இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
அமெரிக்காவில் Fort Detrick in Frederick, Maryland, பகுதியில் காலை வேளை இடம்பெற்ற துப்பாக்கி
சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர் ,கடற்படையை சேர்ந்த நபரே இந்த துப்பாக்கி சூட்டை
நடத்தியதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
Sudan’s Darfur பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை மற்றும் ,கலவர தாக்குதலில்
சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 134 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அங்கு இடம்பெற்று வரும் இனமோதல்களில் சிக்கி பல்லாயிரகணக்கான சிறுபாண்மை மக்கள்; பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி ஈரானுக்கு கப்பல் மூலம் பொருட்களை விற்பனை செய்த முக்கிய Mr Roseசெல்வந்தர் ஒருவரை அமெரிக்கா கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது
இவர் மீது ஈரானுக்கு பொருட்களை விற்றமை ,பணமோசடி செய்தமை ,கள்ள சந்தையில் ஈடுபட்டமை என்பது தொடர்பில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளன
தான் ஈரானுக்கு பொருட்களை விற்கவில்லை என இவர் கூறி வருகின்றார் ,ஆனால் கிடைக்க பெற்றுள்ள
ஆதாரங்களின் பிரகாரம் குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு சுமார் 20 வருடங்கள் சிறை தண்டனை
விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவ்வாறு தமிழர் ராஜ் ராஜராதினமும் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி சிறையில் வாடுகின்றமை குறிப்பிட தக்கது
AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்
AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்
பிரிட்டனில் AstraZeneca தடுப்பு மருந்து சிறுவர்களுக்கு செலுத்துவதற்குரிய நகர்வு முன்னெடுக்க பட்டது ,ஆனால்
இந்த மருந்தை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ஏற்பட்டுள்ள நிலையில்
,தற்போது சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்த பட்டுள்ளது
மேலு பல கட்ட சோதனைகள் நடத்திய பின்னரே சிறுவர்களுக்கு செலுத்துவது தொடர்பில் அறிவிக்க படும் என தெரிவிக்க படுகிறது
A British trial of the AstraZeneca coronavirus vaccine on children has been paused while regulators assess its
possible link to blood clots, Oxford University, which helped develop the jab
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டு
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண பாலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ. நெவில்பியந்த
தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் ஓட்டியசிறுவன் கைது
பஸ் ஓட்டியசிறுவன் கைது
செல்லுப்படியாகும் உரிமம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின்
உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு, குறைந்தது 6 மாத காலம் தேவையென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சரான ஜி.எல். பீரிஸ், குழப்பகரமான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. சிறந்த தீர்வு கண்டதன் பின்னரே நடத்தப்படும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலில் எல்லை நிர்ணய பிரச்சினை பிரதானமாக கருதப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எல்லை நிர்ணய குழுவினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர்,மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
“தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக மாகாண சபை தேர்தலில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியது.
2017 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக பிறிதொரு தேர்தல் முறைமை அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை” என்றார்.
உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என தெரிவித்த அவர், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவோமென நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாற்றதாக உள்ளது என்றார்.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு சாதகமாக அமையவில்லை. 2020ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த
பொதுத்தேர்தலிலும் இத்தன்மை காணப்படுகிறது. விருப்பு வாக்குமுறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் மாத்திரமல்ல, அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, குறைப்பாடுகளுக்குத் தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து
அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 15 பேரை கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு
பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்றவுள்ள பண்டிகளி காலப்பகுதியில் பயன் கட்டுப்பாடுகள் விதிக்க பட
மாட்டாது என இராணுவ தளபதி தெரிவித்துளளார்
இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு பணியில் பல்லாயிரம் இராணுவம் போலீசாரை
கடமையில் ஈடுபடுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்
சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்
இலங்கை சிறையில் விளக்கமறியலில் வைக்க பட்டிருந்த இந்தியா நாட்டை சேர்ந்த ஒருவர்
வைத்தியசாலையில் மரணமாகியுளளார்
இவரர் சிறையில் அடைக்க பட்டதன் பின்னர் அங்கு வதைகள் இடம் பெற்று அதன் வழியாக இறந்திருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு
கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைதினம் மட்டும் 137 பேர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இன்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா மரணங்கள் ஐந்து, சம்பவித்துள்ளன.
அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
மோடி – மாதவன்
நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக
நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.
மாதவன்
இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி, ஒரு வருடத்திற்குப் பிறகு காதலரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
கணவருடன் உத்ரா உன்னி
பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார்
. இவருக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர்களது திருமண கொண்டாட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
கணவருடன் உத்ரா உன்னி
இந்நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு இவர்கள் திருமணம் இன்று எளிமையாக கேரளாவில் நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களை உத்ரா உன்னி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதன்பின், தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக்கை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு இன்று மாலை திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த ஈரான்
இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த பிடித்த ஈரான்
ஈரான் நாட்டுக்குள் நுழைந்து அவர்களது முக்கிய நடமாட்டங்களை அறிந்து தகவல் அனுப்பி வந்த
இஸ்ரேல் உளவாளிகள் ஏழுக்கு மேற்பட்டவர்களை தென் வடக்கு பகுதியில் வைத்து ஈரான் இரகசிய நடவடிக்கை பிரிவினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்களிடம் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது
ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என்ற நேரடியாக மிரட்டல் விடுத்து ,இஸ்ரேல் போர் முழக்கத்தை வெளியிட்டது
இவ்விதமான அறிவித்தல் வெளியாகி சில மாதங்களில் இந்த உளவாளிகள் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொலண்டில் – 73 லட்சம் பேரது விபரங்களை திருடி விற்ற கைக்கர்கள்
கொலண்டில் – 73 லட்சம் பேரது விபரங்களை திருடி விற்ற கைக்கர்கள்
நெதர்லாந்து நாட்டில் இணைய திருடார் குழு ஒன்று பிரபல
IT services to garages நிறுவனத்தில் இருந்து ,அவர்களின் வாடிக்கையாளர்களின் 73 லட்சம் ஆவணங்களை திருடியுள்ளது
இவ்வாறு திருடப் பட்ட ஆவணங்கள் கள்ள சந்தையில் விற்க முனைந்த பொழுது மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது
அம்ஸடர்டாமை சேர்ந்த முப்பத்தி ஐந்தாயிரம் பேரது விபரங்களும் இதில் உள்ளடக்க பட்டுள்ளது
மேற்படி திருட்டை அடுத்து அனைவருக்கும் தெரிய படுத்த பட்டு ,அவர்களின் வங்கி இலக்கங்கள்
மாற்ற பட்டுள்ளது ,குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்
பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்
அமெரிக்கா Alabama’s largest city யில் கடந்த தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ
இடத்தில ஒருவர் மரணமானார் ,மேலும் நான்கு வயது சிசு உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
32 வயதுடைய இளம் பெண்ணே மரணமாகியுள்ளார் ,மேலும் காயமடைந்தவர்களில் 4, 15, 16, 17 and 21 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை இந்த சூட்டு சம்பவத்தை மேற் கொண்ட நபர் கைது செய்யப்படவில்லை ,இந்த
தாக்குதலுக்குரிய காரணம் தெரியவவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
அமெரிக்கா suburban Dallas பகுதியில் ஒரே வீட்டுக்குள் ஆறு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்
,18 வயது மதிக்க தக்க சகோதரர் , தாய்,தந்தை,பாட்டி,இவர்களை கொலை செய்து பின்னர் இருவரும் தற்கொலை புரிந்துள்ளனர்
குறித்த நபர்கள் சடலம் குறித்த வீட்டுக்குள் ஒருவாரமாக அழுகிய நிலையில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இந்த அதிர்ச்சிகர படுகொலைக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,கொரனோ
காலத்தில் மன அழுத்தம் காரணாமாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பஸ் சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை
முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை
இலங்கை பதுளை பகுதியில் நிகழ் கால கொரனோ விதிகளை மீறி முககாவசம் அணியாது உலவிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதிக்குள் கைவிட பட்ட
நிலையில் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறு மீட்க பட்ட நகைகள் அரச உடமையாக்க பட்டுள்ளது







