அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம் ,அமெரிக்காவில் திடீர் தாக்குதல் எட்டு பேர் காயம் என அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.
45 வயது உடைய முகமட் என்கின்ற நபர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதலையை நடத்தியவர் பலஸ்தீன மக்கள் ஆதரவான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணை
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவை இடம் பெறும் ஆயுத துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரத்தினால் ,நாள்தோறும் பல மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றனர்.
ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவம்
24 மணித்தியாலத்தில் இடம்பெற்று ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவமாக .இது அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா ,தேசிய வரிவாரம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஜனாதிபதி அனுரா குமர திசை நாயக்கா .
நாட்டில் இடம்பெற்று வருகின்ற பொருளாதாரச் சரிவினை அடுத்து ,மக்கள் மத்தியில் வரியினை அதிகமாக அறவிட்டு அதனூடாக, நாட்டை கட்டி எழுப்புகின்ற நடவடிக்கைகள் இவர் ஈடுபட்டுள்ளார்.
நாள்தோறும் விலைவாசிகள் அதிகரிப்பு
நாள்தோறும் விலைவாசிகள் ,அதிகரித்து வரும் நிலையிலும் மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்ற நிலையிலும்,
உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற வேளையில் தற்பொழுது ,மக்கள் மீது வரியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்.
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்ட அரசு
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இறக்குமதியில் கவனம் செலுத்தி வரும் அனுரா ஆட்சி எப்படி தனது நாட்டினுடைய, வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை, எப்படி நிமித்த முடியும்..? ஆனால் இன்றைய தனது அமைச்சர் சபையை கூட்டி தற்போது வரி விதம் தொடர்பான கூட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
சிந்தனையற்ற ஒருவராகவும் நாட்டை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பது தொடர்பாக தெரியாத ஒருவராக அனுரா ஆட்சி திணறிவு வருகிறது.
8 மாதத்துக்கு தள்ளாடும் அனுராவின் ஆட்சியாகவே இது காணப்படுகிறது .இது அனுரா ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் தோல்வியாக நோக்கப்படுகிறது.
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கல பகுதியில் காணி ஒன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் பெண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக் குத்து தாக்குதலில்
இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடித்த நிலையில் இருந்த பெண். வேறு ஒரு கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் இவரை குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
கள்ளத்தொடர்பு காரணமாக கொலை
கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்த பெண் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான கத்திவிட்டு தாக்குதலும் குத்துச்சம்பவங்களும் கள்ளத்தொடர்புகளால் ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் வழி மாறி சென்று சென்று விட்டால் அதை விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதற்கு மறுத்து ,அவர்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கையில் , இவ்வாறான கூலி குழுக்களை ஈடுபட்டுள்ளது வேதனையை பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
தப்பி ஓடிய 2983இராணுவம் கைது ,தப்பி ஓடிய ராணுவத்தினரை மூல கைது செய்ய நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன அதன் அடிப்படையில் தற்போது 2983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில், அவர்களது தாக்குதளுக்கு ஈடு கொடுக்க முடியாது, சிங்கள படைகளின் கூலிப்படைகளாக வேலை செய்த ராணுவ சிப்பாய்கள் உயிரை பாதுகாக்க தப்பி ஓடினர்.
இவ்வாறு தப்பியோடிய ஐம்பதாயிரம் படைகளில் ,தற்பொழுது மீளவும் 3000 படைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ,இலங்கை காவல்துறை தெரிவிக்கிறது.
பலமுறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டும் மீளவும் படையில் வந்து சேர மறுத்த ராணுவத்தினரே தற்பொழுது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள்
படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள் வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதான தகவலும் வெளியாகி இருக்கிறது.
புலிகள் சுத்தி வளைத்து திடீர் தாக்குதல் நடத்துவதால் உயிர் பயத்திலிருந்து ராணுவத்தினர் இவ்வாறு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போத வஸ்து குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த முருகனை எடுத்து மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது அந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திலிருந்து குறித்த நபர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூடு
ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்த முற்பட்டபோது துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சூட்டை நடத்த வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் போலீசார் தற்போது விசாரணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதியில் முதலாம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது .
இதை அடுத்து குறித்த பகுதியில் தற்போது மீளவும் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கி வேலை செய்யாததினால ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்ற விடயம் மகழ்ச்சியை தருகிறது .குறிப்பிடத்தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை
இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக
அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி முதன்முதலாக யாழ் மாநகர சபையில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல்
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி சனிக்கிழமை (31) வெளியிடப்பட்டது.
குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
யாழ் மாநகரசபையின் முதல் முஸ்லீம் பெண்
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத் தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக 2025 ஏப்ரல் 1 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான முயற்சியாக,
இது அனைத்து வயது பிரிவிலுமுள்ள பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மாற்றமாக, தேசிய வாழ்நிலை ஊதியம் (National Living Wage – NLW) இப்போது 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், 23 வயதுக்கும் மேல் இருந்தவர்களுக்கே இது பொருந்தியது. இம்மாற்றம் குறிப்பாக வேலைவாய்ப்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கும் இளைய பணியாளர்களுக்கான வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
புதிய ஊதிய விகிதங்கள், குறிப்பாக இளம் ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்காக, குறிப்பிடத்தக்க அளவில் உயர்வாக உள்ளன. கடந்த ஒரு தசாப்தமாக உள்ள மிகப்பெரிய வருடாந்திர ஊதிய உயர்வுகளில் இது ஒன்றாகும்.
இதன் மூலம், வயதுப்பிரிவுகளுக்கு இடையிலான ஊதிய வேறுபாடுகள் குறைக்கப்படும் மற்றும் பணியாளர்களுக்கு நிதி நிலைத்தன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 வயதுக்கும் மேற்பட்ட பணிநிரந்தர ஊழியர்களுக்கு, புதிய ஊதிய விகிதமான £12.21 என்ற அடிப்படையில், வருடத்துக்கு சுமார் £24,441 சம்பாதிக்கலாம்.
இது 2024-இன் £22,918 உடன் ஒப்பிடும்போது முக்கியமான உயர்வாகும்.
இதனால் என்ன நன்மை
வாடகை, உணவு மற்றும் மின்சாரம் போன்ற செலவுகளை சந்திக்க அதிக வருமானம்
பகுதி நேர மற்றும் மணி அடிப்படையிலான வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு நிதி சுதந்திரம்
உண்மையான வாழ்நிலை ஊதியத்தை நோக்கி ஒரு முன்னேற்றம் (இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர்)
தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் மற்றும் சவால்கள்
பணியாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், வணிகத் துறைக்கு—முக்கியமாக சில்லறை வணிகம், உணவகம், மற்றும் பராமரிப்பு சேவைகள்—இதனால் வேலைச்செலவுகள் உயரும்.
நிறுவனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் சவால்கள்:
சிறிய வணிகங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்
விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்
ஏப்ரலுக்கு முன் HR மற்றும் Payroll அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை
நியாயமாக நடத்த நிறுவனங்கள் செய்ய வேண்டியவை:
ஊழியர் ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யவும் மாற்றம் செய்யவும்
Payroll அமைப்புகளை புதுப்பிக்கவும்
ஊழியர்களுக்கு புதிய ஊதியங்களை பற்றி தெரிவிக்கவும்
இந்த மாற்றங்களைச் செயல்படுத்த தவறினால், ஊதியம் குறைவாகக் கொடுத்த ஒவ்வொரு ஊழியருக்கும் £20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சட்ட நடவடிக்கைகளும் ஏற்படலாம்.
ஊதிய உயர்வுக்கான அரசின் நோக்கம்
இந்த ஊதிய உயர்வு, அரசு மேற்கொள்ளும் வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
குறைந்த வருமானம் பெறுபவர்களை ஆதரித்தல்
இளம் பணியாளர்களுக்கு அடிப்படை செலவுகளை சந்திக்க உதவுதல்
மக்களின் செலவுத்திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்
குறிப்பாக 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களின் ஊதிய உயர்வு, இளம் மக்கள் வேலைக்கு வர ஊக்குவிப்பதையும், நலத்திட்டங்களில் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணியாளர்கள் செய்ய வேண்டியவை
உங்கள் ஊதிய உயர்வு சரியாக அமலாகிறதா என்பதை உறுதி செய்ய:
ஏப்ரல் மாதத்தில் உங்கள் Payslip-ஐ சரிபார்க்கவும்
உங்கள் ஊதியம் குறைவாக இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால் Acas (0300 123 1100) அல்லது Citizens’ Advice-ஐ தொடர்புகொள்ளவும்
உங்கள் கூடுதல் வருமானத்தை சீராக பயன்படுத்தவும்: முக்கிய தேவைகள், சேமிப்பு, கடனை அடைதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கவும்
யாருக்கு புதிய ஊதிய உயர்வு பொருந்தாது?
புதிய ஊதிய உயர்வுகள் கீழ்கண்டவர்களுக்கு பொருந்தாது:
சுயதொழிலாளர்கள்
தன்னார்வலர்கள் மற்றும் சம்பளம் இல்லாத பயிற்சி ஊழியர்கள்
ஆயுதப்படை உறுப்பினர்கள்
குடும்ப உறுப்பினர்கள் சொந்தமாக நடத்தும் வணிகத்தில் பணிபுரிபவர்கள்
உங்களுக்கு இந்த புதிய ஊதியம் பொருந்துகிறதா இல்லையா என்பது குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் HR பிரிவை அல்லது தொழிலாளர் உரிமை அமைப்பை தொடர்புகொள்ளவும்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம் அண்மை நாட்களாக வேகமாக பரவிவரும் கொரொனா தொற்று இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபு
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை.
அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மீண்டும் முகக்கவசம்
அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு
ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…
கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…
நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்…
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.
காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

உன்னை நினைக்கையில் புதிய காதல்பாடல்
உன்னை நினைக்கையில் புதிய காதல்பாடல்
உன்னை நினைக்கையில் புதிய காதல் பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | அருளினி லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – அருளினி லண்டன்
-தயாரிப்பு – சந்தன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய ஒன்பதாவது பாடலாசிரியர் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
இணைப்பில் அழுத்தி காணொளி பார்க்க
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும் ,புடின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ தயாராக இருக்க வேண்டும் என ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செலன்ஸ்கி, $7 பில்லியன் மதிப்பிலான தாக்குதலில் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமானங்களை அழித்த அதிரடியை
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க” நடவடிக்கை என புகழ்கிறார்.**
இன்று உக்ரைன் ஒரு முன்னெப்போதும் இல்லாத அளவிலான ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய வான்படைகளில் ஒன்றை நொறுக்கிய பெரும் வெற்றியை பெற்றது.
“ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” எனக் குறியிடப்பட்ட இந்த நடவடிக்கையில்:
40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் – இதில் Tu-95, Tu-22 போன்ற துருவ (strategic) பாம்பர்கள் மற்றும் A-50 கட்டளை விமானங்கள் அடங்கும் – அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமடைந்தன.
இது ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமான படையை அழித்தது என கூறப்படுகிறது. மொத்த சேத மதிப்பு: $7 பில்லியன் (அமெரிக்க டாலர்)
2,500 மைல்கள் தூரம் வரை சென்று தாக்கும் திறனை கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேரடியாக கண்காணித்ததாகவும், இது 18 மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலன்ஸ்கி இதனை:
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதல்”
“உக்ரைனின் திறனையும் மனவலிமையையும் உலகிற்கு காட்டும் நிகழ்வு”
என்று புகழ்ந்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா மோதல் வெடித்த தற்கொலை விமானங்கள்
இத்தாக்குதலுக்குப் பதிலாக, ரஷ்யா 472 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளை உக்ரைனில் நோக்கி அனுப்பியது.
இதனால் குறைந்தது 12 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்:
“நேட்டோ (NATO) புடினின் தாக்குதலிற்கு தயாராக இருக்க வேண்டும்.”
“ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகள், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நேரடி அல்லது மறைமுக ஆபத்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும்”
என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி
முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி
முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை
இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்
மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.
மாஞ்சோலை வைத்தியசாலை
இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று
கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று
கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்ளின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு. மத்திய பிரிவு சிங்காரவத்தை ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர்.
காற்றுடன் வீசிய மழைகாரணமாக பொகவந்தலாவை எல்பட மேல்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்றின் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றமையினால்
அக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக 75 ஆண்களும் 75 பெண்களும் மற்றும் 50 சிறுவர்களும் உள்ளடங்குவதாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுகளும் பாதிக்கப்பட்டு சொந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு ஒரு தொகை பணமும்
நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட உள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.
மேலும், குறித்த பகுதியில் பாரி மரமொன்று சரிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தமையினால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக நோர்வூட் பிரதேச சபையின் களஞ்சியசாலையின் அறையின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த அறை முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

மிரட்டிய சீனா போர் வெடிகுமா
மிரட்டிய சீனா போர் வெடிகுமா
மிரட்டிய சீனா போர் வெடிகுமா ,அமெரிக்காவுக்கு சீனா கட்டம் எச்சரிக்கை ஒன்றை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.
தாய்வானுக்கு தீயை மூட்டி விடாதே ,அப்படி மூட்ட வந்தால் ,நீ மிகப்பெரும் சங்கடத்தை சாதிப்பாய் என ,சீனா பகிரங்கமாக அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்வான் சீனாவின் ஒரு பகுதி
தாய்வான் சீனாவின் ஒரு பகுதியாக .தற்பொழுது தொடர்ந்து சீனா தெரிவித்து வருகிறது.
அதனை அடுத்து தற்போது தாய்வானில் அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட நேற்று நாடுகள் குவிக்கப்பட்டு ,அங்கு போர் அரங்கத் திறப்பதற்கு தயாராக இருக்கின்றன.
இராணுவ ஆயுத உபகரண தயாரிப்பு மற்றும் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை, அமெரிக்காவை விட சீனா சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மிகப்பெரும் சாதனைகளை நாள்தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது .
கொரோன காலத்தில் ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டி அசத்தியது .
இவ்வாறு தனது பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ,தீவிர கவனத்தை செலுத்தி ,அபாய யுத்த நடப்பு நடவடிக்கை முதல் அனைத்தையும் இப்பொழுதே கணக்கு பண்ணிக் கச்சிதமாக செய்து வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் தாய்வானை மையப்படுத்தி ,சீனாவை தாக்கி தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர, அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் துடிக்கிறது.
உலகின் முதலாவது வல்லரசாக வருவதற்கு சீனா துடிப்பு
2050 ஆம் ஆண்டு தங்களை உலகின் முதலாவது வல்லரசாக சீனா ஆழ துடித்துக் கொண்டிருக்கிறது .
ஆண்டு நெருங்க நெருங்க அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கி ,அதனை தடுக்கும் நடவடிக்கை, புதிய நாணயத்தையும் ரஸ்யா சீனா இணைந்து ஆரம்பித்திருக்கிறது .
இவ்வாறான பல்வேறு கூட்டுமனை தாக்குதலின் எதிரொலியாகவே தற்போது சீனா நேரடி அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இது ஆப்பிரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூன்று நேரடி யுத்தமாக பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம் தாய்வான் சீனாவுக்கு அமெரிக்கமான நீண்டதொரு ஆடுகளத்தையும் .மூன்றாம் உலகப்போரை தொடக்கும் ஒரு தாக்குதலாக இருக்குமா என்கின்ற ,சந்தேகத்தை இதன் ஊடாக சீனா விடுத்திருக்கிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் போலீசார் சுட்டுக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
கலிபோனியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்பை எடுத்து விரைந்து சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
பொழுது அவர் சம்பவ இடத்திற்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீசார் பலியான சம்பவம் காவல்துறையினருக்கு இடையில் , பரபரப்பையும் பிதியை ஏற்படுத்தியுள்ளதுடன்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத விற்பனை
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 635 மில்லியனுக்கு ஆயுத விற்பனை இடம்பெற்று வருகிறது.
அமெரிக்காவுக்கு உள்ள இடம் பெற்று வருகின்ற இந்த ஆயுத விற்பனை காரணமாகவே ,அதிகமான ஆயுதப் பாவனை விற்பனையாகி வருவது அம்பலம் ஆகியிருக்கின்றது.
வருமானம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுத கட்டுப்பாட்டை தடுக்க அரசு மறுத்துவருவதாக குற்றம் சுமத்த படுகிறது .
இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கொடுத்த சம்பவ தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும் பொழியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் போலீசார்வித்துள்ளனர் .
யூத நாட்டின் மீது காசாவிலிருந்து பல ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் மழைபோல் பொழிந்ததாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் இந்த தாக்குதலினால் மீளவும் பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடும் யுத்தம் தொடந்து வருகிறது.
அப்பாவி மக்களை பலி கொண்டு வரும் யூத படைகளுக்கு எதிராக .பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிரத்தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
பதிலுக்கு பதிலடி என்ற வகையில் .ஹவுதி அன்சலல்லா கடல் வழி வழியாக தடுக்க, தரை வழியாக ஹமாஸ் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்த தாக்குதலினால் தற்பொழுது யூத படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற பொழுதும். சோர்ந்து விடாமல் அவர்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலையின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
யூத படைகள் தாக்குதல் நடத்துவது என்பது உண்மைதான் ,ஆனால் இறந்து கொண்டிருப்பது போராளிகள் அல்ல ,அப்பாவின் மக்கள் என்பதுதான் கவலையான விடயமாகிறது.
இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு, ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

காசாவில் 15 மக்கள் படுகொலை
காசாவில் 15 மக்கள் படுகொலை
காசாவில் 15 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.யூத படைகள் தொடர்ந்து நடத்திவரும் அதிவக தாக்குதரினால் அப்பாவி பலசின மக்கள் பலியாகி வருகின்றனர்.
சொல்ல நாத துயர்களை சந்தித்து வருகின்ற அப்பாவி பொதுமக்கள் மீது வலிந்து போரை திணித்து மக்களை படுகொலை செய்து வெறியாட்டம் ஆடி வருகிறது, இஸ்ரேல் அரச பயங்கரவாத ராணுவம் .
சமாதானம் பேசி வந்து கைதிகளை விடுவித்து பின்னர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ,வன்கொடுமை தாக்குதலை நடத்தி தொடர் நடத்தி வருகிறது.
இவ்விதம் கடந்த 24 மடத்தியாலத்தில் 15 பேர் பலியாகியும் ,நூத்துக்கு மேற்பட்டவர் காயவைத்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
யூத படைகள் தொடரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் விதித்துள்ளது .
அந்த யுத்தத்தை தடுக்காது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே கவலைக்குரிய விடியமாக உள்ளதாக மக்கள் மன்றங்கள் பேசிக் கொள்கின்றன.