இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் அனைத்து இரகசிய தளங்களும்,
ஈரான் இராணுவத்தின் நன்கு தெரியும் என ,
ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் வடமேற்கு
தலைமையகத்தின் தளபதி தெரிவித்தார்.
இராணுவ தினத்தை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய,
பிரிகேடியர் அலி ஹாஜிலோ, சியோனிச ஆட்சியுடன் ஒத்துழைப்பது,
தொடர்பாக அண்டை நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தார்.
இந்த போலி ஆட்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .
இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இராணுவ படைகள் ,
அனைத்துவிதமான அச்சுறுத்தலுக்கும் எதிராக செயல்பட
தயார் நிலையில் உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார் .
சமீப காலங்களாக ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் நேரடி யுத்தம் ஒன்று
ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து செல்கின்ற்றன .
இதன் போக்கு எவ்வேளையும் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று ,
மோதி கொள்ளும் என்ற நிலை காணப்படுவதால் ,உலகநாடுகள்
கலக்கத்தில் உறைந்துள்ள .
ரஷ்ய விமானங்களை துரத்திய ஜெர்மன் நேட்டோ
ரஷ்ய விமானங்களை துரத்திய ஜெர்மன் நேட்டோ
ரஷ்ய போர் விமானங்கள்
பின்லாந்து ,வளைகுடா, மற்றும் பால்டிக்,
கடலில் நுழைந்தன .
மூன்று ரஷ்ய விமானங்களை இடைமறித்த
ராயல் விமானப்படை மற்றும் ஜெர்மன் விமானப்படையின் ,
டைபூன் போர் விமானங்கள் கூட்டுப் பணியை மேற்கொண்டன.
நேட்டோவில் பின்லாந்து இணைந்த பின்னர் இடம் பெற்ற ஊடுருவல்
நிகழ்வாக இது பார்க்க படுகிறது .
ரஷ்ய எல்லோயோரத்தில் பலமான பாதுகாப்பு நடவடிக்கையில்
பின்லாந்து ஈடுபட்டுள்ளது .
அவ்வாறான நிலையில் ரஷ்ய
அத்துமீறல் போர் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
கோட்டாபய தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு
கோட்டாபய தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கோட்டாபய தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு
இவர் 15.04.2023 இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் 16.04.2023 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17) பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டபோது குறித்த வீரர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், கியூ ஆர். முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும்,
பேருந்துகளுக்கு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், லொரிகளுக்கு 50 லீட்டரில் இருந்து 75 லீட்டராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும்,
வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராகவும், quadric cycle 4 லீட்டரில் இருந்து 6 லீட்டராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபணம் சம்பாதிக்கும் தமிழ் tamil youtuber
அதிகபணம் சம்பாதிக்கும் தமிழ் tamil youtuber
இலங்கையில் அதிக பணம் சம்பாதிக்கும் முதலாவது youtuber ஆக இவங்க
உள்ளங்க , அவர்களில் யாழ்ப்பாண சுதன் ,கமடி மேனகா ,சந்துரு ,மக்கள் உதவி, வாய்ஸ் ஒப் அனுசன் ,ஆகியோர் முதலிடத்தில் உள்ளார்கள் .
சந்துரு மேனகா கோடிகளில் பணத்தை சம்பாதிக்கும் முதலாவது இலங்கை தமிழ் என்ற சாதனையை தக்க வைதுள்ளங்க .tamil youtuber
JAFFNA SUTHAN ,voice of anusan ,
RJ CHANDURU MENAGA COMEDY
உன்னை மறவேன்
உன்னை மறவேன்
உன் போல உறவொன்றை
உயிரே நான் காணலையே
உயிரோடு ஒட்டி விட்டாய்
உனை மறக்க முடியலையே
கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
விண்ணுக்குள்ள தேடுகிறேன்
வின் மீனை காணலையே
நொந்திருந்த வேளையிலே
நோகாமல் நீ உரைத்தாய்
பந்து போல அடித்தார் முன்
பண்பாய் நீ நடந்தாய்
இன்றுன்னை நினைத்தாலும்
இதயம் நெகிழுதடி
ஈர் விழியில் நீர் வடிய
இதயம் கனக்குதடி
நட்பாக கிடைத்தவளே
நான் உன்னை வணங்குகிறேன்
நான் வாழும் வரை
நாளெல்லாம் நீ மொழி வேண்டுகிறேன்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-04-2023
சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.
