இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .
இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .
இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்
பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்
சீனா இராணுவத்தினர் வளர்த்து வரும் நாய்களுக்கான பயிற்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துவருகிறது .
நெருப்பு ,நீர்,மதில்கள் ,வீட்டு கூரைகள் ,முள் கம்பிகள் ,மற்றும் சதுப்பு நிலங்கள் ,என்பனவற்றுக்குள் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது,
தொடர்பாக பயிற்சிகள் வழங்க படுகின்றன .
நாய்களும் வழங்க படும் பயிற்சிகளை ,
அவை திறம்பட செய்து அசத்தி வருகின்றனர் .
போர் காலங்களில் இந்த நாய்களின் செயல்பாடுகள் ,
குண்டுகள் கண்டு பிடித்தல் ,மனிதர்களை காட்டி கொடுத்தால்,
போன்ற விடயங்களில் முதன்மையான பங்கு வகிக்கும்
என தெரிவிக்க படுகிறது .
இந்த நாய்கள் ஒன்றின் விலை 50 லட்சம் ரூபாய்கள் என படுகிறது .
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 போர் விமானங்கள் ,
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில்
இஸ்திரேலை சுற்றி ஈரானின் போர் விமானங்கள் ,ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளன ,
இதனால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் தொடக்கம் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை மக்கள் மதில் ஒன்றை அமைக்க கத்தோலிக்க திருச்சபை இன்று திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணி முதல் கொழும்பு – நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையில் இந்த மக்கள் மதில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர்.
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு முடிந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,800 வரையாகும். அதனை 5,000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அதனை இலக்காகக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நாடு பூராகவும் காணப்படும் வைத்தியசாலைகளில் இணைக்கப்படும் புதிய வைத்தியர்கள், வைத்தியப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வைத்தியர்கள் மாத்திரமே வைத்தியர்களாக நாட்டின் சுகாதாரத் துறையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு
எதிராகவுள்ளதாகவும், மல்வத்து தேரர் கூட இச்சட்டம் மிகவும் பயங்கரமான சட்டம் என குறிப்பிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையை தானும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரும் அரச மிருகத்தனம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
அமைந்துள்ளதாகவும், இந்நோக்கத்தை முறியடிக்க அனைத்து முற்போக்கு சக்திகளையும் திரட்டி வருவதாகவும், பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை போற்றும் அனைவரும் இணைந்து இதனை முறியடித்து பொதுமக்கள் மற்றும்
சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள இந்த சர்வதிகார எதோச்சதிகார சட்டத்தை முற்றாக தோற்கடிக்கத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கண்காணிக்கக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 25 சதவீதத்தை இலங்கை 2023 மார்ச் மாத இறுதியில் எட்டியுள்ளது. எனினும் முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.
இது வெரிட்டே ரிசேர்ச் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘The IMF Tracker’ எனும் ஆன்லைன் கண்காணிப்பான் மூலம் தெரியவந்துள்ளது.
இவற்றுள் பல கடமைப்பாடுகள் “முந்தைய நடவடிக்கைகளாக” வகைப்படுத்தப்பட்டதுடன் அவை சர்வதேச நாணய நிதிய சபையின் இறுதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக இலங்கையால் நிறைவேற்றப்பட்டது.
இதன் இறுதி கடமைப்பாடு, ஆன்லைன் வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
இது தொடர்பான பின்வரும் தகவல்களை அரையாண்டு அடிப்படையில் குறித்த தளம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது: (i) அனைத்து குறிப்பிடத்தக்க பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் (ii) முதலீட்டுச் சபையின் கீழ்
வரி விலக்குகளைப் பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் (iii) ஆடம்பர வாகன இறக்குமதிகளுக்கு வரி விலக்குகளைப் பெறும் தனிநபர்கள் மற்றும்
நிறுவனங்களின் பட்டியல். அத்தளம் 2023 மார்ச் முதலாம் திகதிக்குள் முழுமைப்படுத்தப்பட வேண்டியிருந்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் கூட அது பூரணப்படுத்தப்படவில்லை.
