அடுத்த ஆண்டிலிருந்து இலகுவான புலமைப்பரிசில்
Posted in இலங்கை செய்திகள்

அடுத்த ஆண்டிலிருந்து இலகுவான புலமைப்பரிசில்

அடுத்த ஆண்டிலிருந்து இலகுவான புலமைப்பரிசில்

அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. மாணவர்களின்

எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வில்

அமைச்சர் அமைச்சில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் மாணவர்கள் தேர்வில் 100% மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

அடுத்த ஆண்டிலிருந்து இலகுவான புலமைப்பரிசில்

“மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30% மற்றும் தரம் 4 மற்றும் 5 இல் வகுப்பறையில்

நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30% பெற வேண்டும், இதற்காக மாணவர்களின் தொடர்ச்சியான வருகை இருக்க வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

ஆசிரியர்கள் பக்கச்சார்புடன் நடந்து கொள்வார்கள் என்று சில பெற்றோர்கள் விமர்சிக்கலாம், ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு இடமில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சிறந்த நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்.

பாடசாலை வளர்ச்சி அமைப்புகள் வகுப்பறைகளில் மாணவர்களை கண்காணித்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

சிறந்த கல்வியைக் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்ட பின்லாந்திலும் பாடசாலைகளில் தரம் 9 வரை வகுப்பறை மட்ட மதிப்பீடுகள் மட்டுமே

மேற்கொள்ளப்படுவதாகவும் தரம் 9 முதல் மாணவர்கள் பரீட்சை மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழில் சீனியை பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக

நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அந்நிலையில் சீனியை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறானவர்களை நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் தெரிவித்தார்.

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டு பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பால் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான பல்துறை தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு

செயலமர்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம, இலங்கையில் கர்ப்ப காலத்தில் அதிகளவாக பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர் என தெரிவித்தார்.

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இந்த நிகழ்ச்சியானது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி

பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி திருமதி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இந்தத் திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) பாலின ஆலோசகர் திருமதி ஸ்ரீயானி பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆலோசகர் கலாநிதி லக்ஷ்மன் சேனாநாயக்க ஆகியோர் பாலியல் மற்றும்

பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை விரிவாகக் கூறினர்.

செயலமர்வில் பங்குபற்றிய தரப்பினர் இந்த தேசிய செயற்திட்டத்திற்கு தமது புதிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

சிரியா எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சிரியா எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்

சிரியா எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்

சிரியா நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் குழுக்கள்
கடும் ஏவுகணை மீது தாக்குதல் .

இஸ்ரேல் எதிரிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக
தாக்குதலை நடத்திய ஈரானிய போராளி குழு அறிவித்துள்ளது .

ஹமாஸ் தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,

வீடியோ

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு337 மில்லியன்வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு337 மில்லியன்வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி SDR 508 மில்லியன்களாகும்.

இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது

வீடியோ

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பெரும் கடத்தல் நடவடிகை ஒன்று முறியடிப்பு ராமநாதபுரம் பகுதியில் இலங்கையர்கள் கைது .

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்ற சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரை களை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடியோ

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் எதிரி முகாம்கள் சிதறின .

தமது துல்லியமான ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் இராணுவத்தின் படை நிலைகள் முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ,ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் சிதறிய எதிரி முகாம்

தாக்குதல் நடத்திய காணொளியை வெளியிட்டு, தமது தாக்குதல் உண்மை என்பதை காண்பித்துள்ளன .

அந்த தாக்குதல் காணொளியில் தாக்குதல் நடத்த பட்ட எதிரி முகாம் பகுதி எரிகின்ற காட்சிகள் ,அதனால் எழும் புகைமூட்டம் காணப்படுகிறது .

அதுவே தமது தாக்குதல் துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ,அதனால் எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை ஹஸ்புல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

உக்காரனுக்கு அமெரிக்கா 200 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குகிறது

வெள்ளை மாளிகையால் இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யாவை முற்றாக அழித்துவிட வேண்டும் என ஆசை படும் அமெரிக்கா ஆசையில் மண்ணை வாரி போட்டு ஓடவிட்டு அடித்து கொண்டிருக்கிறது ரஷ்யா .

உக்ரைனுக்கு 200 மில்லியன் ஆயுதங்களை வாழங்கும் அமெரிக்கா

30 க்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாக கூடி ரஸ்யாவை தகர்த்த பொழுதும் ,முடியாமல் திணறி வருகின்றன

ரஸ்யாவின் நண்பனாக ஈரான் ,வடகொரியா முன்னிலை வகித்து உதவி வருகின்றன .

தற்போது ஈரான் ஆயுதங்களே அமெரிக்கா மேற்குலக நாடுகளுக்கு உக்ரைன் போரில் சிம்மா சொப்பனமாக மாறி வருகின்றன என்பதே ஈரான் வெற்றியாக காணப்படுகிறது ..

வீடியோ

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ,அடியின் அகோரத்தில் தப்பி ஓடிய எதிரிகள் படைகள் .

எதிரி விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்ததாக தெருவிக்கும் இஸ்ரேல் இராணுவம் அவ்வாறு நுழைந்த எதிரி விமானங்கள் யாவும் தமது அயன் டோம் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஓடிய எதிரிகள்

ஆனால் தாக்குதலை நடத்திய தரப்போ தமது விமானங்கள் துல்லியமாக எதிரிகளை தாக்கியதாக காட்சிகளை வெளியிட்டு இஸ்ரேல் பொய் பரப்புரையை முறியடித்துள்ளன .

அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தமது இழப்பை ஏற்று கொள்ள முடியாத உளவியல் நிலையில் சிக்கியுள்ளதது .

இதனை அவர்கள் தெரிவிக்கும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது .

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்


ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்|வெடித்த எதிரி முகாம்

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகள் விமானங்கள் மூலம்
அதிரடி தாக்குதல், வெடித்த எதிரி முகாம் .


பெரும் சேதங்கள் என ஹிஸ்புல்லா அறிவிப்பு

வீடியோ

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

ஹமாஸ் எதிரிகள் முற்றாக அழிக்கபட்ட பின்னர் போர் முற்றாக முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.

ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்

காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.

அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன்.

மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.

நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.

அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.

கடந்த சில நாட்களாக எதிரிகளான ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது அந்த குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.

யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும்.

ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.

மரண அடி வாங்கியும் வலிக்கல என்கிறார்களே .சப்பா யூத கற்பனைக்கு அளவே இல்லை போங்க .

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்ற பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சந்தேகநபரான பிக்கு நாளை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு .

வீடியோ வருகின்றனர்

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதி தான்தோன்றிதனமாக அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் தலையை நுழைக்கின்றார்.

இது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். இதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது .

இவ்வாறு சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பேராசிரியர் ஜி. எல். நாவல சுகந்த ஜனதா சபையின் பிரதான காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர்,.

தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்திற்கு உள்ளே தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்கு உள்ளே தாக்குதல்


இஸ்ரேல் இராணுவத்திற்கு உள்ளே தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்திற்கு உள்ளே அதே சொந்த இராணுவம் தாக்குதல்
பல இராணுவம் உயிரிழப்பு .

இஸ்ரேல் சீருடையில் ஹமாஸ் ஏற்படுத்திய குழப்பம்,ஹமாஸ் என படைகைளை அதே இராணுவம் போட்டு தள்ளியுள்ளது .

வீடியோ

கவுதி தாக்குதலில் எரியும் எதிரி கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கவுதி தாக்குதலில் எரியும் எதிரி கப்பல்


கவுதி தாக்குதலில் எரியும் எதிரி கப்பல்

கவுதி படைகள் எண்ணெய் டேங்கர் கப்பல் மீதுஏவுகணை தாக்குதல் .
எதிரி தாக்குதலில் எரியும் கப்பல்.


சொல்லி தாக்கும் எதிரிகள் . அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா,

வீடியோ

ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி


ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி

ஈரானுக்குள் பாரிய குண்டு வெடிப்பு ,
இஸ்ரேல் மொசாட் சதி .

ஈரான் ஹமாஸுக்கு உதவியதற்கு மொசாட் புரிந்த வேலை .

ஈரான் பதிலடி வழங்குமா

வீடியோ

ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி
ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி
ஈரானுக்குள் பாரிய வெடிப்பு மொசாட் சதி
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, அலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் போக்குவரத்து நடைமுறைகளை மீறி உள் வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

கொழும்பில் தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும்,இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை

மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து அநீதி சஜித் பிரேமதாச

இந்நடவடிக்கை தவறானது என்றும்,ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும்,இந்த பதிவு முறைக்கு குறித்த

நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,இதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை

நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி செல்வராசா கஜேந்திரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி நியூஸ்

சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி

சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி

சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி ,மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக்குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில்

கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி. .யான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதிஉதவி செய்கின்றதா?இந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா? என கேள்வியெழுப்பினார்.

சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி செல்வராசா கஜேந்திரன்

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன

அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

போரால் அழிக்கப்பட்ட தேசத்தில்

போரால் அழிக்கப்பட்ட எமது தேசத்தில் விவசாயத்தை கட்டி எழுப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு,கிழக்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக பிரகடனப்படுத்தி விசேடமான நிதி ஒதுக்கீடுகள் மூலமும்

விசேட சலுகைகளை அறிமுகப்படுத்தியும் விவசாயத்துறை, வர்த்தகத்துறை, கடற்தொழித்துறை, உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட .வேண்டும்

வடக்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற

நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில்

உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக்குத்தொடுவாய் மேற்கில் இருக்கக்கூடிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தமிழ் மக்கள்

வெளியேற்றப்பட்டார்கள் .அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

சிங்களவர்கள் குடியேற்றம்

அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். முந்திரிகைக்குளம், ஆமையன்குளம்,

அரியகுண்டான் குளம் ,சிலோன் தியேட்டர் உள்ளிட்ட குளங்கள் மிகவும் வளமான விவசாய நிலங்களையுடைய குளங்கள்.

இந்தப்பகுதிகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டுள்ளதோடு அந்தப்பகுதிகளை போருக்கு பின்னர் அபிவிருத்தி செய்வதற்கானான 7000 மில்லியன் ரூபா துக்கப்பட்டது.

அபிவிருத்திக்காக ஒட்டு மொத்த வடக்கு மாகாணத்திற்கே இந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன் பிடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்க அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இந்திய தூதரகத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ சந்திப்பதற்கு வாய்ப்பு

ஏற்படுத்தி தர கடற்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்..பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

அவருடனான சந்திப்பு ஒன்றுக்கு ஏற்கெனவே இணங்கியதற்கு அமையவே விரைவில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன

அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்தியாவோடு பேச சார்ள்ஸ் நிர்மலநாதன் விருப்பம்

இந்தியாவின் கடல், இலங்கையின் கடல் இரண்டும் சரியான நேர் சீர் இல்லாததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசம் ,மன்னார் , கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ,திருகோணமலை போன்ற

மாவட்டங்களில் இருக்கின்ற மீனவர்கள் குறிப்பாக இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி, எமது மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தல், வளங்களை அழிப்பதும் நீண்டகாலமாக தொடர்கின்றது.

இது தொடர்பாக கடந்த வாரம் கடற்தொழில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கூட்டத்தில் ஆளும்,எதிர்க்கட்சி எம்.பிக்களினால் இவ்விடயம் தொடர்பில் இந்திய தூதுவருடன் தூதரகத்திலோ அவரை பாராளுமனற

கட்டிடத்துக்கு அழைத்தோ சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரப்பட்டது .அதற்கு அமைச்சும் இணங்கியது.எனவே அந்தசந்தர்ப்பத்தை அமைச்சு விரைவாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

வீடியோ