சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு. மத்திய பிரிவு சிங்காரவத்தை ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர்.
காற்றுடன் வீசிய மழைகாரணமாக பொகவந்தலாவை எல்பட மேல்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்றின் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றமையினால்
அக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக 75 ஆண்களும் 75 பெண்களும் மற்றும் 50 சிறுவர்களும் உள்ளடங்குவதாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுகளும் பாதிக்கப்பட்டு சொந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு ஒரு தொகை பணமும்
நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட உள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.
மேலும், குறித்த பகுதியில் பாரி மரமொன்று சரிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தமையினால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக நோர்வூட் பிரதேச சபையின் களஞ்சியசாலையின் அறையின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த அறை முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்









