகணை சோதனை
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
போர் பயிற்சி
இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷியா கூறி உள்ளது.
எதிரிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் படைகளின் செயல்திறனை முழுமையாக வெளிப்படுத்துவதே இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் என ராணுவ தளபதி வாலரி தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புதினிடம் தெரிவித்தார். ரஷிய அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் புதின், இந்த பயிற்சிகளை பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்… இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில்அரிப்பு ஏற்படுவது சகஜம்.
தொடர்ந்து சுரக்கும் வெள்ளைப்படுதல் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.
வெள்ளைப்படுதல் கேடு
எல்லா சமயங்களிலும் வெள்ளைப்படுதல் கேடு விளைவிப்பது அல்ல. சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் அடையாளம் அது.
பொதுவாக மருத்துவர்கள் வெள்ளைப்படுதல் திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கின்றனர். இயற்கையாக எல்லாப்
பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது
என்றாலும், வெள்ளைப்படுதலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறினாலோ அது லீயுகோர்ஹியா என்னும் வெள்ளைபடுதல் நோயின் அறிகுறியாகும்.
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:
1.நெல்லிப் பொடி
இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.
2.வெண்டைக்காய்
இந்நோயை குணமாக்க வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற
விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
3.நன்கு கனிந்த வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு
மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் வெள்ளைப்படுதல் அதற்கான பலனை உணர்வீர்கள்.
4.கொத்தமல்லி விதைகள்
வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும்.
காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.
5.இளநீர்
தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.
6.அதிமதுரம் பொடி
ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வைத்தியம்
பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.
7.படிகாரம் மற்றும் தயிர் களிம்பு
இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி
தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி
ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.
8.சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி
ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு
ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்
திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு
திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு
பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமணதிற்கு நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
ஒப்பனை செய்து திருமணத்திற்கு கொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண
பெண்களின் திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும்.
திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
- உணவில் கவனம் தேவை:
பெண்கள் கவனத்திற்கு விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின்
உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பெண்கள் அவசியம்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.
- உறக்கம் முக்கியம்:
உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் பெண்களுக்கு அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் கொள்ள தயாராகும் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.
திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு
இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, பெண் களுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
- உடற்பயிற்சி அவசியம்:
தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் பெண்கள் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்க தயாராகும் . முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.
- மனநலன் பேணுதல்:
உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்ற்கு மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் பெண்கள் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில்பெண்கள் கவனத்திற்கு மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால்
அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.
முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு
கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை
ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டாராம்.
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில்
நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.
இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின்
இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்