போதுமான தகவல் இல்லாமையும் இதில் கவலைக்குரிய ஒரு விடயமாகும். மார்ச் மாத இறுதியில், கண்காணிக்கப்படக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 9 சதவீதமானவற்றின் முன்னேற்றம் எமது கண்காணிப்பானில் “unknown
(தெரியாதவை)” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு எந்தத் தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கவில்லை.
IMF திட்டத்தில் மேற்கொள்ளப்படும் உரிய நேர முன்னேற்றங்கள் இரண்டு நன்மைகளைக் கொண்டுள்ளது என்று வெரிட்டே ரிசேர்ச் குறிப்பிடுகிறது.
முதலாவதாக, பல (அனைத்தும் அல்ல) செயல்களால் விளையக்கூடிய பொருள் ரீதியான நன்மைகள் ஆகும்.
இரண்டாவதாக, இது இலங்கையின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, கடந்த கால கடன் சுமையை மறுசீரமைப்பதற்கும் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்துவதற்குமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும்.
2023 மார்ச் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் உள்நோக்கக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்ட 100 அடையாளம் காணப்பட்ட கடமைப்பாடுகளை ‘The IMF Tracker’ தற்போது கண்காணித்து வருகிறது.
இந்த கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் காலக்கெடுவை நன்கு புரிந்துகொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் இந்த தளம் இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உதவும்.
அமெரிக்கா நீர் மூழ்கியை சுற்றிவளைத்த ஈரான்
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது.
பொலிஸ் அதனுடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் ஆதரவினை வழங்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
ரஸ்யா நாட்டுக்குள் உள்ள விமான நிலையம் ஒன்றுக்குள் உக்ரைன்
விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது .
உக்ரைனில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா விமானம்,
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் வெடித்து சிதறியது.
பிஸ்கோவ் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கிய ட்ரோனில்
வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
இது கமரா பொருத்தப்பட்ட குவாட்காப்டர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளது .
.கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,
விமான நிலையத்தின் மீது திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
விமான நிலையத்தின் விமானம் நிறுத்தும் பகுதியில் ,
ஆளில்லா விமானம் விழுந்துள்ள பொழுதும் அங்கு
தரித்து நின்ற விமானங்களுக்கு சேதங்கள்
ஏதும் ஏற்படவில்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது .
இந்த விமான ஊடுருவல் தாக்குதலை அடுத்து ,
பழிவாங்கும் தாக்குதல்களை உக்ரைன் கிழக்கு ,
முன்னரங்க பகுதியில் ரஷ்ய மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் நாட்டின் அவசர வேண்டுகோளை
அடுத்து அமெரிக்கா 325 மில்லியன் டொலர்களுக்கு
முக்கிய ஆயுதங்களை வழங்குகிறது .
இவ்வாறு வழங்க படும் ஆயுத தொகுதியில் ,
கைமஸ் ஏவுகணைகள் ,155 மற்றும் 105 mm ஆட்டிலறி குண்டுகள் ,
டங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் , தாங்கி கண்ணிவெடிகள் ,
குண்டுகள் உள்ளிட்ட மிக பெருமளவு ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .
வரும் வாரம் அளவில் ரஷ்யா மிக பெரும் புதிய ,
யுத்த தந்திரோபயா தாக்குதலை நடத்த தயாராகி வருவதால் ,
இவ்வாறான ஆயுத தொகுதிகளை அவசரமாக அமெரிக்கா வழங்குகிறது .
இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்
இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்
ஏமன் நாட்டில் போரினால் பாதிக்க பட்டு வறுமையில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வு ஒருங்கிணைப்பு குழு ஒன்று நிதி உதவி வழங்கிட தயாராகி வந்தது .
இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆயிர கணக்கில் மக்கள் கூடிய,
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை
110 பேர் பலியாகினர் ,மேலும் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காவல்துறையினர் ஆதரவு இன்றி தனித்து செயல் பட்டதால் இந்த பேரவலம்
இடம் பெற்றுள்ளதாக ஏமான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த70வயது பெண்மணிக்கு,ரஷ்ய இராணுவம் 40,000 ruble (£393) தண்டமாக
செலுத்தும் படி கட்டளையிட்டுள்ளது .
தமது நாட்டின் எதிரியை இவ்வாறு அழகன் ,வாலிபன் என
வர்ணித்து ,ரஷ்ய நாட்டை அவமதித்தார் என்ற குற்ற சாட்டில்,
இவருக்கு இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
கடந்த ஆறு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக இவை பதிவாகியுள்ளது .
ரஷ்ய இராணுவம் மற்றும் ஜனாதிபதியை இவ்வாறு கீழ்ந் நிலை எண்ணத்துடன் ,வர்ணனைசெய்பவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்க பட்ட வண்ணம் ,உள்ளமை தொடர்கின்றதை இவை எடுத்து கடடுகின்றன .
ஏன் அழுகிறாய்
ஏன் அழுகிறாய்
துணிவு கொண்ட மனிதா – நீ
துளி துளியாய் அழுவதா
இடை வந்த வறுமையால்
இதயம் உடைந்து மாழ்வதா
கவலை இன்று துரத்து
காலில் வேகம் ஏத்து
தெளிவாய் கொஞ்சம் மிதப்பாய்
தேடும் தமிழ் ஆவாய்
முடியாது என்று அஞ்சாதே
முடியும் உன்னால் மறவாதே
சிந்தை தானே முதல் வளமே
செதுக்கு உனை தினமே
நகைத்தாரும் வியக்க வை – இந்த
நாடே மலைக்க வை
நாள் எல்லாம் உனை தினம்
நாடே புகழ வை
முடியும் உன்னால் முன்னேறு
முடிவு தெரிந்து விண்ணேறு
முன் உரையை நீ கூறு
முடிவுரையை நீ மீறு
அழுவதை நிறுத்தி
அகிலம் புரட்டு
ஆனந்தம் கூடும்
அறிவு தேறும்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-04-2023
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் நேட்டோ கடலடியில் நாசா வேலை கதறும் நேட்டோ ,பேய் கப்பல்கள் பேயாட்டம் ,மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்.
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்த யுத்தம்
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம்
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம் ,ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை அடுத்து அமெரிக்கா வழங்கிய பல நூறு மில்லியன் புதிய ஆயுதம் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி
இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி
புர்கினா பாசோவில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில்
24 பேர் கொல்லப்பட்டனர்
புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்,
இரண்டு தாக்குதல்களில் பாதுகாப்பு படைகள் உட்பட குறைந்தது 24 பேர்
கொல்லப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.
டோகோலீஸ் மற்றும் கானா எல்லைகளுக்கு அருகில் உள்ள ,
பிட்டூவில் உள்ள ஒரு கிராமத்தில் மிகக் கொடிய தாக்குதல் நடந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார், இந்த மோதல்களில் 16 துணை ராணுவ வீரர்களும்,நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக கூறினார்.
36 துப்பாக்கிகள் மீட்பு
36 துப்பாக்கிகள் மீட்பு
அண்மையில் அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கரந்தெனியவில் உள்ள இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் (MIC) படைப்பிரிவு தலைமையகத்திற்குச் சொந்தமான 36 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
36 துப்பாக்கிகள் மீட்பு
அதன்படி கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கரந்தெனிய மஇகாவில் சேவைக்காக வழங்கப்பட்ட 36 T-56 துப்பாக்கிகள் அஹுங்கல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நாயினால் முகாமுக்கு அருகில் உள்ள முட்புதர்களில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்
ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்
குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,
“இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து எமக்கு வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.
ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்
இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். சீனாவில் உள்ள 1000க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்களுக்கு வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அவர்கள் இதனை உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கேட்டார்கள்.
ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது. ஒரு குரங்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டி ஏற்படும்.
விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளனர்.
இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டோம். ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா?
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.
இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறும்போது, வார இறுதியில், இஸ்லாமிய புனித மாதம் ரமலான் முடிவையொட்டி, சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதனை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
எனினும், இந்த சம்பவங்களை பார்த்து கொண்டு இருந்த, அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் ஆகியோர் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர்.
அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியுள்ளனர் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிருபர்கள் உள்பட மக்கள் யாரையும் உள்ளே விடாமல் பள்ளியை பூட்டினர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொலிசாரின் விசாரணை நடந்து வருகிறது.





















































