கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி
கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.
உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவப்பு முட்டை 920 ரூபாய்
சிவப்பு முட்டை 920 ரூபாய்
சிவப்பு முட்டை 920 ரூபாய் இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு நிற முட்டை 920 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சிவப்பு முட்டை 920 ரூபாய்
அதேநேரம், வெள்ளை நிற முட்டை ஒன்று 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 46 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன
கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன
கனடா நாடு வ உக்ரைனுக்கு வழங்கிய Leopard 2 ரக யுத்த டாங்கிகள் வந்தடைந்துள்ளது .
மேற்கு போலந்து வழியாக இந்த டாங்கிகள் எடுத்து செல்ல
படுகின்ற காட்சிகள் வெளியாகி ,
உக்ரைன் வந்தடைந்து விட்டன என்பது ஆதார படுத்தின .
இதே போன்று ஜெர்மன் ,.மேலும் சில நாடுகள் அவசர ஆயுத உதவியாக
இந்த ஆயுதங்களை வழங்கியுள்ளன .
கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன
உக்ரைன் கேர்சன் பகுதிக்கு பயணித்த ,
புட்டீன் அவர்கள், புதிய தாக்குதல்களை நடத்தும் நோக்குடன்
முன் கள தயாரிப்பில் நேரடியாக இறங்கியுள்ளார் .
விரைவில் உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து,
அதிரடி தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது .
இலைதுளிர் காலம் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,
புதிய வேக தாக்குதல்களை நடத்த ரஷ்ய ,
தயாராகி வருவதை இவை காண்பிக்கின்றன .
ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது
ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது
ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியதில் 7000 உக்ரைன் இராணுவம் ரஷ்யா இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளனர் .
இந்த கைது சம்பவம் உக்கிரைன் இராணுவத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது
நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிலாஸோ மேல் பிரிவு தோட்டத்தில் பெட்ரோல் குண்டு தயாரிக்க கூடிய உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றை நானு ஓயா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நானு ஓயா பொலிஸாக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிலாஸோ தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (18) மாலை விரைந்த பொலிஸார் தனி வீடொன்றுக்கு அருகில் இருந்து இப் பொதியை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றியுள்ள பொதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்கள்,வயர்கள்,முக்கோண பட்டாசுகள் உட்பட பல பொருட்கள் அடங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிலாஸோ தோட்ட மேல் பிரிவில் தோட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு அப்பால் தனியாக வீடு ஒன்று இருக்கிறது.
நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது
இந்த வீட்டுக்கு அருகில் வாசல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக அனாதரவாக விடப்பட்ட நிலையில் பரிசு பொதிக்கு ஒட்டப்படும் காகிதத்தில் பொதி செய்யப்பட்ட பெட்டி ஒன்று இருந்துள்ளது.
இதை அருகில் உள்ள வீட்டு பையன் ஒருவன் அவதானித்து வந்துள்ளான். யாரும் இப் பெட்டியை எடுத்து செல்லாத நிலையில் சந்தேகம் கொண்ட அப் பையன் பெட்டிக்குள் என்னதான் இருக்கு என பரிசோதித்துள்ளான்.
அப்போது பெட்டியை பிரித்த போது உள்ளே திரவம் நிரப்பப்பட்ட போத்தல்கள்,
மற்றும் வயர்கள்,பட்டாசுகள் இருப்பதை அவதானித்து இது தொடர்பாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில், நானு ஓயா பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிலாஸோ தோட்டத்திற்கு விரைந்த நானு ஓயா பொலிஸார் பொதியை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தயார் நிலையில் இராணுவத்தினர்
தயார் நிலையில் இராணுவத்தினர்
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார்.
ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
ரஷ்ய ராணுவம் வழமைக்கு மாறாக உக்ரைன் கேர்சன் பகுதிமீது,
சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்க பொதுமகன் ஒருவர் பலியானார்,
மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
பலர் கால் ,மற்றும் கைகள் இந்த நிலையில் காண படுகின்றனர் .
டசின் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன .
ரஷ்யா இராணுவம் பலத்த முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட
வண்ணம் உள்ளது .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையான பக்மூட் .டொன்ஸ்டெக் பகுதிகள் மீது
சரமாரி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பக் மூட் பகுதியை முற்றாக கையக படுத்தும் வெற்றி தாக்குதலை நோக்கி
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்கினர் குழு நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளினால் உக்கிரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது
ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது
ஜப்பானில் கடலோர காவல்படை விமானம்
விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்
ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ,
இலகுரக விமானம் ஒன்று ,ஒய்டாவின் தென்மேற்கு மாகாணத்தில்
விபத்துக்குள்ளானது,.
அவ்வேளை அதில் இருந்த பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக ,
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
உசா நகரில் காலை 10:00 மணிக்கு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதாக ,
கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர் .
காட்டு பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளதால் மீட்பு ,
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளன .
இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்
இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு இறந்ததாக குறிப்பிடப்படும் சம்பவத்தில், நேற்றைய தினம் மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.
இளம் குடும்பப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிசு உயிரிழந்த நிலையில் பிரசவமானது.
சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவினால் இந்த மரணம் நிகழ்ந்ததாக சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிட்டிருந்தார்.
பிரசவ வலியை ஏற்படுத்த ஊசி செலுத்திய பின்னர், தாய் முறையாக கண்காணிக்கப்படவில்லை என்றும், கர்ப்பப்பை பாதிப்படைந்து இரத்த ஓட்டமின்றி குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர்.
கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மரண விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பருத்தித்துறை வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். பிரசவ விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது
தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது
2023 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
சூடானில் அரச இராணுக்கம் மற்றும் துணை படைகளிற்கு
இடையிலாடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை 200 பேர்
பலியாகியுள்ளனர் .மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர் .
