கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி
கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.
கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.
அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.
போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகைளை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
சீனாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி பொருட்களை பரிசோதித்தல் எள்ளிட்ட விடயங்களுக்காக , சீன அரசாங்கத்தின் சுங்க
பகுதிக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் இந்தவியடங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
- இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு
எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும்,
மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளைப் பரிசோதித்தல்,
தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான
அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Protocol),
சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக
சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில்
கையொப்பமிடுவதற்காக
கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .
மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
கிழக்கு பாகிஸ்தானில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப் பட்ட நபர்கள் ,பல ஆயுத குழு சிப்பாய்கள் கைதாக காரணமாக விளங்கியவர்கள் என படுகிறது .
அவ்வாறான உளவுத்துறை நபர்களை,இலக்கு வைத்து ஆயுத குழு தாக்குதல் நடத்தியுள்ளது .
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் இராணுவத்தின் ரோந்து அணியை இலக்கு வைத்து, குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் சிக்கி மூன்று இராணுவத்தினர் ,மேலும் ஒரு துணை படை ஒட்டு குழு சிப்பாயும் பலியாகியுள்ளார் .
நையீரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும், உள் நாட்டு போர் காரணமாக, பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் மீளவும் மக்கள் முக கவசம் அணிந்திட வழியுறுத்த பட்டுள்ளது .
கொரோனோ நோயானது மீளவும் வேகமாக பரவி வருவதனால் ,மக்களை அதில் இருந்து காப்பாற்றவும் ,மருத்துவ மனைகளில் வேலை பளுவை குறைக்கும் நோக்குடனும் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
சீனா ஆமெரிக்காவில் பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த மக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்து வருவதாலும் ,இந்த நோயானது பரவும் நிலை ஏற்படலாம் என படுகிறது .
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..
எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இந்தியா பால்கர் பகுதியில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் ,
ஆறு ஆண்களினால் கொடூரமாக கற்பழிக்க பட்டுளளார் .
குறித்த பெண்ணை மடக்கிய கும்பம்,
வெள்ளி கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை ,
அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர் .
நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் தொடராக,
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ,
தடயங்களை சேகரித்தனர் .
இதன் பொழுது இரண்டு ஆணுறை மற்றும் ,
அவர்கள் ஆடைகள் மேலும் ,பல தடயங்கள் கண்டு பிடிக்க பட்டன .
கூட்டு பாலியல் வல்லுறவை மேற்கொண்ட ஆறு பேரும் ,
கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இந்தியாவில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்கள்;
அதிகமாக இடம்பெறுவதான புள்ளி விபரம் ,
பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .
பெண்களுக்கு எதிரான வன்முறை ,அடக்குதல் இதுவென ,
மனித உரிமை மையம் கவலையை வெளியிட்டுள்ளது .
பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
ஆறுபேருக்கும் மரண தண்டனை விதிக்க ,வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
இந்திய மும்பை பகுதியில் உள்ள அதை இல்லத்தில் தங்கி
படித்து வந்த ஐந்து சிறுவர்கள் திடீரென காணமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்கள் 13 வயது முதல் 17
வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது .
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன இவர்கள்
தொடர்பாக ,காவல்துறையில் முறையிட்டதை தொடர்நது ,
கடத்த பட்ட சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
கடத்த பட்டவர்கள் மனித, உறுப்பு திருடும் கும்பக்களுக்கு விற்க ,
பட்டு இருக்கலாம் என்பதால் பதட்டம் நிலவுகிறது .
ஆண்கள் பெண்கள் ,சிறுவர்களை கட்டத்தை கொன்று
, அவர்களது உறுப்புகளை வெட்டி எடுத்து கள்ள சந்தையில் விற்று வருகின்றனர் .
இவ்விதம் ஒரு மனித உறுப்பின் விலை 15,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய படுகிறது .
இவ்விதமாக கிட்னி மற்றும் பிற உறுப்புக்கள் இலங்கையில் இடம்பெற்று ,
அந்த கும்பல் சிறை பிடிக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .
யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நாய்களின் ,
கடிக்கு உள்ளான நிலையில் சிசு ஒன்று சடலமாக மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு சிசுவாக மீட்க பட்ட பெண் குழந்தை ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
இதன் பொழுது அந்த பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்,வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விபத்தில் தந்தை மகன் பலி
விபத்தில் தந்தை மகன் பலி
இலங்கை காட்டுவன பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த
.தந்தை மற்றும் மகன் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
சாரதியின் கட்டு பாட்டை இழந்த ஊந்துருளி மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியது .
இதன் போதே 26 வயதுடைய மகன் மற்றும் தந்தை ஆகியோர் பலியாகினர்.
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
இலங்கை யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு,
அடிமையான பெண்கள் ,அதனை தொடராக பெற்றிட ,
பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,
கண்காணிக்க பட்ட பொழுது ,இந்த இளம் பெண்கள் ஏழுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
இலங்கை இராணுவத்தின் வசம் தமிழர் தாயாக பகுதிகள்,
பறிபோன நிலையில் ,இவ்விதமான போதைப்பொருள் மற்றும் ,
பாலியல் ,குழு மோதல்கள் அதிகரித்து வருகிறது .
