மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம்; பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்
மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம்; பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்
- சர்வதேச சமூகத்துக்கு மனோ தெரிவிப்பு
உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச
நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கிறேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள்
அனைவருக்கும் எனது நன்றிகள், என எதிரணி எம்பீக்கள், பன்னாட்டு தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாட்டில் எதிரணி எம்பிக்கள், இலங்கையிலிருந்து செயற்படும் அமெரிக்க, இந்திய, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்சிய, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி நாட்டு
தூதரக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடிய போது மனோ எம்பி இந்த கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கிறேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டமை தொடர்பில் இங்கே உரையாடப்பட்ட போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிற்போடப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்கள் பற்றி கேள்வி எழுப்பியமையை நான்
வரவேற்கிறேன். அதேபோல் இந்திய பிரதி தூதுவரும் தமது நாட்டின் நிரந்தர நிலைப்பாடாக மாகாணசபை தேர்தல்கள் இருக்கின்றது எனக்கூறினார்.
அதையிட்டும் மகிழ்கிறேன். உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க
வேண்டும். உள்ளூராட்சி தேர்தல்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஒன்பது மாகாணசபைகளுக்கான தேர்தலும் முக்கியம், என்பது எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
அதேபோல் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு கட்டாயமாக வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால்,
இப்போது நலிவடைந்த பிரிவினரை அடையலாம் காணும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுகின்றது. அதில் நிறைய அரசியல் கலந்துள்ளது. ஆகவே, அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய
பிரிவினராக, பெருந்தோட்ட உழைக்கும் மக்கள் உள்ளனர் என்பதை இன்று பல கணிப்பீடுகள் கூறுகின்றன. ஆகவே உங்களது உதவிகளினால் வழங்கப்படும் வறுமை நிவாரண கொடுப்பனவுகள், பெருந்தோட்ட துறைக்கு வழங்கப்படுவதை உறுதிபடுத்துங்கள்.
தீயாக பரவும் பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு
தீயாக பரவும் பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷ மற்றும் சமன் லால் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான குரல் பதிவு ஒன்று இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு…
காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 450 ரூபாவுக்கும்,
10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 100 ரூபாவுக்கும்
ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் உள்நாட்டு சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவுக்கும்
425 கிராம் ரின் மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி
வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.
உலக காச நோய் தினமான இன்று (24.03) வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.
இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி
இதன் பின்னர் காச நோயை முடிவுக்குக் கொண்டு வர முதலிடுவோம், உயிர்களைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த பேரணி இடம்பெற்றிருந்தது
இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து புதிய பேரூந்து நிலையம் ஊடாக சென்று பின்னர் ஏ9 வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதியினையடைந்து பஐார் வீதியூடாக வவுனியா மணிக்கூட்டுக்
கோபுரத்தினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது. இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார
பிரிவினர் , பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2022ம் ஆண்டு 51 காசநோயாளர்கள் இணங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் ,கைது செய்யப்படும்
அந்த நாடு மீது அணுகுண்டு வீசி அழிப்போம் என ரஷ்யா முன்னாள்
ஜனாதிபதி சூளுரைத்துள்ளார் .
இவரது இந்த கருத்து நேட்டோ கூட்டு நாடுகள் மத்தியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா ஏவுகணை கப்பல்கள் தென் சீனா கடல்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தன .
அனுமதியின்றி மேலும் தென் சீனா கடல் பகுதிக்குள் நுழைந்தால் ,அமெரிக்கா
கப்பல்களை மூழ்கடிப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
சீனாவின் இந்த மிரட்டல் மிக கடும்தொனியில் அறிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச கடல் எல்லை அருகே தென் சீனா கடல் பகுதியில்,
பிரமாண்ட செயற்கை துறைமுகம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது .
அவ்வாறு அந்த கடற்படை தளம் அமைக்க பட்டு விட்டால் ,அது சர்வதேச கடல்வழிபோக்குவரத்திற்கும் ஆபத்து என்பதால் அந்த கடற்படை தளத்திற்கு ,
அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன் அமெரிக்கா கூட்டு நாடுகள் ,
கடற்படை அத்துமீறலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் ,
உச்சம் பெற்று செல்லும் வேளையில் ,நேரடி தாக்குதல்
இடம்பெற்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்தியாவுக்கு ஆயுதம் வழங்காது ஏமாற்றிய ரஷ்யா
இந்தியாவுக்கு ஆயுதம் வழங்காது ஏமாற்றிய ரஷ்யா
இந்தியாவுக்கு இந்த வருடம் முக்கிய ஆயுதங்களை வழங்கிட ரஷ்யா
இணக்கம் தெரிவித்து இருந்தது .
