ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் பணி புரிந்து வந்த இலங்கையை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்
,சம்பவ தினம் அன்று இரண்டு சிங்களவர்களும் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த
பொழுது வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பாத சாரிகள் மீது மோதியது
இதன் போது சம்பவ இடத்தில இருவரும் பலியாகினர் ,குறித்த விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்று கலாய்த்த நெட்டிசன்களுக்கு நெத்தியடி கொடுக்கும் படி பதிலளிக்கப்பட்டுள்ளது.
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
விஜய்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை
சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
இன்சூரன்ஸ்
அவர் பயணித்து வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை அதில் தான் விஜய் வாக்களிக்க வந்தார் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு
பதிலளிக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
மணமக்களை வாழ்த்திய ரஜினி
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர்
அன்புசெழியனின் இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு
, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், வைபவ், சுப்பு பஞ்சு, அம்மா சிவா, மனோபாலா
, மயில்சாமி, இயக்குனர்கள் லிங்குசாமி, சுசிகணேசன், சரண், ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
கமல்
மேலும் அரசியல் பிரமுகர்களான தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி.தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, விவி.ராஜன் செல்லப்பா, R B
உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எல்.கே.சுதீஷ், ஆகியோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
ஈரான் நாட்டின் அரசஇராணுவத்தின் விமனம ஒன்று திடீரென Tabriz பகுதியில் உள்ள
பாடசாலை ஒன்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த விமானத்தை
செலுத்தி சென்ற இரு விமானிகள் மற்றும் அதே பகுதியில் வசித்த இருவர் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் கனமழை புயல் காரணமாக பிரிட்டன்
தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது ,தற்போது லண்டன் கென்ட்
பகுதியில் உள்ள சில கிராம பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் போலந்து
உக்கிரேன் எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்
சுமார் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினருடன் இந்த முகாம் அமைக்க பட்டு வருகிறது
இதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் இந்த முகம் நிறுவ பட்டு வருகிறது
உக்கிரேன் வீழ்ச்சி அடைந்தால் போலந்தை இலகுவாக ரசியா படைகள் ஆக்கிரமித்து
விடும் என்ற நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச இராணுவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
அமெரிக்கா suburban Denver பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் உள்ள கட்டடம்
ஒன்றுக்குள் இருந்து இறந்த நிலையில் ஐந்து பேரது சடலம் மீட்க பட்டுள்ளது
இந்த அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த இவர்கள் போதைவஸ்துக்கு
அடிமையானவர்கள் என தெருவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
உக்கிரேன் மீதான தாக்குதலை நடத்திட சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரசியா
துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதா மேற்குலக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்
பைடன் உடனான பேச்சுவராத்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் பலத்த
ஏமாற்றத்தை தமக்கு அளித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ள நிலையில் வரும்
நாட்களில் அதிரடி இராணுவ தாக்குதலுக்கு ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் ரஷியா எல்லையில் சர்வதேச இராணுவத்தினர் குவிக்க பட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளனர்
ரசியாவின் தாக்குதலை உக்கிரன் கூட்டு படைகள் தடுத்து நிறுத்துமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட மருத்துவ கழிவுகளை ஏற்றிய
கொண்டனர் மீளவும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்தில் வைக்க பட்டிருந்த இந்த கொண்டர்களில் 45 மீள பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
ஐந்தே கொண்டர்களில் மக்களின் உடல் பாகங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்க
பட்டு சர்ச்சை எழுந்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில்
உக்கிரேனில் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அறிவித்துள்ளது
மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர
அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறு வேண்ட பட்டுள்ளது
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
முற்று பெற்ற காதல் ..!
முற்று பெற்ற காதல் ..!
உன்னை தினம் பாட
உள்ளம் தினம் ஏங்கும்
உன்னை கண்டு விட்டால் – விழி
ஊரில் ஏறி ஆடும்
கன்னம் இரண்டில் நுள்ள
காதல் விரல்கள் துடிக்கும்
கன்னம் இரண்டும் சிவக்க – உன்
கைகள் அடிக்க பிடிக்கும்
மெல்ல வந்து பேச
மெல்ல உதடு துடிக்கும்
மெலிந்து மேனி துடிக்க
மெல்ல தானே பிடிக்கும்
சின்ன உதடு ஆடி
சிரித்து பேச இரசிக்கும்
சீலை கூந்தல் ஆடி
சீண்ட உடலும் சிலிர்க்கும்
வட்டம் போட்டு ஆடும்
வண்டு விழி பிடிக்கும்
வளைந்து நெளிந்து குழையும்
வலது கையும் பிடிக்கும்
பக்கம் வந்து அமர்ந்தால் -ஆசை
பற்றி தீயாய் எரியும்
படித்து பார்க்க முனைந்தால்
பக்கம் பலது திறக்கும்
முற்று பெற்ற மோகம்
முடிந்து போனால் வெட்கும்
முள்ளாய் முளைத்த கீறல்
முறைத்து பார்த்து பேசும்
திட்டம் போட்டு நடித்த
திட்ட வரைபு பிடித்தது
தீண்டி பார்த்த காதல்
தின்ன தின்ன இனித்தது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-02-2022
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்
விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் (ட்ரோன்) தண்டனைக்குறிய குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான
நடவடிக்கைகளுக்கும் (ட்ரோன்) சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில்
ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட
ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும்,
அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும்
வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில்
யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.
அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம்,
சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்” – என்றார்
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில்
ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று
(20)ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பதாக யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,
கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர்
விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் வரலாறு காணாத பெரும் புயல் வீசிய வண்ணம் உள்ளதால் தொடர்ந்து பேரழிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த புயலின் கோரத்தில் சிக்கி வீடுகள் ,மரங்கள் ,கடைகள் என்பன பாதிக்க
பட்டுள்ளன ,மேலும் அதிக மழை வீழ்ச்சியால் வெள்ள பேருக்கும் ஏற்பட்டுள்ளது

கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
அமெரிக்கா மியாமி கடல் ப்குதிக்கு மேலாக பறந்த்து கொண்டிருந்த உலங்குவானூர்தி ஒன்று திடிரென கடலுக்குள் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர்
இதில் இருவர் காப்பற்ற பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .,இருவரும் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கிழக்கு உக்கிரேன் எல்லையில் பதட்டம் – தாக்குதல் எப்போதும் வெடிக்கலாம்
கிழக்கு உக்கிரேன் எல்லையில் பதட்டம் – தாக்குதல் எப்போதும் வெடிக்கலாம்
கிழக்கு உக்கிரேன் பகுதியில் ரசியா படைகள் குவிக்க பட்டுள்ளதாழும் ,அந்த பகுதி வழியாக முதலாவது உள்
நுழையும் தாக்குதலை ரஷியா படைகள் தொடுக்கலாம் என்ற நிலையியல்அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது
ஒரு லட்சத்திற்கு மேலான இராணுவத்தை ரஷியா குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளது
எதிர்வரும் வாரம் ரசியா அதிரடி தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேனில் வயாதான மக்கள் கூட அவசர ஆயுத பயிற்சியை பெற்ற வண்ணம் உள்ளனர்
நேட்டோ ,அமெரிக்கா முப்படைகளும் ரசியாவை தாக்கிட தயார் நிலையில் உள்ளனர்



