ஈழ தமிழ் வாலிபங்களின் சிந்தனையை திசை திருப்பி ,
கலப்பு இன கலாசாரம் மற்றும் கலப்பினத்தை உருவாக்கும் நோக்குடன் ,
இவ்வ்விதமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக,
தமிழ் சமூக ஆர்வலர்கள் ,
அவர் தம் கருத்துக்களை முன் வைத்து வருவதுடன் ,
இதுவிடயமான தமது ஆழ்ந்த கவலைகளையும் வெளியிட்டுள்ளனர் .
அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது.
அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் சுகவீனமுற்றிருந்த நிலையில், உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காமை காரணமாக நேற்று(2) உயிரிழந்துள்ளார்.
அத்துடன், வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இதற்கு மேலும் உயிர்கள் பலியாக இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில்
பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த மக்கள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை.
எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்
அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் இருந்து தப்பித்து டுபாயில் வசித்து வரும் பத்து குற்றவாளிகளை ,கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை உளவுத்துறையின், ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்கள் யாவரும் போதைவஸ்து குற்ற செயல்களுடன் ,
தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இவர்களுடன் அரசியல் வாதிகளிற்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஆகிய உயரதிகாரிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் புதுவருட சந்திப்பும்,
இவ்வாண்டின் வேலைத்திட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (02) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக கடமையாற்றிய வந்த எம்.வை.சலீம் கடந்த 31.12.2022 ஆம் திகதி ஓய்வுநிலைக்குச் சென்றதையடுத்து ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவியும் வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள்,
உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும்
ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அபு அலா
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சிரியாவில் 1057 அப்பாவி மக்கள் மிக கொடுரமாக,
சித்திரவத்தை செய்யப்பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப் பட்டவர்களில்,
251 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்களும் என ,
மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
சிரியாவில் பத்து ஆண்டுகள் கடந்து தொடரும்,
உள்நாட்டு போரில் சிக்கியே ,
இந்த அப்பாவி மக்கள் கொலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்கா இராணுவத்தின் தலைமையில் களமிறங்கிய கூட்டு படைகள் ,
சிரியாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன .
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரசியா களத்தில் உள்ளது .
இவ்வாறான சூழ் நிலையில் இந்த மக்கள்,
சிரியா அரசுக்கு எதிராகவும் ,அமெரிக்கா சார்பு கிளர்ச்சை படைகள் ,
மற்றும் துருக்கிய ஆதரவு படைகளு சார்பாக ,
செயல் பட்டார்கள் என்கின்ற குற்ற சாட்டில் கொலை செய்ய பட்டுள்ளனர் .
இங்கு அதிகம் சகோதர படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்கி
,அதன் அணு ஆயுதங்களை அதிகரிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
உத்தரவிட்டுள்ளார் .
யப்பான் ,தென்கொரியா ஆகியன புதிய ஏவுகணை தயாரிப்பில் களம் குதித்துள்ள நிலையில் ,
கொரியா பகுதியில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
இதனால் தமது ஏவுகணை தயாரிப்பை,
உடனடியாக விரைந்து ஆரம்பிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
இதனால் வடகொரியா ஆயுத உற்பத்தி மையங்களில் ,
மிக வேகமாக அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ,
புதிய ஏவுகணைகளை தயாரிக்க பட்டு வருகிறது .
இவை மேலும் கொரியாக்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆணு ஆயுதம்மூலம் எமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும்,
என நம்பும் ,வடகொரியா இந்த ஏவுகணை தயாரிப்பில் ,
தம்மை முதன்மையாக வளர்த்து வருகிறது .
இவை அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படைகளுக்கு,
பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது .
இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
இலங்கை பொரளை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் , விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலை செய்த்திட முனைந்துள்ளார் .
ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு பிள்ளைகளுக்கும், விஷம் பெருக்கி தானும் அருந்தியுள்ளார் .
எனினும் அயலவர்களினால் இவர்கள் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
இவ்வாறான நிலையில் ,ஐந்து வயது குழந்தை இறந்துள்ளது .
எட்டு வயது குழந்தை மற்றும் தயார் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
இவர்களின் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .
இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றும் கடந்த 2022 ஆண்டு 180 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் .
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடி ,குடும்ப தகராறு ,பகை ,காதல் மாற்று இதர வாழ்வியல் நிலைப்பாட்டு நெருக்கடி காரணமாக, இந்த தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன .
இவ்வாறு இறந்தவர்களில் இளம் வயதுடையவர்கள் அதிகம் எனப்படுகிது .
அதிகரித்து செல்லும் இந்த தற்கொலைகள், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி நிற்கிறது .
இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
இலங்கையில் இன்று இரவு முதல் டீசல் 15 மற்றும் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் விலை குறைப்பு செய்ய படவுள்ளன .
ஆளும் இலங்கை ரணில் அரசினால் , தொடராக அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைப்பு இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
இவை மக்களை குஷி படுத்தும் நோக்கில் ,தேர்தலை மைய படுத்தி நடத்த படுகிறது .





































