பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்

5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்

இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது தன்னகத்தே வைத்திருப்பது முற்றாகத்
தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No posts found.
அரிசி இறக்குமதி செய்திட தடை
Posted in இலங்கை செய்திகள்

அரிசி இறக்குமதி செய்திட தடை

அரிசி இறக்குமதி செய்திட தடை

இலங்கைக்கு கப்பல்கள் மூலம் அரசி இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது .

பாஸ்மதி அரிசி மட்டும் இறக்குமதி செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

இந்த கட்டுப்பாடுகள் வியாபரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

No posts found.
பாராளுமன்றத்தில் பதற்றம் - சபாநாயகரின் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று (13) கவலை மற்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாக்கப்பட்டமை பாரிய விடயமாகும். கல்வித்துறை பாரிய நெருக்கடியை நோக்கி செல்கிறது. வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றதில்லை. சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல்கலைகழங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் நம்ப முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் பேராசிரியர் ஒருவர் அழுத்தத்திற்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளாகவில்லை.

அத்துல சேனாரத்ன என்பவர் இந்த நாட்டின் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புவியியல் நிபுணர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் நாட்டில் நிபுணர்கள் நிச்சயம் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். இவர் அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். இது குறித்து நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் இருந்தது. தற்போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் மத்தியில் அது மோதலாக மாறி வருகிறது. நாட்டில் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் நாட்டில் இவ்வாறான மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன:

பேராதெனிய பல்கலைகழகத்தின் உபவேந்தர் அவரது புதல்வர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பக்க சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தார்.

வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இது அல்ல. வன்முறை காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டென்லி விஜயசுந்தர கொல்லப்பட்டார்.

நாட்டின் பல்கலைக்கழகங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் அச்சம் பீதியின்றி செயற்பட முடியாது என்றால் அது கேள்வி குறியாகும். நாட்டில் பொது சட்டமுறை பல்கலைக்கழகங்களிலும் சட்டமாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல் கட்சி, நிறம், பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் போதை பொருள் பரவுவதை தடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணி நியமிப்பதற்காக பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல

இந்த சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. சம்பவத்தை அனுமதிப்பதில்லை. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு அமைதி சூழ்நிலை இருக்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் முறைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இவ்வாறு ஒன்றிணைந்திருந்தால்

இந்த பிரச்சினையை தடுத்திருக்க முடியும். எனது வீட்டை தாக்கினர். எனக்கு தற்போது வீடு இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா

இவ்வாறான சம்பவங்களை நாம் தினமும் காண்கின்றோம். இருப்பினும் இது உச்சக்கட்டமாகும். பல்கலைக்கழகங்கள் வரி மூலம் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் இந்த வரி மூலமே கல்வி கற்கின்றனர். இன்று உலகில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் இவ்வாறான கேலிக்குரிய வன்முறைகள் இல்லை. இம்முறை இதனை பெரும் சிந்தனையுடன் அறிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாரிய வன்முறைக்கு இடமளிக்கக் கூடிய நிலைமையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சமான் பிரிய ஹேரத்

நாம் செய்வது என்னவெனில் சம்பவம் குறித்து கவலை தெரிவிப்பது மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிடப்பட்டன.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எமது விகாரையின் பிக்குவை கண்ணத்தில் அறைந்துள்ளார். இன்று நாடு இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டி.பி ஹேரத்

இது மனித உரிமை மீறலாகும். புத்தி கூர்மை மிக்கவர்களை உருவாக்கும் இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான சம்பவங்களுக்கு கவலை தெரிவித்து நிறுத்த முடியாது. நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமை உண்டு. இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொதுவான நிலை தெரிகின்றது. இந்த சீரழிக்கும் சம்பவத்தை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த images 2விசாரணை பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு உரிமை உண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உயிர் இழக்கப்பட்டது. சொத்துக்கள் இழக்கப்பட்டன. இதேபோன்று இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.

இது குறித்து விரிவான பிரச்சாரத்தை வழங்குங்கள். சில விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது நீங்கள் தலையிட்டு செயல்படுத்துங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச

இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே ஏற்பட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் முற்போக்கு இடதுசாரி முன்னணி கட்சியும் பொறுப்பு கூறவேண்டும். பேராசிரியருக்கு எதிராக செயல்பட்ட மாணவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க

நாம் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்கின்றோம். சம்பவம் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு நான் கோருகின்றேன்.

இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர். 2 விதமான பேச்சு தேவையில்லை. சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வீடுகளை சேதப்படுத்துவதற்கு தூண்டியவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் இருந்தனர். சில பேராசிரியர்கள் சில பேராசிரியர்களின் வீடுகளில் தீ வைக்க சென்றனர். இன்று அப்பாவி பல்கலைக்கழகமாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

பல நிறுவனங்களை அரச பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அஞ்சுகின்றனர். இதனாலே தனியார் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்கின்றனர்.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நானும் கூறுகின்றேன்.மாணவர்களுக்கு ஜஸ் போதைப் பொருளை கொடுத்து அவர்களின் மனநிலையை மாற்றியுள்ளனர். சிலபேராசிரியர்கள் அடியுங்கள் உதையுங்கள் கொல்லுங்கள் என்று பேசுகின்றனர்.

கெளரவ சபாநாயகர் அவர்களே. இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கைது செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறுவார்கள். மே 9 இச்சம்பவம் குறித்து கூறும்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டாக்டர் பேராசிரியர்களின் நடத்தை பற்றி நான் முன்பு பேசினேன்.

அந்த பேச்சு முடிந்ததும் ஃபேஸ்புக்கில் கண்டனத்திற்குள்ளானேன். நான் மனசாட்சியுள்ள ஒரு பேச்சாளன். வீடுகளுக்கு தீ வைக்க குழந்தைகளை தூண்ட அரசியல் பின்னணி கொண்ட ஒரு குறிப்பிட்ட குழு இருந்தது. எல்லோரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குழு சில காலமாக குடும்ப வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளது. இல்லை என்று சொல்ல முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க:

இந்த சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி, முற்போக்கு சோசலிச முன்னணி பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனர்.

சதோச வில் 5 பொருட்கள் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சதோச வில் 5 பொருட்கள் விலை குறைப்பு

சதோச வில் 5 பொருட்கள் விலை குறைப்பு

சதோச’ 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக புதிய விலைகள் இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

விலை குறைப்புக்கு அமைவாக ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுமை மா ஒரு கிலோ 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 250 ரூபாவாகும்.

ஒரு கிலோ பூண்டு அல்லது உள்ளி 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 190 ரூபாவாகும்

உள்ளூர் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபா.

No posts found.
உன்னை எப்படி மறப்போம் ..! தோழனுக்காய் தோள் கொடுத்த தோழா தோழமையை நான் இழந்தேன் மேலா ஆளுமையாய் உள்ளவனே நீயே - என் ஆயுள்வரை இருப்பாய் நீ தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே எந்த நொடியும் ஏறிவந்து பேசி நிற்பாயே ஏற்றம் தரும் வணிகத்துறை காட்டி நின்றாயே செல்லும் இடல் எல்லாம் - உன் தடம் பாதிப்பாயே சொல்லும் மொழியில் உன்னை அவர் அணைக்க வைப்பாயே கண்ணுக்குள்ளே உன் நினைவை கட்டி வைத்தாயே காலம் எல்லாம் அழுத்திடத்தான் கண்ணை வைத்தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே...! வன்னி மைந்தன் ( ஜெகன் ) ஆக்கம் 13-12-2022 உன்னை எப்படி மறப்போம்
Posted in கவிதைகள்

உன்னை எப்படி மறப்போம் ..!

தோழனுக்காய் தோள் கொடுத்த தோழா
தோழமையை நான் இழந்தேன் மேலா
ஆளுமையாய் உள்ளவனே நீயே – என்
ஆயுள்வரை இருப்பாய் நீ தாயே

உந்தன் இறப்பை என்னால் இன்று
ஏற்க முடியல
உள்ளம் தந்து அணைத்து நின்றாய்
மறக்க முடியல

எந்த நொடியும் ஏறிவந்து
பேசி நிற்பாயே
ஏற்றம் தரும் வணிகத்துறை
காட்டி நின்றாயே

செல்லும் இடல் எல்லாம் – உன்
தடம் பதிப்பாயே
சொல்லும் மொழியில் உன்னை
அவர் அணைக்க வைப்பாயே

கண்ணுக்குள்ளே உன் நினைவை
கட்டி வைத்தாயே
காலம் எல்லாம் அழுத்திடத்தான்
கண்ணை வைத்தாயே

உந்தன் இறப்பை என்னால் இன்று
ஏற்க முடியல
உள்ளம் தந்து அணைத்து நின்றாய்
மறக்க முடியல…!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 13-12-2022

அன்பு நண்பர் அல்பிரட் அண்ணை
அவர் மரண துயர் அறிந்த பொழுது
கண்கலங்கி வடித்த என் உள்ளக்குமுறல் .

https://www.youtube.com/watch?v=Hf0CzA5Ooe8
அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
Posted in சமையல் cook

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி


நம்ம வீடுகளில் அவசர நேரத்தில் காய்கறிகள் இல்லாத நேரத்தில ,இது போன்ற உணவுகளை உடனடியாக செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த கிரேவி செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்டாக என்ன .?


வாங்க கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
இந்த கிரேவி செய்திட முதல்ல அடுப்பில கடாய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்க .

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

அப்புறமா இரண்டு பிரிஞ்சி இலை ,ஏலக்காய் ,கராம்பு ,பட்டை ,ஒரு கருப்பு ஏலக்காய் ,ஒரு கரண்டி சீரகம் ,மீளக்கு சேர்த்து வதக்கி கொள்ளுங்க .


அதன் பின்னர் வெட்டி வைத்த ஒருகிலோ தக்காளி சேர்த்திருங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்திடுங்க.

இரண்டு கரண்டி எள்ளு ,முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி ,சேர்த்து வதக்கி வாங்க .இப்போ அடுப்பை நிறுத்தி ,ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .இப்போ இதில கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்திடுங்க .

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

இப்போ கடாய் சூடாக்கி அதில இரண்டு கரண்டி நெய் ,எண்ணெய் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,சீராக தூள் ,கரம் மசாலா ,மூணு கரண்டி மிளகாய் தூள் ,நான்கு கரண்டி மல்லி தூள் ,பெருங்காய தூள் ,கஸ்தூரி மேவி .சேர்க்க கலந்திருங்க.

நன்றாக சூடாக்கி வதங்கிய பின்னர் ,அரைத்து வைத்தவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .
மூடி போட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைத்திடுங்க .

இப்போ கிரேவி ரெடியாகிடிச்சு ,இதை போத்தலில் அடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் .

அவ்வளவு தானாக வேலை .

ஆயுத கடல்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஈரான் Kordestan மாகாணத்தில் எல்லை வழியாக நடத்தப்பட்ட பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

இந்த கடத்தலில் கை துப்பாக்கிகள் ,சொட்கண்கள்,மற்றும் ரொக்கட் செலுத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .

இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

தீவிரவாத குழுக்களுக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த ஆயுத கடத்தல் இடம்பெற்றதாக ,ஈரானிய படைத்துறை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ஈரான் எல்லைவழியாக பெருமளவு ஆயுதங்கள் ,போதைவஸ்துக்கள் கடத்த பட்ட வண்ணமுள்ளன .

இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்

பிரிட்டனில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக ஸ்கொட்லாந் Shetland பகுதியில் உள்ள ,தீவு ஒன்றில் மக்கள் மின்சாரம் இன்றி அவதி படுகின்றன .

இங்கு மைனஸ் 11 க்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது .

மின்சாரம் தூண்டிக்க பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது .

இயல்பு நிலைக்கு மின்சாரத்தை எடுத்து செல்லும் பணிகள் துரித படுத்த பட்டுள்ளன .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை

அவுஸ்ரேலியா குயின்லாநாத் பகுதியில் ஆயுத தரிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இரு காவல்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

பலியானவர்களில் ஒரு கான்ஸ்டபிள் தர அதிகாரியும் உள்ளடங்குகிறார் .மேலும் இரு காவல்துறை சிப்பாய்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

தாக்குதல் சநதேக தாரிகள் என கருத படும் இருவர் உள்ளிட்ட மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருத படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தபபி ஓட்டம் - தேடும் இண்டர்போல்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய சாரதி கைது

விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய சாரதி கைது

இலங்கை கொள்ளுப்பட்டி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதி கைது செய்யப்பட்டுளளார் .

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார் .,

விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடியாமை ,கொலை முயற்சி போன்ற குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .
குறிப்பிட தக்கது.

No posts found.
வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்

வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து பொதி வந்துள்ளது பெற்று கொள்ளுங்கள் என கோரி தொலைபேசி உரையாடல்கள் நடத்த படுகிறது .

வெளிநாட்டில் தமக்கு எவரும் இல்லாதவர்கள் இடத்தில் இருந்து பொதி வந்துள்ளதை நம்பி ,தமது ஆளடையாளத்தை வழங்கி விடுகின்றனர் .

அவ்வளவு தான் அவர்கள் இவர்கள் விபரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர் .

இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ள நிலையியல் ,காவல்துறையில் ,இது தொடர்பாக முறையிட புதிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளனர் .

No posts found.
இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு

ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் தமிழ் கட்சிகள் யாருடனும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் .
இந்த சந்திப்பில் தமிழர்கள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்படவுள்ளது .

தமிழ் மக்களை மறந்து தமது பைகளை நிரப்பும் நோக்குடன் செயல்படும் தமிழ் காட்சிகளை ,ரணில் சந்தித்து பேசுவது ,கண்துடைப்பு நாடகம் என நோக்க படுகிறது .

