கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

Spread the love

கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் மக்களின் ஆக்கிரோச போராட்டம் அதிவேகமாக நாடெங்கும் பரவி வரும் நிலையிலும் ,அமைச்சர்கள் வீடுகளும் முற்றுகையிட பட்டு வருவதாலும்
ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது

அதற்கான முற்றுகை போர் பெரும் வீச்சாக படர்ந்து வருகிறது ,இவ்வேளை இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு மக்கள் கிளர்ச்சியை எழவைத்து தமது ஆட்சிக்கு எதிராக

திருப்பியவர்களை கொலை செய்திடும் நிலைக்கு கோட்டா செல்ல கூடும் என எதிர் பாரக்கலாம்

அடுத்து அரசியல் படு கொலைகள் ஊடக நபர்கள் கடத்தல் அல்லது கொலை செய்ய படுதல் போன்ற செயல் பாடுகள் நடத்த படும்

இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்த சிவில் உடையிலும் அனுப்ப படுவார்கள் என எதிர் பார்க்கலாம்

விரைவில் கோட்டா மீது பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் ஊடாக ஆட்சி கவிழிப்பிற்கு எதிர்க் கட்சி செல்ல கூடும் என்பது நிலவரமாகிறது

தனிப்பெரும் பான்மை மக்களின் ஆதரவுடன் வென்றதாக ஏப்பம் இட்ட கோட்டாவுக்குஅதே மக்கள் அடித்து விரட்டும் காலம் உருவாகும் என நாம் அப்போதே தெரிவித்து இருந்தோம் ,அவை இப்பொது நிதர்சனமாகிறது

கோட்டா கவிழும் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவில் மிதந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தில் இரண்டாவது இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் அமர்ந்தார்

இவரது ஆட்சி அமர்வின் பின்னர் தன் பக்கம் புகழையும் அரசியல் கட்சிகளையுமிணைத்து வைத்திருந்த மகிந்த ராஜபக்சே அரசியல் பலம் பறிபோகும் நிலைக்கு தள்ள பட்டது

சிங்கள பவுத்த இனவெறியை கிளறி தமிழ் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு மகிழ்ந்து உலவிய மகிந்த ராஜபக்சே இன்று கண்ணீரில் குளிக்கும் நிலைக்கு அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே களத்தை உருவாக்கி மகிந்த ராஜ்பக்சவிடம் கையளித்தார்

அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி உயர்பு பெற்றவர் ,அண்ணனிடம் ஆசி வாங்கி அரியணையில் அமர்ந்த கோத்தபாய ராஜபக்சே இன்று அதே அண்ணாவை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியும் நிலைக்கு தள்ள பட்டார்

இது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளக சண்டைகளை ஏற்படுத்தியுள்ளது

காலம் அநீதிகளை தட்டி கேட்கும் என்பதற்கு ,அதர்ம வாதிகளிற்கு இதுவொரு சிறந்த பாடமாக வரலாறு எழுத பட்டுள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply