பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்
- இரண்டு இலங்கைப் பெண்களின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் முறைகேடு குறித்து குவைத் விசாரணை
- பல மாவட்டங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை












