பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .
வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சுவையான பருப்பு போளி செய்முறை
பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .
நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .
கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்
இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .
இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க
இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு
ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .
அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க
ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,
அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .
இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .
கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .
செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் கோர தாண்டவத்தில் சிக்க 23 பேர் மரணம்,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
வீடுகள் ,வாகனங்கள் ,என்பன உடைந்து நாசமாகியுள்ளது .
இந்த புயலின் கோர தாண்டவம் நூறு மைல்கள் வரை பரந்து விரிந்து ,
காணப்படுவதாக, சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
பாதிக்க பட பகுதிகளில் ,மீட்பு பணிகள் மற்றும் ,
உதவும் பணிகள் என்பன ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீடுகளை ,உடமைகளை இழந்து மக்கள் சொல்லென்னா ,
துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில் மர்ம
நபர் நடத்திய திடீர் கத்தி வெட்டு மற்றும், கைக்குண்டு தாக்குதலில்
மூவர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ,
கைது செய்ய பட்டுள்ளார் .இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
இந்தியாவின் கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்கா ,
டொலர்களை, இலங்கை மத்திய வங்கி இந்தியாவுக்கு செலுத்தியுள்ளது .
333 மில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம்,
இலங்கைக்கு முதலாவது கடன் தொகையாக வழங்கியது
அவ்வாறு பெற்று கொண்ட நிதியில் , 121 மில்லியன் ,
டொலர் இந்தியாவுக்கு செலுத்த பட்டுள்ளது ,என
இலங்கை தெரிவித்துள்ளது .
கடன் மேல் கடனை வாங்கி செல்லும் இலங்கை ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலைக்கு செல்லும் அவலம்,
எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற போவதை ,இலங்கை ஆட்சியாளர்களின் நகரவுகள் கட்டியமிடுகின்றன .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் முக்கிய பிராந்தியம் ,
மழை போல ரஷ்ய இராணுவத்தினர்,
கேர்சன் பகுதியை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர் .
கேர்சன் பகுதி மீது 67 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது ,
இதன் பொழுது 301 எறிகணைகளை மழை
போல ஏவி தள்ளியது .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
இந்த குண்டு தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் ,
மற்றும் பொது இடங்கள் ,இராணுவ நிலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .
குறித்த தாக்குதலில் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
கேர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் ,
பின்வாங்கிய பின்னர் இடம்பெற்ற ,மிக பெரும் தாக்குதலாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது .
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
காதலியுடன் கடுமையாக கோபித்துக்கொண்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன், தன்னுடைய காதலியான பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள சம்பவத்தை அடுத்து அந்தக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் குடும்பத்தினருக்கு வட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப் படங்களை காதலன் அனுப்பிவைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸாரினால் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
இவ்விருவரும் பல்கலைக்கழங்களில் கல்விப்பயிலும் மாணவர்கள் ஆவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்லர் என்பதை உணர்ந்த காதலி, காதலை நிறுத்திக்கொள்வோம் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு இணங்க மறுத்த காதலின், தன்னை தொடர்ச்சியாக காதலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், அதற்கு இணங்க காதலி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், தான் ஏற்கெனவே கையடக்க தொலைபேசியில் எடுத்துவைத்திருந்த காதலியின் நிர்வாணப் படங்களை, காதலியின் வீட்டாருக்கு வட்ஸ்அப்பின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமையவே, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி, நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை இளைஞன் தலைமறைவு
14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை இளைஞன் தலைமறைவு
வவுனியா – பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிஸார் இளைஞனைக் கைது செய்யுமாறு கிராம அபிவிருத்திச் சங்கம் மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட மூன்று பெண்களின் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இந்திய பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புடலு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றுமொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 16,57,500 ரூபாய் மதிப்புள்ள நகையும், மற்றைய பெண் அணிந்திருந்த 510,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையும் திருடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இந்தியப் பெண்ணொருவரும் இந்திய ஆணும் அடங்குவதுடன் ஏனைய சந்தேக நபர்கள் புத்தளம், திகன, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 35, 55, 47, 39, 47 மற்றும் 29 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி
மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி
பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணிகள் பொலிஸார் மற்றும்
கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு
வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு
வெளிநாட்டு ஊழியர்களை பதிவு செய்யும் புதிய வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
பணியகத்தின் இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்தார்.
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா இராணுவ வாகன தொடரணி ,இழப்பினை கண்டு கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் .
ஈரானிய போராளி குழுக்கள் தாக்குதல்
ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் சிரியாவில் உள்ள அமெரிக்கா ,
இராணுவத்தை இலக்கு வைத்து ,இரண்டாவது நாளில் நடத்திய
மிக பெரும் தாக்குதலாக இது அமைந்துள்ளது .
ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு ,
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈரானுக்கு அமெரிக்கா ஏச்சரிக்கை
தமது இராணுவம் மீதான தாக்குதலுக்கு,
பதிலடி தரப்படும் எனவும் ,ஈரான் மீது மோதல் போக்கை நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை .
ஆனால் எமது மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கு உள்ளது
என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா
சிரியாவில் இருந்து எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா ஈடுபட்ட வண்ணம் உள்ளது என ,சிரியா ஈரான், தெரிவித்து வருகின்றன .
,அவ்வாறான எண்ணெய் கடத்தி சென்ற வாகன தொடரணியே,
ஈரான் போராளி குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் உக்ரைன் இராணுவத்தின்
பல்லாயிரம் விமானங்கள்.
உக்ரைன் ,இஸ்ரேல்,அமெரிக்கா ,கூட்டு பங்களிப்பில் ,இந்த தாக்குதல்
விமானங்கள் தயாரிக்க படுகின்றன .
இவர்களின் கூட்டு தாக்குதலில் இருந்து ,புடின் படைகள் தப்புமா .
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் 24 வயது வாலிபர் ஒருவரை
பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகிய வண்ணம் உள்ளது .
காட்டுக்குள் வசித்த வீடற்ற வாலிபன்
ஆளை கொல்லும் குளிருக்குள் ,காட்டுக்குள் கூடாரம் ஒன்றுக்குள் ,
காய்ச்சலுடன் தவித்த வாலிபனை
கடவுள் போல சென்று பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார் .
வேலையை இழந்ததினால் வீட்டை விட்டு வெளியேறியதாக
அந்த வாலிபன் தெரிவித்தார் .
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
இந்த காட்டுக்குள் தனிமையில் வசித்த பொழுது ,அதிக பயமாக இருந்தது
எனவும் , தான் இந்த காட்டுப்புற பகுதிக்குள் வாழ்ந்த துன்பியல் வாழ்வை ,
பிரிட்டன் ஊடகம் ஒன்று வெளி கொண்டு வந்துள்ளது .
வெளிநாட்டு குளிரை புரிந்த கொள்ளாத இலங்கையர்கள்
இலங்கை குளிரை பிரிட்டன் பனிக்கட்டி குளிருடன் ஒப்பிடும் தமிழர்களே ,கனடா ஜெர்மன் ,பிரிட்டன் குளிர் நிலையை உணர்ந்து கொண்டால் ,ஆபத்தான கடல் வழியாக காட் சட்டையுடன் கப்பலில் பயணம் செய்திட முனைய மாட்டீர்கள் .
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் ,
பயணம் புரிந்த 33 அகதிகள் மரணமான துயராகும்
செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆபத்தான கடல்வழி பயணம்
ஆபத்தான கடல்வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திர இழுவை படகுகள் மூலம் பயணிக்கின்றனர் .
அதிகளவான அகதிகள் படகுகளில் ஏற்ற பட்டு பயணம்
செய்வதால் ,கடலில் மூழ்கி இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
பலியாகி வருகின்றனர் .
கடலில் பலியான பல்லாயிரம் அகதிகள்
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ,59 அகதிகள் படகுகள் மடக்கி பட்டது .அதில் 3000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டனர் .
இத்தாலிக்கு நுழையுமநோக்குடன் இவ்ரகள் துனிசியா கடல் வழியை பயன்
படுத்தி வருவதாக துனியா நாடு அறிவித்துள்ளது .
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
இந்த ஆபத்தான கடல்வழி பயணத்தால் , இதுவரை இருபத்தி நான்கு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ள செய்திகள் , ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி நிற்கிறது .
கடலோடு காணாமல் போன உயிர்கள்
கனவுகளுடன் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வாழ்வில் ,வலிகள் சூழ்ந்து கடலோடு காணாமல் போன நிலையில் ,பலநூறு குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர் ,
இலங்கை தமிழர்களும் இவ்வாறு அடக்கம் பெறுகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
உலக செய்திகள் | சீனா தனது சர்ச்சைக்குரிய தீவு பகுதியில் புதிய வகை ஆயுதங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது .
சீனாவின் புதிய ஆயுதம்
ஆழ கடலுக்குள்ளும் கப்பல்கள் இன்றி ,பயணிக்கும் வல்லமை பொருந்திய ,டாங்கிகள் வடிவமைக்க பட்டுளள்து .
இவை கடலுக்குள்ளும் பயணிக்கும் திறன் கொண்ட வகையில் ,வடிவமைக்க பட்டுள்ளது .
இவ்வகையான யுத்த டாங்கிகள் ,சர்ச்சைக்குரிய தீவு பகுதிக்கு அருகில்
சீனா சோதனை நடத்தியுள்ளது .
சீனா ஆயுத பயன் பாடு
இவை கப்பல்கள் ,விமானங்கள் மூலம் எடுத்து சென்று
,கடலில் இறக்கி விட்டதால் கூட ,நீந்தி
சென்று இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன்கொண்டுள்ளது .
சீனா வின் இராணுவ பொறியியல் பிரிவின் ,
அபரா சாதனைகளில் ஒன்றாக,
இந்த புதிய வகை நீரூந்து டாங்கிகள் பயன் பாடு காண படுகின்றன .
எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
ரஷ்யா இராணுவத்தின் கோட்டைக்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதல் .
ஒரு கப்பல் முற்றாக எரிந்து நாசம் ,மேலும் மூன்று கப்பல்கள் சேதம் .
உக்ரைன் இராணுவம் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதல் .
ரஷ்யா உளவாளிகள் மடக்கி பிடிப்பு
இதில் அழுத்தியும் வீடியோ பார்க்கலாம்
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .
மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்| இலங்கை செய்திகள்
மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்
இலங்கை செய்திகள் |வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து
மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து நேற்று (23) காலை மன்னாரில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.
மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்| இலங்கை செய்திகள்
மேலும் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் இந்திய படகுகளை இலங்கை கடலில் கடல் தொழில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலை 10 மணி அளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள் உள்ளடங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.
காலை 10.30 மணி அளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மன்னார் வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் சென்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டனர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.
மேலும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கினர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையும் கலந்து கொண்டிருந்தார்.
மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்| இலங்கை செய்திகள்
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு மீனவர்களில் வாழ்வாதாரத்தையும், வளத்தினையும் ,வருவாயையும் பாதிக்கும் இந்திய இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி பத்திரம் வழங்குதல் தொடர்பான அமைச்சரின் கருத்து உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்தனர்.
மேலும் வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
இந்தியா செய்திகள் |எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது

































































