Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வர வேண்டும் ….!

நீ வர வேண்டும் ….!

வான் எழுந்த வெண்ணிலவு
வாசலிலே வீழ்ந்தது
கோலம் உண்ட எறும்புகளும்
கூடி நின்று அழுதது

தேடி வந்த குயில்களும்
சேவை இன்றி கிடந்தது
தேகம் இழந்து தேசமொன்று
தெரு பிச்சை ஆனது

வாடியின்று விழிகள் எல்லாம்
வார்த்தை இன்றி கிடக்குது
வானமதில் உதயமதன்
வரவை இன்று தேடுது

நாளை ஒரு வேளையது
நாடு வந்திடாதோ …?
நாங்கள் வாழ ஒளிக்கீற்றை
நம்பி தந்தி டாதோ …?

கதவில்லா வீட்டுக்குள்ளும்
கண் உறங்க வேண்டுமே
கரிகாலா உன் எழுச்சி
களம் வர வேண்டுமே ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-02-2021

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in Uncategorized

செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம்

செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம் #

வவுனியா செட்டிகுளம் காட்டு பகுதியில் ஆயுத குழு ஒன்றுக்கும்

இராணுவத்திற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று

இடம்பெற்றுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக

இராணுவம் தெரிவித்துள்ளது

மர கடத்தலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக

தெரிவிக்க பட்டுள்ளது ,காயமடைந்தவர் வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

Posted in Uncategorized

இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 323 பேர் பலியாகியுள்ளனர்

நாள் தோறும் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி

போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி

இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவர் சோதனை சாவடியில்

பணிபுரிந்து வந்துள்ளார் ,அவ்வேளை அவ் வழியே பயணித்த

வாகனம் ஒன்று நிற்காது அந்த காவல்துறை ஊழியரை மோதி

தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்

இதனை அடுத்து தேடுதல் நடத்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்

Posted in Uncategorized

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

இலங்கை காலியில் உள்ள மருத்துவ மனையில் மருத்துவராக

பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளார்


இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வைத்தியர் மரணம் இதுவாக பதிவாகியுள்ளது

Posted in Uncategorized

தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

இலங்கையின் தென்மாகாண ஆளுநர் விலி காமவிற்கு கொரனோ

நோயானது தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வர வேண்டும்

நீ வர வேண்டும்

வான் எழுந்த வெண்ணிலவு
வாசலிலே வீழ்ந்தது
கோலம் உண்ட எறும்புகளும்
கூடி நின்று அழுதது

தேடி வந்த குயில்களும்
சேவை இன்றி கிடந்தது
தேகம் இழந்து தேசமொன்று
தெரு பிச்சை ஆனது

வாடியின்று விழிகள் எல்லாம்
வார்த்தை இன்றி கிடக்குது
வானமதில் உதயமதன்
வரவை இன்று தேடுது

நாளை ஒரு வேளையது
நாடு வந்திடாதோ …?
நாங்கள் வாழ ஒளிக்கீற்றை
நம்பி தந்தி டாதோ …?

கதவில்லா வீட்டுக்குள்ளும்
கண் உறங்க வேண்டுமே
கரிகாலா உன் எழுச்சி
களம் வர வேண்டுமே ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-02-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

    இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

    தென்கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாமை

    தீயிட்டு எரித்தனர் என்ற குற்ற சாட்டில் பதின் நான்கு அகதிகள் கைது

    செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி அகதிகள் முகாம் முன்னர் இராணுவ முகாமாக

    விளங்கியது ,அவ்விதமான முகாம் தற்போது தீயில் எரிந்து நாசமானது

    கென்ட் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே

    இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே

    இங்கிலாந்தில் பிறந்துள்ள புதிய ஆண்டில் புதிய விடயங்களில்

    மாற்றங்கள் ,மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன

    அவை தொடர்பான விரிவான விடயங்கள் கீழே தப்படும் இணைப்பில் வழங்க பட்டுள்ளது

    பிரிட்டனில் வசிக்கும் அகதிகள் மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்து

    தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அல்லது உங்கள் சட்டத்தரணிகளை நாடி விடயத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    அகதிகள்
    அகதிகள்

    click here read news for law

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்

    லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்

    லண்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள்

    கலந்து கொண்டு பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் ,மேற்படி சம்பவத்தை

    முகர்ந்து பிடித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,இதில்

    பதின் ஐந்து பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளதுடன் ,குறித்த உணவாக

    உரிமையாளருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

    மேலும் 14 நாட்களுக்குள் குறித்த பணத்தினை செலுத்த வேண்டும் தவறின் அதுவே இரட்டிப்பாக செல்லும்

    நிகழ்கால நோயின் தாக்குதல் விதிகளை மீறி செயல் படும்

    மக்களின் இவ்வாறான செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது

    Posted in Uncategorized

    ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்

    ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்

    அவுஸ்ரேலியா தலைநகர் பகுதியில் கடந்த தினம் இரவு ஒருலட்சம்

    டொலர்கள் பெறுமதியான பெண்கள் கைப்பை ஒன்றினை திருடன்

    ஒருவன் திருடி கொண்டு தப்பி சென்றுள்ளான்

    இந்த திருட்டை மேற்கொண்ட பொழுதும் கடைக்கு சிறு சேதங்கள்

    ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை குற்றவாளி

    கைது செய்ய படவில்லை ,செல்வந்த வீட்டு பெண்களே இந்த

    கைப்பையை பயன் படுத்துவது குறிப்பிட தக்கது

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    காதல் வந்தது எப்படி …?

    காதல் வந்தது எப்படி …?

    நான் நடந்த வீதியில
    நீ வந்த வேளையில
    நான் தொலைந்து போனேனே
    நாயகியை நினைந்தேனே

    நீ பேசும் போதெல்லாம்
    நித்தம் நான் இரசிக்கிறேன்
    நிகழ் காலம் உன் மடியில்
    நீண்டுறங்க துடிக்கிறேன்

    நாளை என்ற நாளதனை
    நான் எண்ண மறுக்கிறேன்
    நாடி வந்து உன்னடியில்
    நான் கூட துடிக்கிறேன்

    சிரிப்பாலே கதை பேசி
    சிறை வைத்து போபவளே
    என்ன உந்தன் மந்திரமோ
    என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 01-02-2021

    Posted in உலக செய்திகள்

    மியன்மார் அரச தலைவலி இராணுவத்தால் கைது – ஆட்சி கவிழ்ப்பு

    மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு

    இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக

    இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

    மியன்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள்

    பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில்

    பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,

    ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

    இந்த நிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக

    தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக

    பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள்

    சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

    Posted in Uncategorized

    கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

    கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

    இதுவரை சுமார் 316 பேர் பலியாகியுள்ளனர்

    மேலும் இவ்விதமான மரணங்கள் அதிகரிக்க கூடும் என அச்சம்

    வெளியிட பட்டுள்ளது ,உலகிலேயே அதிக குறைவான மரணங்கள்

    இடம்பெற்ற நாடக கோட்டா சிங்கள தேசம் பதிவு பெற்றுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு

    இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு

    இலங்கையில் ,மத்திய ,கிழக்கு ,ஊவா ,மாகாணங்கள் மற்றும்

    பதுளை பலாங்கொடை ,பண்டாரவளை


    மாத்தளை ,இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பவள

    பாறைகளுக்குள் தங்க படிமங்கள் உள்ள; கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இந்தியாவில் மலை ஒன்றுக்குள் தங்கம் உள்ளது போன்று

    இலங்கையிலும் உள்ளது தெரியவந்துள்ளதை அடுத்து ,ஆளும் அரசு

    குஷியில் உறைந்துள்ளது

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in Uncategorized

    குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

    குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

    இலங்கை வளைவை கங்கையில் நண்பிகளுடன் குளிக்க சென்ற 16

    வயதுடைய மாணவி ஒருத்தி நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்

    ,இவருடன் குளித்து கொண்டிருந்த ஏனைய 16 நண்பிகளும் உயிர்

    தப்பியுள்ளனர்
    மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்

    துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்

    சிரியாவின் வடக்கு அலெப்போ பகுதியில் நிலைகொண்டு சிரியா அரச

    இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு

    குழுக்கள் நடத்திய மூவேறு தாக்குதல்களில் சிக்க்கி என்பத்தி ஐந்து மக்கள்

    பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்கள் அதிகமானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,

    தொடர்ந்து ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

    அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

    அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா ..?

    பெண்கள் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


    சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை

    பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100

    கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான்

    உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன்

    ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

    இதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு

    தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “

    பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை

    என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில்

    அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும்,

    இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது.

    பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை

    இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.

    தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட

    பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு

    இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ

    அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால்

    அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

    அமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள்

    தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை

    மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்

    பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் மிக அப்பதான் ஒன்றாக உள்ளது .

      Posted in Uncategorized

      பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

      பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

      தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன்

      இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த

      இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக

      தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

      நிதி அகர்வால், பவன் கல்யாண்

      இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி

      அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில்

      பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.

      இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார்.

      முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளதால், நடிகை நிதி அகர்வால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம்

      Posted in Uncategorized

      ரகசிய திருமணமா? – சனம் ஷெட்டி விளக்கம்

      ரகசிய திருமணமா? – சனம் ஷெட்டி விளக்கம்

      தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3

      போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால்

      நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது.

      இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்ட சனம் ஷெட்டி, தற்போது

      நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சில சமயங்களில் அதுபோன்று காணப்படுகிறார்.

      சனம் ஷெட்டி

      இதுப்பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம், எல்லாருமே இதே

      கேள்வியை தான் கேட்கிறார்கள். எனக்கு இப்போது வரை திருமணம்

      நடைபெறவில்லை. உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும்.

      மேலும், எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும்

      நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்று

      பதிலளித்த சனம், திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..