அரசை கவிழ்த்து அதன் ஆட்சியை தாமதாக்கும் நடவடிக்கையில்
துணை படைகள் பலமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
மிக முக்கிய அரசு பகுதிகள் துணை படைகள் வசம் சென்றுள்ளது .
ஆளும் சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்கப்படலாம் என்பதால்
அங்கு மிக பெரும் பதட்டம் நிலவுகிறது .
ஐநா அமைதி காக்கும் படைகள் மீதும் தாக்குதல் நடத்த பப்பட்டுள்ளது.
இதில் சிலர் கடத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்
பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்
பாகிஸ்தானில் இடம்பெற்ற திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சம்பவம் ஏற்பட்ட பகுதியில பயணித்து கொண்டிருந்த ,
இருபது கனரக கொண்டனர் லாரிகள் வீழ்ந்து நொறுங்கின ,.
இதன் பொழுது அந்த லொறியில் இருந்த பொருட்கள் ,
மற்றும் கனரக லாரிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பாதிக்க பட்ட பகுதிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சதி செய்த பெரும் துயரம்
சதி செய்த பெரும் துயரம்
கந்தக துகள்கள் காட்சி இன்று
கண்ணீர் தருகிறதே
கதறல் ஓலம் வானை உடைக்க
கண்ணீர் கொதிக்கிறதே
உடைந்து வீழ்ந்த உக்ரைன் எண்ணி
உள்ளம் உருகிறதே
உயர்ந்த ஆட்சி சிகரம் எண்ணி
உதடு உமிழ்கிறதே
ஒன்றாய் வாழ்ந்த கூடுகள் இன்று
ஒற்றர் ஆனதென்ன
ஒருமை கூட பகைமை எகிற
ஒரு நாடு சிதைவதென்ன
எதிரி புரிந்த சதிகள் எண்ணி
ஏன் நீ கொதிக்கலையோ
ஏற்றம் கொண்ட உம்மை அழித்தான்
ஏன் அதை புரியலையோ
உலகை ஆண்ட சோவியத் ரஷ்யா
உடைந்த துயரம் என்ன
உள்ளே நுழைந்து உம்மை உதைத்தான்
உணர மறந்ததென்ன
விதிகள் வைத்து சதிகள் செய்தான்
வினை இன்று புரிகிறதா
வீழ்ந்து உடையும் உக்ரைன் மண்ணில்
விடுதலை முளைத்திடுமோ
அழுது புலம்பும் ஆயிரம் நெஞ்சுக்கு
ஆறுதல் கிடைத்திடுமோ
அகால மரணம் அதனை தடுக்க
அகிலம் ஏது செய்திடுமோ
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2023
பறந்த விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள்
சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடி 12 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இரவு வேளையில் சுழியோடியமை மற்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த 12 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 03 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி
அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி
பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. .
2018 ஆம் ஆண்டு முதல் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்ய பல தடவைகள் முயற்சித்த போதிலும், போக்குவரத்து மாபியாக்களின் செல்வாக்கு காரணமாக அந்த தீர்மானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் இம்முறை போக்குவரத்து மாஃபியாவின் செல்வாக்கிற்கு அடிபணியாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்காக போக்குவரத்து அமைச்சுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு
வடக்கு கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ் கட்சிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று (17) நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை(17) நடந்தது.
வடக்கு, கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (17)
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு
உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு
உக்ரைன் நேட்டோ நாடுகள் இணைந்து 122 மில்லி மீட்டர் ஆட்டிலறி
எறிகணைகளை தயாரிக்க இணக்கம் தெரிவிக்க பட்டுள்ளது .
ரஷ்யா இராணுவத்தினருக்கு எதிராக நாள் தோறும் ஐந்து ஆயிரம்
பீரங்கி குண்டுகளை உக்ரைன் வீசிய வண்ணம் உள்ளது .
இதனால் இதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய மிக பெரும்
நெருக்கடியில் உக்ரைன் சிக்கியுள்ளது .
உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு
இவ்வாறான நிலையில் தற்போது நேட்டோ மாற்று உக்ரைன் இணைந்து கூட்டாகஇந்த எறிகணைகளை தயாரிக்க முடிவாகியுள்ளது .
உக்ரைன் ஆயுத தயாரிப்பு விசேட குழு மற்றும் ,
நேட்டோ குழு என்பன இணைந்து இந்த ஆயுதங்களை தயாரிக்க
முடிவாகியுள்ளது .
உக்ரைன் எல்லையோரத்தில் உள்ள நாடு ஒன்றில் வைத்து ,
இந்த ஆயுதங்களை தயாரிக்க
திட்டம் தயாரிக்க பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்
அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்
அமெரிக்கா நியுயோர்க் பகுதியில் மிக இரகசியமாகி வங்கி வந்த
சீனா பொலிஸ் நிலையம் திடீரென முற்றுகையிட பட்டது .
இங்கு பணி புரிந்த இரண்டு சீனா நட்டு உளவாளிகள் கைது
செய்ய பட்டனர் .
சீனா கம்பூனிஸ் கட்சியின் ஆதரவின் பேரிலும் ,
அவர்கள் வழங்கிய கட்டளையின் கீழ்
இந்த இரகசிய காவல் நிலையம் செயல் பட்டு வந்துள்ளதாக ,
அமெரிக்கா புலனாய்வு துறை தெரிவித்துள்ளது .
துல்லியமாக பெற பட்ட தகவலை அடுத்து ,
திடீரென குறித்த பகுதியை சுற்றிவளைத்த
அமெரிக்கா உளவு துறையினர் ,அங்கு பணிபுரிந்த இரண்டு
சீனா உளவாளிகளையும் கைது செய்து சென்றனர் .



















































