வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது

வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவல, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை

நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எட்டுப்பேரும் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டனர் அதன்போதே நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒருசாட்சியாளர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.

இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர். ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்​கொண்டார்.

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வந்த ஐரோப்பாவுக்கு ,கட்டி வைத்து அடிக்கும் நகர்வில், சீனா ஈரான் ,முற்றுகையில் சிக்கும் அபாயம் ,
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஐரோப்பா பொருளாதாரத்தை முடக்கும் சீனா ஈரான் 

ஐரோப்பா பொருளாதாரத்தை முடக்கும் சீனா ஈரான் 

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது


சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

அங்கு கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.

இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.

இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.

ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் இலங்கையில் அரச அபாயங்கரவாத ,
அரசுகளினால் நடத்த பட்ட ,தமிழ் இனப்படுகொலை மற்றும் ,
கறுப்பு யூலை இனக்கலவர நினைவுகளை சுமந்து, மிக பெரும்
அறவழி போராட்டம் இடம்பெறுகிறது .

இந்த போரட்டத்தில் தமிழ் தேசியம் ,சுயநிர்ணயம் ,உரிமைகளை
வழங்க கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது .

இவ்வேளை ,அனைவரையும் கலந்து ஆதரவை வழங்கும் படி ,
ஏற்பட்டு குழுவினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

யூலை 25 மதியம் ஐந்து மணி முதல்,
எட்டு மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறுகிறது .

மேலதிக விபரம் கீழே

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

உக்ரைன் நாட்டு இராணுவத்தினருக்கு ,நேட்டோவின் 11
உறுப்பு நாடுகள் F-16 fighters விமான பயிற்சிகளை வழங்குகிறது .

இந்த விமான பயிற்சிகள் நிறைவு பெற்றதும் ,உக்ரைனுக்கு ,
இந்த விமானங்களை வழங்கி வைக்க
அமெரிக்கா தயாராகி வருகிறது .

பிரிட்டன் ,பிரான்ஸ் ஏவுகணைகளை இதன் ஊடாக எடுத்து சென்று ,
ரஷ்யா தலைநகர் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் ,
உக்ரைன் போர் முனையில் ,பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் வரவின் பின்னால் ,ரஸ்யாவை உக்ரைனை வென்றிட முடியுமா ..?
பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணைகளை ரஸ்யா வீழ்த்தியது போல ,
இந்த விமானங்கள் வீழ்த்த படுமா ..?

உக்ரைனுக்கு 11 நாடுகள் F-16 fighters விமான பயிற்சி

அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்டால் , உக்ரைன் போர்க்களத்தில் ,
பாரிய பின்னடைவுகளை மேற்கு நாடுகள் சந்திக்கும் எனலாம் .

எதிர் பார்த்த அதிரடி தாக்குதல்களை ,நடத்தி ,பிரிட்டன் ,
அமெரிக்கா புயல் நிழல் ,பட்ரியாட்
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

அவ்வாறு இந்த அதி உயர் தாக்குதல் விமானங்களை ரஷ்யா வீழ்த்தினால் ,
அதுவே போரின் போக்கின் நிகழ்ச்சி நிரலை ,மாற்றி அமைத்து விடும் எனப்படுகிறது .

தஉலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி ஐவர் மரணம்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே சுற்றுலா பயணிகளை காவியபடி பயணித்த
உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியாது .

இந்த விபத்தின் பொழுது அதில் பயணித்த 5 சுற்றுலா பயணிகள் பலியாகினர்
. ஹெலிகாப்டர் காணாமல் போன சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு ,
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஐந்து மெக்சிகோ பிரஜைகளை பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்க படவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

துருக்கி நடாட்டுக்கு அமெரிக்காவானது முக்கிய போர் விமானமான,
f 16 ரக விமானங்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது .

சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஆதரவு வழங்கியதை அடுத்து ,
இந்த விமானங்களை வழங்குவதற்க அமெரிக்கா தயாராகி வருகிறது .

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா

அமெரிக்கா காங்கிரசின் இறுதி ஒப்புதலை பெற்று,
20 பில்லியன் டொலர் பெறுமதிக்கு விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்கிறது .

