Posted in Uncategorized

நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட பிரபலம்

நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட பிரபலம்

மலையாள திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ஜோமோன்

டி ஜான். இவர் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷின் எனை நோக்கி

பாயும் தோட்டா போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். அண்மையில்

வெளியான பாவக் கதைகள் எனும் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இவர்தான்.

ஜோமோன் டி ஜான், அன் அகஸ்டின்

இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அகஸ்டினின் மகளும்,

நடிகையுமான அன் அகஸ்டினை திருமணம் செய்து கொண்டார். காதலித்து

திருமணம் செய்து கொண்ட அவர்கள், தற்போது விவாகரத்து பெற்று பிரிய

முடிவு செய்துள்ளார்களாம். நடிகை அன்னிடம் இருந்து விவாகரத்து கோரி

ஜோமோன், நீதிமன்றத்தை நாடியுள்ளார். வருகிற பிப்ரவரி 9-ந் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000

லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்

லண்டன் ஈலிங் பகுதியில்நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில்

பாட்டி ஒன்று வைக்க பட்டுள்ளது ,இதில் எழுபத்தி இரண்டு பேர் கலந்து

கொண்டனர் ,அவர்கள் அனைவரையும் மடக்கிய போலீசார்

,ஒவ்வொருவருக்கும் சுமார் 800 படி தண்டம் அறவிட்டுள்ளனர்,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து

ஆயிரம் பவுண்டுகள் தண்டம் வழங்க பட்டுள்ளது ,14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் தவறின் அது 80 ஆயிரம் வரை அதிகரித்து செல்லும் ,

மக்களை ஒன்று கூடாதீர்கள் என தெரிவிக்க பட்டு சட்ட அமுலாக்கம்

பட்டுள்ள நிலையில் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்

லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்

நேற்று மதியம் மூன்று முப்பது மணியளவில் கிழக்கு லண்டன்

Hackney பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள்

அசீட் வீச்சு தாக்குதலை தொடுத்து அதன் பின்னர் கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்

ஆபத்தான நிலையில் மீட்க பட்ட வாலிபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

இதுவரை இந்த குற்ற செயலை புரிந்த எவரும் கைது செய்ய

படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்

இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்

இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 485 பேர் கடந்த 24

மணித்தியாலத்தில் பலியாகியுள்ளனர் , மேலும் 21,088 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல அமெரிக்காவில் 1,157 பேர் மரணித்தும் 78,230 பேர்

பாதிக்க பட்டும் உள்ளனர் ,தற்போது மக்களுக்கு தடுப்பூசி போட

பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இது எப்படி இருக்கு …?

இது எப்படி இருக்கு …?

வான் நிலவு வந்திருச்சு
வாசலில கைப்பிடிக்க
தேடி வந்த வெண்ணிலவே
தேற்றிடுவேன் முன்னிரவே

துள்ளி வரும் ஆசையை
துளிர் மீசை நறுக்கிவிடு
காலம் இதுவல்ல
காத்திரு நம்பிவிடு

என் மனதை புரியாம
ஏங் கிளியே போவதுவோ …?
முழுகாம நான் வரவோ
மூணு இலை வைத்திடவோ …?

தேதியை மறந்து இன்று
தேடி வந்த பாவப்புள்ள
நினைவில ஏது இருக்கு
நிஜமா சொல்லி விடு

சிக்கனமா நீ இருந்து
சில்லறையை கொட்டிவிடு
முழுப் போக அறுவடையில்
முழுதாக விற்றிடலாம் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 31-01-2021

Posted in Uncategorized

கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

https://youtu.be/KHnSYypvvJo

விவகாரத்தில் கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில்

கனேடிய தமிழ்சமூகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கான செயல்முனைப்பினை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவை மையப்படுத்தி புதிய தீர்மானமொன்று கூட்டுநாடுகளால்

ஐ.நாவில் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில், அக்கூட்டு நாடுகளில்

ஒன்றாக கனடா காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவை சர்வதேச

குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் தீர்மானம் அமையவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தப்படுகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகமும்…

என்ற தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இணைவழி கருத்தாடல் நிகழ்வில் இதற்கான செயற்திட்டங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

கனேடிய அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில், இணைவழியிலான

https://ctcja.com/ கையெழுத்து வேட்டை கனடா தமிழ்அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பினால்

முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கனேடிய நேரம்

இரவு எட்டுமணிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன்

கணபதிப்பிள்ளை அவர்களினால் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை

உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

அறிக்கை சுட்டிக்காட்டி கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in Uncategorized

2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

இலங்கையில் பரவி வரும் கோவிட் நோயின் தாக்குதல் தடுப்பு

விதிகளை மீறி செய்யப் பட்ட சுமார் 2,905 பேர் இதுவரை கைது

செய்யப் பட்டுள்ளனர்

இவர்களுள் கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் ஐம்பத்தி இரண்டு பேர்

கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மக்களின் அலட்சிய போக்கும் அது குறித்த தெளிவில்லாத

நிலையுமே இந்த கைதிகளுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

இலங்கையில் முன்கள பணியில் ஈடுபாடும் இராணுவத்தினர் என

கூறி சுமார் முப்பத்தி ஓராயிரம் பேருக்கு கொரனோ தடுப்பூசி

போடப் பட்டுள்ளது

அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும் முன்னோக்கில்

செயல்படாது பெரும் தொகையில் இந்த ஊசிகள் போட்டப்

பட்டுள்ளது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Posted in Uncategorized

இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

இலங்கை வளப்பனே ,நுவரெலியா பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது


இதனால் பாதிப்புக்கள் ஏற்படாத போதும் தொடர்ந்து இலங்கையில்

நில நடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை

மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ள்து

Posted in Uncategorized

32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்

முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை

சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த

தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க

பட்டுள்ளது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு

வான் நிலவு வந்திருச்சு
வாசலில கைப்பிடிக்க
தேடி வந்த வெண்ணிலவே
தேற்றிடுவேன் முன்னிரவே

துள்ளி வரும் ஆசையை
துளிர் மீசை நறுக்கிவிடு
காலம் இதுவல்ல
காத்திரு நம்பிவிடு

என் மனதை புரியாம
ஏங் கிளியே போவதுவோ …?
முழுகாம நான் வரவோ
மூணு இலை வைத்திடவோ …?

தேதியை மறந்து இன்று
தேடி வந்த பாவப்புள்ள
நினைவில ஏது இருக்கு
நிஜமா சொல்லி விடு

சிக்கனமா நீ இருந்து
சில்லறையை கொட்டிவிடு
முழுப் போக அறுவடையில்
முழுதாக விற்றிடலாம் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 31-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in Uncategorized

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    இரவில் தூங்கும்போது அறைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, போர்வையால் நன்றாக மூடி இருந்தாலோ

    உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. அறையின் வெப்பநிலையும், காற்றோட்ட வசதியும் சீராக இருந்தும்

    உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறிக்கொண்டிருந்தால் அது ‘இரவு வியர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது.

    சிலர் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் எழும்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் நனைந்து வியர்வை மழையில் குளித்துவிடுவார்கள். அதிக வேலை அல்லது உடல் சோர்வு

    காரணமாக எப்போதாவது இப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில்

    குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.

    அதிக தைராய்டு: உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் அதிக வெப்பத்தை உணர்வது ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளாகும். தைராய்டு சுரப்பிதான் உடலில் வளர்சிதை

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத்தொடங்கும்போது வழக்கத்திற்கு மாறாகவோ, அசாதாரணமாகவோ உடல் இயக்க செயல்பாடு நடைபெறும்.

    வழக்கத்துக்கு மாறாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதுபோல் பசியும், தாகமும் எடுக்கும். இதய துடிப்பும் வேகமெடுக்கும். கைகள் நடுங்கத்தொடங்கும். அதிக வியர்வையுடன் இந்த அறிகுறிகளில்

    ஏதேனும் ஒன்று தென்பட்டால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்பதை உணரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    குறைந்த ரத்த சர்க்கரை: நீரிழிவு நோயாளியாக இருந்தால் இரவு வியர்வைக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். சிலருக்கு தூங்க செல்லும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு

    சரியாக இருக்கும். ஆனால் தூங்கியதும் குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து போய்விடும். பகலில் அதிக வேலை பார்த்தாலோ, மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ

    , இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இந்த பிரச்சினை எழலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் பயன்படுத்தும் பட்சத்தில் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும்

    காரணமாக இருக்கலாம். தூங்க செல்லும் முன்பு குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் நன்றாக சாப்பிடுவது நல்லது.

    சுவாசிப்பதில் சிரமம்: இரவில் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் எழுந்தால் ‘சிலீப் அப்னியா’ எனும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.

    இதன் காரணமாக அதிகமாக வியர்க்க தொடங்கும். ஒவ்வொரு முறையும் மூச்சை நன்றாக உள் இழுத்து சுவாசிக்க

    தொடங்கும்போது தசைகள் இருமடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சுவாச கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் வியர்வை பிரச்சினை அதிகரிக்கும்.

    மார்பு வலி: இரவில் கடுமையான மார்பு வலி பிரச்சினை எழுந்தால் அதுவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலை நிமிர்த்த முடியாது. இது ‘ஆசிட் ரிப்ளக்ஸ்’ எனப்படும். இதன் காரணமாக இரவில்

    வியர்வை அதிகமாக வெளிப்படும். இத்தகைய பிரச்சினை இருந்தால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள்,

    பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இந்த பிரச்சினை எழுந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

    மருந்துகள்: காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சாப்பிடும் மருந்துகள் கூட இரவில் வியர்வை வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும். வென்லாபாக்சின், புப்ரோபியன், கார்டிசோன்

    மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சாப்பிடும் மருந்துகளும் வியர்வை சுரப்பியை தூண்டக்கூடும். இத்தகைய

    மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு இரவில் அதிகமாக வியர்த்தால் மருத்துவரை அணுகி மாற்று மருந்து சாப்பிடுவது நல்லது.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

      கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

      சிரியாவின் கடல் பகுதி ஒன்றுக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ள

      பண்டையகால ரோமினியார்கள் கடற்படை முகாம் ஒன்றினை

      ரசியாவின்வ கடல் சார்பு ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

      இவ்விதம் கண்டு பிடிக்க பட்ட அந்த துறைமுகம் தொடர்பான ஆய்வு

      பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்

      இதில் இருந்து ஆயுதங்கள் ஏதும் மீட்க பட்டுள்ளனவாஎன்பது தொடர்பில்

      தெரிய வரவில்லை ,கடலில் மூழ்கிய நிலையில் இந்த கடற்படை முகாம்

      காணப்படுவதால் ,இதற்கு அண்மையில் பெரும் நகரங்கள் இருந்திருக்கலாம்

      எனவும் அவையும் கடலுக்குள் மூழ்கி இருக்க கூடும் என எதிர்பாக்க படுகிறது

      கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
      கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

      இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

      இஸ்ரேல் எல்லை பகுதிகளில் சிரியாவின் முக்கிய முதன்மை தாக்குதல்

      படையணிகள் அதிநவீன ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளனர் ,
      சிரியா

      லெபனான போராளிகளை இலக்கு வைத்து சிரியா இராணுவம் அண்மைய

      நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென சிரியா இராணுவம்

      இந்த படைக்குவிப்பை மேற்கொண்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      இந்த் திடீர் படைக் குவிப்பை அடுத்து இஸ்ரேல்இராணுவம் என்ன

      செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

      இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்
      இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

      பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

      பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து

      எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய

      பட்டுள்ளனர்

      இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க

      பட்டுள்ளனர்
      இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்

      தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது

      தொடர்பில் தெரியவரவில்லை

      கைது
      கைது
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

      கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

      இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24

      மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் ,பலியாகியுள்ளனர்

      மேலும் 23,275 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதேபோல அமெரிக்காவில் 2,426 பேர் பலியாகியும் 119,808 பேர் பாதிக்க

      பட்டும் உள்ளனர் ,
      தொடர்ந்து இந்த இழப்பு விகிதம் அதிகரிக்க படும் என எதிர்வு கூறப்டுகிறது

      Posted in Uncategorized

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.

      சிம்பு, நயன்தாராவை இணைத்து வைக்க முயற்சி செய்யும் பிரபல இயக்குனர்
      நயன்தாரா – சிம்பு


      சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை

      தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம்

      ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

      இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன்

      இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம்

      கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த

      அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

      சிம்பு – கவுதம் மேனன்

      சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’

      இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.

      Posted in சினிமா

      இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ்

      உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின்

      கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம்

      ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி

      ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

      இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும்

      தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்

      மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை

      விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

      கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்

      , 2019ம் ஆண்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர்

      ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர்

      சங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம்

      உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும்

      சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம்

      காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில்

      தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

      சங்கர்

      இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த

      வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன்

      நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர்

      மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.

      இதையடுத்து எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் சங்கருக்கு

      பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் விசாரணையை

      தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக

      இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

      வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

      கியூபா நாட்டின் இராணுவ வானூர்தி ஒன்று இராணுவ தளத்தில் இருந்து

      புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டு பாட்டு அறையுடன்

      தொடர்புகளை இழந்து வீழ்ந்து நொறுங்கியுள்ளது

      மலைப் பகுதியில் சிதறிய நிலையில் காணப்படும் உலங்கு வானூர்தி

      சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது விமானி உட்பட

      ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

      இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

      லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

      பீறிட்டான் வேல்ஸ் பகுதியிலுள்ள கடற்கரை பகுதி ஒன்றில் தந்தையுடன்

      சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஒருத்தி அந்த மணல் மேட்டு

      பகுதியில் விசித்திரமான கால்தடம் ஒன்றை அவதனித்துள்ளார்

      அதனை தந்தைக்கு தெரிய படுத்திய நிலையில் ,சுதாகரித்து

      கொண்ட தந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கினார்

      விரைந்து வந்த போலீசார் ,அதனை பார்வையிட்டு ஆராய்ச்சி நிபுணர்களுக்கு

      தெரிவிக்க பட்ட நிலையில் அவர்கள் அதனை ஆய்வு செய்த

      பொழுது அது டைனோசர் கால் தடம் என கண்டறிய பட்டுள்ளது

      இதுவே பிரிட்டனில் கண்டு பிடிக்க பட்டதில் சிறந்ததும்

      முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றனர்

      டைனோசர்
      டைனோசர்