ஆனால் அதனை உரிய கால அட்டவணையில் ,
ரஷ்யாவினால் வழங்க முடியவில்லை
என இந்தியா தெரிவித்துள்ளது .
உக்கிரைனில் இடம்பெற்று வரும் போர் காரணமாக ,
ஆயுத தாயுரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் ,உக்ரைன்
களமுனைக்கு நகர்த்த படுவதால் ,
ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாழுங்க முடியவில்லை என்கிறது
இந்தியா .
ரஸ்யாவின் இந்த செயல் இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
முதலை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பயின்றாற்றின் ஓரத்தில் நேற்று (22) மாலை கீரை வள்ளல் மற்றும் பொன்னாங்கண்ணி இலைக்கறி ஆகியவற்றை பறித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையாகிய இராசாப்பு சௌந்தராஜன் (வயது -62) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
குண்டுகளினால் அதிரும் உக்ரைன் ,உக்ரேன் ,முக்கிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
முன்னேறி வரும் ரஷ்யா இராணுவத்த்தை தடுத்து நிறுத்திட ,
நாள் ஒன்றுக்கு 7500 ஏவுகணைகளை வீசிய வண்ணம் ,
போரை உக்ரைன் நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளில முன்னரங்க நிலைகள் அதிர்கிறது.
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய நபர் குறித்த செய்தி ஒன்று மொரட்டுவையில் பதிவாகியிருந்தது.
கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் மன்னா கத்தியொன்றால் மற்றைய நபரை தாக்கும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
தாக்குதலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
கைகளை வெட்டி எடுத்துச் சென்றதற்கான காரணம் வௌியானது
பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும், தாக்கிய நபருக்கும், நேற்று முன்தினம், குடிபோதையில், மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் இரு கைகளையும் வெட்டி அவற்றை எடுத்துக்கொண்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சந்தேகநபர் நபரொருவரின் கைகளை துண்டித்த போதும் அது பின்னர் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டதன் காரணமாக இந்த நபரின் கைகளை வெட்டி அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கல்கிஸ்ஸ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை
முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை
முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று (23) செய்தியாளர் ஒருவரிடம் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மன்னாரில் இடம்பெற்ற எமது கட்சி கூட்டத்தில் நான் முஸ்லீம்கள் குறித்து பேசியுள்ளதாக வர்ணித்து சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. சில தரப்பினர் இவ்விடயத்தை முன்னெடுப்பதை நான் அறிகின்றேன்.
முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை
இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை மறுக்கின்றேன். கட்சியில் உள்ள உள்ளக விடயங்களை நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.
அதன் அடிப்படையில் சில குற்றச்சாட்டுக்களை அங்கு தெரிவித்து கலந்துரையாடினோம். அத்துடன் இக்கூட்டத்திற்கு எவ்வித செய்தியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
மிகவும் பொய்யான விடயங்களை திட்டமிட்டு பிரசுரித்துள்ளனர்.கல்முனை விடயத்தையும் இக்கூட்டத்தில் பேசினேன்.இதர தமிழ் முஸ்லீம் கட்சி தொடர்பிலும் இக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பில்
எமது கட்சி தலைமையிடமும் பேசவுள்ளேன்.வீணாக இவ்வாறு அவதூறு பரப்புவது ஏற்க முடியாதது.
இவ்வாறு செய்தி வதந்திகளை பரப்புவது இரு தரப்பினரை குழப்புவதுடன் பிரச்சினைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்படுகின்றது என குறிப்பிட்டார்.
அம்பாறையில் புடவைக் கடை ஒன்று தீக்கிரை
அம்பாறையில் புடவைக் கடை ஒன்று தீக்கிரை
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடை ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கடையை வழமையாக நேற்று இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொது மக்கள் அவதானித்ததை அடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து தீயணைக்கும் படை மற்றும் பொலிசார், இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேல் மாடியை கொண்ட கடை தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன் சுமார் 5 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை வருகின்றனர்..
ரஷ்ய உக்ரைன் படைகள் கடும் மோதல் 26 விமானங்கள் பலநூறு இராணுவம் பலி
ரஷ்ய உக்ரைன் படைகள் கடும் மோதல் 26 விமானங்கள் பலநூறு இராணுவம் பலி
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் ஆறு முனைகளில் கடும் தாக்குதலைகளை மேற்கொண்டன .இவற்றில் டொன்ஸ்டெக் பகுதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் ,அகோர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன .
இந்த பகுதியில் மட்டும் 400 இராணுவத்தினர் படு கொலை
செய்ய பட்டுள்ளனர் மேலும் 26 உளவு விமானங்கள்
மற்றும் தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இவற்றுடன் எம் ஐ உலங்கு வானூர்தி ஒன்று ,பீரங்கிகள் ,அமெரிக்கா தயாரிப்பு பல் குழல் ஏவுகணைகள் ,பிக்கப் வாகனங்கள் ,கவச வண்டிகள் ,படை காவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி ,தாக்குதல்களை நடத்தி வருகிறது .
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
எப்படி அனைத்து திருடர்களும் ´மோடி´ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தீர்ப்புக்கு முன்னதாக பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார்
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
. மேலும், தண்டனை விவரம் இன்றே வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி காத்திருந்தார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளாதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30 நாள்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணை பெற்ற ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டு சென்றார்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
உக்ரைன் Zaporizhzhia சபோரிசியா பகுதி மக்கள் வாழ்விடங்கள்
மீது ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலியாகியும்
,17 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்கு மாடி கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன ,
மேலும் அதே பகுதியில் மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் மக்கள்
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் கார்க்கிவ் பகுதிக்கு சென்ற ஜெலன்ஸி இராணுவ வீரர்களுக்கு
பதவி உயர்வு மற்றும் கேடயங்கள் பரிசில்களை வழங்கி கவுரவித்துள்ளார் .
அமெரிக்காவிவில் கடும் மழை புயலில் பலர் மரணம்
அமெரிக்காவிவில் கடும் மழை புயலில் பலர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் நிலவி வரும் கடும் மழை
அதனால் ஏற்பட்ட புயலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
மரம் கார்கள் மீது முறிந்து வீழ்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சிரியா மேலாக
பறந்து சென்ற பொழுது காணமல் போனது .
காணமல் போன இந்த விமானம் சிரியா எல்லை பகுதியில் ,
வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது .
எனினும் சிரியா ஆதரவு போராளி குழுக்களோ ,
குறித்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஷ்யா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது .இந்த மோதல்களில் ரஷ்ய இராணுவத்தினர் ,
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து தற்கொலை
விமானங்கள் தாக்குத்தல் நடத்தின.
விமானங்கள் அழிப்பு
இவ்வாறு தாக்குதல் நடத்திய 21 விமானங்களில் 16 சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது .
மேலும் முன்னேறிய இராணுவத்தை வழிமறித்து, தாக்குதல்
நடத்த பட்டதில் ,ஐந்து டாங்கிகள் 920 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளனர்
என உக்ரைன் தெரிவித்துள்ளது .
உக்கிர மோதல்
வழமைக்கு மாறாக ரஷ்யா கடும் வான்வழி, மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகிறது .
தொடர்ந்து உக்ரைன் முன்னரங்க பகுதிகளில் ,கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு நாட்கள் இடைவெளியில் மீளவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
தென்கொரியா அமெரிக்கா இணைந்து இராணுவ போர் பயிற்சியில்
ஈடுபட்டு வரும் வேளையில் இரண்டு நாட்களின் பின்னர், மீளவும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி ,அமெரிக்கா தென்கொரியா ஜப்பானை கொதிப்பில் உறைய வைத்துள்ளது . .
ஜப்பான் கிழக்கு கடல்
ஜப்பான் கிழக்கு கடல் பகுதியை இலக்கு வைத்து ,வடகொரியாவால் இந்த ஏவுகணை சோதனை தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தொடர்ந்து ஜப்பான் கடலை இலக்கு வைத்து ,வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது .
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
குறும் தூர ஏவுகணை
இந்த ஏவுகணையானது குறும் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என தெரிவிக்க படுகிறது .
,முழுமையான் ஏவுகணையின் பாய்ச்சல் விபரங்கள் வெளிவரவில்லை .
அமெரிக்காவுக்கு சவால்
முடிந்தால் எமது ஏவுகணையை சுட்டு வீழ்த்தி பாருங்கள் என அமெரிக்காவுக்கு சவால் விட்டு வடகொரியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிட தக்கது





































