கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் வீடு அருகே மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோபத்தில் கூடிய மக்கள் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரை கடுமையாக தாக்கினர்
இதில் இருபது இராணுவத்தினர் உள்ளிட்ட 37 பேர் படுகாயமடைந்த நிலையில்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கோட்டா வீடு முன் பேரூந்துக்கு தீ வைத்தவர் இவர்தானாம்
மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு (31) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது.
போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர், சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.
போராட்டகாரர்களில் ஒருவரே பஸ்ஸூக்கு தீ வைத்தார் என்றும் கூறப்பட்டது. எனினும், போராட்டத்தை குழப்பி திசைதிருப்பவே பஸ்ஸூக்கு தீ வைக்கப்பட்டது என்றும்
சூழ்ச்சிகாரர்களே இவ்வாறு செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது.
எனினும், பஸ்ஸின் பின் டயருக்கு தீ மூட்டும் ஒருவர் தொடர்பில் புகைப்படம் வெளியாகியுள்ளது..
உக்கிரேன் தலைநகர் ரசியாவிடம் விழும் உக்கிர சண்டை தொடர்கிறது
உக்கிரேன் தலைநகர் ரசியாவிடம் விழும் உக்கிர சண்டை தொடர்கிறது
உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவத்தினர் அகோர இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த அகோர தாக்குதலின் பின்னர் அந்த நகரம் வீழ்ச்சியடையும் நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலைக்கு சென்றுள்ளதை உணர்ந்த அண்டைய நாடுகள் தமது பாதுகாப்பை பல படுத்திய வண்ணம் உள்ளன
காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
உக்கிரேன்மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அந்த போரானது ஐரோப்பா
எங்கும் பரவும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இதனால் தற்போது ரசியா தனது எரிவாயு ஏற்றுமதியை தடை செய்துள்ளது ,இதனால்
ஐரோப்பா பலமாக பாதிக்க பட்டுள்ளதுடன் அதன் விலை அதிகரித்து செல்கிறது
இந்த விலை அதிகரிப்பல் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்
மக்கள் போராட்டங்கள் வெடித்து ஆட்சி கவிழ்க்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்
கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் மக்களின் ஆக்கிரோச போராட்டம் அதிவேகமாக நாடெங்கும் பரவி வரும் நிலையிலும் ,அமைச்சர்கள் வீடுகளும் முற்றுகையிட பட்டு வருவதாலும்
ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது
அதற்கான முற்றுகை போர் பெரும் வீச்சாக படர்ந்து வருகிறது ,இவ்வேளை இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு மக்கள் கிளர்ச்சியை எழவைத்து தமது ஆட்சிக்கு எதிராக
திருப்பியவர்களை கொலை செய்திடும் நிலைக்கு கோட்டா செல்ல கூடும் என எதிர் பாரக்கலாம்
அடுத்து அரசியல் படு கொலைகள் ஊடக நபர்கள் கடத்தல் அல்லது கொலை செய்ய படுதல் போன்ற செயல் பாடுகள் நடத்த படும்
இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்த சிவில் உடையிலும் அனுப்ப படுவார்கள் என எதிர் பார்க்கலாம்
விரைவில் கோட்டா மீது பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் ஊடாக ஆட்சி கவிழிப்பிற்கு எதிர்க் கட்சி செல்ல கூடும் என்பது நிலவரமாகிறது
தனிப்பெரும் பான்மை மக்களின் ஆதரவுடன் வென்றதாக ஏப்பம் இட்ட கோட்டாவுக்குஅதே மக்கள் அடித்து விரட்டும் காலம் உருவாகும் என நாம் அப்போதே தெரிவித்து இருந்தோம் ,அவை இப்பொது நிதர்சனமாகிறது
கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவில் மிதந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தில் இரண்டாவது இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் அமர்ந்தார்
இவரது ஆட்சி அமர்வின் பின்னர் தன் பக்கம் புகழையும் அரசியல் கட்சிகளையுமிணைத்து வைத்திருந்த மகிந்த ராஜபக்சே அரசியல் பலம் பறிபோகும் நிலைக்கு தள்ள பட்டது
சிங்கள பவுத்த இனவெறியை கிளறி தமிழ் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு மகிழ்ந்து உலவிய மகிந்த ராஜபக்சே இன்று கண்ணீரில் குளிக்கும் நிலைக்கு அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே களத்தை உருவாக்கி மகிந்த ராஜ்பக்சவிடம் கையளித்தார்
அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி உயர்பு பெற்றவர் ,அண்ணனிடம் ஆசி வாங்கி அரியணையில் அமர்ந்த கோத்தபாய ராஜபக்சே இன்று அதே அண்ணாவை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியும் நிலைக்கு தள்ள பட்டார்
இது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளக சண்டைகளை ஏற்படுத்தியுள்ளது
காலம் அநீதிகளை தட்டி கேட்கும் என்பதற்கு ,அதர்ம வாதிகளிற்கு இதுவொரு சிறந்த பாடமாக வரலாறு எழுத பட்டுள்ளது .
