ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை


ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது ,
கப்பல்களில் இருந்து ஏவும் நீண்ட தூர ஏவுகணை
சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் உளவுத்துறை முகாம் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் உளவுத்துறை முகாம் அழிப்பு


ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் உளவுத்துறை முகாம் அழிப்பு

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய
உளவுத்துறை கட்டளை முகாம் அழிப்பு ,
தேடி அழிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள் ,

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவியின் தவறான முடிவால் தவிக்கும் குடும்பம்

மாணவியின் தவறான முடிவால் தவிக்கும் குடும்பம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில், சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட்


ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட்

ஹமாஸ் இராணுவ தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின்
இரு தளபதிகள் அவுட் என தெரிவிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் அரங்கில் அதிக தளபதிகளை இசுரேல் இழந்துள்ளது குறிப்பிட தக்கது

வீடியோ

அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்


அமெரிக்கா கடல்படைக்குள் ஆவணங்கள் திருடிய ஈரான்|சிக்கிய தாக்குதல் திட்டங்கள்

அமெரிக்கா கடல்படைக்குள் நுழைந்து அவர்கள் கணணிக்குள்
வைக்க பட்டிருந்த ஆவணங்கள் திருடிய ஈரான்.


சிக்கிய முக்கிய தாக்குதல் திட்டங்கள்

வீடியோ

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் கப்பல்


ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் கப்பல்

ஹவுதி இராணுவம் நடத்திய கப்பல் ஏவுகணை தாக்குதல் செங்கடலில்
எரிகிறது கப்பல் .

செங்கடல் கப்பல் போக்குவரத்து மீளவும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மீகொட பொருளாதார மையத்தில் துப்பாக்கிச் சூடு

மீகொட பொருளாதார மையத்தில் துப்பாக்கிச் சூடு

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் நேற்று (11) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்

மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை இந்தியா சென்றுள்ளார்.

இன்று (12) அதிகாலை 2.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டது.

இந்தியாவின் விசேட அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்திய விஜயத்தின் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு

லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு

லண்டன் தேம்ஸ் நதியில் இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

கடந்த மதம் காணாமல் போனவர்களே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த மாரணம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோகிராம், 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 80 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 74 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

சசினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை – தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால் தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது.

அதனால் தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ். மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள்.

நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004 ஆம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக் கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

சுசினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள – பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி.

யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை.

அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம் என தெரிவித்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி

புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி

புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மாணவன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொல்லிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தம்பலகமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 40 தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பறந்து வந்த ஈரான் தயாரிப்பு தற்கொலை விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

ரஸ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பதிலடி தாக்குதலாக பெரும் தொகையில் தற்கொலை விமான தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ஹமாஸ் கமாண்டோ தாக்குதல் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் கமாண்டோ தாக்குதல் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு


ஹமாஸ் கமாண்டோ தாக்குதல் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

ஹமாஸ் கமாண்டோ படை தாக்குதல்,
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு.

வீடியோ

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உன்னால என் வாழ்வு போச்சு இஸ்ரேலை திட்டிய பைடன்

உன்னால என் வாழ்வு போச்சு இஸ்ரேலை திட்டிய பைடன்

இஸ்ரேல் காசா மீது புரிந்த இனப் படு கொலையை அடுத்து அமெரிக்கா ஆளும் அதிபர் பைடனுக்கு எதிராக மக்கள் பிரச்சார மேற்கொண்டு வருவதால் இஸ்ரேல் பிரதமை பைடன் திட்டியுள்ளார்

உனக்கு ஆதரவு வழங்க முயன்று அண்ணன் பைடன் ஆட்சியை இழந்து நிக்கிறார் என புலம்பியுள்ளார் .

அப்பாவி மக்கள் கண்ணீரும் அழு குரலும் உங்களை சும்மாவா விடும் என்பதற்கு இந்த புலம்பல் ஒரு உதாரணம் என்பது இங்கே குறிப்பிட தக்கது

இஸ்ரேலுக்குள் 1000 தாக்குதல் நடத்தி அலறவிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் 1000 தாக்குதல் நடத்தி அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்குள் 1000 தாக்குதல் நடத்தி அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்குள் 1000 தாக்குதல் நடத்தி அந்த நாட்டு இராணுவத்தை
அலறவிட்ட ஹிஸ்புல்லா ,ஹஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால்
நிலை குலைந்த எதிரி படைகள்

வீடியோ

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

எகிப்து ரபா எல்லையில் குழுமி நின்ற அகதி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியகியுள்ளனர் ,

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த பகுதியில் தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது .

இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

ஹமாஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேலியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேலியர்கள்

ஹமாஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேலியர்கள்

ஹமாஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேலியர்கள்
இஸ்ரேலிய மொசாட் உளவுத்துறையால் கைது.

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி

அமெரிக்கா Mojave Desert பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் .

குறித்த உலங்குவானூர்தியில் இரண்டு சிப்பந்திகள் உள்ளிட்ட நான்கு பயணிகள் பயணித்துள்ளனர் ,இதன் போதே உலங்கு வானூர்த் வீழ்ந்து நொறுக்கியது .

அமெரிக்கா லாஸ் வேகா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த உலங்குவானூர்தி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்காவில் தொடராக இவ்விதமான் விமான விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .