நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் உள்ள
தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.
இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.
நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையில் நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.
நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களில் ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்
நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்
இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது.
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|
அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|
அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,இந்த தாக்குதல் ஏன் நடத்த பட்டது ,நுழையாதீர்கள் என எச்சரித்த ஈரான் அத்துமீறி நுழைந்தன ,வெடித்த துப்பாக்கிகள்
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
by நிருபர் காவலன் - வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
by நிருபர் காவலன் - காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
by நிருபர் காவலன் - உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலர் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலர் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் நாட்டுக்கு மேலதிகமாக 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
இவ்வாறு வாழுங்க படவுள்ள ஆயுதங்கள் இன்னும் சில வாரங்களில் உக்ரைனை வந்தடையும் என தெரிவிக்க பட்டுள்ளது .
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைதுby நிருபர் காவலன்
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் ரோட்டர்டாம் பகுதியில் அமைய பெற்றுள்ள மருத்துவ கல்லூரி மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதில் இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மாணவன் கைது செய்யப்பட்டுளளார் ,இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்கிறது .
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள் ,
தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,
தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள்
வெடித்த உக்கிர சண்டை ,கொலண்டில் துப்பாககி சூடு ,இலங்கை நீதிபதிக்கு மிரட்டல் ,சரவணராஜா ஓடவைத்த இலங்கை ,
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
by நிருபர் காவலன் - வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
by நிருபர் காவலன் - காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
by நிருபர் காவலன் - உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்
நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு (28) சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து, விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுரை வழங்கி வருகின்றன
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்
முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்
முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அவர் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, தனுஷ்க குணதிலக இலங்கை திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
அத்துடன், இந்த தீர்ப்பினால் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் விதித்திருந்த தடையும் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் வழக்குக்காக செலவிடப்பட்ட பணம் அனைத்தும் அவரிடமிருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட், சர்வதேச கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவதூறு செய்யும் வகையில் மனுதாரருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருந்துள்ளதாக தெரிவித்தார்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு
IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க,
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் அமைச்சர்,
“நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பங்கேற்புடன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பிரதிநிகள் குழு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டது.
IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு
இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நீடிப்பு செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச நாணய நிதியக் குழுவினர், அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும், அதற்காக வரி சேகரிப்பு செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போரை கண்டறிவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஐ.எம்.எப் குழுவினர் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான தவறான எண்ணங்களை பரப்ப சிலர் முயற்சித்து வருவதாகவும், மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் பல செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் பலவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றன.
மறுமுனையில், நாட்டின் பணவீக்கம் 1.3 ஆக குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்குத்
திரும்பியுள்ளமை, நாட்டின் அடிப்படைக் கணக்கின் வைப்புத் தொகை அதிகரித்துள்ளமை என்பன மகிழ்ச்சிக்குரியது இருப்பினும் அரசாங்கத்தின் வருமானம் 48% ஆக அதிகரித்துள்ள நிலையில், செலவீனம் 38% ஆக அதிகரித்துள்ளது.
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் காலப்பகுதியில் கடன் செலுத்துவதற்கு தவணைகளை செலுத்துவதற்கு மாறாக பெருமளவில் வட்டி பணத்தை செலுத்த நேர்ந்துள்ளமையே அரச செலவீனங்கள் அதிகரிக்க
காரணமாகியுள்ளன. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலனாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலைமையை அடையும் என்றும் நம்பிக்கை உள்ளது.
IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புக்களை 20 வருடங்களுக்கு முன்பாகச் செய்திருக்கும் பட்சத்தில் நாடு வலுவான நிலைமை அடைந்திருக்கும். அதன்படி அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றிய அனைத்து படிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், அதனால் தமது அரசியல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதுகின்ற சிலர் தவறான கருத்துக்களை பரப்ப முற்படுகின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனை கடன் இலங்கைக்கு கிடைக்காது என எவரும் குறிப்பிடவில்லை.
மறுமுனையில் பொருளாதாரத்திற்கான இயற்கை வளங்கள் அற்ற நாடுகளின் வரி அறவீட்டு குறிகாட்டியில் இலங்கை மிக குறைந்தளவில் வரி அறவிடும் நாடாக பெயரிடப்பட்டுள்ளதால், வரி அறவீட்டுக்கான (RAMIS) மென்பொருளை புதுப்பித்து வரி சேகரிப்பு பணிகளை சீரான முறையில் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்ற உறுப்பாட்டினையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.
அத்தோடு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்பாக நாட்டின் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நீக்கப்படும். அதேநேரம் பொதுப்போக்குவர்துக்கான வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு அவசியம் என்றும் மற்றைய வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.” என்றும் பதில் அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து.
இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.
அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.
அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.
அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.
வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.
அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை கள் விடுக்கப்பட்டுள்ளன. தீவின் பல பகுதிகளில் மோசமான வானிலை தொடர்ந்து பாதித்து வருவதால், ஆறு மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் உள்ளன. 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் உள்ளதாகவும், அதிக அபாயம் உள்ளதாகக் கருதப்படும் பகுதிகளுக்கு…
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணையை த் தொடங்கியது செப்டம்பர் 12 அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிப் பேரணியில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆற்றிய உரைகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பானதா என்பது குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணையைத் தொடங்கியுள்ளது. காவல்துறைத் தலைமை ஆய்வாளரின் (IGP) அறிவுறுத்தல்களின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பேரணியில் வீரவன்ச ஆற்றிய…
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி க்கு மறுபயன்பாட்டுப் பைகளைக் கொண்டுவருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் நெகிழி கழிவுகளைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பொதுமக்கள், புத்தகங்களை வாங்கும் போது பொருத்தமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுபயன்பாட்டுப் பையைக் கொண்டுவருமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில், பார்வையாளர்கள் புத்தகங்களைக் கொண்டு செல்வதற்காக, பொதுவாக ‘சிலி சிலி’ பைகள் என்று…
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது முன்னாள் மேற்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சச் சட்டத்தின் பகுதி II-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக, சட்டத்தின் 30-வது பிரிவின்படியும், அத்துடன் இலஞ்சச் சட்டத்தின் 23(a)(1) பிரிவின் கீழான குற்றங்கள் தொடர்பாகவும் அவர்…
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது , சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை குடிமகன் சிவராச அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுத் தருவதற்காக அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜெயதிச தெரிவித்தார். இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயதிச, இச்சம்பவம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் உட்பட, இவ்விஷயம் தொடர்பாக அரசாங்கம்…
அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi
அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi
அசானியை பாராட்டிய நடிகர் ஜெயம் ரவி,பாராட்டு மலையில் நனைந்த அசானி.ஆடிய அரங்கம் ,கொட்டிய கரகோஷம் ,மகிழ்ச்சி கடலில் உலக தமிழர்கள் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா பாடல் கேட்டு நடிகர் ஜெயம் ரவி பாராட்டில் அன்பு மழையில் குளித்த அசானி.
சரிகமபா பாட்டு மன்ற நிகழ்வில் , இவ்வாரம் அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா பாடல்சூப்பர் ஹிட்டாக உள்ளது .
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
- அசானி கிராமத்திற்கு உதவிய லோரன்ஸ்|அசானி|asani saregamapa song|asani song|ASHANI PAADAL
- கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode
- புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songs
- கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs
- அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi
- கில்மிசாவை முத்தமிட்ட லைலா|கில்மிசா இவ்வார பாடல்|kilmisha saregamapa songs| zee tamil kilmisha songs
- அசானிக்கு வாலிபன் செய்த வேலை|அழவைத்த அசானி|asaani song|ZeeTamil ashani|asani saregamapa songs
- மக்களை ஆட வைத்த அசானி|அசானி அத்தான் வருவாக பாடல்
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
இரண்டு ரயில்களில் இரண்டு வாகனங்கள் மோதுண்டதில் இருவரும், மற்றொரு ரயிலுடன் யானைகள் கூட்டமாக மோதியதில் 3 யானைகளும் மரணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவமொன்றில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் வியாழக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானையை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில், குப்பைகளை ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
கொடகம கஹவ எனுமிடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில், கல்கமுவ பிரதேசத்தில் வைத்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் யானைக்கூட்டமொன்று மோதியதில், மூன்று யானைகள் மரணமடைந்துள்ளனர்.
கல்கமுவ ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதன் பின்னர் ஒரு மணிநேரத்துக்கு ரயில் பயணம் தாமதமாகியிருந்தது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை
by நிருபர் காவலன் - கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி
by நிருபர் காவலன் - மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது
by நிருபர் காவலன் - அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது
by நிருபர் காவலன்
மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு
மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொட, மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
by நிருபர் காவலன் - வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
by நிருபர் காவலன் - காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன் - 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை
by நிருபர் காவலன்
தனுஷ்க குணதிலக விடுதலை
தனுஷ்க குணதிலக விடுதலை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்
வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்
சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு அமைய அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்துகின்றார்.
அத்தியாவசிய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த போதிலும், நாட்டின் வரி வருமானத்தில் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்
மக்கள் மீது புதிய வரிகளை சுமத்தாமல் வரி வருமானத்தை அதிகரிக்க நாணய நிதியம் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க அத தெரணவிற்கு தெரிவித்தார்.
அதற்கான 03 பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் முதல் பரிந்துரையாக வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.
வரிச்சலுகைகளை நீக்குவது இரண்டாவது பரிந்துரையாகவும், மூன்றாவதாக வரி ஏய்ப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிby நிருபர் காவலன்
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைதுby நிருபர் காவலன்
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதுby நிருபர் காவலன்
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை , களுத்துறை , கேகாலை , மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்
விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்
ஈரான் இராணுவத்தினரால் விண்ணில் உளவு செய்மதி வெற்றிகரமாக ஏவப் பட்டுள்ளது .
பரம எதிரிகளை வளரவிட்டு அதிரடி காட்டிய ஈரான்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைby நிருபர் காவலன்
ஈரான் விமானங்கள் முடக்கம் |அமெரிக்கா சதி|
ஈரான் விமானங்கள் முடக்கம் |அமெரிக்கா சதி|
ஈரான் விமானங்கள் முடக்கம் ,அமெரிக்கா புரிந்த சதி நடவடிக்கை ,
அடங்குமா ஈரான் ,அமெரிக்கா இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்துமா ..?