- வன்னி மைந்தன் –
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் எழுந்த
பணவீக்கத்தை அடுத்து ஒரு அமெரிக்கா டொலரின் பெறுமதி 275 ரூபாவக வீழ்ச்சியடைந்துள்ளது
மேலும் இந்த பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
ஆளும் ஆட்சி மாற்ற பட்டால் மட்டுமே நாட்டினை இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடு வரமுடியும் என எதிர் பார்க்க படுகிறது
இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு
இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு
இலங்கை Mirihana. பகுதியில் இராணுவத்தினரின் பேரூந்து மற்றும் ஜீப் ஒன்று
ஆர்ப்பாட்ட காரர்களினால் தீ வைத்து எரியூடடட பட்டுள்ளது ,அரச மாற்றும் , அரச இராணுவ வாகனங்கள் இலக்கு வைத்து எரியூட்ட பட்டு வருகிறது
இதனால் நாடு எங்கும் பதட்டத்தில் உள்ளது

கொழும்பு நகரில் ஊரடங்கு – போலீசார் இராணுவம் குவிப்பு
கொழும்பு நகரில் ஊரடங்கு – போலீசார் இராணுவம் குவிப்பு
ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டங்கள் வெடித்து வருகிறது
இதனால் கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
தற்போது Colombo North, South, Colombo Central and Nugegoda பகுதிகளில் இந்த ஊரடங்கு அமூல் அப்டுத்த பட்டுள்ளது
கோட்டா வீடு முற்றுகை – இராணுவ வாகனம் தீக்கிரை
கோட்டா வீடு முற்றுகை – இரன்டுவ வாகனம் தீக்கிரை
கோட்டா பாய வசிக்கும் நுகேகொடை – மிரிஹான வீதியில் , ஆயிரகணக்கில் மக்கள் கூடினர் ,இதனால்
இராணுவம் பலத்த பாதுகாப்பு போட பட்ட நிலையில் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றது
இதில் இராணுவ வாகனம் தீக்கிரையாக்க பட்டது
மேலும் கோட்ட பாய வீடுமுற்றுகையான நிலையில் பதட்டம் தொடர்கிறது
நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது ,நாடு ரணகளமாக மாறியுள்ளது
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில
மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும்
பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:
ஊட்டச்சத்துள்ள உணவு:
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்
ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள
வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.
உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
மருத்துவ ஆலோசனை:
கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் சர்க்கரை அதனால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான மருத்துவ ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க
வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.
சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்.
உடற்பயிற்சி கட்டாயம்:
கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை
கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5
நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா
நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலருக்கு காத்திருக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் படக்குழுவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா.. வைரலாகும் புகைப்படம்
பீஸ்ட் – விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த
திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி
ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவின் மூலம் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ”நாங்களும்
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலர்க்கு வெயிட்டிங் நண்பா” என்று பதிவிட்டு விஜய் மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
நடிகை பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியை கலைத்ததாக புகாரில் நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரள குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது.
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
காவ்யா மாதவன்
கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
கடந்த 2 நாட்களாக நடிகர் திலீப்பிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் 2-வது மனைவியும், பிரபல
நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக
போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
பிரதமர் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவு
பிரதமர் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவு
இலங்கை பிரதமர் மகிந்தவின் அலுவல்களை கவனிக்கும் ஊழியர்கள்
யாவரும் வீட்டில் இருந்த படி வேலை பார்க்கும் படி மகிந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்
எரிபொருளை மீத படுத்தும் நோக்குடன் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
நாடு போற போக்கை பாரு கந்தசாமி
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றி எரியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க
வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே பசில் அவ்வாறு கூறினார் என்றார்.
பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்
திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய
தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை
இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள்
பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கி (sanitizer) காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருவித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன்
உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்
ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்
என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.
பெண்கள் கொண்டம் வாங்கினால் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன்.
அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.
பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஒரு சிலரிடம் ஆதரவையும், பலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில்
ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். இதையடுத்து அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அக்ஷரா ஹாசன், ”இங்க பாலியல் உணர்வை பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முடியாது,
நாங்களும் மனிதர்கள் தான். என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள்.
ஒழுங்காக உடலுறவு நடக்கிறது. அதில் என்ன பிரச்னை?” எனக் கேட்டுள்ளார்.
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளார் எனவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி – நாடு மூடப்படும் அபாயம்
சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை
முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம்
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கத்திகள் எழுகிறது …!
கத்திகள் எழுகிறது …!
வன்னி மைந்தன் கவிதைகள்
திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்
பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்
இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்
ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்
கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022









