Tag: ஐ.நாவில்
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை
அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையில், சிறிலங்கா தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15
வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி,
தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக
வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
இந்நிலையில் ஆணையாளரின் அறிக்கையினை கோடிட்டுக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி, சிறிலங்காவின் இராணுவத்துக்கு செலவினடானது தமிழர்களை
அடக்கி ஆளவேண்டும் என்பதற்கானதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறல்களுக்குஅது வழிசெய்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை
சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதோடு, அது இனநாயக அடிப்படைவாத அரசாக மாறியுள்ளது எனவும் தனதுரையில் அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள்
எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி கேள்வி
எழுப்பிய அமைச்சர் லிங்கஜோதி, தீர்மானங்கள் மற்றும் கால நீடிப்புகளுக்கு பின்னரும்,
இனியும் சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்திருந்ததோடு போரில்
பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக பொறுமையுடன் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,
சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த
பரிந்துரைக்க வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
ஐ.நாவில்-தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம்
தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு
தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான
வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது.
தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.
இன்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு
நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே
தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக
நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.
அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.
எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு
முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.