No posts found.
தவறி வீழ்ந்த தாலிக்கொடி - ஒப்படைத்த கடைக்காரர்
Posted in இலங்கை செய்திகள்

தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்

தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்துக்கு சனிக்கிழமை(10) முள்ளியவளையில் இருந்து கேக் வாங்க வந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி தவறி வீழ்ந்துள்ளது.

இதை எடுத்த வெதுப்பக உரிமையாளர், இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தவறி வீழ்ந்த தாலிக்கொடி – ஒப்படைத்த கடைக்காரர்

தொலைத்தவர் தேடிவரும் வரை, அதைப் பத்திரமாக வைத்திருக்குமாறு வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ள நிலையில், தாலிக்கொடியைத் தொலைத்தவர்கள் வெதுப்பகத்துக்கு வருகைதந்த போது,

வணிகர் சங்க தலைவர் முன்னிலையில் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, வெதுப்பக உரிமையாளரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெதுப்பகத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான தாலிக்கொடி தங்களுக்கு மீளவும் கிடைத்ததையிட்டு வெதுப்பக உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் குறித்த குடும்பத்தினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.

No posts found.
150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை

சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை

இலங்கை பொரளை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் இடம்பெற்று வந்த சிறுநீரக மோசடி தொடர்பில் .10 பேரிடம் விசாரணைகள் இடம்பெறுகிறது .

காவல்துறையினருக்கு கிளைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,நடத்த பட்ட விசாரணையில் ,இந்த மருத்துவமனையின் மோசடி அமபலமாகியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதால் ,குறித்த மருத்துவமனை முற்றாக அடித்து மூட படும் அபாயம் எழுந்துள்ளதுடன் ,
மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்

அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்

அமெரிக்காவின் மிக முக்கிய சண்டை விமானமாக விளங்கும் B-2 Spirit அவசரமாக தரை இறக்கம் மேற்கொண்டது .
இந்த தரை இறக்கத்தில் விமானத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது .

தமது B-2 Spirit விமானம் அவசர தரை இரக்கத்தை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்கா விமான படை ,அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை .

இரண்டு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது அமெரிக்கா போர் விமான ,தரை இறக்கமாக இதுவாக பதிவாகியுள்ளது .


எதிரிகளின் நாசகார சாதியின் காரணமாக ,விமான இயந்திரத்தில் கோளாறு
ஏற்பட்டு இவ்விதம் தரை இறக்க பட்டதா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்
Posted in உலக செய்திகள்

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

அருணாசல பகுதியில் Tawang எல்லையில் சீனா இந்திய இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர் .


சீனா இந்தியா இராணுவத்தினர் தடிகள் மற்றும் போத்தல்கள் கொண்டு சண்டை பிடித்துள்ளனர் .


இந்த கைசண்டையில் இரு தரப்பிலும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர் .


சீனா இராணுவத்தினர் 300 பேர் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முனைந்துள்ளனர் .


இவர்களை கண்ணுற்ற இந்தியா இராணுவத்தின் 80 சிப்பாய்கள் விரைந்து சென்றுள்ளனர் .


இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல்களில் ,இந்த தடியடி சண்டை இடம்பெற்றுள்ளது .


இரு தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என ,சீனா மற்றும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .


குறித்த பகுதி தற்போது பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாற்றம் பெற்று வருகிறது .


விரைவில் இந்தியா இராணுவத்தை,சீனா இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்

உக்கிரேன் நாட்டின் எல்லை அருகே பெலரூஸ் இராணுவத்தினர் தமது இராணுவம் ,மற்றும் ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றனர் .

ரசியாவிடம் இணைந்து உக்கிரேனில் மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,
பெலரூஸ் இராணுவம் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது .

அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

ரசியா ஜனாதிபதி பெலரூஸ் ஆட்சியாளருடன் நடத்திய இரு தரப்பு பேச்சுக்களை அடுத்து இந்த இராணுவ நடவடிகைநகர்த்த படுகின்றமை குறிப்பிட தக்கது .

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி
Posted in உலக செய்திகள்

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி

ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் நான்காவது நாளில் ,இரண்டாவது மிக பெரும் கடை தொகுதி தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த தீவிபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

நான்கு நாள் இடைவெளியில் ,அதே தலைநகரில் இடம்பெற்றுள்ள இந்த தீ பரவல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ரசியாவுக்குள் நுழைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறையினர் தமது நாசகார வேலைகளை தொடராக ஆரம்பித்துள்ளனர் .

இந்த செயல்களினால் ரசியா இராணுவதலைமை குழப்பத்தில் உறைந்துள்ளது .