ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Spread the love

ஈழத்தமிழ் சினிமாவின் திரைகடலோடியை தமிழர்தேசம் இழந்துவிட்டது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த

ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர் சினமாவின் அடையாளங்களில் ஒன்றான மூத்தகலைஞரனான திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்கள்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரின் மறைவு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழ் சினிமா மீது தீராத வேட்கையும், காதலும் கொண்ட திரு.நவரட்ணம் கேசவராஜா அவர்களது மறைவு எம்மை கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த

ஓர் வேட்கையாளனை, நாட்டுப்பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருந்த ஓர் ஆளுமை. கடலோரக்காற்று, பிஞ்சுமனம், தாயகமே தாகம், மரணம் வாழ்வில் முடிவல்ல, திசைகள், வெளிக்கும் என போர்க்காலத்தில்

அன்னார் படைத்த படைப்புக்கள் ஒவ்வொன்றும், காலத்தை கடந்து நிற்கும் படைப்புக்கள் மட்டுமல்லாது வரலாற்றை பதிவு செய்த பெரும் ஆவணங்களாகவும் அமைகின்றன.

தமிழர் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இன்றைய இடர்நிலையிலும் ‘பனைமரக்காடு’ எனும் அன்னாரது சமீபத்திய

படைப்பு, அவர் கொண்டிருந்த வேட்கை எந்நிலையிலும் தணியாத ஒன்று என்பதனை எடுத்துக்காட்டியிருந்தது.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறிவினர்கள், நண்பர்கள், கலைஞர்கள் அனைவரது கரங்களையும்

இறுகப்பற்றிக் கொள்வதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply