லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டன் Bristol Airport பகுதியில் தரை இறங்கிய பயணிகள் விமானம் ஒன்று ஒன்று ,அதிக காற்றில் இழுத்து செல்ல பட்டு தப்பிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

விமானியின் சாதூரியத்தால் விமானம் பயணிகளுடன் தப்பித்து கொண்டது .

விமானம் குறித்த விமான நிலையத்தில் தரை இறங்கும் காட்சிகள் மிக பெரும் பர வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் சமீப நாட்களாக கடும் மழை, மற்றும் காற்று வீசி வரும் நிலையில், இந்த விமானம் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்
Posted in உலக செய்திகள்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா இராணுவத்தின்விமானம் ஒன்று உக்கிரேன் கிழக்கு  Bakhmut  பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அந்த விமானத்தில் பயணித்த ரசியா இராணுவத்தினர் யாவரும் பலியாகியுள்ளதாக உக்கிரன் அறிவித்துள்ளது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தும் காட்சிகளை உக்கிரேன் இராணுவம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

எனினும் இது தொடர்பாக ரசியா இராணுவம் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்
Posted in உலக செய்திகள்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

நையீரியாவில் பண்ணை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆண் பெண்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர் .

இவ்வாறு கடத்தி செல்ல பட்டவர்களை ,விடுதலை செய்திட பல மில்லியன் பணத்தை கப்பமாக தரும் படி ,அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அவ்விதம் தரமறுத்தால் இவர்கள் யாவரும் சுட்டு கொலை செய்யப்படுவார்கள் என ,கடத்தல் காரர்கள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் .

தமது உறவுகளை பறி கொடுத்த பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர் .மேற்படி கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லத்தம்பி செல்வகுமார்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video செல்லத்தம்பி செல்வகுமார் 31 ஆம் நாள் நினைவு பகிர்வு இரங்கல் கவிதை துயர் தந்து ஏன் மறைந்தாய்.video

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

https://www.youtube.com/watch?v=L2uq4ZdNoAc
பிரிட்டன் வாங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கியானது கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு ,தற்பொழுது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .

பிரிட்டன் வங்கியானது திடீரென வட்டி வீதத்தை அதிகரித்த நிலையில் ,வீட்டு கடன் முதல் சாதாரண கடன் வரையிலான வட்டி வீதங்கள், அதிகரிக்க பட்டுள்ளன .

இதனால் பயனாளர்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .

உக்கிரேன் ரசியா மோதலை அடுத்து, பொருதாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ,இந்த உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Posted in உலக செய்திகள்

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .

இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .

பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ரசியா புதியா சாட்லைட்டை ஏவியது
Posted in உலக செய்திகள்

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது .இந்த சாட்லைட் இராணுவ தரவுகளை வழங்கும் நோக்குடன் ரசியா ஏவியுள்ளது .

இதன் ஊடாக உக்கிரேனில் நடந்து வரும் போருக்கு, இந்த சாட்லைட் பெரும் உதவியாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது.

உக்கிரேன் ரசிய போரானது தொடர்ந்து வரும் நிலையில் ,
ரசியா இந்த இராணுவ சாட்லைட்டை ஏவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
Posted in இலங்கை செய்திகள்

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்

துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள்
மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.

உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர்
உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
Posted in இலங்கை செய்திகள்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை.

இந்த பாதிப்புக்கு அனோனிச்சியா காங்கினிடா என்று பெயர். இது மிகவும் அரிய வகை நோயாகும். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் கூறுகையில்,

“அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.


ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்” என்று கூறுகிறது.

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட
மாணவிகளுக்கு காப்போம் நிறுவனம் நிதியுதவி வழங்கி வைப்பு!

அபு அலா –

தந்தையிழந்து மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று யாழ்.
பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட முள்ளிவாய்கால் –
உடையார்கட்டு பிரதேசத்தைச் இரு மாணவிகளின் உயர்படிப்பை கஷ்டமின்றி
தொடர்வதற்கு இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளது.

இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்
கு.பிரதீப்கரன் (திலீப்) உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்கால் – உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள சு . சங்கவி மற்றும் த. கிந்துஜா என்ற இரு மாணவிகளின் இல்லம்தேடிச் சென்று தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் முதற்கட்டமாக இந்த நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பிரதி அதிபர் கு.சுதாகரன்,
வடகிழக்கு கலைப்பிரிவு மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் த.
யதுர்சனன் மற்றும் காப்போம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

.யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.

தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின்

பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட
வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடர்பெய்து வரும் மழையால் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா- டெஸ்போட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடான டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

என்னோடு வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

கவிதைக்குள் உன்னை நான் வரைய வா – என்
கனவுக்குள் என்றும் நீ மலர வா
இதயத்தை என்றும் திறக்க வா – என்
இதயத்தில் என்றும் இருக்க வா

உனக்காக என்றும் நான் வாடவோ – உன்
உயிரோடு என்றும் நான் கூடவோ
பிறந்தாயே நீ தானே எனக்காக – இந்த
பிரளயத்தை பிளக்க வா துணையாக ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-11-2022

https://www.youtube.com/watch?v=1sOvAMCME48
ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியாவின் Veretye air force base பகுதியில் தரித்து நின்ற நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மீது நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில், இரண்டு சம்பவ இடத்தில எரிந்து அழிந்துள்ளதுடன் ,மேலும் இரண்டு பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் ,பெரும் சேதங்களை தமது இராணுவம் ஏற்படுத்தியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரேன் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா நாட்டுக்குள்ளும் ,உக்கிரேன் தொடர்ந்து வருகிறது .

தொடரும் முடிவில்லா போரினால், ரசியா ,உக்கிரேன் இரு தரப்பிற்கும், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து - கொதிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா இருதரப்பு து புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர் .

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ,ஆயுத மற்றும் பொருளாதார வர்த்தகம் ,செழிப்புற்று விளங்கும் ஒப்பந்தமாக இவை உள்ளன .

உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,ரசியா ஈரானுடன் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தான் தலைநகர் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

மேலும்பலர் படு காயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் தலைநகர் பகுதியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி தலிபான்கள் ஆட்சி அமைத்தான் பின்னர் பலநூறு பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது

இலங்கைக்கு அமெரிக்கா அரசு பாரிய கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது .

அவ்விதமான அன்பளிப்பு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது .

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றிருந்த விசேட குழுவினர் குறித்த கப்பலை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர் .

பல நாட்களின் பயணத்தின் பின்னர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி

கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு

தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.