துருக்கி திடீரென அந்தர பெல்ட்டி அடித்து ,ரஸ்யாவுக்கு எதிராக,
இவ்விதம் செயல்படும் காரணத்தால் ,ரஸ்யாவுக்கும் துருக்கி இடையில் ,
விரிசல் ஏற்பட்டுள்ளது .

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல்களின் தளபதியாக விளங்கிய
ஒருவர், சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

உக்ரைன் இராணுவத்தின் கருப்பு பட்டியலில் இணைக்க பட்டிருந்த இவரே ,
இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுளளார் .

கருங்கடல் பகுதியில் தரித்துள்ள ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களில்
இருந்து ,அதிக தாக்குதலை நடத்தி ,
உக்ரைனுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்த ,
இவர் முக்கிய காரணமாக விளங்கினார் என தெரிவிக்க படுகிறது .
அவ்வாறன முக்கிய தலைவரே இவ்வாறு கொலை செய்ய பட்டுளளார் .

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

உக்ரைன் மீதான ரஸ்யா ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் ,
டசினுக்கு மேற்பட்ட முக்கிய தலைகளை ,உக்ரைன் ,மேற்கு நாட்டு ,
உளவாளிகள் இணைந்து ,இவ்வாறு போட்டு தள்ளி வருகிறது .

உங்கள் கோட்டைக்க்குள் எங்கள் ஆட்டம் முடிந்தால் ,தடுத்து பாருங்கள்,
என்றே சவால் விட்டு எதிரிகள் ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி நகர்ந்து செல்கின்றனர் .

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

உக்ரைன் இராணுவத்தினர் ,போரில் பயன்படுத்துவதற்கு ,
பிரான்ஸ் நாடானது நீண்ட
தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

இந்த ஏவுகணைகள் கடந்த மாதம் தயாரித்து முடிவுற்ற நிலையில் ,உக்கிரனுக்கு
வழங்க பட்டுள்ளது .ஆனால் எத்தனை ஏவுகணைகள் ,எவ்வளவு தொகைக்கு வழங்க பட்டுள்ளது என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .

இவற்றை பயன் படுத்தி ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன்
தாக்குதலை நடத்தும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது .

உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்

மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் ஊடாகவே ரஸ்யா படைகளை ,
உக்ரைன் இராணுவம் தாக்கி வருகிறது .
பல மில்லியன் டொலர்களுக்கு உதவி என்ற போர்வையில் ஆயுதங்களை விற்று வருகின்றனர் .

ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில் ,
மேற்கு நாடுகளுக்கு பல மில்லியன் டொலரை வருமானமாக,
இந்த ஆயுத விற்பனை பெற்று கொடுத்து வருகிறது .
.
உக்ரைன் போரை நீடித்து செல்ல வேண்டும் என்பதே இந்த நாடுகளின் ,
ஆயுத வளங்கள் ஊடாக காண முடிகிறது .இவர்கள் வியாபாரம் தடை இன்றி கொடி கட்டி பறக்கிறது

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

பாணந்துறை மற்றும் வரகாபொல பகுதிகளில் நேற்று(11) இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இருவர் பலி

இதேவேளை, வரகாபொல அங்குருவெல்ல வீதியின் மைனொலுவ பிரதேசத்தில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார் என்று தெரிவித்தார்

தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு


தப்பிய ஈரான் தளபதி பெரும் தாக்குதல் முறியடிப்பு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்
Posted in இலங்கை செய்திகள்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா தரால்வாவில் உள்ள ‘பன்டு கரந்த’ அல்லது க்ரூடியா சிலனிக்கா மரம் நேற்று (10) அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய 15 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மரம் அகற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் வந்த குழுவினர் இருபது நிமிடங்களில் மரத்தை அகற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

எவ்வாறாயினும், தனது நிறுவனத்திற்கு தெரியாமல் மரம் அகற்றப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் கம்பஹா தரல்வாவில் அமைந்துள்ள ‘பன்டு கரந்த’ அல்லது க்ரூடியா சிலனிக்கா மரத்தை அகற்ற திட்டமிடப்பட்டது.

அப்போது, ​​கம்பஹா மாவட்ட வன அதிகாரி தேவானி ஜயதிலக மற்றும் சுற்றாடல் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்று ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எதிர்ப்பினை வௌியிட்டனர்.

“இது ஒரு குற்றமாகும் மரம் காணாமல் போயுள்ளது, விசாரணை தேவை இது சட்டவிரோதமான செயல் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.