இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Spread the love

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
    Spread the love         நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது யாழ்ப்பாணம், நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவிடம், காவல்துறையினரால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. திலீபனின் நினைவு விழா நேற்று (26) நடைபெற்றது. முன்னறிவிப்பின்றி 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்து, காலணிகளை அணிந்துகொண்டு வளாகத்திற்குள் நுழைந்து, சிலையை வலுக்கட்டாயமாக அகற்றியதாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
  • சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது
    Spread the love         சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பயண மற்றும் சுற்றுலா அபிவிருத்திக் குறியீட்டின்படி, 2024 மற்றும் 2026 க்கு இடையில் பயண மற்றும் சுற்றுலா அபிவிருத்திக் குறியீட்டில் மிக வேகமாக முன்னேற்றம் கண்ட உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 2024 உடன் ஒப்பிடும்போது 2026…
  • கடைகளில் திடீர் சோதனை
    Spread the love         கடைகளில் திடீர் சோதனை கடைகளில் திடீர் சோதனை கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் புட்டிகளை இலக்காகக் கொண்ட 96 ஆய்வுகள் மற்றும் குழந்தை உணவுப் புட்டிகள் தொடர்பான 48 ஆய்வுகள் உட்பட, மொத்தம் 144 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2025 அக்டோபர் 1 தேதியிட்ட விசேஷ வர்த்தமானி எண் 2456/42-இல் வெளியிடப்பட்ட ஆணை எண் 96-இன் கீழ், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் புட்டிகளுக்கு SLS 1616 தரநிலை 2026 ஏப்ரல்…
  • சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன
    Spread the love         சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலக நிலைக்குப் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கீழ் வரும் விண்ணப்பங்களைக் கையாள்வதில் சிறப்பான செயல்பாடு ஆற்றியதற்காக வட மாகாணத்தில் உள்ள மொத்தம் 15 பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) மற்றும் சபை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட…
  • தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்
    Spread the love         தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையைச் சுற்றியுள்ள பல கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று (27) பிற்பகல்…