கடலுக்குள் கார் பாய்ந்த விபத்து
கடலுக்குள் கார் பாய்ந்த விபத்து
வேக கட்டுப்பாட்டை இழந்த காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையினை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாரிய விபத்து 26 வாகனங்கள் சேதம்
பாரிய விபத்து 26 வாகனங்கள் சேதம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06 விபத்துக்களால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு செல்லாமையினால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதிகள் 9 பேர் தப்பியோட்டம்
கைதிகள் 9 பேர் தப்பியோட்டம்
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 9 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிடுகின்றார்
புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு
புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாதுகாப்பு அமைச்சரும்
சீன மக்கள் குடியரசின் மாநில கவுன்சில் உறுப்பினருமான
லி ஷங்ஃபுவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார்
இந்த சந்திப்பின் போது, சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய ரஷ்ய பயணம் ,மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான,உறவுகள் இராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ந்துவருவதாகவும் புடின் கூறினார்.
சீன ரஷ்ய நாடுகளுக்கிடையேயான உறவுகள் பொருளாதாரம்,
சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்விப் பகுதிகள் மற்றும் இராணுவத் துறைகளுக்கு இடையே அனைத்து பகுதிகளிலும் நன்றாக வளர்ந்து வருகின்றன.
ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராணுவத் துறைகள் மூலம் பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்வதாகவும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் புடின் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும்
என விளாதிமீர் புதின் தெரிவித்துளளார் .
இவர்கள் சந்திப்பு அமெரிக்கா ஏமாற்றும் மேற்குலக
நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா இரகசிய ஆவணம் கசிந்த பின்னர்
இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
வசமாக சிக்கிய இஸ்ரேல் ஈரான் அதிரடி ஆட்டம்
வசமாக சிக்கிய இஸ்ரேல் ஈரான் அதிரடி ஆட்டம்
இஸ்ரேல் நாடானது மிக பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது .
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட
பல தரப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு மற்றும் ,தாக்குதல் திட்ட நிகழ்ச்சி நிரல்கள்என்பன கசிய விடப் பட்ட நிலையில், இஸ்ரேல் மிக பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது
ரஸ்யாவிடம் சிக்கிய ஆவணங்களில் இருந்து ,
ஈரானுக்குள் எவ்வாறான தாக்குதலை அமெரிக்கா இஸ்ரேல்
இணைந்து தொடுக்க உள்ளனர் என்கின்ற விடயம்
வெளியானா நிலையில் ,இஸ்ரேல் இராணுவத்தின்
பாதுகாப்பு மற்றும் உளவு துறையின் பெரும் சிக்கலில் உறைந்துள்ளனர்.
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து போட்ட தாக்குதல் திட்டம் ,
ஈரான் கையில் சிக்கிய நிலையில்
ஈரான் அந்த தாக்குதலை வைத்து மாறுபட்ட தாக்குதல் முன் தயாரிப்பில் ,
தீவிரமாக இறங்கியுள்ளதுடன் ,புதிய வகை போராயுதங்களை,
தயாரிக்கும் அதிவேகத்தில் செயல் பட்டு வருகிறது .
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஒத்தி வைக்கப்பட வேண்டிய ,
நெருக்கடியில் இஸ்ரேல் சிக்கியுள்ளது .
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது இதைத்தான் போலும் .
ஆணவத்தில் ஆடினால் இது தான் நிலை ராசாக்களே என்கிறது ஈரான் .
பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்
பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்
வடக்கு புர்கினா பாசோவில் இராணுவம் மற்றும் தன்னார்வ
பாதுகாப்புப் படைகள் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள்
நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மேலும்
33 பேர் காயமடைந்தனர் .
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் உடன் தொடர்புடைய
பயங்கரவாத குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான ,
மாலியின் எல்லை அருகிலுள்ள அரேமா கிராமத்தில்,
சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது
தெளிவாகத் தெரியவில்லை. மேற்கு ஆபிரிக்க நாட்டின் வடக்கில் உள்ள
குராகோ மற்றும் டோண்டோபி கிராமங்களில் துப்பாக்கி
ஏந்தியவர்கள் 44 பேரைக் கொன்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாக நேற்று (16) சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடமைகளுக்கு சமூகமளித்துள்ள சாரதிகளை சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கு பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டில் சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு வருகை தரவுள்ள பொதுமக்களுக்காக இன்று (17) முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது
ஏங்கி சாவீரே
ஏங்கி சாவீரே
எழுத மறந்த கவிதை ஒன்றை
எழுதி வருகிறேன்
எனை எழுத வைத்த எதிரிக்கு
ஏற்று வடிக்கிறேன்
முடக்க நினைத்த உங்கள்
மூளை காண்கிறேன்
முயன்று பார்த்து தோற்று போனீர்
முடிவை காண்கிறேன்
எழுந்து வெடிக்கும் ஏவுகணை
என்றும் அடங்குமோ
ஏறி அடிக்க மறந்து
ஏங்கி சாகுமோ
தலைவன் வழி வந்தவர்கள்
தலைகள் குனியுமோ
தரகு வேலை சகுனிகள்
தலைமை புரியுமோ
எரிமலைக்குள் காலை வைத்தீர்
எழுந்து பார்த்தீரோ – இனி
எரியும் தணல் தலைகளிலே
ஏங்கி சாவீரே ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-04-2023
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்,
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் .
அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின்,
நான்காவது மாடியில் சனிக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி இந்தியா மலையாள தம்பதிகள் உள்ளிட்ட
16 பேர் பலியாகியுள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது,இங்கு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் கட்டட பகுதியில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது .
இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை .
குறித்த தீ விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமானதளம் பகுதிகள்
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமானதளம் பகுதிகள்
ஜனாதிபதி மாளிகை முற்றுகை எரியும் விமனாதளம் பகுதிகள் ,
போராளி குழுக்கள் சூடான் ஜனாதிபதி மாளிகை மற்றும் மதன் அண்மித்த முக்கிய பாதுகாப்பு வலய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர் .
சூடான் அரச இராணுவம் மற்றும் துணை படைகளிற்கு இடையில்
கடும் மோதல் இடம்பெற்று வருகிறது .
சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்க படலாம்
என்பதால் சூடானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
Presidential Palace, siege, burning airport,
Sudan Presidential Palace, Sudan Royal Army,
Sudan President may be jailed,
உக்ரைன் போரில் ரசியா 10.000 போர் தளபாட வண்டிகள் இழப்பு
உக்ரைன் போரில் ரசியா 10.000 போர் தளபாட வண்டிகள் இழப்பு
உக்ரைன் போரில் இதுவரையான யுத்த காலம் முதல் ,
ரஷ்யா இராணுவம் பத்து ஆயிரம் போர் வண்டிகளை
இழந்துள்ளதாக மேற்குலக உளவுத்துறை ஒன்று தெரிவித்துள்ளது .
இந்த போர் வண்டிகள் யாவும் ,அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம்
தாக்கி அழிக்க பட்டுள்ளது என அந்த உளவுத்துறை வரையறை செய்துள்ளது .
அவ்வாறு நோக்கின் உக்ரைன் களத்தில் வைத்து ரஸ்யாவை முற்றாக,
அழிக்கும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்,
செயலாற்றி வருகின்றதே இந்த ஒப்புவித்தல் விடயம் எடுத்து காண்பிக்கிறது .
எனினும் முப்பது நாடுகளின் ஆயுத உதவிக்கு முன்பாக ,
தன்னம் தனியாக நின்று ரஸ்யா போராடி வருகின்றமை,
குறித்த நாடுகளை சீற்றத்தில் உறைய வைத்துள்ளது .
எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்
எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்
சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே
நடந்து வரும் மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் ,
மேலும் 183 பேர் காயமடைந்துள்ளனர் .
அந்நாட்டின் மருத்துவர்கள் தொழிற்சங்கம் சனிக்கிழமையன்று ,
நீடித்த சண்டையின் போது இறப்புகள் நிகழ்ந்ததாக கூறியது.
துணைப்படைகள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு இடையில்
இடம்பெற்ற மோதலை அடுத்துநகரத்தில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தூதரகங்கள் ,இரண்டும் ,தங்கள் குடிமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறுஎச்சரிகை விடுத்துள்ளனர் .
எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்
கார்டூம் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீயில் எரியும்
காட்சிகள் வெளியாகியுள்ளன .
ஆனால் சுயாதீன தகவல்களோ இது போலி என்கிறது .
எனினும் முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .
இந்த தாக்குதல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை
இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை
ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து சோதனை செய்துள்ளனர் .
மேற்படி ஏவுகணையானது திட்டமிட்டபடி தமது இலக்கை
சென்று துல்லியமாக தாக்கி அழித்துள்ளது .
ஈரானின் புதிய உயர்மட்ட தாக்குதல் ஏவுகணையான,
Sadid-36 ஐஆர்ஜிசி தரைப்படையினரால்
சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.
Sadid-365 ஏவுகணை 8 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் எதிர்ப்பு ஏவுகணையாகும்,இது அனைத்து வகையான கவச உபகரணங்களையும் அழிக்கும் திறன் கொண்டதுஎன IRGC தரைப்படையின் ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவு ,ஜிஹாத் அமைப்பின் தலைவர் ஜெனரல் அலி கௌஹெஸ்தானி தெரிவித்தார்.
இந்த ஒளியியல் வழிகாட்டுதல் ஏவுகணை அதிக துல்லியத்துடன் ,
இலக்குகளைத் தாக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவை டாங்கிகளில் மூலம் பொருத்தி துல்லியமாக தாக்கும்
அபார திறன் கொண்டது என படுகிறது .
இந்த ஏவுகணையானது கப்பல்கள் மாற்றுக்கும் நீரூந்து விசை படகுகளில்,
இருந்தும் தாக்க முடியும் என்பதால் , இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .





























































