ஹமாஸ் தளபதி கனியாவின் மகன் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தளபதி கனியாவின் மகன் மரணம்

ஹமாஸ் தளபதி கனியாவின் மகன் மரணம்

ஹமாஸ் போராளிகளின் அமைப்பின் அரசியல் தலைவராக விளங்கி வரும் ஹாசன் கனியாவின் மகன் ஸ்மாயில் கனியா காசா பகுதியில் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

22 வயதான இஸ்மாயில் கனியா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளார் என அறிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் குறியில் இவர் நீண்டகாலமாக குறிவைக்க பட்டுள்ளார் .

கசிம் கனியா சிக்காத நிலையில் அவரது குடும்பத்தினரை குறிவைத்து இஸ்ரேல் வீழ்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்

அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ தளம் மீது வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு குழுவினர் நடத்திய துல்லியமான தாக்குதலில் ,அந்த முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினும் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உடனடி இழப்பு தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை .

சிரியா இராணுவ விமான தளமீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவ விமான தளமீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியா இராணுவ விமான தளமீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியா தலைநகரில் உள்ள al-Dimas airport இராணுவ விமான தளம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேலில் இருந்து பறந்து வந்த இரண்டு f 35ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டதில் ,அந்த விமான தளத்தின் ஓடு பாதைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சிரியாவின் தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் அறையொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .

மேலும் குறித்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர பரிசோதகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அப்போது கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார சபையில் ஆங்கில தட்டச்சராக பணியாற்றி வந்ததும், கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

1989 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட நாளில், இது தொடர்பான உறவு தனது கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த பெண் தனது கள்ளக்காதலரை அத்துருகிரிய, வெல்லவயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அங்கு கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து பீப்பாயிலிட்டு கிணற்றில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தம்பதியினர் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தம்பதியருக்கு 2019 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையைச் செய்த தம்பதியை எந்த பொலிஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், கொலையைச் செய்த பெண், பண்டாரகம பமுனுகம பிரதேசத்தில் வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி விசாரணை அதிகாரிகள் நேற்று (09) அவரை கைது செய்தனர்.

தற்போது, ​​ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண்ணுக்கு 64 வயதாகும்.

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

பிணை வழங்கப்பட்ட பின்னர் கடந்த 35 வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தம்பதியினர் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் தாமும் கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கணவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சந்தேகநபரான பெண் இன்று (10) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் சேறும் பூசம் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறையில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் காலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

“சிஐடியினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது. சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.

அவர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போதே கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு

பரப்புகின்றனர். அதனால் தான் இந்த ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசாங்கங்களை கவிழ்க்க வேண்டுமானாலும் இந்த

சமூக ஊடகங்கள் ஊடாக சேறு பூசுகின்றன. இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்கள் மட்டுமே பிரச்சினையாக அமையும்” என்றார்.

இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு

பிராந்திய ரீதியாக இலங்கையில் இருதய நோய் பதிவாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக்கொலை

தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக்கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இக்கொலை நேற்று (12) சிறிபாகம – தெற்கு மல்கெல்ல – தவனாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மல்வத்தை – இலுக்வத்தை – கிலிமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
Posted in இலங்கை செய்திகள்

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 42,768 ஆகும்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிய ஹமாஸ் முக்கிய தளபதி|காப்பாற்றிய கடவுள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிய ஹமாஸ் முக்கிய தளபதி|காப்பாற்றிய கடவுள்


இஸ்ரேல் தாக்குதலில் தப்பிய ஹமாஸ் முக்கிய தளபதி|காப்பாற்றிய கடவுள்

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிய ஹமாஸ் இராணுவத்தின் முக்கிய தளபதி ,
இலக்கு தவறி வெடித்த இஸ்ரேல் ஏவுகணை ,கடவுள் தளபதியை காப்பாற்றிய கடவுள் ,

வீடியோ

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு


இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் ஆட்சி முடிவுக்கு வருகிறது என ஈரான் அதிரடி அறிவிப்பு ,
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த போகிறதா என்கின்ற பதட்டத்தை இது ஏற்படுத்தி நிற்கிறது

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

காணி தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை

புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியா, வெகந்த பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டில் நேற்று (09) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்


எரியும் விமானம்| இஸ்ரேல் தாக்குதலில் 10 000 மக்கள் காயம்

வீழ்ந்து எரியும் விமானம் ,இஸ்ரேல் தாக்குதலில் 10 000 பாலஸ்தீன
மக்கள் காயம் அகதிகளாக எகிப்து நோக்கி சென்ற மக்களை துரத்தி தாக்கும் இஸ்ரேல்.

வீடியோ

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு
Posted in இலங்கை செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு


இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் பலரை ,அந்த முகாமை
அழித்து உயிரோடு சிறை பிடி செல்லும் போர் படைகள் .


தமது படைகள் சிறை பிடித்து செல்ல படுவதை இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை .

வீடியோ

இராணுவம் கைது வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

பாலஸ்தீன ஆக்கிமிக்க பட்ட பகுதியில் அமைய பெற்றுள்ள
இஸ்ரேல் இராணுவ முகங்களை இலக்கு
வைத்து இராக்கில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இரான் தயாரிப்பு பட்ட வாகையான ஏவுகணைகளை பயன் படுத்தி
ஈராக் போராளிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஈராக் ஏவுகணைகள்

காசா மக்கள் மீது எதிரி படைகள் நாடதி வரும் மிலோசைத்தனமான
தாக்குதல்களுக்கு பதிலடியாகவே எமது
ஏவுகணைகள் பாய்ந்து வெடித்துள்ளதாக பகைமுடித்த வெற்றிக்களிப்பில் ,தாக்குதலை நடத்திய போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர் .

எதிரிகளின் இராணுவ முகாம்கள் எரிகின்ற காட்சிகளை அவை வெளியிட்டு தமது தாக்குதல் இலக்கு தவறாது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினு இசுரேல் தப்பில் இருந்து இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

வீடியோ

இஸ்ரேல் முகம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்


இஸ்ரேல் முகம்களை உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 600 ஏவுகணைகள்

இஸ்ரேல் வடக்கு இராணுவ முகாம்களை
உடைத்தெறிந்த ஹிஸ்புல்லா 30 ஏவுகணைகள் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் .


பாலஸ்தீன இஸ்ரேல் போர் தீவிரம்

வீடியோ

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டு அவர்கள் விரட்டி அடிக்க பட்டனர் .

மக்கள் மேடைக்கு அருகில் சென்று இந்தியா இசை மற்றும் நடிகை நடிகைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பெரும் குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டது

அதனால் அந்த நிகழ்வு தொடர்ந்து நடத்திட முடியா நிலை காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் கரிகாரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விரட்டிய மக்கள்

இலங்கை வருகை தரும் இந்திய படைப்பாளிகள் சிலரது கருத்துக்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் விளங்கிய நிலையில் ,இந்த நிகழ்வு போலீசாரால் பாதுகாப்பு கருதி நிறுத்த பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது தொடர்பான காணொளிகள் சில வெளியக பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன